Monday, August 10, 2015

கண்ணனை நினைக்காத நாள் இல்லையே - அத்தியாயம் - 9

"KK நீங்க அறஞ்சது எனக்கு வலிக்கவில்லை. அந்த அளவுக்கு உங்க உடல் சக்தி இல்லாம, ரொம்ப பலவீனமா இருக்கு. முதல்ல நாலு நாள் ரெஸ்ட் எடுங்க. உடம்ப தேத்துங்க. அதுக்கு அப்புறமும் என் மேல கோபம் இருந்து இன்னும் நாலு அறை கொடுங்க"என்று குரல் தழுதழுக்க சொன்னாள்.

'தான் உயிருக்கு உயிராக காதலிக்கும் ஸ்வேதாவையா அறைந்தோம்' கிருஷ்ணாவுக்கு தன் மேல்தாங்க முடியாத வெறுப்பு வந்தது. 

"ஸ்வேதா. என் மேல எனக்கே வெறுப்பா வருது. உன் மேல கோப படுறதுக்கு எனக்கு என்ன உரிமை இருக்கு. நான் என்ன உன் காதலனா இல்லை கணவனா? நான் அளவுக்கு மீறி உரிமை எடுத்து உன்னை அறஞ்சது என்னோட மன்னிக்க முடியாத தவறு.நான் என்னை நினச்சு வெட்கப்படுறேன், வேதனைபடுறேன். நீ எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுக்கலாம்" என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் பேச முடியாமல் பலகீனத்தால் மூச்சு வாங்க படுக்கையில் அமர்ந்தான். 



"என்ன இப்போ உங்களுக்கு நான் தண்டனை கொடுக்கணும். அவ்வளவு தான" என்று கேட்டபடி ஸ்வேதா அருகில் வர, அவள் கொடுக்க போகும் தண்டனைக்காக தன் கண் மூடி கன்னத்தை காண்பித்தான். 

வினாடிகள் நிமிடங்களாக ஒண்ணும் நடக்கவில்லை. கண்களை திறக்க, அவன் கன்னங்களின் அருகில் ஸ்வேதாவின் பிங்க் நிற இதழ்கள். அவன் கண் திறந்ததை கண்டவுடன் முத்த மழை பொழிந்தன. முதலில் கண்கள், நெற்றி என்று தொடர்ந்து அவளின் முத்தங்களால் சூடாக அவன் இடுப்பை அணைத்து கொண்டு, உதடுகளை கவ்வினான்.

முரட்டு இதழுக்கும், பூவிதழுக்கும் போட்டி தொடர்ந்தது. அவளின் இதழ்களில் இருந்த தேனை அவன் உறிஞ்ச, அவளோ தன் உதடுகளை தாரை வார்த்து கொடுத்து விட்டு கண்களை மூடி இன்பம் கண்டாள். 

அவளை அள்ளி அவன் படுக்கையில் கிடத்தி அவள் மீது படர்ந்தான். அவள் தொடர்ந்து கண்களை மூடி கொண்டு சுகங்களை தொடர,அவள் மார்புக்கு நடுவில் தனது முகத்தை புதைத்தான். அவன் தலையை தடவி கொடுத்த அவளின் கரங்களை முத்தம் கொடுக்க,அவள் இன்ப மயக்கத்தில் தவித்து போனாள். 

கிருஷ்ணா மனசாட்சி "டேய் நீ தப்பு பண்ணுறே. அவளுக்கு உண்மை தெரிஞ்சா உன் நிலைமை படு மோசம் ஆய்டும்" என்று எச்சரிக்க, 

சுய நினைவு வந்தது போல் தனது தலை சிலிர்த்து கொண்டு அவளிடம் இருந்து விலக, ஸ்வேதா அவனை மார்போடு இறுக்க அணைத்துவிட மறுத்தாள். 

"KK எனக்காக நீங்க உங்க உயிரை கூட கவலைபடாமே காப்பாத்தினிங்க.எனக்காக கண் கலங்கி கண்ணீர் விட்டீங்க. உங்களுக்காகதர என்கிட்ட எதுவும் இல்லை. அதனால நான் என்னையே தரேன். ப்ளீஸ் Take me and make me, your women."


அவள் காதில் கிசுகிசுத்தான். "Darling. என்னை நீ லவ் பண்ணுறியா?"


"ஆமாம்" என்று தலை அசைத்தாள்.

"ஏன் நீ வாய் திறந்து சொல்ல மாட்டியா?" என்று கேட்க, 



"மாட்டேன் எனக்கு வெட்கமா இருக்கு" என்று அவன் காதில் சொல்ல, 

"சரிடா தங்கம்,நாம கொஞ்சம் எந்திருக்கலாமா" என்று கேட்க, விரக தாபத்தில் இருந்த ஸ்வேதா 'மாட்டேன்' என்று மெதுவாக தலை அசைத்தாள். 

"ஸ்வேதா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டா. நீ தண்ணீர்ல மூழ்கிட்ட உடனே நான் எவ்வளவு பதை பதைத்தேன் தெரியுமா. நீ உயிரோட இருக்கேன்னு தெரிஞ்ச உடனே நான் நான் கதறி அழுதேன், கோவிலுக்கு போய் முருகனுக்கு நன்றி சொன்னேன்.இப்போ கூட நாம உடலால கலந்து கணவன் மனைவி ஆகலாம். ஆனா அது நம்மள நம்பி இருக்கிற அம்மா அப்பாவை ஏமாத்துற மாதிரி இருக்கும். அது மட்டும் இல்லை, ஒரு பெண்ணா உனக்கு பின்னால பெரிய பிரச்சனைகள் வரும். நமக்கு பிறக்க போற குழந்தைக்கும் சரியான அங்கீகாரம் கிடைக்காது.அதனால அடுத்த step எல்லாம் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் வச்சுக்கலாம் please" என்று சொல்லி அவளை சமாதானம் செய்ய அவள் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட, அவனை புரிந்து கொண்டு வெட்க சிரிப்பு சிரித்தாள். 

சில நிமிடம் கழித்து அவன் மெதுவாக விலக, அவள் எழுந்து அவன் அருகில் உட்கார்ந்து, இழுத்து மடியில் சரித்து கொண்டு, தட்டி கொடுக்க அவன் இன்ப கனவுலகத்தில் மூழ்கினான். 

அடுத்து வந்த மூன்று நாட்களில் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் விலகவே இல்லை.ஸ்வேதாஅவன் கண் அசைவில் காரியங்களை நிறைவேற்றினாள். மனதளவில் ஸ்வேதா அவன் மனைவியாக மாறி போனாள். 

இடையே அடிக்கடி சுப்பிரமணியம், ஹரி நலம் விசாரிக்க, கிருஷ் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்.நான்காவது நாள் இருவரும் தூத்துக்குடி மைசூர் எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் மணியாச்சியில் ஏறி பெங்களூர் வந்து சேர்ந்தனர்.

காலை ஏழு மணிக்கு ட்ரெயின் Majestic Junction வந்து சேர, ஸ்வேதாவை ட்ராப் செய்து விட்டு போவதாக கிருஷ்சொல்ல, "வேண்டாம்KKஅம்மா அப்பா ஊர்ல இருந்து வந்து இருக்காங்க. அவங்க கிட்ட நம்ம விஷயம் பத்தி பேசலை. நீங்க ட்ராப் பண்ணினா தேவை இல்லாத கேள்விகள் வரும். என்னை புரிஞ்சுக்காங்க ப்ளீஸ்" என்று கெஞ்ச, கிருஷ்ணா "ok எனக்கு புரியுது. நீ கவலைபடாத. நான் வரலை" என்று சொல்லி விட்டு அவளை ஆட்டோவில் அனுப்பி வைத்து வில்சன் கார்டன் கிளம்பினான்.

குளித்து விட்டு சீக்கிரம் கிளம்பி 8.30 மணிக்கு ஆபீஸ் வர, அங்கே அவனுக்கு முன்னால் ஹரி வந்து உட்கார்ந்து இருந்தான்.கிருஷ்ணாவுக்கு ஆச்சர்யம்.
"என்னடா ஹரி. நீ எப்போதும் ஒன்பது மணிக்கு மேல தான வருவ. இப்போ என்ன திடீர்னு சீக்கிரம் வந்து இருக்க" என்று கேட்டபடி அவன் கேபினுக்கு வந்தான்.
"வாடா மச்சான். நீ இன்னைக்கு வருவியோ மாட்டியோன்னு தான் சேர்மன் என்னை வர சொல்லி இருந்தார். நீ வேற வந்துட்ட. இனிமே எனக்கு அவர் தொல்லை கிடையாது. அப்பா". என்று பெருமூச்சு விட்டு அவனிடம் "இந்தா இந்த file-லை பிடி என்று அவனிடம் Box File தர,என்னடா" என்று கேட்டான் கிருஷ்.
"அதாண்டா, நாம டூர் போய் வந்த இடங்களில் கிடைச்ச Enquiries எல்லாம் ஒரு file-ல போட்டு வைக்க சொன்னாரு. ஒன்பது மணிக்கு மீட்டிங். எல்லாத்தையும் ஒரு தடவை புரட்டி பாரு. பிறகு அவரை போய் பார்க்கலாம்" என்று சொல்ல, தலை ஆட்டி விட்டு பைல் உடன் தனது கேபினில் நுழைந்து அமர்ந்து புரட்ட ஆரம்பித்தான்.
ஒன்பது மணி அளவில் சேர்மன் PA கூப்பிட, ஹரி, கிருஷ் இருவரும் சேர்மன் அறைக்கு சென்றனர்.
உள்ளே நுழைந்த கிருஷ்ணாவை பார்த்த சுப்ரமணியம் சந்தோசமானார். "வா வா கிருஷ்ணா. இப்போ உடம்பு எப்படி இருக்கு. ஹரி தான் உனக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்னான். கூட ஒரு பொண்ணு இருந்து பாத்துக்கிட்டானு சொன்னான். ஹரி அந்த பொண்ணு பெயர் கூட" என்று இழுக்க, "ஸ்வேதா" என்று இழுத்து ஹரி சொல்ல, சுப்ரமணியன் கிருஷ்ணாவை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தார்
"கிருஷ்ணா அந்த பொண்ணு ரொம்ப அழகு, smart, intelligent, sharp அப்படின்னு சொன்னான். உனக்கு பிடிசுருக்கான்னு சொல்லு. நான் வேணா அவங்க வீட்டுக்கு போய் பொண்ணு கேக்குறேன்" என்று சொல்ல, கிருஷ்ணா வெட்கத்தோடு "இல்ல சார், அவ முதல்ல parentகிட்ட பேசுறேன்னு சொல்லி இருக்கா. அது வரைக்கும் நாமா கொஞ்சம் வெயிட் பண்ணலாமே" என்று கேட்க, "சரி நீ சொல்றதும் நல்ல யோசனை தான்" என்று ஆமோதித்து, "சரி நாம இப்போ கொஞ்சம் Enquiries பத்தி பேசணும்" என்றார்.

'மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட Enquiries வந்து இருப்பதால், எல்லாவற்றையும் முறைபடுத்தி எல்லார் கூடயும் கிருஷ்ணா பேச வேண்டும்' என்றும், இந்த 'ப்ராஜெக்ட் ரெண்டு மாதத்துக்குள் முடிக்க வேண்டும்', என்று சொல்ல, கிருஷ் யோசிக்க ஆரம்பித்தான்
"சார், இந்த வேலையை சீக்கிரம் செய்யனும்னா நானும் ஹரியும் சேர்ந்து செய்தா நல்லபடியா முடியும்" என்று சொல்ல, "கிருஷ் நீ சொல்றது நல்ல யோசனை தான். ஆனா இந்த டேட்டா ரெடி செய்ய உங்க ரெண்டு பேரோட time- தை நான் வீணாக்க விரும்பலை. Becaz both of you are senior officals. முதல்ல ஒரு Secretary appoint பண்ணினா உனக்கு உதவியா இருக்கும். நீ இப்போ கம்பெனியோட CEO designate,அதை புரிஞ்சு நடந்துக்கோ" என்று சொல்ல

"சரி சார். ஆனா Secretary வேலைக்கு விளம்பரம் செய்து ஆள் எடுத்து, ட்ரெயின் செய்ய ஒரு மாதமாவது ஆகுமே" என்று இழுக்க, "சரி நீ அப்படின்னா, ஆபீஸ்ல யாரையாவது transfer பண்ணிக்கோ, ஹரி உனக்கு உதவியா இருப்பான். Plese take care" என்று சொல்லி விட்டு "சரி எனக்கு தமிழ் நாடு ஸ்டேட் கவர்ன்மென்ட் செக்ரேடரி கூட ஒரு மீட்டிங் இருக்கு, நான் கிளம்பனும்" என்று சொல்ல, புரிந்து கொண்டு இருவரும் வெளியேறினர்.


காலை மணி பத்து ஆகி விட்டதால் ஆபீஸ் முழுக்க நிறைய ஆரம்பித்து விட்டது. தனது இருக்கைக்கு திரும்பிய கிருஷ், உள்ளே அமர்ந்து இருந்த ஸ்வேதா வை கண்டு "என்ன ஸ்வேதா, இப்போதான் வந்தியா?" என்று கேட்க,தலையை திருப்பி, அவனை பார்க்க அதற்குள் தனது இருக்கையில் அமர்ந்தான்.

"KK நீங்க சொன்ன மாதிரி, இன்னைக்கு பைனான்ஸ் டிபார்ட் மென்ட் மாத்தி விடுறதா சொன்னிங்ககளே அந்த விஷயமா தான்" என்று சொல்ல

"ஆமா ஊருக்கு போறதுக்கு முன்னால அதை பத்தி பேசுனோம் இல்லையா" என்று யோசித்து கொண்டே, "சரி எனக்கு ஒரு யோசனை தோணுது. இப்போ Finance டிபார்ட்மென்டல எனக்கு உடனடியா ஆள் தேவை இல்லை", ஸ்வேதா முகம் உடனே வாடி போனது, "ஏய் என்ன முகம் மாறி போச்சு, நான் இப்போ என்ன சொல்லிட்டேன். அந்த வேலை இல்லைனா உனக்கு வேற வேலை கிடையாதா" என்ன என்று கேட்க
"இல்லை KK உங்க பக்கத்திலே இருக்கணும். அதான்" என்று சொல்ல, "சரி அப்போ ஒரு வேலை இருக்கு. என் கூடவே எப்போதும் இருக்கலாம். சரி இப்போ நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு.உனக்கு short hand, type writing தெரியுமா" என்று கேட்க, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் பதில் சொன்னாள். "எனக்கு நல்லா தெரியும், KK".
"ஸ்வேதா, சேர்மன் கிட்ட இப்போதான் பேசிட்டு வரோம். நாம போய் வந்த டூர் ல நிறைய Enquiries கிடைச்சு இருக்கு, அதை எல்லாம் ரெடி பண்ணி, close பண்ணனும். நான் மட்டும் பண்ண முடியாது. அதனால ஒரு Secretary appoint பண்ணிக்கலாம்னு சேர்மன் சொல்லிட்டாரு.நான் உன்னைதான் என்னோட secretary-யா recommend பண்ணலாம்னு இருக்கேன். உனக்கு சம்மதமா?"
ஸ்வேதா முகம் சந்தோசத்தில் பிரகாசம் ஆனது. "உங்ககூட எப்பவுமே இருக்கணும்னா எனக்கு எந்த வேலையும் சம்மதம்தான்" என்று சொல்ல, "சரி நீ கொஞ்சம் உன்னோட admin டிபார்ட்மென்ட்ல வெயிட் பண்ணு, நான் ஹரி கிட்ட பேசி transfer ஏற்பாடு பண்ணுறேன்.அதோட CEO காபின் காலியா தான் இருக்கு. அதுக்கு நான் இப்போ மாற போறேன். அது கொஞ்சம் பெரிய கேபின்.அங்கே உனக்கு கூட உள்ளேயே இடம் இருக்கு. உனக்கு இப்போ சந்தோசமா?" என்று கேட்க,
"Thanks KK. என் செல்லம்"என்று அவன் கன்னத்தை பிடித்து கிள்ளி வைத்து விட்டு சிரித்து கொண்டே வெளியேறினாள்.
இன்டர்காமில் ஹரியை கூப்பிட, "என்ன கிருஷ் சொல்லு"
"ஹரி எனக்கு ஒரு secretary appoint பண்ணனும்னு சேர்மன் சொன்னாரில்ல"
"ஆமா ஆள் கண்டு பிடுச்சுட்டியா?""ஸ்வேதாவை recommend பண்ணுறேன்".
"அவளுக்கு secretary க்கான தகுதி இருக்கா?. I think she is over qualified"




"டேய் மாம்ஸ். அவளுக்கு short hand, type writing தெரியும். எனக்கு secretary மட்டும் தேவை இல்லை. கொஞ்சம் புத்திசாலித்தனம் இருக்கணும். நிறைய power point presentation ரெடி பண்ணனும். மொத்ததில என்னோட வேலைல பாதியாவது செய்யனும். அப்படி பார்த்தா வெறும் secretary இந்த வேலைக்கு ஒத்து வர மாட்டாங்க" என்று சொல்ல,

ஹரி "சரி கிருஷ், நீ சொல்றது எனக்கு புரியுது. நான் இப்போ என்ன பண்ணுறது. appoint ஆர்டர் ரெடி பண்ணட்டுமா?"என்று கேட்க

"அதை மொதல்ல செய்" என்று சொல்லி போனை வைத்தான்.

தன் சீட்டுக்கு திரும்பிய ஸ்வேதா முகத்தில் தெரிந்த சந்தோசத்தை பார்த்து காவேரி "என்ன ஸ்வேதா ரொம்ப happy- யா இருக்க மாதிரி இருக்கு. நீ முன்னால சொன்ன மாதிரி finance டிபார்ட்மென்ட் ட்ரான்ஸ்பர் ஆக போறியா" என்று சிரித்த படி கேட்க, "இல்லை நான் CEO- க்கு பர்சனல் செக்ரேடரி ஆக போறேன்"

"அப்படியா, அதாவது கிருஷ் கூட எப்போதும் இருக்க போறேன்னு சொல்லு. உனக்கு பிடிச்ச வேலைதான்" என்று கிண்டலுடன் சிரிக்க ஆரம்பித்தாள்.

"என்னை கிண்டல் பண்ணுனது போதும். உங்களுக்கு தெரியாதா என்ன?"என்று ஸ்வேதா திருப்பிகேட்க, 

"எனக்கு மட்டுமா இந்த ஆபீஸ்ல இருக்க எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு. அதுதான் திருநெல்வேலில நீங்க பண்ணுன romanceஎல்லாருக்கும் நல்லா தெரியுமே. ஆமா அடுத்து கல்யாணம் தானே".

"ஆமா அக்கா, ஆனா இன்னைக்குதான் ஊர்ல இருந்து வந்துருக்கேன். அம்மா அப்பாகிட்ட விபரமா பேசணும்" என்று சொல்லி யோசனையில் ஆழ்ந்தாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் ட்ரான்ஸ்பர் ஆர்டர் மெயிலில் வர ஸ்வேதா மனம் சந்தோசத்தில் துள்ளி குதிக்க ஆரம்பித்தது.ஹரியை போய் பார்க்க,ஹரி அவளிடம் ட்ரான்ஸ்பர் லெட்டர் கொடுத்து acceptance sign செய்ய சொல்லி விட்டு, "என் அருமை தங்கையே, உன் காதல் நாடகத்தை இனிதே நடத்து. ஆனா இது ஆபீஸ் அப்படின்னு நீங்க ரெண்டு பேரும் மறந்துடாதிங்க" என்று வேண்டுகோள் வைக்க

சிரித்தபடி "கவலைபடாதிங்க அண்ணா, ஆபீஸ்ல office-லநாங்க எல்லை மீற மாட்டோம்.போதுமா?"


"அம்மாடி இந்த அளவுக்காவது confirm பன்னுனியே அதுவே போதும்" என்று சொல்லி, அவளிடம் ஒரு offer latter copy-யில் கையெழுத்து வாங்கி விட்டு பைலில் வைத்தான்.

அதற்குள் கிருஷ் புது கேபினுக்கு மாறி விட, கொஞ்சம் தள்ளி இருந்த அந்த CEO கேபினுக்குள் கதவை தட்டி விட்டு நுழைந்த ஸ்வேதா அங்கே கோட்டுடன் சேரில் அமர்ந்து இருந்த கிருஷ்ணாவை பார்த்து அசந்து போனாள். "இப்போ தான் ஒரு கம்பெனியோட CEO வை பாக்குற மாதிரி இருக்கு".

"அப்படியா இது வரைக்கும் அந்த look வரலைங்கிற".

"ஆமா, இது வரைக்கும் காலேஜ் பையன் மாதிரி இருந்துச்சு. இப்போதான் CEO மாதிரி இருக்கு."

"என் சீட் எங்கே?" என்று சுற்று முற்றும் பார்க்க, கார்னரில் இருந்த டேபிள், desk top, போன் பார்த்து ஆசையோடு அருகில் சென்று தடவி பார்த்தாள். 

"என்ன ஸ்வேதா இப்போவே மாறிக்கிரியா? இல்லை நல்ல நேரம் பார்க்கணுமா?"

"உங்களோட இருக்கிற எல்லா நேரமும் எனக்கு நல்ல நேரம்தான்" என்று சொல்லி, "இப்போவே என்னோட hand bag-கை எடுத்து வந்துடுறேன்."

அடுத்த இரண்டு நிமிடங்களில் நிறைய பேர் வந்து புது கேபின்னுக்கு வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

கிருஷ்ணாவுக்கு ஒன்றும் புரியவில்லை. 'புது கேபினுக்கு வந்ததுக்கு வாழ்த்தா' என்று குழம்ப, உள்ளே வந்த ஸ்வேதாவும்"வாழ்த்துக்கள் CEO சார்" என்று கிண்டல் செய்தாள்.

"நான் ஏற்கனவே CEO தானே" என்று சொல்ல
"நீங்க சேர்மன் mail-லை பார்க்கலையா."அப்போது தான் கிருஷ்ணாவுக்கு கடந்த ஒரு மணி நேரமாக மெயில் பார்க்கவில்லை என்று நினைவுக்கு வந்தது.
மெயில் பாக்ஸ் ஓபன் செய்ய, Message from Chairman என்று இருக்க, அதை ஓபன் செய்தான்.
"இது வரை CFO மற்றும் CEO designate என்று இரண்டு பதவிகளை வகித்து வந்த கிருஷ்ண குமாரை கம்பெனியின் புதிய CEO ஆக அறிவிக்கிறேன். புதிய CFO தேடும் படலம் தொடங்கி விட்டது. புது CFO வரும் வரை கிருஷ்ண குமார் தற்காலிகமாக இரு பதவிகளையும் சேர்த்து கவனிப்பார். நமது புதிய CEO-க்கு Board of Directors சார்பாக எனது வாழ்த்துக்கள். புதிய தலைமையின் கீழ் நமது நிறுவனம் புது உயரங்களை தொட வாழ்த்துக்கள்."

இந்த செய்தியை பார்த்த கிருஷ்ணாவுக்கு புரிந்தது. இது வரை தற்காலிகமாக பார்த்த வேலைநிரந்தரமாகி விட்டது என்று உணர்ந்தான்.உடனே சேர்மனுக்கு போன் போட, அவனை பெருமையோடு பார்த்து கொண்டிருந்தாள் ஸ்வேதா.
போனை எடுத்த சுப்ரமணியம் காலர் ஐடி மூலம் அழைப்பது கிருஷ் என்பதை உணர்ந்து "சொல்லு கிருஷ்ணா" என்று கேட்க

"சார் என்ன சார் இது. தற்காலிகம் அப்படின்னு சொல்லி நிரந்தரம் ஆக்கிட்டிங்க."
"ஏன் கிருஷ் இந்த பதவி பிடிக்கலையா? இது எனக்கு பிறகு கம்பெனில powerful ஆன போஸ்ட். என்ன சின்ன வயசுல வந்துருக்குனு பாக்குறியா? உன்னோட ideas எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு, எனக்கு இன்னும் கொஞ்ச நாள் வெளிநாடு டூர் இருப்பதால, நீ முழுக்க CEOவேலை பார்க்க வேண்டி இருக்கும். உன்னால ரெண்டு பதவியையும் ஒண்ணா பார்க்க முடியாதுன்னு நாங்க முடிவு செய்து இந்த மாற்றம் செய்தோம். ஏன் உனக்கு பிடிக்கலையா?" என்று கேட்க

"சார் எனக்கு பிடிச்சுருக்கு. ஆனா திடீர்னு இப்படி."
"கிருஷ் வாழ்க்கைல நமக்கு வர்ற வாய்ப்புகள் எல்லாம் திடீர்னு தான் வரும். வர்ற லட்சுமியை விடாதே, ஸ்வேதாவையும் சேர்த்து தான் சொல்லுறேன்". என்று சொல்லி கடகடவென்று சிரித்தார்.
அதற்கு மேல் கிருஷ்ணாவுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. "Thanks you sir" சொல்லி போனை வைத்தான்.
"என்ன சொன்னார் சேர்மன்".
"வாழ்த்து சொன்னார். நீ Secretary ஆன விஷயம் கூட நம்ம சேர்மன் காதுக்கு போய்டுச்சு. இந்த ஹரி பயலை நாலு உதை விட்டா எல்லாம் சரி ஆய்டும். விட்டா மைக் போட்டு எல்லார் கிட்டயும் இவனே சொல்லிடுவான் போல இருக்கு".


எதுக்கு இப்போ கோபப்படுறீங்க. எப்படியும் ஒரு நாள் சேர்மனுக்கு தெரியதான் போகுது, இப்போ தெரியுரதுல என்ன தப்பு?" என்று கேட்க


"சரி முதல்ல உங்க அம்மா அப்பா கிட்ட பேசுனியா" என்று கேட்க, "இல்லை. காலைல பேச நேரம் கிடைக்கல. கட்டாயம்இன்னைக்கு சாயந்தரம் பேசுறேன்" என்று சொல்லி விட்டு தன் சீட்டில் உட்கார்ந்தாள்.




No comments:

Post a Comment