Wednesday, August 12, 2015

கண்ணனை நினைக்காத நாள் இல்லையே - அத்தியாயம் - 16

முதலில் சுமன் பேச தொடங்கினார். "எனக்கும் என் மனைவிக்கும் கிருஷ்ணாவை மிகவும் பிடித்து விட்டது. உங்களுக்கு எங்க பொண்ணு பிடிச்சு இருக்கா?"என்று கேட்க

அதற்கு தேவகி, "ஸ்வேதாவை யாருக்குதான் பிடிக்காது. உங்க பெண்ணை நல்ல மரியாதை தெரிஞ்ச பெண்ணா வளர்த்து இருக்கீங்க.கிருஷ்ணா ஸ்வேதா பொருத்தமான ஜோடி. இப்போ நாம பெயருக்கு நிச்சயம் மட்டும் செய்து விட்டு, கல்யாண தேதி முடிவு செய்யணும். கல்யாணத்துக்கு முந்தைய நாள் நிச்சயதார்த்தம் வச்சுக்கலாம்."

அதற்குள் ஸ்வேதா வந்து, "பெரியவங்க நீங்க தப்பா எடுதுக்கலைனா நான் ஒண்ணு சொல்லலாமா" என்று கேட்க, "சொல்லுமா"என்றார் வாசுதேவன்

"முதல்ல கலாவோட திருமணம் பேசி முடிங்க. அடுத்த முகூர்தத்தல எங்க கல்யாணம் வச்சுக்கலாம்.என்ன அம்மா நான் சொல்றது சரிதானே" என்று கேட்க, 

"100சரி" என்று ஆமோதித்து விட்டுநிவேதிதா பேச தொடங்கினாள். "ஸ்வேதா சொல்றது தான் சரி. வீட்டுல பொண்ணை வச்சுட்டு பசங்களுக்கு கல்யாணம் பண்றது தப்பு.எங்க சொந்தக்காரங்க பல பேர், பெங்களூர்ல இருக்கிறதால கல்யாணம் இங்கே தான் நடத்த போறோம்.அதனால ரெண்டு கல்யாணத்துக்கும் இடைல gap இருப்பது நல்லது.உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லைன்னு நினைக்கிறேன்."

தேவகியும் ஆமோதித்து "நாங்களும் கலா கல்யாணத்தை மதுரைல தான் நடத்தணும். அதனால நீங்க சொல்றதுதான் சரி."என்று சொல்ல, சுமன் பேச தொடங்கினார். 

"இப்போ நாம தட்டு மாத்திக்கலாம்.ஸ்வேதா கல்யாண தேதியை கலாவோட கல்யாண தேதி முடிவு செஞ்சுட்டு வச்சுக்கலாம்."

இரு தம்பதிகளும் நிச்சயதார்த்தம் பேசி முடிக்க, தேதி குறிப்பிடாமல் திருமணம் முடிவு செய்யபட்டது.

அடுத்த நாள் சுப்ரமணியம் வெளி நாடு சுற்று பயணத்தில் இருந்து திரும்பி வந்து சேர அவரிடம் ஹரிகிருஷ்ணாவின் பெற்றோர்கள் கலாவுடன் வந்து இருக்கும் விஷயம் சொன்னான். வெள்ளி கிழமை பெண் பார்க்க வீட்டுக்கு வருவதாக கிருஷ்ணாவிடம் தெரிவித்தார். 

வெள்ளி கிழமை காலை ஒன்பது அளவில் வீட்டுக்கு வந்த சுப்ரமணியம், ஹரி இருவரையும் வாசுதேவன் தம்பதியினர் வரவேற்றனர்.சோபாவில் அமர்ந்து சுப்ரமணியம் பேச தொடங்கினார்.

"எனக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சு இருக்கு. ஹரியோட செலக்சன் என்னைக்குமே தப்பா இருந்தது இல்லை. எனக்கு இந்த கல்யாணத்ல முழு சம்மதம். சீக்கிரம் வச்சுக்கலாம். ஏன்னா இது ஒரு திருமணம் இல்லை ரெண்டு திருமணம் சம்மந்தப்பட்டு இருக்கு" என்று அர்த்த பூர்வமாக சிரித்தார்.

"ஹரி என் கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கான். அவங்க கல்யாணத்தை தள்ளி வைக்க வேணாம்."

அங்கே அமர்ந்து இருந்த ஐயர் அடுத்த மாதம் 9 , 15 தேதிகள் தொடர்ந்து முகூர்த்தம் இருப்பதாக தெரிய படுத்த, 9-ம் தேதி ஹரி-கலா திருமணம், 15-ம் தேதி கிருஷ்ண-ஸ்வேதா திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது. 



வாசுதேவன் போனில் தெரிவிக்க ஸ்வேதா பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

திருமணத்துக்கு ஒரு வாரம் முன்னே லீவ் போட்டு கிருஷ்ணா வந்து விட, இரண்டு நாள் கழித்து சுமன், நிவேதிதா தம்பதியுடன் ஸ்வேதா மதுரை வந்தடைந்தார்.
திருமண நாள் நெருங்க வாசுதேவன் தேவகி தம்பதிக்கு டென்சன் அதிகமானது. வாசு தேவன் ஒரு கட்டத்தில் ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழ, தேவகி பதறி போனாள். 

டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொல்ல, கிருஷ்ணா கல்யாண வேலை காரணமாக அலைச்சல் அதிகமாக இருந்ததால் யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் தேவகி மன கலக்கம் அடைந்தாள்.
அருகில் இருந்து நடந்ததை கவனித்த ஸ்வேதா "நான் பாத்துக்கிறேன் ஆன்டி" என்று சொல்லி மன நிம்மதி தர, கிருஷ்ணா நண்பர்கள் உதவிக்கு வந்து சேர கிருஷ்ணாவுக்கு வேலை பளு கணிசமாக குறைந்தது.

ஸ்வேதா வாசுதேவன் இருந்த அறையில் அவருடன் பேசியபோது 'அவர் மன அழுத்தத்துக்கு காரணம் கல்யாணவேலை மட்டும் அல்ல,கிருஷ்ணா சரியாக பேசாதது தான்' என்று அறிந்தாள்.

இரவு பதினோரு மணிக்கு வீடு திரும்பிய கிருஷ்ணாவை தனியாக அழைத்து பேச தொடங்கினாள்."KK . உங்க அப்பா கிட்ட சரியா பேச கூடாதா?அவர் தப்பு பண்ணினது பல வருஷங்களுக்கு முன்னால. இப்போ அவர் மாறிட்டார். அவர் தவறை உணர்ந்து மன்னிப்பு கேக்குறார். நீங்க மன்னிக்க கூடாதா. என்ன இருந்தாலும் உங்களோட அப்பா இல்லையா."

கிருஷ்ணா தலை குனிந்து யோசித்தான்.

"KK மன்னிக்க முடியாத தவறுன்னு இந்த உலகத்தில எதுவும் இல்லை. நீங்க ஒரு வார்த்தை அவரை அப்பான்னு கூப்பிடுங்க, அப்போ தெரியும் அவர் எந்த அளவுக்கு உங்க மேல பாசம்வச்சுருக்கார்ன்னு.ப்ளீஸ் எனக்காக" என்று கெஞ்ச, அவள் சொன்ன வார்த்தைகள்ல உள்ள உண்மையை உணர்ந்தான்.

உள்ளே படுக்கை அறையில் இருந்த வாசுதேவனை பார்க்க சென்றான். கண்களை மூடி படுத்து இருந்த அவரை கண்டு கண்கலங்கினான்."அப்பா" என்று கூப்பிட, தடக் என்று கண் திறந்து பார்த்தார்.

"கிருஷ்ணா நீ தான் கூப்பிட்டியா? உண்மைலே என்னை அப்பான்னு கூப்பிட்டியா? ஆறு வருசத்துக்கு அப்புறம் நீ இப்படி கூப்பிடுறது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?"அவர் கண்களில் கண்ணீர் வழிய குரல் நடுங்க பேச ஆரம்பித்தார். 

"கிருஷ்ணா என் கிட்ட உட்கார முடியுமா, உன்னை தொட்டு பாக்கனும்டா" என்று கேட்க, கிருஷ்ணாவுக்கும் தன் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை. அதற்குள் அங்கே நடப்பதை கண்டு கண்கள் கலங்கிய ஸ்வேதா, உடனே சென்று தேவகி, கலாவை அழைத்து வந்தாள்.

கிருஷ்ணா வாசுதேவன் கையை பிடித்து கண்களில் வைத்து அழுது கொண்டே, "என்னை மன்னிச்சுடுங்க அப்பா, நான் உங்க கிட்ட கடுமையா நடந்துகிட்டேன்.இப்போ தான் ஸ்வேதா எடுத்து சொன்னப்போ எனக்கு புரிஞ்சது."

தேவகி அவன் தலையை தடவி கொடுத்து "அப்பா உன்னை மன்னிசுட்டார். எழுந்து வா" என்று சொல்ல கிருஷ்ணா அம்மாவிடம் வந்தான்.

ஸ்வேதாவுக்கு நம்ப முடியவில்லை. தான் சொன்னதை அப்படியே ஏற்று கொண்டு செயல்படுத்திய KK-வை காதல் பொங்க பார்த்தாள்.கிருஷ் அவளுக்கு தன் கண்களால் நன்றி சொன்னான்.

திருமண நாளில் Sun Solar System கம்பெனியில் இருந்து அனைவரும் கலந்து கொள்ள, வாசுதேவன்-தேவகி தம்பதியினர் சுற்றமும் நட்பும் சூழ ஹரி-கலா திருமணம் இனிதே நடந்தேறியது. 

சுப்ரமணியம் புது மண தம்பதியினருக்கு புதிய Flat திருமண பரிசாக கொடுத்து ஆசீர்வதித்தார்.

கிருஷ்ணா கண்கள் கலங்க நிற்க, அருகில் இருந்த ஸ்வேதா "KK கண்ணை தொடைச்சுக்கங்க.எல்லாரும் உங்களையே பாக்குறாங்க".

கிருஷ்ணா கண்களை துடைத்து விட்டு புன்னகைக்க, "அப்பா இப்பதான் பார்க்கிற மாதிரி இருக்கு.எனக்கு இந்த மாதிரி ஒரு பாசமலர் அண்ணன் இல்லையேன்னு பொறாமையா இருக்கு".

புது மண தம்பதியினர்ஹரி-கலா, கிருஷ்ணா-ஸ்வேதா காலில் விழ இருவரும் பதறி போனார்கள். 

"என்ன இது எங்க கால்ல போய் விழுந்துட்டு" என்று ஸ்வேதா அன்போடு கலாவை கடிந்து கொள்ள, கலா சிரித்து கொண்டே "என் அழகு அண்ணி, இன்னும் ஆறு நாள் தான். அப்புறம் எங்க அண்ணன்கிட்ட மாட்டிகிட்டு படாதபாடுபட போறீங்க" என்று சொல்ல, கிருஷ் அவள் தலையில் பாசத்தோடு கொட்டு வைத்து சிரித்தான்.

கிருஷ்ணாவுக்கு தனது திருமண நாள் நெருங்கி விட்டது என்பதை இன்னும் நம்ப முடியவில்லை. அவன் பெற்றோர்கள் இருவரும் கலா திருமணம் முடிந்த இரண்டாவது நாள் கிருஷ்ணாவுடன் கிளம்பி பெங்களூர் வர, ஸ்வேதா வீட்டில் திருமண ஏற்பாடுகள் பெரிய அளவில் நடந்து கொண்டு இருந்தன.

திருமணநாள் காலை ஹரி மணமகன் அறைக்கு வர, அங்கே கிருஷ்ணாவுக்கு உடை அலங்காரம் நடந்து முடிந்து விட்டது. கூட இருந்த நண்பர்கள் கிண்டல் செய்து கொண்டு இருக்க, கிருஷ் சிரித்து கொண்டு இருந்தான்.

"கிருஷ் உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" என்று ஹரிசொல்ல, நண்பர்களை வெளியே அனுப்பி விட்டு 

"சொல்லு மாம்ஸ்" என்றான் கிருஷ்.

"இப்போதாவது ஸ்வேதா கிட்ட உண்மையை சொல்ல போறியா, இல்லை அப்படியே விட போறியா?"

கிருஷ் யோசித்தான். 'பின்பு தெரியக்கூடிய வாய்ப்பில்லை' என்றாலும் ஸ்வேதாவிடம் மறைக்க விருப்பம் இல்லை. "நீ சொல்றது சரி தான் ஹரி, இதுதான் எனக்கு லாஸ்ட் சான்ஸ். கட்டாயம் சொல்லித்தான் ஆக வேண்டும்."

கிளம்பி மணமகள் அறைக்கு வர, அங்கே இருந்த ஸ்வேதாவின் தோழிகள் அவனை "இந்த பாருடா மாப்பிள்ளைக்கு அவசரத்தை இப்பவே பொண்ணை பார்க்கணுமாம்" என்று கிண்டல் செய்ய, ஸ்வேதாவை பார்த்து "நான் உன் கிட்ட தனியா பேசணும்" என்று என்றான் கிருஷ்.

தோழிகள் "அதுதான் இன்னைக்கு ராத்திரி முழுக்க பேச போறாங்களே, அப்புறம் என்னதான் இப்போ பேசணுமா தெரியலை" என்று சொல்ல, ஸ்வேதா அவர்கள் அனைவரையும் 'உஷ்' என்று சொல்லி பார்வையால் அடக்க, புரிந்து கொண்டு வெளியேறினர்.

பளபளக்கும் காஞ்சிபுரம் பட்டு பச்சை நிறத்தில் மின்ன, கழுத்தில் மாலை அணிந்து மண மேடைக்கு செல்ல தயாராக இருந்த ஸ்வேதாவை தன் கண்களால் பருகினான்.அவன் பார்வையின் தீவிரத்தை பொறுக்க முடியாத ஸ்வேதா வெட்கத்தால் கன்னம் சிவக்க தலை குனிந்தாள்.

கதவை மூடி விட்டு கிருஷ்ணா பேச தொடங்கினான்.



"ஸ்வேதா, என்னை பத்தி எல்லா விஷயமும் உனக்கு தெரியும்.உன் கிட்ட நான் ஒரே ஒரு விஷயம் சொல்லாம விட்டு இருக்கேன்."

"அதுனால என்ன இப்போ, இன்னும் ஒரு மணி நேரத்ல நம்ம கல்யாணம் முடிய போகுது. அது முடிஞ்ச உடனே பேசலாமே" என்று கேட்க
"இல்லை ஸ்வேதா. இது ரொம்ப urgent ஆன விஷயம். எனக்கு பத்து நிமிஷம் போதும்"

நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்.
ஸ்வேதா முகத்தில் பல மாற்றங்கள், 'என்னோட KK இப்படிபட்டவனா?'அவளுக்கு இதயமே வெடித்து விடும் போல இருந்தது.
"KK நீங்க சொல்றது உண்மையா? இல்லை சும்மா விளையாடி பாக்குறின்களா?" நம்ப முடியாமல் கேட்டாள்.
"இல்லை ஸ்வேதா, நான் சொல்றது முழுக்க முழுக்க உண்மை."

"அப்படின்னா. என்னை பிளான் போட்டு ஏமாத்தி இருக்கீங்க. , உங்களோட படிப்பு, அறிவு எல்லாத்தையும் உங்களையே நம்பி வந்த ஒரு அப்பாவி பெண்ணை ஏமாத்த உபயோக படுத்தி இருக்கீங்க. இதுக்கு உதவி செய்ய உங்கள் நண்பர் ஹரி, பேஷ் பேஷ், அருமையா நாடகம் ஆடி இருக்கீங்க. உங்களுக்கு வெட்கமா இல்லை."

"ஹரி மேல எந்த தப்பும் இல்லை. அவன் முதல்லே உன் கிட்ட சொல்ல சொன்னான்."

"அப்புறம் ஏன் சொல்லலை."

"எனக்கு பயம் வந்துருச்சு. உன்னை இழந்துடுவோமோன்னு."

"ஓ அப்புறம் அந்த பிரகாஷ், அவன் என்ன தப்பு பண்ணினான். "

இதற்கு கிருஷ் பதில் சொல்ல முடியவில்லை

"உங்களால பதில் சொல்ல முடியாது. உங்களை நம்பி நான் என்னை முழுக்க கொடுத்தேனே, எனக்கு ரத்தம் கொதிக்குது. இன்னும் என்ன என்ன பொய் சொன்னிங்களோ."

"இல்லை ஸ்வேதா வேற எதுவும் சொல்லலை.""சீ வாயை மூடுங்க. உங்களுக்கு வெட்கமா இல்லை. உங்க பார்வை பட்டாலே எனக்கு உடம்பு எரியுது. என் பேரை கூப்பிட்டா எனக்கு காது கூசுது. இனிமே எக்காரணத்தை முன்னிட்டும் என் பெயரை சொல்லி கூப்பிட கூடாது, மீறி கூப்பிட்டா அப்புறம் என் பொணத்தை தான் பார்ப்பிங்க."


கடகடவென்று கதவை திறந்து வெளியே வந்தாள். கல்யாண மேடைக்கு வந்தவளை பார்த்து மந்திரம் சொல்லும் ஐயர் திகைத்து போக, தனது பெற்றோரை பார்த்து கத்த ஆரம்பித்தாள்.
"அப்பா எனக்கு இந்த கல்யாணத்ல விருப்பம் இல்லை. உடனே நிறுத்துங்க". தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி எறிய, அந்த திருமண அரங்கமே அதிர்ச்சியால் அதிர்ந்தது.

ஆபீஸில் தனது கேபினில் அமர்ந்து இருந்த கிருஷ்ணாவுக்கு தன் முன்னால் இருந்த ஸ்வேதாவின் காலி சேர் அவன் மனதை கலக்கியது.

திருமணம் நடக்காமல்முறிந்த பின், ஒரு வாரம் ஆகி விட்ட நிலையில் ஸ்வேதாவும் வேலைக்கு வராததால், பழைய pending worksஇருக்க எல்லாவற்றையும் clear செய்து கொண்டு இருந்தான். சேர்மன் செக்ரேடரி வேலைக்கு வேறு ஆள் எடுத்து கொள்ள சொல்லியும்,அவனுக்கு ஸ்வேதா இடத்தில் வேறு ஆளை எடுக்க மனம் இல்லை. 

கடந்த ஒரு வாரத்தில் சரியாக சாப்பிடாத, தூங்காத காரணத்தால் திடீரென்று பத்து வயது கூடியது போல் தோற்றம். சுவர் கெடிகாரத்தை பார்க்க மதியம் ஒரு மணி, சாப்பாடு வந்து அவன் டேபிளில் இருக்க, காலையில் வரவழைத்த டிபன் காய்ந்து கிடந்தது.அதை திரட்டி கீழே இருந்த குப்பை பக்கெட்டில் போட, அவன் மனது ஒரு வாரத்துக்கு முன் திருமண நாளை நோக்கி சென்றது.

சுமன் ஷெட்டி பதட்டத்துடன் ஓடி வந்து "என்ன ஆச்சு ஸ்வேதா என்ன பிரச்சனை?".
"அப்பா முதல்ல இந்த கல்யாணத்தை நிறுத்துங்க. எனக்கு இதுல இஷ்டம் இல்லை.""ஸ்வேதா ஏன் திடீர்ன்னு இப்படி கல்யாணத்தை நிறுத்த சொல்ற. இது உங்க ரெண்டு பேர் எதிர் காலத்தையும் பாதிக்கும். யோசிச்சு முடிவு செய்யலாம். நீ திருமண மேடைல போய் உட்கார்" என்று சொல்ல

அதற்குள் அவளை தொடர்ந்து வந்த கிருஷ் "ஸ்வேதா எதுவா இருந்தாலும், கல்யாணம் முடிஞ்ச உடனே உட்கார்ந்து பேசலாம். இப்போ மேடைல போய் உட்காரு" என்று கெஞ்சினான். 

"முடியாது. நான் கேட்க மாட்டேன்.அப்பா நீங்களா நிறுத்துரிங்களா இல்லை நான் வெளியே போகட்டுமா"

அருகில் இருந்த நிவேதிதா மிரண்டு போய் "முதல்ல கல்யாணத்தை நிறுத்துங்க, அவ பிடிவாதக்காரி. சொன்னதை செய்வா"என்று சொல்ல அதற்குள் 

"என்ன இது பொண்ணே இந்த கல்யாணம் பிடிக்கலைன்னு சொல்லிட்டா, மாப்பிள்ளை மோசமானவனா இருப்பான்போல இருக்கு.அதனால தான் இந்த பொண்ணு கல்யாணம் வேண்டான்னு கல்யாணத்தை நிறுத்திட்டா" என்று பலவாறு பேசி கொண்டு எழுந்து போக ஆரம்பித்தனர்.

கீழே சில உறவினர்களுடன் பேசி கொண்டு இருந்த வாசுதேவன், தேவகி இருவரும் ஸ்வேதா கத்தியதை கண்டு பதட்டத்துடன் மேடை ஏறி வர, அவர்களை தொடர்ந்து சுப்ரமணியம், ஹரி, கலா ஓடி வந்தனர்.

சுப்ரமணியம் "இது எங்க குடும்ப பிரச்சனை. தயவு செய்து யாரும் தப்பா எடுத்துக்காம கிளம்புங்க" என்று கை கூப்பி வேண்டி கொள்ள,மீதம் இருந்த உறவினர்களும் கலைந்து செல்ல தொடங்கினர்.

நாம எல்லோரும் உள்ளே சென்று பேசலாம் என்று சுப்ரமணியம் அழைக்க, ஸ்வேதா வர மறுத்தாள். சுமன் அவளை கெஞ்சி அழைக்க,ஒரு வழி யாக உள்ளே மணமகன் அறைக்கு சென்றனர்.

உள்ளே சுமன் தம்பதி, வாசு தேவன் தம்பதி, ஹரி, கலா, சுப்ரமணியம், கிருஷ், ஸ்வேதா இருக்க சுப்ரமணியம் முதலில் பேச ஆரம்பித்தார். "

என்ன ஸ்வேதா எதுக்காக இந்த கல்யாணத்தை நிறுத்த சொன்ன,""இந்த கல்யாணத்ல எனக்கு விருப்பம் இல்லை. KK என்னை கல்யாணம் செய்றதுக்காக பொய் சொல்லி இருக்கார்."

"சரி என்ன செய்தார்"

"பிளான் பண்ணி என்னை லவ் பண்ணுற மாதிரி ஏமாத்தி, எனக்கும் பிரகாசுக்கும் இருந்த நட்பை சிதைத்து, என்னை மயக்கிட்டார்."

"எனக்கு புரியலை. பிரகாஷ் யாரு. ஹரி நீயாவது கொஞ்சம் விபரமா சொல்லு"

கிருஷ் தலை குனிந்து நிற்க, ஹரி நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் சொல்லி முடித்தான்.

"கிருஷ் நீ இந்த குற்றசாட்டுக்கு என்ன பதில் சொல்லுற" என்று கேட்க

"சார், ஹரி சொன்ன எல்லாமே உண்மைதான். ஆரம்பத்தில கொஞ்சம் விளையாட்டா இருந்தேன். பிரகாஷ் மேல போய் குற்றத்தை சுமத்தினேன். இந்த இரண்டு தவறை தவிர நான் வேற எந்த தவறும் பண்ணலை. ஸ்வேதா மீது இருந்து அன்பு, காதல் எனக்கு மட்டும் தான் வேணும்னு இதை பண்ணினேன். ஸ்வேதா மேல எனக்கு இருக்கிற காதல் மெய்யானது. அதை மட்டும் சந்தேகபடாதிங்க" என்று குரல் தழுதழுக்க சொன்னான்.

"பொய், எல்லாமே பொய். எப்படி இவரை நம்ப முடியும் சொல்லுங்க சார்.காதல், கல்யாணத்துக்கு ஒருத்தர் மேல் ஒருத்தர் நம்பிக்கை அவசியம் இல்லையா. எனக்கு இவர் மேல நம்பிக்கை சுத்தமா போச்சு. அதுனால தான் கல்யாணத்தை நிப்பாட்டினேன்".

"ஸ்வேதா நீ சொல்றது உண்மைதான். ஆனால் ஏமாத்தணும்னு நினைச்சு இருந்தா, அவன் உன்னை கல்யாண மேடைவரைக்கும் கொண்டு வந்து இருக்கமாட்டான்.திரும்ப யோசிச்சு பாரு ஸ்வேதா, இது உங்க ரெண்டு பேரோட எதிர்கால வாழ்க்கை சம்பந்தபட்ட விஷயம்.அவசரமா முடிவு எடுக்காதே."

ஸ்வேதா பிடிவாதமாக "என்னை மன்னிச்சுடுங்க சார். எனக்கு இந்த கல்யாணத்ல விருப்பம் இல்லை" என்று கை கூப்பி சொல்லி விட்டு, அந்த இடத்தை விட்டு வெளியேற, வேறு வழி இல்லாமல் அவளை தொடர்ந்து சுமன் மற்றும் நிவேதிதாவும் மண்டபத்தை விட்டு வெளியேறி காரில் வீட்டுக்கு திரும்பினர்.

னது உயிரே தன்னை பிரிந்தது போல உணர்ந்த கிருஷ், சக்தி முழுவதும் உறிஞ்சி எடுத்தது போல், உடல் தளர்ந்து அருகில் இருந்த சேரில் அமர்ந்தான்.

தேவகி அவனை உலுக்கி"கிருஷ்ணா அந்த பொண்ணு என்னடா சொல்லிட்டு போறா? ஏண்டா ஒரு பொண்ணோட வாழ்க்கைல விளையாடின"

அருகில் இருந்த அவன் அப்பா வாசுதேவன்"கிருஷ்ணா அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டான். அதனால ஏமாத்துறதுக்காக பழகினான்னு சொல்ல முடியாது. எனக்கு என்னமோ தான் உயிருக்கு உயிரா நம்பின கிருஷ்ணா தன்னை ஏமாத்திட்டான்னு ஸ்வேதாவுக்கு தாங்க முடியாத கோபம். இது குழந்தைகள் சாக்லேட் கேட்டு அழும்போது பெற்றோர்கள் கொடுக்காம, கொஞ்ச நேரம் கழிச்சு கொடுத்தா வேணாம்னு சொல்லுற மாதிரி. அவளுக்கு கிருஷ்ணா மேல வந்து இருப்பது ஒரு தற்காலிக கோபம் தான். அது கட்டாயம் மாறும். உண்மையான அன்பை ரொம்ப நாளைக்கு மறைக்க முடியாது. ஆனா அவள் மனம் எப்போ மாறும்ன்னு நாம சொல்ல முடியாது. இப்போதைக்கு பொறுமையா காத்துகிட்டு இருப்பதுதான் ஒரே வழி".

சுப்ரமணியமும் அதை ஆமோதித்தார்.

ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வந்த சுமன், கிருஷ்ணா கையை பிடித்து "மாப்ளை உங்களை அவமானபடுத்தினதுக்கு என் பெண் சார்பா மன்னிப்பு கேக்குறேன். நான் அவள் கிட்ட பேசி மனசை மாத்த பார்க்கிறேன். கொஞ்சம் பொறுமையா இருக்கணும்" என்று வேண்டி கேட்டு கொள்ள, கிருஷ்ணாவின் முகத்தில் ஒரு நிம்மதி பெருமூச்சு.

எல்லோரும் அவரவர் வீட்டுக்கு திரும்ப, அங்கே ஸ்வேதா வீட்டில்;






No comments:

Post a Comment