Wednesday, August 26, 2015

வீணை பேசும் ..... அத்தியாயம் 3

"என்ன சிவா நான் சொல்றது சரி தானே", இடியாப்பத்தை வெளுத்து கொண்டு இருந்த சிவா தலையை உயர்த்தி பார்த்து, "என்ன அக்கா ஏன் இப்படி என்னை போட்டு பாக்குற.எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம். அது மட்டும் இல்லை, பாவம் சின்ன பொண்ணு ப்ரியா. அவ வாழ்கையும் பாழாக்க திட்டம் போடுற. நீ பண்றது சரியில்ல." என்று சொல்லி கோபத்தில் தட்டிலே கை கழுவி விட்டு எழுந்தான்.

"டேய் சிவா நில்லுடா, இப்போ நான் என்ன சொன்னேன்னு இப்படி கோவிச்சுகிட்டு போறான். ஊர்ல நடக்காததையா இப்போ நான் பேசிட்டேன். எவளாவது வெண்ணைய கைல வச்சுகிட்டு நெய்க்கு அலைவாளா?"



மொட்டை மாடிக்கு இரண்டு இரண்டு படிகளாக ஏறிய சிவாவை பார்த்து எதிரில் வந்த ப்ரியா"என்ன மாமா திரும்ப புலம்ப ஆரம்பிச்சுட்டான்களா அம்மா? நீங்க ஒண்ணும் கவலைபடாதிங்க. எனக்கும் இந்த கல்யாணத்தில விருப்பம் இல்லை. அதோட நெருங்கிய உறவுக்குள்ள கல்யாணம் நடந்தா அது பிறக்க போகும் குழந்தைகளை பாதிக்கும். நீங்க சந்தோசமா போய் தூங்குங்க மாமா" என்று சொல்ல,

"சரி ப்ரியா" என்று சொல்லி விட்டு ரூமுக்குள் நுழைந்த அவன் அலமாரியில் இருந்த அவன் அம்மாவின் போட்டோக்கு அருகில் நின்று "அம்மா, எப்படி அம்மா இந்த மாதிரி ஒரு பொண்ணு உன் வயித்தில வந்து எனக்கு அக்காவா பிறந்தா.உன்னோட சாந்தம்,அன்பு, கனிவு, பொறுமை யாருக்குமா வரும். இதுல இருந்து ஒரு நல்ல குணம் கூட அவளுக்கு இல்லையே. அவளுக்கு இந்த சொத்து தான் வேணும்னா உடனே அவள் பெயர்ல எழுதி வைக்க நான் இப்போ கூட ரெடி அம்மா, ஆனா அப்பாதான் அதுக்கு ஒதுக்க மாட்டேன்னு சொல்லிட்டார்."

அவனை போட்டோவில் இருந்து சிரித்தபடி பார்த்து கொண்டு இருந்தாள் அவன் அம்மா.
காலை 4.30. தனது செல் போன் அடிக்க, 'இந்த நேரத்தில் யார்?' என்று நினைத்தபடி போனை எடுத்து காதில் வைத்தான்

"அண்ணா நான் தான் சாந்தி. என் பிரெண்ட் கல்யாணத்துக்கு நீங்க என்னை அழைச்சுட்டு போறீங்கன்னு தீபக் அண்ணா சொன்னான்.இன்னும் கிளம்பலையா?"

"ஏய் சாந்தி, உன்னோட இம்சை தாங்க முடியலை. 5.30க்கு தானே வரேன்னு சொல்லி இருந்தேன். இப்போ நாலரை தானே ஆகுது".

"சாரி சிவா அண்ணா, நான் சரியா நேரம் பார்க்கலை. நான் வேணாம் ஆட்டோல போகட்டுமா?".

"ஆட்டோவிலா இந்த நேரத்திலையா? வேற வம்பே வேணாம். உன் அண்ணனுக்கு விஷயம் தெரிஞ்சா என்னை கொன்னே போட்டுருவான். நான் ஒரு அரை மணி நேரத்ல வரேன். wait பண்ணு. ஓகேயா" என்று கேட்டபடி போனை வைத்தான்மனதுக்குள்சிரித்துகொண்டே குளித்து ரெடி ஆன சிவா கீழே வந்தபோது மணி ஐந்து.அப்போது தான் எழுந்த வசந்தி அவனை பார்த்து ஆச்சர்யம் ஆனாள்"என்னடா அஞ்சு மணிக்கு கிளம்பி எங்கடா போற?"

"அக்கா ஒரு கல்யாணத்துக்கு போறேன்."

"எனக்கு தெரியாம உன் பிரெண்ட் எவனுக்குடா கல்யாணம்?"

"ஐயோ அக்கா, இது சாந்தியோட பிரெண்ட் கல்யாணம், தீபக் ஊர்ல இல்லை அதுனால நான் கூட்டி போறேன். வண்டி சாவி எடுத்துக்கிறேன்" என்று சொல்ல, 

"சரிடா Alto எடுத்து போ" என்று சொல்ல, 

"சரி அக்கா" என்று சொல்லி விட்டு வெளியே வந்தான்

வெளியே வந்தவன் வானத்தை பார்க்க விடி வெள்ளி மட்டும் பிரகாசமாக தெரிய, மற்ற நட்சத்திரங்கள் மின்ன, தூரத்தில் தெரிந்த பால் போல ஒளி வீசிய வெண்ணிலாமனதுக்கு நிம்மதி தர, ஆல்டோ காரின் கதவை திறந்து வண்டியை கிளப்பினான். 


அடுத்த பத்து நிமிடத்தில் தீபக் வீட்டுக்கு வர, வாசலில் காத்து இருந்த சாந்தியை முன் சீட்டில் உட்கார வைத்து, வண்டியை விரட்டினான். 

கல்யாண மண்டப வாசலை அடைந்த போது மணி ஐந்து முப்பது. 

கூட்டம் அதிகமாக இருந்த அந்த மண்டப வாசலில் சாந்தி, சிவாவுடன் உள்ளே நுழைய, வாசலில் இருந்த பெண்கள் பன்னீர் தெளித்து வரவேற்றனர்.

"சரி சாந்தி நீ போய் உன் பிரெண்ட் கூட போய் பேசிட்டு இரு. நான் இங்கே இருக்கிறேன். அவசரம்னா போன்ல கூப்பிடு" என்று சொல்லி,தனது போனை வைப்ரேஷன் மோடில் வைத்தான். 

"சரி அண்ணா" என்று சொல்லி விட்டு மின்னல் வேகத்தில் சாந்தி மறைய, கல்யாண ஏற்பாடுகளை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான். 

கடிகாரத்தை பார்க்க மணி ஆறரை. கல்யாண மேடையில் மணமகள் அமர்ந்து இருக்க, ஒரே புகை மண்டலம். ஐயர் மந்திரங்களை சொல்லி ஓத, இன்னும் சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்து காத்து இருக்க, 'எங்கே உட்காரலாம்"என்று சீட்டை தேடி கொண்டுரிந்தான் சிவா. 

முதல் வரிசையில் இருந்த சாந்தி அவனை பார்த்து கை அசைத்து அங்கே வர சொல்ல, வேகமாக சென்றான். சாந்தி தனக்கு அருகில் இருந்த சீட்டில் இடம் பிடித்து வைத்து இருக்க அதில் சிவா உட்கார்ந்து சாந்தியை பார்த்து 'தாங்க்ஸ்' என்றான். 

சாந்தி அருகில் இருந்த அவள் பிரெண்ட் சிவாவை பார்த்து புன்னகை செய்ய, நேற்று சந்தித்த பெண் ஆயிற்றே என்று பதிலுக்கு புன்னகைத்தான். 

"சிவா அண்ணா, இன்னும் அரை மணி நேரத்ல முகூர்த்தம் முடிஞ்சுடும். பிறகு கிப்ட் கொடுத்துட்டு, டிபன் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு போகலாம்" என்று சொல்ல தலை அசைத்து சுற்று முற்றும் வேடிக்கை பார்த்தான். 

இதற்கு இடையில் மேடையை ஒட்டிய திரையின் பின்னால் ஏதோ நடப்பது போல் தோன்ற கூர்ந்து கவனித்தான்.

தன் சீட்டில் இருந்து எழ முயன்ற சிவாவை சாந்தி கையை பிடித்து நிறுத்தினாள். "என்ன அண்ணா?"

"இல்லை சாந்தி, அங்கே எதோ பிரச்சனை மாதிரி தெரியுது."

"நீங்க ஒண்ணும் பேச வேண்டாம். உட்காருங்க" என்று கட்டாயபடுத்தி உட்கார வைத்தாள். 

வேண்டாவெறுப்போடு உட்கார்ந்த சிவா இப்போது தான் திருமண பெண்ணை நன்றாக கவனித்தான். சிவந்த மேனி, ஓரளவு ஒல்லியான உருவம், மெஹந்தி என்ற மருதாணி இட்டதால் மேலும் சிவந்த கரங்கள், கால்கள், சராசரி இந்திய பெண்ணை விட கொஞ்சம் உயரம அதிகம். தலை குனிந்து இருந்ததால் முகம் சரியாக தெரியவில்லை. அதுவும் அழகாக தான் இருக்க வேண்டும்.

'கல்யாணம் ஆக போகும் பெண்ணை இப்படி உற்று பார்ப்பது தவறு' என்று உணர்ந்த சிவா தன் முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டான்.

மீண்டும் அவன் பார்வை கல்யாண மேடையை ஒட்டி இருந்த திரை பக்கம் சென்றது.

 


கருப்பான குட்டையான உருவம் கொண்ட ஐம்பது வயது மதிக்க தோற்றம் உள்ள ஒருவர், அருகில் இருந்தவரிடம் கையை உயர்த்தி பேச,அவரோ இரு கைகளையும் கூப்பி கெஞ்சி கொண்டு இருந்தார்.அவருக்கும் ஐம்பது வயது இருக்கும்.என்ன நடக்கிறது என்று குழம்பி போய், ஆர்வம தாங்காமல் மெதுவாக நடந்து சென்று பின் பக்கம் வழியாக வர, சிவாவுக்கு அவர்கள் இருவரும் பேசியது தெளிவாக காதில் விழுந்தது

"ஐயா உங்க காலை பிடிச்சு கேக்குறேன். மாப்ளைய தாலி கட்ட சொல்லுங்க, உங்களுக்கு சொன்ன மாதிரியே பைக்கை நான் ஏற்பாடு பண்ணி தரேன்."

"எப்படிய்யா உன்னை நம்புறது. பையனுக்கு பைக் பிடிக்கும்னு தானே கல்யாணத்துக்கு முன்னால கேட்டேன், நீ என்னன்னா சேட் கிட்ட கடன்கேட்டு இருக்கேன், கட்டாயம் பணம் வந்துடும், பைக் வாங்கிடலாம்ன்னு சொல்லி இது வரைக்கும் இழுத்துட்ட, உன்னை எப்படி அய்யா நம்புறது. மனுஷனுக்கு நாக்கு சுத்தம் வேணாமா?"

"சம்பந்தி நான் கட்டாயம் என் தலைய அடமானம் வச்சாவது பைக் வாங்கி தரேன். மாப்ளையை தாலி கட்ட சொல்லுங்க.இப்போ விட்டா என் பொண்ணுக்கு எப்போவுமே கல்யாணம் நடக்காது."

கேட்ட சிவாவுக்கு கோபம் தலைக்கு ஏற, விறு விறு என்று நடந்து அவர்கள் இருவருக்கும் அருகில் வந்தான். திடீரென்று ஒரு புதிய நபர் உள்ளே வந்துடன் இருவரும் பேச்சை நிறுத்தி அவனை கேள்வி குறியுடன் பார்த்தனர்.

"இங்க யாரு பையனோட அப்பா?" என்று கேட்க, அந்த கருத்த குட்டையான நபர் அவனிடம் "நான்தான் அதுக்கு என்ன இப்போ?".
"நீங்கதானா அது"குரலை உயர்த்தினான். "இப்போ எதுக்கு தகராறு பண்ணுறீங்க.ஒரு பொண்ணை கல்யாண மேடைல நிறுத்தி வச்சுட்டு இப்படி பேரம் பேசிகிட்டு இருக்கிங்களே உங்களுக்கு வெக்கமா இல்லை."

"நீ யாரு தம்பி தேவை இல்லாம ஆஜராகுரே. உனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம். அந்த பொண்ணுக்கு இருக்கிற குறைக்கு என் பையனை தவிர வேற யாரு கல்யாணம் பண்ணுவா?"

"அய்யா அவர் யாரோ தெரியலை. அதை எல்லாம் மனசுல வச்சுக்காதிங்க.முகூர்த்தம் தவறிட போகுது. சீக்கிரம் மாப்ளையை தாலி கட்ட சொல்லுங்க" என்று பெண்ணின் அப்பாகெஞ்ச 

சிவா "ஏன் சார் நீங்க கெஞ்சிகிட்டு இருக்கீங்க. போலிசுக்கு போன் போட்டா போதும் வந்து அள்ளிட்டு போய்டுவாங்க" என்று சொல்லி விட்டு போனில் இன்ஸ்பெக்டர் ராம கோபாலனை அழைக்க பதில் இல்லை.


அதற்குள் பெண்ணின் அப்பா கெஞ்ச ஆரம்பித்தார். "சார் நீங்க இதில தலை இடாதிங்க இது ஒரு பொண்ணோட கல்யாணம் சம்பந்தபட்டது" .

"சரி நாம சொன்னா யாரு கேக்குறா" என்று வேதனைபட்டு கொண்டே திரும்ப முதல் வரிசையில், சாந்தி அருகில் வந்து அமர்ந்தான். 

"சிவா அண்ணா என்ன திடீர்னு ஆளை காணம். எங்க போயிட்டிங்க."

"ஒண்ணும் இல்லை சாந்தி. அங்கே ஏதோ வரதட்சினை தகராறு. அதுனால தான் போய் பார்த்தேன்."

"நீங்க எதுக்கு தேவை இல்லாத அதில போய் தலை இடுறிங்க. இதல்லாம் கல்யாண வெட்டில சகஜம். சீக்கிரம் சரி ஆய்டும்."

"சரி நீ சொல்றதும் ஒரு விதத்தில சரி தான். நான் ஏதோ நல்ல எண்ணத்தில பேச வேற மாதிரி புரிஞ்சிக்க போறாங்க".
"அந்த பொண்ணு உன் கிளாஸ்ல தான் படிக்குதா."

"ஆமாண்ணா. அவ நல்லா படிக்கிற பொண்ணு. அவள் தான் கிளாஸ்ல பஸ்ட். டென்த், பிளஸ் டூல கூட ஸ்டேட் பஸ்ட்."
"ஓ, அப்படின்னா புத்திசாலியா தான் இருக்கணும். சரி, இப்போ என்ன அவசரம், டிகிரி முடிச்சிட்டு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தானே."

"இல்லண்ணா, அவளுக்கு ஒரு பத்து மாப்பிள்ளைக்கு மேல பார்த்து இப்போதான் கல்யாணம் செட் ஆச்சு."

'பொண்ணு நல்லா தான் இருக்குறா, நல்ல புத்திசாலியும் கூட, இந்த பொண்ண வேண்டாம்னு யார் சொல்லுவா.வேற ஏதாவது குறை இருக்குமோ?' என்று மனதில் நினைத்து கொண்டே, குரலை தாழ்த்தி "அந்த பொண்ணுக்கு கை கால் எதுவும் சரி இல்லையா,"

"இல்லை அண்ணா, அது வேற குறை"
"அது என்ன?."அதற்குள் மேடையில் பையன்அவனை பார்த்து அதிர்ந்து போனான். 

'குட்டையாக, அவலட்சணமாக இருந்த அவனை பார்த்து, ச்சே இவனுக்கு இப்படி ஒரு பெண்ணா?' என்று எரிச்சலானான்.'கிளியை வளர்த்து பூனை கைல கொடுக்கிற மாதிரி, இவ்வளவு நல்ல படிச்ச, அழகானபொண்ணு இவனுக்கு. என்ன கொடுமை இது' என்று சலித்தவாறே பார்க்க, மணமகனை தொடர்ந்து அவன் அப்பா வந்து அவன் காதில் ஏதோ சொல்ல அவன் மேடையை விட்டு இறங்கினான். 

பின்னாலே கெஞ்சியபடி வந்த பெண்ணின் அப்பா கண்ணில் கண்ணீர்.விஷயம் தீவிரமாகி விட்டதை உணர்ந்த சிவா தன் இருக்கையை விட்டு எழஅதற்குள் சிவாவை அவன் செல் போன் அழைத்தது.

போனில் இன்ஸ்பெக்டர். அவரிடம் நடந்ததை கூற 'சரி சிவா இன்னும் பத்து நிமிஷத்ல நான் அங்கே இருப்பேன்' என்று சொல்ல சிவா நிம்மதி பெருமூச்சு விட்டான்.


இறங்கி கொண்டு இருந்த அந்த மாப்பிள்ளையின் கையை பிடித்து பெண்ணின் அப்பா கெஞ்சி கொண்டு இருந்தார். அவர்கள் இருவரையும் தலை நிமிர்ந்து பெண் பார்க்க ஒரு கணம் உறைந்து போனான்.

அவன் கனவில் வரும் தேவதை போல் இருந்தாள். அவள் கண்களோ கலங்கி இருந்தன. 


இதற்கு மேலும் பொறுத்து இருந்தால் தான் மனிதனே அல்ல என்று விரைந்து மேடையில் இருந்து இறங்கிய பெண்ணின் அப்பாவிடம்,"நீங்க எதுக்கு அந்த ஆள் கிட்ட கெஞ்சிட்டு இருக்கீங்க. இவ்வளவு அழகான படிச்ச பெண்ணை பெற்ற உங்களுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்கலையா.?"

"இவன் போனா வேற நல்ல மாப்பிள்ளை உங்களுக்கு கிடைப்பான். விட்டு தள்ளுங்க."

பின்னாலே வந்த மாப்பிள்ளையின் அப்பா, "என்ன நடக்குது. ஓ வேற மாப்பிள்ளை பாக்குரிங்களா. பேஷ் பேஷ். ரொம்ப நல்லது.எங்களை விடுங்க. நாங்க கிளம்பறோம்."

சிவாவுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை. "யோவ் பேச்சை நிறுத்துயா"
"இந்த பெண்ணை கட்டிக்க அவன் இவன்னு எல்லோரும் போட்டி போட்டு வருவாங்கபைசாக்கு ஆசைபட்டு ஒரு மகாலக்ஷ்மியை வேணாம்னு சொல்லுறீங்களே." 

"அப்படின்னா அந்த மகா லக்ஷ்மியை நீயே கட்டிக்க" என்று பெண்ணின் அப்பா கிண்டலோடு சொல்ல, 

"யோவ், உன் கிட்ட என்னய்யா பேச்சு?மாப்பிள்ளை இங்கே பாருங்க. நீங்கதான் வாழ்நாள் முழுக்க குடும்பம் நடத்த போறவரு. இது சின்ன விஷயம். உங்க அப்பா பேச்சை கேட்டு இந்த பெண்ணை வேண்டாம்னு சொல்லாதீங்க ப்ளீஸ்" என்று கெஞ்ச

"இல்லைங்க, நான் அப்பா பேச்சை மீற மாட்டேன்" என்று சொல்லி கையை உதறிவிட்டு நடந்தான். 

செய்வதறியாமல் நின்றான் சிவா.அதற்குள் போலிஸ் இன்ஸ்பெக்டர் ராமகோபாலன் நாலு கான்ஸ்டபிள்களுடன் வர, அவரிடம் மாப்பிள்ளையை காண்பிக்க அவர் அவனையும், அவன் குடும்பத்தை சேர்ந்தவர்களையும் சுற்றி வளைக்க, கல்யாண மண்டபத்தில் குழப்பம்.

அதற்குள் சாந்தி "சிவா அருகில் வந்து "எதுக்கு அண்ணா இந்த தேவை இல்லாத வேலை. நீங்க நல்லது செய்ய போக, இப்போ பாருங்க அவ கல்யாணம் நின்னு போச்சு."

"சாந்தி, இவ உன்னோட பிரெண்ட் தான, அவளுக்கு ஒரு பிரச்சனைனா உன்னால சும்மா இருக்க முடியுமா?"

"அண்ணா புரியாம பேசாதே. ஒரு பொண்ணுக்கு கல்யாணம், மேடைவரை வந்து நின்னு போனா அவளை யார் கல்யாணம் பண்ணிப்பா?.உனக்கு கோபப்பட தெரியுதே தவிர, சிந்திக்க தெரியலை."
அவளை பார்த்து கேலி சிரிப்பு சிரித்தான். "இந்த காலத்து பசங்களை பத்தி என்ன நினைக்கிற?இந்த மாதிரி பொண்ணு கிடைக்கனும்னா,நான் நீன்னு போட்டி போட்டு வருவாங்க, இப்போ பாரு,என்று சொல்லி விட்டு திரும்பி பார்க்க, கல்யாண மண்டபம் கிட்ட தட்ட வெறுச் சோடி கிடந்தது.



மாப்பிள்ளை குடும்பத்தின் பின் சென்ற பெண்ணின் அப்பா திரும்ப வந்து, "என்ன தம்பி இப்படி பண்ணிட்டிங்க. இவளுக்கு இனிமே எப்படி கல்யாணம் நடக்கும். இவனே பத்தாவது மாப்பிள்ளை. வரதட்சினை அதிகமா இருந்தாலும் பரவாயில்லைன்னு முடிச்சோம். இப்போ இப்படி நின்னு போச்சே" என்று கதறி அழ, சிவா என்ன சொல்வது என்று அறியாமல் தடுமாறினான்.

ஒரு வழியாக சமாளித்து கொண்டு, "சார் உங்களுக்கு வேணாம் நான் பண்ணினது தப்பா இருக்கலாம். உங்க பொண்ணுகிட்ட கேட்டு பாருங்க. அவங்க நான் சொல்றதை ஒத்து கொள்வாங்க" என்று சொல்லி, பெண்ணின் முகத்தை பார்க்க அவள் ஆமோதிப்பதை பார்த்து,"பார்த்திங்களா நான் சொன்னதுக்கு உங்க பொண்ணே தலை ஆட்டுறாங்க."

விரக்தியோடு, "அவ தலை ஆட்ட மட்டும் தான் செய்வா, வேற என்ன செய்ய முடியும்" என்று சொல்ல


கேள்வி குறியோடு சாந்தியை பார்க்க, "அண்ணா வீணாவால சரியா பேச முடியாது".

அவனால் நம்ப முடியவில்லை. 'வீணாவால் பேச முடியாதா.ஆண்டவா இது என்ன கொடுமை. எல்லாத்தையும் கொடுத்து அந்த பெண்ணோட பேச்சை பறிச்சுட்டியே' என்று வேதனை பெரு மூச்சு விட, 

அருகில் இருந்த வீணாவின் அப்பா, "என்ன தம்பி இப்படி பாக்குறிங்க. இப்போ சொல்லுங்க நான் கெஞ்சினது தப்பா?. என் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கெடைக்கும்னு இருந்தேன். இப்படி கெடுத்துட்டின்களே. பாவம் அவள் தாய் இல்லாத பொண்ணு வேற, அவள் கஷ்டத்தை யார்கிட்ட சொல்லி அழுவா? " என்று கண் கலங்க, செய்வது அறியாமல் திகைத்து நின்றான் சிவா.

அவன் அருகில் இருந்த சாந்தி, "சிவா அண்ணா நாம கிளம்பலாம். இங்கே நின்னால் இன்னும் பிரச்சனை அதிகமாகும்" என்று எச்சரிக்க,

முடியாது என்று தலை அசைத்தான் சிவா. "என்னாலதான் இந்த பொண்ணுக்கு கல்யாணம் நின்னுது. நானே ஒரு நல்ல மாப்பிளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன். அதுதான் நான் செஞ்ச தப்புக்கு பரிகாரம்" என்று சொல்ல,

வீணாவின் அருகில் இருந்த இன்னொரு வயதான பெண், "தம்பி வீணாவுக்கு நீ மாப்பிளை பாக்குறேன்னு சொல்லுறியே, கல்யாணம் நின்னு போன பெண்ணை யார் கல்யாணம் பண்ணிக்குவா? சரி மத்தவங்க சொல்றது இருக்கட்டும். ஏன் நீ அவளை பண்ணிக்குவியா?"

அதுவரை தலைகுனிந்து நின்ற அவன் தலை நிமிர்ந்து பார்த்து விழிக்க, "இப்போ தெரியுதா, என்ன தான் அழகான, படிச்ச, பண்பான பொண்ண இருந்தாலும், அவளால பேச முடியதுன்கிற குறை உனக்கு பெருசா தெரியுது, அப்படி தானே"என்று கேட்க

சுதாரித்து கொண்ட சிவா "நீங்க வீணாவுக்கு என்ன உறவு, நான் அவளோட பெரியம்மா,"

"ஓகே பெரியம்மா, எனக்கு வீணாவை பத்தி ஒண்ணும் தெரியாது. இருந்தாலும் நான் அவளை இந்த மேடைல கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறேன். வீணாவுக்கு சம்மதமா?கேட்டு சொல்லுங்க,

"அருகில் இருந்த சாந்தி அவன் கையை கிள்ளி, "என்ன சிவா அண்ணா, இப்படி குண்டை தூக்கி போடுறீங்க, வீட்ல அக்காவுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆய்டும்."

"அதை நான் சமாளிசுக்குவேன். எல்லாத்தையும் விட அந்த பொண்ணுக்கு என்னை பிடிச்சு இருக்கணும்.அது முக்கியம்."







No comments:

Post a Comment