Wednesday, August 26, 2015

வீணை பேசும் ..... அத்தியாயம் 4

"பெரியம்மா, எனக்கு வயசு 26, MBA படிச்சு இருக்கேன். இப்போ எங்க குடும்ப பிஸினெஸ் பார்த்துகிட்டு இருக்கேன். வெளியே வந்தா கூட குறைஞ்சபட்சம் ஐம்பதாயிரம் சம்பளம் கிடைக்கும். எப்போதாவது தம் அடிப்பேன், வேற எந்த கேட்ட பழக்கமும் கிடையாது.கொஞ்சம் கோபம் அதிகமா வரும், ஆனா பாசமா இருப்பேன். எனக்கு பொண்ணை பிடிச்சு இருக்கு, இப்போ பொண்ணோட சம்மததுக்காக காத்துகிட்டு இருக்கேன்."

வீணா தலை நிமிர்ந்து பார்க்க, அவள் கண்களில் கண்ணீர்.பதறி போனான், சிவா 'ஐயோ தப்பு பண்ணிட்டேன் போல, அந்த பொண்ணுக்கு கல்யாணம் நின்னு போனதால அழறா'என்று நினைத்தபடி கவலையோடு பார்க்க, அதற்குள் சாந்தி அவளிடம் ஏதோ விசாரிக்க, அவள் தலை அசைத்தாள்.

தூரத்தில் இருந்து கட்டை விரலை உயர்த்தி காண்பித்து, "அண்ணா உங்களை வீணாவுக்கு ரொம்பபிடிச்சு இருக்காம். அவள் அழுதது ஆனந்தகண்ணீர். தப்பா நினைக்க வேண்டாம்" என்று கத்த, சிவா முகத்தில் புன்சிரிப்பு.

வீணா அப்பா சதாசிவம் சந்தோசமாக "தம்பி உங்களை பத்தி வீணா ஏற்கனவே சொல்லி இருக்கா, நீங்க சாந்திக்காக தியேட்டர்ல சண்டை போட்டது எல்லாம் தெரியும்.

வீணா பிறக்கும் போது இந்த குறை இல்லை. அவளோட அம்மா எட்டு வருஷத்துக்கு முன்னே ஆக்ஸிடன்ட்ல இறந்து போன பிறகு, அவளுக்கு காய்ச்சல் வந்து பேச்சு போய்டுச்சு. நிறைய ட்ரீட்மென்ட் கொடுத்து இப்போசில வார்த்தைகள் மட்டும் பேசுவா.பேச முடியாதே தவிர அவளுக்கு நிறைய திறமைகள் இருக்கு" என்று சொல்ல, சிவா "நீங்க கல்யாணம் ஏற்பாடு கவனியுங்க" என்று சொல்லி அருகில் இருந்த சேரில் அமர்ந்தான்

அதற்குள் கிளம்ப தயாராக இருந்த ஐயரை அழைத்து நடந்த விஷயம் சொல்ல, அவரும் சந்தோசத்தோடு மந்திரம் சொல்ல ஆரம்பித்தார்.சுற்றி இருந்த வீணாவின் உறவினர்கள் நண்பர்கள் ஆசீர்வதிக்க, சிவா வீணாவை தனது வாழ்க்கை துணைவியாக ஏற்க,திருமணம் இனிதே முடிந்தது.

ராமகோபாலன் வந்து வாழ்த்து சொல்ல, வீணா அப்பா சதாசிவம் கேட்டு கொண்டபடி அந்த பழைய மாப்பிள்ளை குடும்பத்தை விடுவித்தார்.

தாலி கட்டிய சிவாவை கண்சிமிட்டாமல் பார்த்து கொண்டு இருந்தாள் வீணா.காதில் சாந்தி, "அண்ணா எப்படி இந்த விஷயத்தை சமாளிக்க போறீங்க. அக்கா ஒத்துக்க மாட்டேங்களே".
விஷயத்தின் தீவிரம் புரிந்த சிவா எப்படி சமாளிப்பது என்று யோசிக்க, அருகில் இருந்த மாமனார், "கவலைப்படாதிங்க மாப்ளே. நான் உங்க கூட வீட்டுக்கு வந்து பேசுறேன்" என்று சொல்ல,

"மாமா நீங்க சொல்றது நல்ல யோசனைதான். இருந்தாலும் நான் முதல்ல அத்தான் கிட்ட பேசுறேன். அவர் ஏதாவது யோசனை சொல்லுவார்" என்று சொல்லி அவரின் செல் நம்பரை அழுத்த அத்தான் போனை எடுத்தார்.

"சொல்லு மாப்ளை, என்ன விஷயம்."

"அத்தான், உங்க கிட்ட தனியா பேசணும். கொஞ்சம் வீட்டை விட்டு வெளியே வர்றீங்களா."

ஏதோ ஒரு பிரச்சனையான விஷயம் என்று புரிந்து கொண்ட அவன் அத்தான் போனை எடுத்து கொண்டு வெளியே வந்தார்.


சொல்லு மாப்ளை என்ன பிரச்சனை. யாரையாவது லவ் பண்ணுறியா?"

"என்ன மாமா கிண்டல் பண்ணிட்டு"

"இல்லை மாப்ளை, இந்த ஒரு பிரச்சனைல தான் நீ இது வரைக்கும் மாட்டல"

"அத்தான் இது வேற பிரச்சனை" நடந்ததை விளக்கி சொல்ல, எல்லாவற்றையும் கேட்ட அவர், "மாப்ளை, இப்போ என்ன பண்ண போறே."

"நீங்க தான் ஏதாவது யோசனை சொல்லணும் அத்தான். எனக்கு டென்சனா இருக்கு."

"பண்றதை வேகமா பண்ணிட்டு, இப்போ உட்காந்து நிதானமா கவலைபடு. சரி நீ வீட்டுக்கு வந்து பேசு, நான் உன் கூட சண்டை போடுற மாதிரி நடிக்கிறேன். அவ எப்பவுமே எனக்கு எதிரா பேசி தான் பழக்கம், உனக்கு சாதகமா பேசுவா" என்று சொல்ல,

"சரி அத்தான். நான் ஒண்ணு பண்ணுறேன். சந்தோஷை வீட்டுக்கு வர சொல்றேன்" என்று சொல்லி விட்டு, போனை வைத்தான்.

சந்தோஷிடம் போனில் பேசி நடந்த விஷயத்தை சொல்ல, அவன் தனது மாமனாருடன் வீட்டுக்கு வருவதாக சொன்னான்.

பேசி விட்டு பக்கத்தில் இருந்த வீணாவை பார்க்க அவள் முகத்தில் மெல்லிய சிரிப்பு.
"புரியுது. புரியுது. நான் படுறபாட்டை கண்டா உனக்கு சிரிப்பா இருக்குது".

வீணாவின் புன்சிரிப்பு மாறியது. சாரி என்று அவள் கண்களால் மன்னிப்பு கேட்க, அவனுக்கு அவன் மேலே வெறுப்பு வந்தது. 'ச்சே,எதுக்கு இப்படி இவள் மேல கோபப்படுறேன். பாவம் அவள் என்ன பண்ணுவா' என்று உணர்ந்து கொண்டு, அவள் கையை தன் கையால் அழுத்தி "சாரி நான்தான் கோபப்பட்டுட்டேன்" என்று சொல்ல, அவள் அவன் கையை கோர்த்து கொண்டு அவனை பார்த்து புன்னகை செய்ய மயங்கி போனான்.

"அண்ணா" என்று சாந்தி அழைக்க சுயநினைவுக்கு வந்தான். "முதல்ல சீக்கிரம் கிளம்பி வீட்டுக்கு போங்க. அக்காவுக்கு விஷயத்தை சொல்லி முதல்ல சமாதானபடுத்தணும்" என்று சொல்ல,

"சரி" என்று தலை அசைத்து விட்டு அவன் மாமனாரை பார்க்க, அவரும் புரிந்து கொண்டு கிளம்பினார்.வந்த காரில் நால்வரும் கிளம்ப, அடுத்த பதினைந்து நிமிடத்தில் வீடு வந்து சேர்ந்தனர்.

காரை நிறுத்தி விட்டு படபடக்கும் நெஞ்சத்துடன் சிவா, வீணா உடன் வீட்டுக்குள் நுழைய தொடர்ந்து சதாசிவம், சாந்தி.மாலையும் கழுத்துமாக உள்ளே நுழைந்த இருவரையும் வசந்தி உற்று பார்க்க, சிவாவுக்கு மனம் கலங்கியது.

அதற்குள் அவன் அத்தான் கோவர்த்தன்"என்ன மாப்ளை இப்படி செஞ்சுட்ட, உன் அக்கா உன் மேல எவ்வளவு பாசம் வச்சுருக்கா,எங்க நம்பிக்கைய குழி தோண்டி புதைத்து விட்டாயே" என்று அவனை திட்ட ஆரம்பித்தார்.


"போதும் நிறுத்துங்க, அவன் யாரும் செய்யாத தப்பை செய்யலை. அவனுக்கு அந்த பெண்ணை பிடிச்சுருக்கு. கல்யாணம் பண்ணிட்டு வந்து இருக்கான். ப்ரியா முதல்ல ஆலத்தி சுத்தணும் எடுத்து வா".

ஆலத்தி சுற்றி நெற்றியில் இருவருக்கும் போட்டு வைத்து, உள்ளே அழைக்க, மருண்ட விழிகளுடன் 'என்ன நடக்குமோ' என்று மிரண்டு இருந்த வீணா கண்களில் சந்தோச களை.

நடந்த விபரங்களை சதாசிவம் சொல்ல கேட்டு விட்டு"கவலைபடாதிங்க, இனிமே வீணா எங்க வீட்டு பொண்ணு" என்று சொல்லி விட்டு, அவளோட டிரஸ் எல்லாம் எடுத்து வந்து கொடுங்க, என்று சொல்லி, இருவரையும் அழைத்து கொண்டு, அப்பாவிடம் சென்றாள். 

அப்பா சிவாவை பார்த்து ஆசீர்வதிக்க, எப்படி அப்பாவுக்கு அதற்குள் விஷயம் தெரியும் என்று சிவா யோசிக்க "அவருக்கு முன்னாலேயே விஷயம் தெரியும், சந்தோஷ்சொல்லியாச்சு" என்று வசந்தி சொல்ல, அப்போதுதான் சந்தோஷையும் அவன் மாமனாரையும் கண்டு நன்றி தெரிவித்தான்.

சந்தோஷ் "கவலைபடாதே சிவா, அக்கா பிரச்சனை பண்ணலை.அதுவே பெரிய சந்தோஷம்தான். வாழ்த்துக்கள்" என்று இருவருக்கும் சொல்ல, அவன் மாமனாரும் வாழ்த்து சொல்லி விடை பெற்றார்.

சதாசிவம் வீணா உடைகளை எடுத்து வருவதாக சொல்லி விடை பெற, இருவரையும் மாடி அறைக்கு போக சொன்னாள் வசந்தி.

சிவா மனசில் சந்தோசம். பின்னாலே அத்தான் வந்து, "சிவா, ரொம்ப சந்தோசபடாதே. உன் அக்கா கூட பதினேழு வருஷம் குடும்பம் நடத்தி இருக்கேன். புலி பதுங்குறது பாயரதுக்குதான்" என்று மிரட்ட, "போங்க அத்தான் அக்காவை பத்தி ஏதாவது சொல்லாம உங்களால இருக்க முடியாது" என்று பதில் சொன்னான்.

பின்னாலே உள்ளே நுழைந்த ப்ரியா"அக்கா" என்று சொல்லி வீணாவை கட்டி கொண்டு, "மாமா அப்பா சொல்றது சரிதான்.கொஞ்சம் கேர்புல்லா இருங்க" என்று சொல்லி விட்டு, "மாமா அக்கா கூட நான் பேச போறேன் நீங்க கொஞ்சம் வெளியே போறிங்களா" என்று சொல்ல, சிரித்து கொண்டே "அடடா இது பொண்ணுங்க ராஜ்யமா போச்சு" என்று சொல்லியபடி சிவா வெளியேறினான்.

கீழே வந்த சிவா தம் அடிக்கலாம என்று நினைத்தபடி தன் பாக்கெட்டை துழாவ அதற்குள் அவன் செல்போன் அழைத்தது

எடுத்து பார்த்தால் தீபக். போனை ஆன் செய்து காதில் வைக்க, "என்ன சிவா இப்படி பண்ணிட்ட, அக்கா கிட்ட பேசியாச்சா.""ஒண்ணும் பிரச்சனை இல்லைடா. அக்கா நான் செய்ததை ஒத்துகிட்டாங்க. நான் கூட பயந்து கிட்டு இருந்தேன்."

"பொண்ணு பத்தி சாந்தி சொன்னா. அவளோட கிளாஸ் மேட்தான். நான் கூட பார்த்து இருக்கேன். ஆனா அவளால பேச முடியாது. ஆமா இப்போ தான் எனக்கு ஞாபகம் வருது. உன்னோட அம்மா கூட அப்படிதான இருந்தாங்க".

"ஆமாடா. அந்த காலத்திலே பேசமுடியாத பெண்ணா இருந்த போதும், சொந்த அத்தை பொண்ணுங்கிரதால, அப்பா அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டார். கல்யாணம் தடைபட்டு அந்த பெண் கண் கலங்கி நிற்கும்போது எனக்கு மனசு கஷ்டமா போச்சு. நீ எப்போ திருச்சில இருந்து திரும்ப வர்ற."

"இன்னைக்கு சாயந்தரம் வந்துடுவேன். வந்து உங்களை பாக்கிறேன்" சொல்லி விட்டு போனை வைத்தான்.

சுற்றுமுற்றும் திரும்ப ஒரு முறை பார்த்து விட்டு சிகரட்டை வாயில் வைக்க பின்னால் இருந்து ஒரு குரல், திரும்பி பார்க்க அவன் அக்கா வசந்தி.

வாயில் இருந்த சிகரட் நழுவி விழ"என்னடா இந்த பழக்கம் எப்போலே இருந்து. இது மட்டும் தானா இன்னும் ஏதாவது இருக்கா?".





வாய் குளற "இல்லைக்கா, இது மட்டும் தான். எப்போதாவது டென்சன் ஆகும்போது மட்டும் தான்".

"டேய் நீதான் அடிக்கடி டென்சன் ஆயடுவியே."

அசடு வழிந்தான்.

"சரி நீ உள்ளே வா உன் கூட பேசணும்."

உள்ளே வந்து அங்கே இருந்த சோபாவில் அமர்ந்த சிவாவிடம் பேச தொடங்கினாள்.

"குறை உள்ள பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கிறது கதைல படிக்கிறதுக்கும், சினிமால பார்கிறதுக்கும் நல்லா இருக்கும். இது வாழ்க்கைடா. இதுல விளையாட கூடாது. இப்பவே அந்த பொண்ணுக்கு ஏதாவது நஷ்டஈடு கொடுத்து வெட்டி விட்டுடு."

கோபத்தில் சிவா முகம் சிவக்க எழுந்த கோபத்தை அடக்கி கொண்டு பேச ஆரம்பித்தான்."அக்கா உன் கிட்ட ஒவ்வொண்ணுக்கும் ஒரு விலை இருக்கு. நம்ம பெத்த அம்மாவும் இப்படி தான வாய் பேசமுடியாம இருந்தாங்க. அவங்க உயிரோட இருந்தா அவங்களுக்கு என்ன விலை கொடுத்து இருப்ப?."

வாயடைத்து நின்றாள் வசந்தி."அக்கா, இனிமேயாவது இப்படி கேவலமா நினைக்கிறதை நிறுத்து. அது மட்டும் இல்லை. அவ என்னோட மனைவி அவளை யாரும் கேவலமா பேசுறதை என்னால பொறுத்துக்க முடியாது. உனக்கு பிடிக்கலைனா சொல்லு, நாங்க ரெண்டு பேரும் இப்போவே வீட்டை விட்டு போய்டுறோம்.இந்த உலகம் பெருசு அக்கா. உன்னை மாதிரி பணக்காரங்களுக்கு இடம் இருக்கிற மாதிரி,எங்களை போல ஏழைகளுக்கும் அதுல கொஞ்சம் இடம் இருக்கும்."

"என்ன சிவா, என்னமோ மாதிரி பேசுற.இந்த வீட்ல எனக்கு என்ன உரிமை இருக்கோ அதே உரிமை உனக்கும் இருக்கு. நான் உங்க ரெண்டு பேரை பத்தியும் பேசினது தவறா இருந்தா என்னை மன்னிச்சுடு. "

கண்ணை துடைத்து கொண்டே :நாம ரெண்டு பேரும் பேசினது யாருக்கும் தெரிய வேணாம்."

கொஞ்சம் யோசித்து, "இல்லை அக்கா, நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்" என்றான் சிவா, பாவம் இது அவனை எதிர்காலத்தில் பெரியசிக்கலில் கொண்டுவிட போகிறது என்று தெரியாமல்.

அதற்குள் பிரியா வீணாவோடு கீழே வர, "மாமா எனக்கு அக்காவை ரொம்ப பிடிச்சு போச்சு. இனிமே அவங்க தான் என்னோட பெஸ்ட் பிரெண்ட். இனிமே நான் யார்கூடயும் பேச மாட்டேன் அவங்களோட தான் பேசுவேன்."

வசந்தி பதிலுக்கு "ஆமா நீ தான் அவள் கிட்ட பேசணும். அவ உன் கூட பேச முடியாது."

"அக்கா" என்று சிவா பல்லை கடிக்க, வீணா கண்களில் கண்ணீர் துளிர்த்தது. யாரும் அறியாமல் அவள் துடைத்து கொள்ள சிவா கவனித்து விட்டான்.


"வீணா நாம கிளம்பலாம். இங்கே சரிபட்டு வராது."

"டேய் இந்த சின்ன விஷயத்துக்கு ஏண்டா இப்படி குதிக்கிற. நான் ஏதோ எதார்த்தமா சொன்னேன்.வீணா நீ மனசில ஏதும் வச்சுக்காத.சரிடா சிவா. நான் வேணா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுடட்டுமா?" என்று கேட்க, வீணா அவனை பார்த்து கண்களால்'வேண்டாம்' என்று கெஞ்ச, சிவாவுக்கு வீணாவின் மனது புரிந்தது. 

மாலை ஆறு மணி அளவில் தீபக் வந்து சேர, சிவா அவனை கட்டி தழுவி கொண்டான். "சிவா அம்மா, அப்பா, சாந்தி எல்லாரும் என் கிட்ட பேசினாங்க. நீயும், வீணாவும் எங்க வீட்டுக்கு இரவு விருந்துக்கு வரணும்டா. வீணா நல்ல பொண்ணுடா. நீ தீர்க்கமா, யோசிச்சு முடிவு எடுத்து இருக்க. உன்னை என் நண்பன்னு சொல்ல பெருமையா இருக்குடா"தீபக் கண்கள் பனித்தது.

அதற்குள் வீணா சமையல் அறையில் இருந்து வெளியே வர, தீபக் அவளை பார்த்தவுடன் "வாழ்த்துக்கள் வீணா" என்று சொல்ல,நன்றி தெரிவிக்க கை கூப்பினாள்.

பின்னாலே வசந்தியும் வர"அக்கா நான் புது மண தமபதிகளை வீட்டுக்கு இரவு விருந்துக்கு கூட்டிட்டு போறேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே."

"ஆமா என்னை கேட்டுதான் நீங்க எல்லாம் முடிவு செய்றீங்களா?" என்று சிவாவை ஓர கண்ணால் பார்த்தபடி சொல்ல, சிவா தலையில் அடித்து கொண்டு, "தீபக் நீ முதல்ல கிளம்பு நாங்க ரெண்டு பேரும் பின்னாலேயே வந்து சேர்கிறோம்" என்று சொல்ல,தீபக் "சரிடா" என்று சொல்லி விடை பெற்றான்.

சிவா வீணாவை பார்த்து"உன்னோட டிரஸ் மாத்திட்டு வா, நான் கீழே வெயிட் பண்ணுறேன்" என்று சொல்ல, "சரி" என்று தன் தந்தை கொண்டு வந்து கொடுத்திருந்த உடைகளில் நல்ல சாரியை எடுத்து உடுத்தி பத்து நிமிடத்துக்குள் வந்தாள்.

ஆச்சர்யபட்டு போனான் சிவா "என்ன அதுக்குள்ள வந்துட்ட, அக்காவுக்கு ஒரு மணி நேரம் குறையாம நேரம் வேணும் அப்பத்தான் ரெடி ஆகி வருவா. சரி போகலாம்" என்று சொல்லி "அக்கா நாங்க தீபக் வீட்டுக்கு கிளம்பறோம்" என்று சொல்ல, உள்ளே இருந்து"சரிடா" என்று பதில் வந்தது.இருவரும் காரில் ஏறி தீபக் வீட்டுக்கு சேர மணி ஏழு.
ஏற்கனவே சொல்லி விட்டதால், வீட்டு வாசலிலே தீபக் அம்மா, அப்பா, தங்கை சாந்தி காத்து இருக்க, இறங்கி வீணாவை அழைத்து கொண்டு உள்ளே சென்றனர்.

"என்னடா தீபக், நான் வீட்டுக்கு பல நாள் கழிச்சு வந்து இருக்கேன். என்னை கண்டுக்க மாட்டேங்கிரிங்க. இன்னைக்கு வந்த பொண்ணு. அவளுக்கு இந்த அளவுக்கு மரியாதையா?" என்று கிண்டல் செய்ய, தீபக் சிரித்து கொண்டே, "அவளும் எனக்கு தங்கை மாதிரிடா. அதோட உனக்கு என்னை பத்தி நல்லா தெரியும். பாவம் அது புது பொண்ணு. உங்க அக்காவை பார்த்து பயந்து போய் இருக்கும். அதை தெளிய வைக்கத்தான் அம்மாவும், சாந்தியும் உள்ளே கூட்டி போயிருக்காங்க".கலகலவென்று சிரித்தான் சிவா.
சிவா, தீபக் அவன் அப்பா எல்லோரும் தனியாக பேசி கொண்டு இருக்க, உள்ளே வீணாவுடன், சாந்தி, தீபக் அம்மா பேசி கொண்டு இருந்தனர்.

சுவர் கெடிகாரம்எட்டு மணி அடிக்க, வீணா, சிவா, தீபக், அவன் அப்பா அனைவரையும் அமர சொல்லி சாப்பாடு பரிமாறபட்டது.


சாப்பிட்டு விட்டு பேசி கொண்டு இருந்த சிவா தன் கடிகாரத்தை பார்க்க மணி ஒன்பது, "தீபக் நேரமாகுது நாங்க கிளம்பட்டுமா" என்று கேட்க, 

"டேய் அவசரம் புரியுதுடா. இன்னைக்கு உன் முதல் இரவு இல்லையா" என்று கேட்டபடி சிவா வயிற்றில் செல்லமாக குத்தினான்.

அசடு வழிந்த சிவா, "அது மட்டும் இல்லைடா, இன்னும் லேட் ஆனா அக்கா ஏதாவது சொல்லுவா?".

"சரிடா நீ சொல்றதும் உண்மை தான்."

"அம்மா சிவா கிளம்பணுமா" என்று கூப்பிட, "என்ன தம்பி இப்பவே கிளம்பணுமா?" என்று தீபக் அம்மா கேட்க, "இல்லைம்மா இப்பவே லேட் ஆய்டுச்சு" என்று சிவா பதில் சொன்னான்.

"இந்தாங்க" என்று தீபக் அப்பாவை அழைக்க, அவரும் வந்தார். கையில் இருந்த ANS Jewellers பெட்டியை திறக்க அங்கே இரண்டு தங்க மோதிரங்கள் மின்னின. 

ஆச்சர்யம் அடைந்த சிவா "என்னாம்மா மோதிரம் எல்லாம் எதுக்கு" என்று சொல்ல, "இல்லை சிவா இது எங்களோட திருப்திக்காக,ப்ளீஸ்" என்று தீபக் அப்பா சொல்ல 'அவர்கள் அன்புக்கு என்ன கைம்மாறு செய்ய போகிறேன்' என்று கண்கலங்கினான்.

தீபக் தன் கையில் இருந்த பிரிண்ட் அவுட் கொடுத்து, "இது உங்க ரெண்டு பேருக்கும் கொடைகானல் ஸ்டெர்லிங் ரிசார்ட்ஸ்ல ஒரு வாரம் தங்க நான் புக் பண்ணி இருக்கிற கூப்பன்"என்று கொடுக்க சிவாவுக்கு ஆச்சர்யதுக்கு மேல் ஆச்சர்யம்.

"இதல்லாம் எதுக்குடா?" என்று கேட்க, "நீ இதை பேசாம வாங்கிக்கணும். இது உனக்காக மட்டும் இல்லை, என்னோட இன்னொரு தங்கைக்காகவும் கூட."

பதில் பேசாமல் அவன் கொடுத்த கூப்பனை வாங்கி வைத்து கொண்டான். 

"டேய் சிவா நாளை மறுநாள் கிளம்பனும், மதியம் ரெண்டு மணிக்கு ரிசார்ட்ஸ்லசெக்இன் பண்ணனும்."

"சரிடா தீபக்".அதற்குள் தீபக் அம்மா சொன்னபடி சிவா, வீணா இருவரும் ஒருவருக்கு ஒருவர் மோதிரம் அணிவிக்க, கூடி இருந்த நால்வரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

வீட்டுக்குள் நுழைந்தபோது மணி பத்து. 

கதவை திறந்த வசந்தி "என்னடா இன்னும் ஆளை காணமேன்னு நினைச்சேன். கூப்பிடலாமன்னு யோசிச்சேன். பராயில்லை வந்துட்ட."

"அக்கா, நாளை மறு நாள் நாங்க ரெண்டு பேரும் கொடைகானல் போறோம். தீபக் டிக்கெட் புக் பண்ணி கொடுத்து இருக்கான்."

"சரி இப்போவாவது சொல்ல தோனுச்சே."





No comments:

Post a Comment