Saturday, August 1, 2015

மான்சி எனும் தேவதை - அத்தியாயம் - 15


இனிமேலும் ஏதாவது பேசி அப்பா மகள் இருவரின் உணர்ச்சிகளோடு விளையாடக்கூடாது என நினைத்த சத்யன் உடனே வேறு எதை பற்றியும் சிந்திக்காமல் “ அட நீ வேற மாமா எப்போ அவளை போட்டோவுல பார்த்தேனோ அப்ப இருந்து ப்ளாட் ஆயிட்டேன்,, இதுக்கு மேல நீங்களாச்சு உங்க மகளாச்சு,, காரை இங்கயே விட்டுட்டு நான் பைக்ல ஆபிஸ் போறேன்,, எங்கக்கா வீட்டுகாரருக்கு கார் ஓட்டத்தெரியும் அதனால நீங்க எல்லாரும் போய் ஜாதகம் பார்த்துட்டு வாங்க” என்று சத்யன் எழுந்துகொண்டான்

எழுந்தவன் மான்சியை நெருங்கி அவள் முகத்தை நிமிர்த்தினான்,, அவள் விழிகளில் நீர் திரையிட்டு இருக்க தன விரலால் அதை வழித்தெடுத்த சத்யன் ,, பாண்டியன் பக்கம் திரும்பி “ மாமா கொஞ்சம் சீக்கிரமே முகூர்த்தம் இருக்கிற மாதிரி பாருங்க மாமா என்னை கேட்டா இந்த ஜாதகம் பார்க்கிற வேலையே வேனாம்னு தான் சொல்லுவேன்,, ஆனா எங்கம்மா ஒத்துக்க மாட்டாங்க அதுக்காகத்தான் இதெல்லாம்” என்று கூறிவிட்டு மான்சியிடம் “ மேடம் வந்து டிபன் எடுத்து வச்சா நல்லாருக்கும்,, இன்னிக்கு சீக்கிரமா ஆபிஸ் போகனும் கொஞ்சம் வேலையிருக்கு” என்றான்



“ ஸாரி ஸாரி டேபிளுக்கு வாங்க டிபன் எடுத்து வைக்கிறேன்” என்று அவசரமாக கிச்சனை நோக்கி போனாள் மான்சி

அவள் போனதும் பாண்டியனைப் பார்த்து “ மாமா இதெல்லாம் சரியா வருமா? மான்சி ரொம்ப நல்லவ மாமா அவளுக்கு என்னால எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு தான் நான் எவ்வளவோ கட்டுப்படுத்தி பார்த்தேன் ,, ம்ஹூம் முடியலை மாமா, அவ காதலுக்கு முன்னாடி எல்லாமே தூசு மாதிரி பறந்து போயிருச்சு,, ஆனா என்னைப்பத்தி உங்களுக்கு எல்லாமே தெரியும்,, உங்ககிட்ட எதையுமே நான் மறைச்சதில்லை அதனால உங்க மகளோட வாழ்க்கையை முன்நிறுத்தி யோசிச்சு முடிவு பண்ணுங்க மாமா” என்று மெல்லிய குரலில் தலைகுனிந்து சத்யன் சொன்னான்

சோபாவில் இருந்து எழுந்து சத்யன் அருகே வந்த பாண்டியன் “ சரி மாப்ளே கல்யாணம் எங்க வக்கிறது இங்கயா? இல்ல மதுரையிலயா? ஏன்னா மதுரையிலதான் ஏகப்பட்ட சொந்தக்காரங்க இருக்காங்க,, நான் வேற அங்க எல்லாருக்கும் ஏகப்பட்ட மொய் எழுதியிருக்கேன் எல்லாத்தையும் வசூல் பண்ணனும்,, சரி சரி நீ கெளம்பு மாப்ளே நான் அம்மாகிட்ட போன்போட்டு எல்லாத்தையும் பேசி முடிவு பண்ணிக்கிறேன்” என்று தனது உறுதியினை பாண்டியன் கூறினார்

அவருடைய நேரடியான பேச்சும் வேறு எதைப்பற்றியும் யோசிக்க முடியாது என்ற அவருடைய கூற்றும் பார்த்து சத்யனுக்கு சிரிப்பு வந்தது “ மகளுக்கு மேல இருக்கய்யா நீரும்,, சரி நடத்துங்க நடத்துங்க,, ஆனா ஒன்னு கல்யாணம் மட்டும் என் விருப்பப்படி தான் நடக்கும் சரியா மாமா” என்று சத்யன் சொல்லும்போதே “ டிபன் எடுத்து வச்சுட்டேன்” என்ற மான்சியின் குரல் அவனை அழைத்தது
பாண்டியனிடம் பார்வையால் விடைபெற்று அவசரமாக டேபிளுக்கு ஓடினான் சத்யன்,,

சாப்பிட்டு முடித்து தோட்டத்திற்கு போய் கைகழுவிவிட்டு திரும்பியவன் முன்பு டவலை நீட்டிய மான்சி “ இன்னிக்கு மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்துருங்க மாமா அப்பா , ஜெயந்தி அக்கா எல்லாரும் இருக்காங்கல்ல அதான் சொல்றேன் ” என்று மான்சி சொல்ல

டவலில் கையை துடைத்தபடி “ ம்ம் வர்றேன் ” என்ற சத்யன் அப்போதுதான் கவனித்தான் ,, மான்சி புடவையின் கொசுவத்தை கொத்தாக இடுப்பில் சொருகியிருக்க,, அவளின் வெண்ணெய் இடுப்பில் துளித்துளியாய் வியர்வை பூத்திருந்தது ரொம்ப கவர்ச்சியாக இருக்க ,, சத்யன் அவளை நெருங்கி தாபத்தோடு நிமிர்ந்து பார்த்தான்

அவன் பார்வை புரிந்து “ மாமா அப்பா இருக்காரு தயவுசெஞ்சு ஆபிஸ்க்கு கெளம்புங்க” என்று எச்சரிக்கும் குரலில் கூறிவிட்டு இரண்டடி பின்னால் நகர்ந்த மான்சி தடுமாறினாள்

அவள் கீழே சரியாமல் இடுப்பில் கைவிட்டு தாங்கிய சத்யன் அவளை தன்னருகே இழுத்து “ இந்த ஒரு மாசமா உன் அழகை காட்டி என்னை மயக்கி வச்சுருக்கடி,, ஆபிஸ் போனா கூட வேற எதுவுமே தோன மாட்டேங்குது, உன் ஞாபகமும் இந்த வெண்ணெய் மாதிரியான உடம்பும் தான் ஞாபகம் வந்து இம்சை பண்ணுது” என்றவன் அவள் இடுப்பை பற்றி வியர்வையை துடைத்தான்

அவன் பிடியில் நெளிந்தவாறு “ இவ்வளவு ஆசைய மனசுல வச்சுகிட்டு அப்புறம் ஏன் மாமா வேஷம் போடுற,, சரி அப்பா குளிக்க வருவாறு நீ கெளம்பு மாமா ப்ளீஸ் ” என்று ஹாலை ஒரு பார்வையும் சத்யனை ஒரு பார்வையும் பார்த்து மான்சி கெஞ்சினளள்

“ சரி கண்ணை மூடி திறக்குறதுக்குள்ள பட்டுன்னு ஒன்னு குடுத்துட்டு போயிடு மான்சி” என்ற சத்யனை ஆச்சர்மாக பார்த்தாள் மான்சி ஒவ்வொரு நாளும் மான்சி கொடுத்து சத்யன் வாங்கித்தான் பழக்கம் இன்று நேர்மாறாக சத்யனே கேட்டான்

எட்டி அவன் தோள் வழியாக ஹாலை பார்த்த மான்சி பிறகு “ சரி மாமா குடுக்கிறேன்,, ஆனா இன்னிலேர்ந்து எதுவுமே கிடையாது,, கல்யாண தேதி முடிவு பண்ணிட்டா நான் வேலையை ரிசைன் பண்ணிட்டு அப்பா கூட விருதாச்சலம் போயிடுவேன்,, கல்யாணம் எப்பவோ அப்பதான் வருவேன்” என்ற மான்சி சத்யன் சொன்னதுபோலவே கண்மூடி திறப்பதற்குள் பட்டென்று அவன் வலது கன்னத்தில் முத்தமிட்டு விலகினாள்

சத்யனுக்கு இப்போது முத்தம் ஞாபகம் வரவில்லை,, அவள் சொன்ன வார்த்தைகள் தான் பயமுறுத்தியது,, அப்படின்னா அவ அப்பா கூடவே போயிடுவாளா? இவள பார்க்காம நான் எப்படி இருப்பேன், தினமும் இவ முகத்துல தானே விழிப்பேன்,, இனிமேல் என்ன பண்றது என்று சத்யன் கலவரமாய் சிந்திக்கும்போதே மான்சி உள்ளே போய்விட்டாள்

வேகமாக அவள் பின்னால் ஓடிய சத்யன் கிச்சனுக்குள் நுழைந்து “ ஏய் மான்சி என்ன இப்படி சொல்லிட்ட,, கல்யாணத்துக்கும் நீ இங்கயே இருக்கறதுக்கும் என்ன சம்மந்தம்,, நீ எங்கயுமே போககூடாது இங்கயே இரு மான்சி” என்று தவிப்புடன் அவள் தோள் பற்றி கெஞ்சினான்


அவனுடைய தவிப்பு புரிந்தாலும் தன்னால் ஒன்றும் செய்யமுடியாத சூழ்நிலை மான்சியின் முகத்தில் தெரிய “ அதெல்லாம் முடியாது மாமா,, நல்லா யோசிச்சு பாருங்க உங்கம்மா என்னை பத்தி என்ன நினைப்பாங்க,, இப்போ இங்க இருக்கறதே ஜெயந்தி அக்கா சொன்னதால சம்மதிச்சாங்க இல்லேன்னா ஒத்துக்கிட்டு இருக்க மாட்டாங்க,, இன்னும் கொஞ்சநாள் தானே,” என்று மான்சி சொன்னதும் அவளை பரிதாபமாக பார்த்தான் சத்யன்

மான்சிக்கு அவன் மனது புரிய,, வெட்கமாக தலைகுனிந்து “ சீக்கிரமா கல்யாண தேதியை முடிவு பண்ணுங்க எல்லாம் சரியாப்போய்டும் மாமா” என்று சொல்ல,, வெட்கத்தால் குங்கும நிறமான அவள் முகத்தை ரசித்த சத்யன் அவளை நெருங்கி இழுத்து அணைத்தான்

அப்போது பின்னால் பாண்டியனின் காலடியோசை கேட்க, பதட்டத்துடன் பட்டென்று விலகினார்கள் இருவரும்,, மான்சி அடுப்பில் எதையோ கிளறும் சாக்கில் திரும்பிக்கொள்ள,, சத்யனுக்கு ஒன்றும் புரியாமல் பாண்டியனை பார்த்து அசடு வழிய சிரித்து வைத்தான்

பாண்டியனும் நிலைமையை உணர்ந்து நிலைமையை சுமூகமாக்கும் நோக்கில் “ சரி மாப்ளே நீ கெளம்பு நான் ஜாதகம் பார்த்துட்டு உனக்கு போன் பண்றேன்” என்றார்

சரி என்று தலையசைத்து வெளியே போன சத்யன் மறுபடியும் உள்ளே வந்து பாண்டியனை அழைத்து “ மாமா முகூர்த்தம் இந்த மாசத்துலயே இருக்கிற மாதிரி பாருங்க” என்று சொல்ல

“ இந்த மாசத்துலயேவா எப்படி மாப்ளே முடியும்,, இன்னும் இந்த மாசத்துல இருப்பத்தி ரெண்டு நாள்தான் இருக்கு.,, அதுக்குள்ள கல்யாண சத்திரம் கிடைக்காதே மாப்ளே,, என்று பாண்டியன் கவலையாக கூறினார்

“ இல்ல மாமா நான் விமரிசையா பண்ற மாதிரி இல்லை,, ஏதாவது கோயிலில் கல்யாணத்தை முடிச்சுட்டு ரிஜிஸ்டர் ஆபிஸ்ல பதிவு பண்ணிரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்று சத்யன் தனது முடிவை சொன்னான்

“ என்ன சத்யா இப்புடி சொல்ற” என்று பாண்டியன் திகைப்புடன் கேட்க

“ இதுக்கும் ஒரு காரணம் இருக்கு மாமா,, விமர்சையா கல்யாணம் பண்ணா,, என்னை தெரிஞ்சவனெல்லாம் வந்து ‘ பாருடா இவனுக்கெல்லாம் கல்யாணம் ஆகுதுன்னு மறைமுகமா நக்கல் பேசுவாங்க,, மான்சி தெரிஞ்சவங்க எல்லாம் பாவம் இந்த பொண்ணு இப்பவாவது கல்யாணம் கூடுதேன்னு பரிதாபப்படுவாங்க,, எங்க ரெண்டுபேரையும் வாழ்த்துறவங்களைவிட பார்த்து பரிதாபப்படுறவங்க தான் அதிகமா இருப்பாங்க,, அதை நான் விரும்பலை மாமா,, எனக்கு பிரச்சனை இல்லை எதையும் தாங்கி பழக்கம் ஆயிருச்சு ஆனா மான்சியை பார்த்து யாரும் பரிதாபப்படுறதை நான் விரும்பலை,, அதனால ரெண்டு பேமிலியோட சிம்பிளாக தான் மேரேஜ்” என்று சத்யன் தீர்மானமாக சொல்ல

மான்சிக்காக இவ்வளவு யோசிக்கிறானே,, பாண்டியன் சத்யனை அதிசயமாக பார்க்கும்போதே “மாமா” என்ற மெல்லிய கூச்சலுடன் ஓடிவந்து அணைத்துக்கொண்டு மான்சி அவன் நெஞ்சில் தனது முகத்தை வைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள்

அவள் கூந்தலை கோதிய சத்யன் “ அழாத மான்சி என்னப் பண்றது, நாம்மை மட்டும் மத்தவங்கல்ல இருந்து வித்யாசமா படைச்சுட்டான் அந்த ஆண்டவன்,, அதனால நம்ம மேரேஜ்ம் வித்யாசமாவே நடக்கட்டும்,, நீ அப்பாவுக்கு டிபன் எடுத்து வை நான் கிளம்புறேன்” என்று அவளை நிமிர்த்தி கண்களை துடைத்து பாண்டியனிடம் ஒப்படைத்து விட்டு சத்யன் வெளியேறினான்

அதன்பிறகு அதே மாதத்தில் கடைசியாக இருந்த முகூர்த்தம் இருவரின் ஜாதகத்திற்கும் பொருத்தமாக இருக்க அன்றே திருமணம் செய்வது என்று அனைவரும் பேசி முடிவுசெய்தனர்

மறுநாளே மதுரையில் இருந்து கிளம்பி வந்த சத்யனின் அம்மாவுக்கு மான்சியின் அழகை பார்த்து பெருமை தாங்கவில்லை,, சத்யன் மான்சி இருவரின் ஜோடிப்பொருத்தத்தை பார்த்து ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை திருஷ்டி கழித்தார்,, மான்சியின் ஊனத்தை பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசாதது அவரை மிகுந்த உயரத்தில் வைத்தது

ஆனால் திருமணம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தான் நடக்கவேண்டும் என்பதில் அம்மா பிடிவாதமாக இருந்தார், காரணம் கேட்டபோது சத்யனுக்கு திருமணம் கைகூடினால் மீனாட்சி அம்மன் கோயிலில் வைப்பதாக தான் பிரார்த்தனை செய்திருப்பதாக சொன்னார் ...

சத்யனும் வேறு வழியின்றி சம்மதித்தான்,, தம்பிக்கு போன் செய்து திருமணத்திற்கான ஏற்ப்பாடுகளை எளிமையாக செய்யச்சொன்னான் சத்யன்

அன்று இரவு ரயிலில் பாண்டியனும் மான்சியும் புறப்பட தயாராக,, சத்யனுக்கு தன்னில் பாதியை பிரிவது போல ரொம்ப கஷ்டமாக இருந்தது “ மாமா டிக்கெட் ரிசர்வ் பண்ணாம அன் ரிசர்வ்ல போன உட்கார சீட் கிடைக்காது மாமா,, மான்சிக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்,, அதனால இன்னும் இரண்டு நாள் கழிச்சு போங்க மாமா,, நான் டிக்கெட் ரிசர்வ் பண்ணி தர்றேன்” என்று சத்யன் எத்தனையோ சாக்கு போக்குகள் சொல்லி பார்த்தான்

“ என்ன மாமா எனக்கு போயா ட்ரைன்ல சீட் கிடைக்காது,, எங்களை மாதிரி இருக்கிறவங்களுக்கு என்றே ஒரு பெட்டியிருக்குமே அதில இடம் கிடைக்கும் மாமா,, நீங்க கவலைப்படாதீங்க மாமா” என்று மான்சி சமாதானம் சொன்னாலும் அவளை அந்த பெட்டியில் அனுப்ப சத்யனுக்கு துளிகூட விருப்பம் இல்லை

அன்று இரவு மான்சியையும் பாண்டியனையும் அழைத்துக்கொண்டு சத்யன் தான் ரயில்நிலையம் போனான்,, வழியில் காரில் “ நேரத்தோடு எழுந்திரிங்க, வேலையோடு சாப்பிடுங்க, கரெக்ட்டான டைம்ல தூங்குங்க,, மான்சி ஆயிரம் அறிவுரைகள் கூற எல்லாவற்றுக்கும் ம்ம் என்பதை தவிர சத்யன் எந்த பதிலும் சொல்லவில்லை,,


மான்சியை ரயிலில் ஏற்றியதும் இருவருக்குமே கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது,, ரயில் ஜன்னலில் இருந்த மான்சியின் விரல்களை சத்யன் பற்றிக்கொண்டு கலங்க,,

“ச்சு இதென்ன மாமா சின்ன குழந்தை மாதிரி கலங்கிகிட்டு,, இன்னும் பதினேழு நாள் தானே மாமா” என்று மான்சி ஆறுதல் சொன்னாலும் அவனை பார்க்க முடியாமல் உதட்டை கடித்து அழுகையை அடக்கியவாறு தலையை குனிந்துகொண்டாள்

ரயில் கிளம்பிவிட சத்யன் கண்களில் கண்ணீர் திரையிட கையசைத்து விடைகொடுத்தான்

ஆனால் அந்த பதினேழு நாளும் மான்சி அருகில் இல்லையே தவிர,, போனிலேயே அவனை ஆட்டுவித்தாள், காலையில் எழுப்புவதிலிருந்து இரவு கண் மூடும் வரை எல்லாமே மான்சி சொல்படிதான் நடந்தது,,

ஒரு பெண் ஆணின் வாழ்க்கையில் எப்படி அங்கம்வகிக்கிக்கிறாள் என்று சத்யனுக்கு தெள்ளத்தெளிவாக புரிந்தது,, திருமண நாளை எண்ணி தவிக்க ஆரம்பித்தான் சத்யன் 


திருமணநாளும் நெருங்கியது,, எதிர்காலத்தில் மான்சியுடன் நடத்தப்போகும் தாம்பத்யம் எப்படி இருக்குமோ என்ற கேள்வி பூதகரமாக எழுந்தாலும்,, மனதில் ஆயிரம் வண்ணக் கனவுகளுடன் சத்யன் தனது காரில் மதுரை புறப்பட்டான்

திருமணத்திற்கு முதல் நாளே மான்சி மதுரைக்கு அழைத்து வரப்பட்டு தெரிந்தவர் வீட்டில் தங்கவைக்கப்பட்டாள்,, மான்சியின் அம்மா பரிமளாவுக்கு சத்யன் தனக்கு மாப்பிள்ளையாக வந்ததில் மிகுந்த சந்தோஷம்

திருமண தினத்தன்று காலையில் சத்யன் தம்பி வீட்டிலிருந்து அனைவரும் ஒரு வேனில் புறப்பட்டு மீனாட்சி அம்மன் கோயிலை வந்தனர்,, மான்சியின் குடும்பத்தாரும் இன்னொரு வேனில் கோயிலுக்கு வந்துவிட்டனர்

ஆளாளுக்கு ஒரு வேலையை பார்க்கு முகூர்த்த நேரம் நெருங்கியது,, அன்று திடமான முகூர்த்தநாள் என்பதால் கோயிலின் குளத்தை சுற்றிலும் ஏகப்பட்ட திருமண ஜோடிகளும் அவர்களின் உறவுக்கூட்டமுமாக நிரம்பி வழிந்தது ..

தனது குடும்பத்தினர் நடுவே சத்யனின் கண்கள் மான்சியை தேடியது,, ஒரு மூலையில் இரண்டு பெண்கள் ஒரு பெட்சீட்டை விரித்து மறைவாக பிடித்திருக்க அதனுள் மான்சிக்கு கல்யாணப் பட்டை கட்டிவிட்டுக் கொண்டு இருந்தனர் பரிமளாவும், சத்யன் தம்பி மனைவியும்,,

சத்யனால் மான்சியை பார்க்கமுடியவில்லை பெட்சீட் மறைவுக்கு கீழே அவள் கால்கள் மட்டும் தெரிந்தது,, கொலுசுகள் இல்லாத வெள்ளை நிற கால்கள்,, அவள் முதன்முதலாக தன் வீட்டுக்கு வந்தபோது "நீ ஏன் கொலுசு போடலை" என்று மான்சியை கேட்டது சத்யனுக்கு ஞாபகம் வந்தது

இத்தனை நாட்களாக தனது வீட்டில் இருந்தவளுக்கு ஒரு கொலுசைக் கூட வாங்கித்தரவில்லையே என்று சத்யனின் மனம் உறுத்தியது

அப்போது அவனுக்கு பின்னால் இருந்து " டேய் சத்யா இங்க என்னடா பண்ற" என்று ஜெயந்தியின் குரல் உரத்து கேட்க,,,

சத்யா என்ற வார்த்தை மான்சியின் காதில் விழ பட்டென்று பெட்சீட்டை விலக்கி வெளியே எட்டிப்பார்த்தாள்,, அதேசமயத்தில் சத்யனும் அவளைப் பார்க்க, நிமிடநேரத்தில் விழிகளை விரித்து அவன் கம்பீரத்தை உள்வாங்கிய மான்சி வெட்கமாய் சிரித்து தலையை உள்ளே இழுத்துக்கொண்டாள்

அவ்வளவு கூட்டத்திலும் அவள் தன்னை கவனித்து விட்டது சத்யனுக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது,, ஜெயந்தி மறுபடியும் வந்து அவனை கையைப்பிடித்து இழுத்துச்சென்ற ஐயரின் முன்பு அமர வைத்தாள்

சிறிதுநேரத்தில் மான்சியும் விரித்து வைத்திருந்த ஜமுக்காளத்தில் அவனருகில் அமர சுற்றியிருந்த சுற்றமும் நட்பும் ஆரவாரத்தோடு கையில் அட்சதையோடு காத்திருக்க,

ஐயர் மந்திரம் சொல்ல. சத்யனின் தாய் தாலியை எடுத்து சத்யன் கையில் கொடுக்க, உணர்ச்சி பெருக்கில் ஜெயந்தி பரிமளா பாண்டியன் மூவரும் கண்கலங்க, சத்யன் சுற்றிலும் பெருமிதத்தோடு பார்த்துவிட்டு,, தான் கட்டப்போகும் தாலிக்காக தலைகவிழ்ந்து அமர்ந்திருக்கும் மான்சியின் தங்க கழுத்தில் தாலியை பூட்டினான்

அடுத்த நிமிடம் அட்சதை அவர்கள் மீது வாரியிறைக்கப்பட்டது.. தெரிந்தவர்களும் நண்பர்களும் சத்யனுக்கு கைகுலுக்கி வாழ்த்துசொல்ல, சத்யன் பெருமையுடன் தன் மனைவியை பார்த்தான் 



சத்யன் மான்சி திருமணம் நல்லபடியாக முடிந்தது,, சத்யன் தம்பி விநாயகம் கோவிலுக்கு வெளியே இருந்த ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து கல்யாண விருந்துக்காக வந்தவர்களை அழைத்துக்கொண்டு போனான்,

ஜெயந்தி மணமக்களை அழைத்துக்கொண்டு சிறப்பு தரிசனம் மூலம் அம்மன் சந்நிதிக்கு சாமி கும்பிட அழைத்து போனாள்,, கூட்ட நெரிசலில் தன் புது மனைவியை கைப்பற்றி அழைத்துச்சென்ற சத்யன் மான்சியை ஒட்டி நின்று அம்மனை தரிசித்தான்

மான்சி சில நிமிடங்களே சாமி கும்பிட்டாள், பிறகு அருகில் நின்ற தனது கணவனின் கம்பீரத்தை வெட்கமின்றி ரசித்தாள்,, பக்கத்தில் இருந்த ஒரு சிலர் இவளை கவனிப்பதை கூட மான்சி சட்டை செய்யவில்லை, நெய்தீபம் அவர்களின் முன் வந்தபோது தான் சத்யன் கண்திறந்தான்

இருவரும் தரிசனம் முடிந்து வெளியே வரும்போது ஜெயந்தி முன்னால் செல்ல இவர்கள் இருவரும் சற்று பின்தங்கியே வந்தனர்,, மதுரைவீரன் சிலையருகே வந்தபோது அந்த ஆள் அரவமற்ற அமைதி மனதை வருட “ மாமா கொஞ்சநேரம் இங்க உட்கார்ந்துட்டு போகலாமா?” என்று மான்சி கேட்டதும் சரியென்று தலையசைத்த சத்யன்,, தன் அக்காவை அழைத்து “ நீ போக்கா நாங்க இதோ வர்றோம்” என்று சொன்னான்

ஜெயந்திக்கும் வந்தவர்கள் எல்லாரும் சாப்பிட்டார்களா,, என்று கவனிக்கும் வேலை இருந்ததால் சரியென்று தலையசைத்து விட்டு உடனே போய்விட்டாள்

தரை சுத்தமாக இருந்த ஒரு இடத்தில் சத்யன் அமர்ந்து,, மான்சியின் கையை பிடித்து இழுத்து அருகில் அமர்த்திக்கொண்டான்,, நெயில்பாலிஷ் பூசப்பட்டிருந்த அவள் விரல்களில் அழகை வருடி ரசித்தபடி “ ம் நெனைச்சதை சாதிச்சிட்ட,, இந்த கல்யாணம் வேனாம்னு நெனைச்சாலும்,, இன்னிக்கு இந்த உலகத்துலயே அதிக சந்தோஷமானவன் நான்தான் மான்சி” என சத்யன் உணர்ச்சி பூர்வமாக பேசினான்

வெட்கத்தோடு அவனை ஏறிட்ட மான்சி “ மனசுல உண்மையான காதல் இருந்தா அது நிச்சயம் ஜெயிக்கும் மாமா,, என் ஒவ்வொரு நிமிஷமும் நீங்க எனக்கு கிடைப்பீங்க நிச்சயமா கிடைப்பீங்கன்னு மனசுக்குள்ள ஜெபம் மாதிரி சொல்லிகிட்டே இருப்பேன், அது பலிச்சது,, ஆமா அவ்வளவு நேரமா சாமிகிட்ட என்ன வேண்டினீங்க?” என்று மான்சி கேட்க

“வேறென்ன வேண்டப்போறேன் மான்சி,, கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது,, இனிமேல் அடுத்து நடக்கப்போறதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லாம நடக்கனும்னு தான் வேண்டினேன்,, ஆமா நீ என்ன வேண்டின மான்சி” என்று சத்யன் கேட்டான்

“ நாம்ளுது எல்லாம் ஒரேயொரு வேண்டுதல் தான்,, அடுத்த வருஷம் இதே நேரம் எங்க குழந்தையோட உன்னை பார்க்க வர்ற மாதிரி அருள் புரியனும் தாயே” அவ்வளவுதான் படாபட்” என்று மான்சி கண்களை சிமிட்டி சிரித்தாள்

“ ம்ம் நீ எப்பவுமே ரொம்ப பாஸ்ட் தான் மான்சி,, ஆனா கடவுள் ரொம்ப பாவம்டி நமக்கு கல்யாணமும் பண்ணி வச்சுட்டு,, அடுத்ததா விளக்குப் பிடிக்கிற வேலைக்கும் அவரையே கூப்பிடுறோம் பாரு” என சத்யன் குறும்பாய் சொல்ல

“அடச்சே என்ன மாமா இப்படியெல்லாம் பேசுற” என்று மான்சி வெட்கமாய் சினுங்கினாள்

அவள் சினுங்கலை கண்கொட்டாமல் ரசித்த சத்யன் “ மான்சி மதுரைக்கு வந்ததில் இருந்து தேவியின் ஞாபங்கள் என்னை ரொம்ப அரிக்குது,, இதே கோயிலில் நானும் அவளும் சுத்தாத இடமில்லை,, அந்த குளத்து படிக்கட்டில் நானும் அவளும் உட்காராத இடமில்லை மான்சி,, அவளுக்காகன்னு இருந்த நான் இன்னிக்கு உன்னை கல்யாணம் பண்ணிகிட்டேன், இப்போ அவ ஆத்மா நம்மளை ஆசிர்வதிக்கும் தானே மான்சி,, ஏன்னா எனக்காக அவ உயிரையே விட்டா ஆனா நான் இன்னிக்கு வேற ஒரு பொண்ணை சந்தோஷமா கல்யாணம் பண்ணிகிட்டேன்,, இது என் அடி மனசுல உறுத்துது,, மான்சி என் மனசு உனக்கு புரியுதா?” என்று சத்யன் கேட்க

மான்சியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை,, தனது விரலில் இருந்த நெயில்பாலிஷை நகத்தால் சுரண்டியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்
சட்டென்று அவள் விரல்களை பற்றிய சத்யன் “ ஏய் மான்சி என்னாச்சு அதை ஏன் சுரண்டின,, பாரு அசிங்கமா ஆயிருச்சு,, ஏன் மான்சி என்னாச்சு” என்று சத்யன் கேட்டான்

தலைகுனிந்து ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள் மான்சி
“ ஏன் மான்சி நான் தேவி பத்தி பேசினது உனக்கு பிடிக்கலையா?,, அவளை உனக்கு போட்டியா நினைக்கிறயா? அவ இப்போ உயிரோட இல்லை மான்சி,, நானே நெனைச்சாலும் அவ உன்கூட போட்டிக்கு வரமாட்டா மான்சி” என்று சத்யன் மாற்றி மாற்றி கேள்வியும் பதிலுமாக மான்சியிடம் கேட்க
தரையில் கைகளை ஊன்றி பட்டென்று எழுந்த மான்சி “ சரி நாம போகலாமா? எல்லாரு நம்மளை தேடுவாங்க” என்றவள் அவன் பதிலை எதிர்பார்க்கமல் முன்னால் நடக்க ஆரம்பித்தாள்

சத்யனுக்கு ஒன்றுமே புரியவில்லை ,, ஏன் எதற்காக எதுவுமே பேசாம போறா,, நான் அப்படி எதுவும் தவறாக சொல்லலையே,, இதெல்லாம் இவளுக்கு தெரிஞ்ச விஷயம் தானே,, அப்புறம் ஏன் இந்த பாராமுகம்,, என்று பலவாறாக குழம்பிய சத்யன் திரும்பி பார்ப்பதற்க்குள் மான்சி இருபதடி முன்னால் போய்க்கொண்டிருந்தாள்

சத்யன் அவசரமாக எழுந்து அவள் பின்னால் போய் “நில்லு மான்சி” என்று குரல் கொடுத்தான்

உடனே நின்ற மான்சி திரும்பி அவனைப்பார்த்து பளிச்சென்று புன்னகை செய்தாள்,, ஆனால் அந்த புன்னகையில் ஜீவனே இல்லை,, “ என்ன மாமா” என்று நின்று சிரித்தவளை குழப்பமாக உற்றுப் பார்த்த சத்யன் “ ம்ஹூம் ஒன்னுமில்ல வா” என்று அவளுடன் இணைந்து நடக்க ஆரம்பித்தான்
கோவிலில் இருந்து வெளியே வந்து இருவரும் ஹோட்டலில் சாப்பிடும் போதுகூட இருவரும் அதிகமாக பேசிக்கொள்ளவில்லை,, இருவரும் காரில் விநாயகம் வீட்டுக்கு வரும்போது மாலை மணி இரண்டாகிவிட்டது,, ஆரத்தி சுற்றி இருவரும் உள்ளே அழைத்து செல்லப்பட்டனர்

போனதும் சத்யன் தனது உடைகளை கலைந்து ஷாட்ஸ்க்கு மாறிவிட்டு, ஜெயந்தியை தனியாக அழைத்தான் “ அக்கா மான்சிக்கு வேற டிரஸ் மாத்தி விடுங்க, அந்த பட்டுசேலையை அவளால தூக்கிகிட்டு நடக்க முடியலை,, அப்புறம் இன்னொரு விஷயம்,, மற்ற சம்பிரதாயங்கள் எல்லாம் அங்கே என் வீட்டில் போய் வச்சுக்கலாம், இங்கே எதுவும் செய்யவேண்டாம்,, நாளைக்கு விடியகாலையே ஊருக்கு கிளம்பலாம் அக்கா எல்லாத்தையும் ரெடியா எடுத்து வச்சுக்க ” என்று சொன்ன சத்யன் அறைக்குள் போய் கட்டிலில் படுத்துக்கொண்டான்

அவன் பின்னாலேயே வந்த ஜெயந்தி “ டேய் தம்பி எல்லாம் சரிதான்,, நாளைக்கு நீங்க ரெண்டுபேரும் விருதாச்சலம்ல மறுவீடு போகனும் நீ பாட்டுக்கு நம்ம ஊருக்கு வர்றேன்னு சொல்ற காலையில கோயில்ல வச்சு பாண்டியனும் பரிமளாவும் அத்தனை முறை சொல்லிட்டு போனாங்களே,, இப்போ நீ இப்படி சொல்றயே சத்தி,, இப்போ அவங்களுக்கு என்ன பதில் சொல்றதுடா” என்று ஜெயந்தி கவலையாக கேட்க

சத்யனுக்கு அந்த விஷயமே அப்போதுதான் ஞாபகம் வந்தது,, ஆனால் அவனுக்கு இருக்கும் மனநிலையில் விருதாச்சலம் போக விருப்பமில்லை,, எதற்க்கும் மான்சியிடும் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு முடிவெடுப்பது நல்லது ‘ தாய் வீட்டுக்கு போகவேண்டும் என்ற ஆசை அவளுக்கு இருந்த அது என்னால் தடைபட வேண்டாம், என்று நினைத்த சத்யன் “ சரி இருக்கா மான்சியை ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேன்” என்று கூறிவிட்டு எழுந்து மான்சியை தேடிப்போனான்

வீட்டின் பின்புறம் இருந்த மாடிபடிக்கு கீழே விநாயகத்தின் பிள்ளைகள் பொம்மைகள் வைத்து விளையாடிக்கொண்டிருக்க மான்சி அவர்களுடன் அமர்ந்துஹெலிகாப்டர்க்கு கீ கொடுத்து பறக்க விட்டுக்கொண்டிருந்தாள்

அவளைத் தேடி வந்த சத்யன் தூரமாய் நின்று மான்சி பிள்ளைகளுடன் விளையாடுவதை ரசித்தான்,, மணப்பெண் அலங்காரம் கலைக்கப்பட்டு,, பிஸ்தா பச்சையில் சாதாரண காட்ட சேலையும் ஒரு சில நகைகள் மட்டும் அணிந்து கழுத்தில் புது தாலிகயிறு மின்ன, கூந்தலை லூசாக பின்னலிட்டு அதில் சரமாக மல்லிகைபூ சூடியிருந்தாள்

பிள்ளைகள் சத்யனை கவனித்துவிட்டு பெரியப்பா பெரியப்பா என்று கூச்சலிட,, மான்சி சட்டென்று திரும்பி சத்யனை பார்த்தாள்,, தன் கணவன் தன்னை பார்வையால் விழுங்கிக்கொண்டு இருப்பதைப் பார்த்து, வெட்கத்தால் முகம் சிவக்க கண்ணால் ஜாடை செய்து என்ன என்று கேட்டாள்

“ ம்ஹூம் ஒன்னுமில்ல சும்மா பேசலாம்னு வந்தேன்” என்றான் சத்யன்
பிள்ளைகளின் கன்னத்தில் தட்டி இதோ வருவதாக சொல்லிவிட்டு சத்யனிடம் வந்தாள் “ என்ன பேசனும் சொல்லுங்க மாமா” என்று கேட்டாள்

“ இல்ல நாளைக்கு விருதாச்சலம் வரச்சொல்லி உங்கப்பா சொல்லிட்டு போனார்,, இன்னும் கொஞ்சநாள் கழிச்சு போகலாம்னு நான் நெனைக்கிறேன்,, நீ என்ன சொல்ற மான்சி?” என்று சத்யன் கேட்டான்

மான்சி ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை ,, “ இப்போ விருதாச்சலம் போகவேண்டாம் பிறகு ஒருநாள் பார்க்கலாம்” என பட்டென்று பதில் சொன்னாள்

மான்சியை உற்றுப்பார்த்த சத்யன் “ இதுக்கு ஏதாவது காரணம் இருக்கா மான்சி” என்றான்

அவன் பார்வையை தவிர்த்து “ ரொம்ப முக்கிய காரணம் எதுவுமில்லை மாமா,, நாம்ளோட கல்யாண வாழ்க்கை நம்ம வீட்டுலதான் ஆரம்பிக்கனும் அதுல நான் ரொம்ப உறுதியா இருக்கேன்.. அதனால அப்பாவுக்கு போன்போட்டு இப்போ வரமுடியாதுன்னு சொல்லிடுங்க” என்று மான்சி தீர்மானமாக சொன்னாள்
அவளுக்கு பதில் எதுவும் சொல்லாமல் சத்யன் அமைதியாக அவளையே பார்த்தான்,, ஏதோவொரு பிரச்சனையை மான்சி மனதில் சுமந்துகொண்டு இருக்கிறாள் என்பது அவள் பார்வையிலேயே தெரிந்தது,,

இருந்தாலும் தனது முடிவுக்கு அவளும் ஒத்துப்போனதை எண்ணி சந்தோஷப்பட்டு “ சரிம்மா என் மாமானார்க்கு உடனே போன் பண்ணி செல்லிர்றேன்” என்றான் சத்யன் சிரிப்புடன்

அன்று இரவு உணவு முடிந்ததும் தனது மொபைலை எடுத்து பாண்டியனுக்கு போன் செய்தான்,, எப்படியோ அவருக்கு சொல்லி புரியவைத்தான்,, இன்னும் சிறிதுநாள் கழித்து விருதாச்சலம் வர்றோம் என்று சொல்ல,, பாண்டியனும் அரைமனதாக ஒத்துக்கொண்டார்



மறுநாள் அதிகாலை மூன்று மணிக்கே சத்யன் மான்சி, ஜெயந்தி அவள் கணவர், சத்யனின் அம்மா, என ஜந்து பேர் மட்டும் சத்யன் காரில் ஊருக்கு கிளம்பினார்கள் காலை ஒன்பது மணிக்கெல்லாம் சத்யன் வீட்டுக்கு வந்துவிட்டனர்

வாசலிலேயே நிற்க்க வைத்து ஜெயந்தி இருவருக்கும் ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்து சென்றாள்,, அனைவரும் வழியில் காலை உணவை சாப்பிட்டு விட்டதால்,, மற்றவர்கள் அவரவர் வேலையை பார்க்க, மான்சி பூஜையறையில் விளக்கேற்றினாள்,, சத்யனின் அம்மா இருவரையும் சேர்ந்து கும்பிட சொன்னதும் , சத்யனும் மான்சியும் ஜோடியாக விழுந்து கும்பிட்டனர்

சத்யன் சிறிதுநேர ஓய்வுக்குப் பின், மதிய உணவை முடித்துக்கொண்டு ஆபிஸ்க்கு போய் வருவதா சொல்லிவிட்டு கிளம்பினான்,, வாசல் வரை வந்து வழியனுப்பிய மான்சியிடம் கண்களால் விடைபெற்று கிளம்பினான் சத்யன்

காரில் செல்லும்போதும் ஆபிஸ்ல் இருக்கும் போதும் சத்யனுக்கு ஒரே நினைப்புதான்,, இந்த திருமணம் சரியா என்ற கேள்விதான் பெரிதாக எழுந்தது,, இன்றைய மான்சியிடம் நிறைய மாறுதல்கள் இருப்பது தெளிவாக தெரிந்தது,, அவ்வளவு பிடிவாதமாக நான்தான் வேண்டும் என்று அத்தனை பாயிண்டுகளை முன் வச்சு கல்யாணம் பண்ணவ இப்போ ஏன் அதிகமாக மவுனம் சாதிக்கிறாள் என்று சத்யனுக்கு குழப்பமாக இருந்தது

ஆபிஸ்ல் எந்த வேலையிலும் மனம் ஒன்றவில்லை,, மான்சி பற்றிய சிந்தனைகளே மனதை ஆக்கிரமித்தது,, சரியாக மணி ஐந்து ஆனதும் வீட்டுக்கு கிளம்பிவிட்டான்,,

No comments:

Post a Comment