Tuesday, August 18, 2015

மனசுக்குள் மான்சி - அத்தியாயம் - 10

ரஞ்சனா கவிழ்ந்து வரும் இருட்டில் காரின் ஜன்னல் வழியாக வெளியே இலக்கற்று வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் , கண்களில் விழிந்த கண்ணீர் கன்னங்களில் வழிந்து கழுத்தில் இறங்கி ரவிக்கையை நனைத்தது

அவளையே கவனித்த கிருபாவிற்க்கு அவளுக்கு எப்படி ஆறுதலளிப்பது என்று புரியவில்லை,, சிறிதுநேரம் அங்கே பலத்த அமைதி நிலவியது, நேரம் கடந்து போவதை எதிரே கடந்து போன வாகனங்களின் விளக்கொளி உணர்த்த “ சொல்லுங்க ரஞ்சனா உங்களுக்கு என்ன பிரச்சனை,, உங்களின் நடவடிக்கைகளை வச்சு பார்க்கும்போது லவ் பெயிலியர்னு எனக்கு தோனுது,, நான் சொன்னது கரெக்டா ரஞ்சனா” என்று கிருபா கேட்க

அதற்க்கு மேல் பொறுக்கமுடியாமல் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு கதறியழுதபடி ஆமாம் என்று தலையசைத்தாள் ரஞ்சனா

“ சரிங்க அதுக்காக உயிரைவிட துணியறது ரொம்ப தப்புங்க,, அப்பா அம்மா இல்லாமல் இவ்வளவு படிச்சு முன்னுக்கு வந்து எல்லாத்தையும் எவனோ ஒருத்தனுக்காக வீணடிக்க போறீங்களா ரஞ்சனா?
நீங்க படிச்ச படிப்புக்கு எத்தனை தொழிளாலர்களோட வியர்வையும் உழைப்பும் இருக்குன்னு தெரியுமா உங்களுக்கு? எங்களோட டிரஸ்ட் எங்களோட பணத்துல மட்டும் நடக்கலை ரஞ்சனா, எங்க மில் தொழிலாளர்கள் அத்தனை பேரின் உழைப்பும் அதுல அடங்கியிருக்கு,, ஒருத்தன் உங்களை ஏமாத்திட்டான் என்பதற்காக தற்கொலை முடிவு எடுத்த நீங்க , ஏன் நல்லபடியா வாழ்ந்து சமூகத்தில் முன்னேறி அவன் முகத்தில் கறியை பூசனும்னு நெனைக்கலை?” என்று சற்று கோபமாக கிருபா சரமாரியாக கேள்வி கேட்க

ஒன்றுக்குகூட பதில் தெரியாமல் பரிதாபமாக அவனைப்பார்த்து விழித்தவளை பார்த்து கிருபாவுக்கு மேலும் கோபம்தான் வந்தது “ ச்சே உங்களை ரொம்ப உயர்வா நெனைச்சேன் ரஞ்சனா, அனாதை என்று குறுகி போகாமல் நல்லா படிச்சு முதல்வகுப்பில் தேறி ஒரு வேலையில் சேர்ந்து லைப்ல செட்டில் ஆகிட்டீங்கன்னு ரொம்ப சந்தோஷப்பட்டேன்,, உங்களுக்கு தெரிஞ்சும் தெரியாமலும் உங்களை நிறைய நோட் பண்ணியிருக்கேன், உங்களோட நிமிர்வும் தன்னம்பிக்கையும் எனக்கு ரொம்ப பிடிச்சது, ஆனா இப்போ நான் நெனைச்சது ரொம்ப தப்போன்னு தோனுது, எல்லாமே வீன்” என்று ஸ்டேரிங்கில் குத்தியபடி கிருபா பொரிந்து தள்ளினான்

அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சில் ஈட்டிபோல் இறங்க “ வேனாம் வேனாம் நான் எதுக்குமே தகுதி இல்லாதவள்,, நான் உயிருடன் வாழ லாயக்கில்லாதவள் சார்” என்று அழுதவளை தீர்க்கமாக பார்த்தான் கிருபா

“ நீங்க பேசுறதை பார்த்தா பிரச்சனை ரொம்ப பெரிசுன்னு தோனுது,, எதுவாயிருந்தாலும் சொல்லுங்க ரஞ்சனா , என்னால் முடிந்த உதவிகளை செய்றேன்” என்று கோபம் குறைந்த குரலில் கிருபா கூற

அதற்க்கு மேல் மறைக்க விரும்பாத ரஞ்சனா தனக்கும் குருமூர்த்திக்கும் நடந்ததில் இருந்து மங்கையிடம் போனில் பேசியது வரை அத்தனையும் ஒன்று விடாமல் கூறினாள், கூறிவிட்டு மன்னிப்பை வேண்டி அவன் முகத்தையே பார்த்தாள்

அவனிடமிருந்து எந்த வார்த்தையும் வரவில்லை இதை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை கிருபாவின் முகபாவனை எடுத்து சொன்னது,, அவன் விரல்கள் ஸ்டேரிங்கை பற்றியிருந்த அழுத்தத்தை பார்த்து ரஞ்சனாவுக்கு வயிற்றுக்குள் திக்கென்றது

நடுங்கும் குரலில் “ என்னை மன்னிச்சுடுங்க சார் உங்களோட நம்பிக்கையை நான் பொய்யாக்கிட்டேன்,, ஆனா என்னை கேவலமான பொண்ணா மட்டும் நினைக்காதீங்க,, என்னோட நிலைமையை பாருங்க சார் ” என்று மெல்லிய குரலில் இறைஞ்சினாள்

பட்டென்று திரும்பி அவளை ரௌத்ரமாக முறைத்த கிருபா “ இப்படி கல்யாணத்துக்கு முன்னாடியே கெட்டுப்போக என்ன நிலைமையை காரணம் சொல்லப் போற ரஞ்சனா” என்றான் இறுகிய குரலில்

அவன் மனதில் ரஞ்சனாவின் தரம் தாழ்ந்து விட்டதை அவன் ஒருமையில் அழைத்து உணர்த்தியதும் ரஞ்சனாவுக்கு இதயத்தை யாரோ பிளப்பது போல் இருந்தது

இருந்தாலும் தனது அன்றைய நிலைமையை அவனுக்கு புரியவைக்கும் முயற்ச்சியுடன் “ ஆமாம் சார் நிலைமைதான்,, நான் ஒன்னும் உடம்பு சுகத்துக்காக அவன் கூட படுக்கலை, சின்னவயசுல இருந்து ஏளனப் பார்வைக்கே பழகி போயிருந்த எனக்கு முதல் காதல் பார்வை கிடைத்ததும் மயங்கி போனது உண்மைதான் ஆனா அதுக்காக அவன்கூட நான் படுக்கலை,, நான் என்னதான் படிச்சு முன்னேறினாலும் என் அம்மாவும் அப்பாவும் ஹெச் ஐ வி யால இருந்ததால் என்னோட பிற்கால திருமண வாழ்க்கை ஒரு கேள்விகுறிதான் என்பதை நீங்க மறுக்கமுடியுமா சார்? என்னோட அப்பா அம்மா பத்தி தெரிஞ்சவங்க யாராவது என்னை கல்யாணம் பண்ணிக்க முன் வருவாங்களா சார்? அப்படியே யாராவது தெரியாமல் கல்யாணம் பண்ணிகிட்டாலும் அதுக்கப்புறம் தெரிஞ்சா என்கூட வாழனும்னு நினைப்பாங்களா சார்? அப்படி எந்த ஆணாவது சமூக சிந்தனையுடன் தாராள மனதுடன் என்னை கல்யாணம் பண்ணிக்க முன்வந்திருப்பான்னு நினைக்கிறீர்களா சார்?” என்று ஆவேசமாக தனது கேள்விகளை கேட்ட ரஞ்சனா, கிருபாவின் நெற்றியில் விழுந்த சிந்தனை முடிச்சுகளை பார்த்து தனது குரலை தனித்து

“ இந்த மாதிரி எந்த கேள்விக்கும் பதில் தெரியாமல் இருக்கும்போது தான் குருமூர்த்தி என்னைப்பத்தி எல்லாமே தெரிஞ்சே காதலிச்சான்,, அன்னிக்கு நான் இருந்த மனநிலையில் கடவுளாதான் இப்படியொருத்தனை எனக்காக அனுப்பியிருக்காரேன்னு எனக்கு தோனுச்சு, எதையாவது அவனுக்கு கொடுத்து தக்கவச்சுக்கனும்னு நெனைச்சேன்,, அவன் என்னையே கேட்டப்ப நானும் தயங்காமல் குடுத்துட்டேன்,, ஆனா இப்பத்தான் தெரியுது அவன் கடவுளின் அவதாரம் கிடையாது,, சாத்தானின் அவதாரம்னு, நான் உலகத்துலேயே அதிகமா வெறுத்தது என் அப்பாவை இரண்டாவது இந்த குருமூர்த்தியை தான்,, கடவுள் என்ற ஒருத்தன் உலகத்தில் இல்லவேயில்லை,, எல்லாமே பொய்,, எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது” என்று தனது முகத்தில் அறைந்துக்கொண்டு கதறியவளை அடக்க வழி தெரியாது செயலற்று அமர்ந்திருந்தான் கிருபா


அழுது அழுது தானாகவே சமாதானமாகிய ரஞ்சனா “ இந்த மோசக்கார உலகத்தில் இனிமேல் வாழனும்னு எனக்கு துளிகூட ஆசையில்லை சார், என்னை என் போக்கில் விடுங்க” என்று அவனைப்பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்

கூப்பிய அவள் கையை பற்றி ஆறுதல் சொல்ல முன்வந்த தன் கைகளை அடக்கியவாறு “ உன் அப்பாவையும் குருமூர்த்தியையும் வச்சு உலகத்தை எடைபோடாதே ரஞ்சனா,, உலகத்தில் நல்லவங்களும் இருக்காங்க,, நீ சொல்றதை வச்சு பார்க்கும்போது உன்பக்கம் இருக்கும் நியாயம் புரியுது,, உன்னோட வயசு அந்தமாதிரி முடிவெடுக்க வச்சாலும்,, என்னோட வயசு அதை இன்னும் ஏத்துக்கலை ரஞ்சனா ” என்றவன் காரின் டேஷ்போர்டை திறந்து அதிலிருந்து ஒரு சிறிய டவலை எடுத்து அவளிடம் கொடுத்து “ முகத்தை தொடைச்சுக்க ரஞ்சனா,, எனக்கு ஒரு விஷயத்தில் நீ உறுதியளிக்கனும்” என்று தனிவாக கேட்டான்

டவலை கைநீட்டி வாங்கியவள் , என்ன என்பதுபோல் கேள்வியாக அவனை பார்க்க

“ இனிமேல் உன் விஷயத்தில் முடிவெடுக்கும் உரிமையை நீ எனக்கு தரனும்,, நீ தரும் உரிமையை நான் எப்பவுமே தவறாக பயன்படுத்த மாட்டேன்,, நீ என்னை நம்பலாம் ரஞ்சனா” என்று கிருபா கூற

அவனை நன்றியுடன் பார்த்த ரஞ்சனா “ உங்களைத்தவிர வேற யாரை நம்பப்போறேன் சார்,, நீங்க எது செய்தாலும் அது என்னுடைய நன்மைக்காகத்தான் இருக்கும்னு எனக்கு தெரியும் சார்” என்றாள்

“ அப்படின்னா முகத்தை தொடைச்சுக்கிட்டு நிமிர்ந்து உட்காரு” என்று சொல்லிவிட்டு அரைசெங்கல் அளவுக்கு இருந்த தனது புதிய செல்போனை எடுத்து வீட்டுக்கு கால் செய்தான்

அங்கே எடுத்ததும் “ வசிம்மா நான் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகும்,, என்ன விஷயம்னு வீட்டுக்கு வந்து சொல்றேன்,, நீ சாப்பிட்டு தூங்கு,, சத்யனையும் சாப்பிட வை” என்ற கிருபா இணைப்பை துண்டித்து விட்டு காரை ஸ்டார்ட் செய்தான்

எங்கே போகிறோம் என்று அவளும் கேட்கவில்லை, அவனும் சொல்லவில்லை,, அவள் முகத்தில் லேசாக நம்பிக்கையின் ஓளி தெரிந்தது

பல கிலோமீட்டர் தூரம் கடந்ததும் கார் ஒரு மண்சாலையில் திரும்பியது,, நிலவின் வெளிச்சத்தில் கோவைக்கு வெளியே ஏதோவொரு கிராமம் என்பது தெரிந்தது,, இரண்டுபக்கமும் வயல் சூழ்ந்த இடமாக இருந்தது

கார் ஒரு ஓட்டு வீட்டின் முன்பு நின்றது,, கதவை திறந்து இறங்கிய கிருபா மறுபக்கம் வந்து கார் கதவை திறந்து “ இறங்கு ரஞ்சனா” என்றான்
மெதுவாக இறங்கிய ரஞ்சனா சுற்றும் முற்றும் பார்த்தாள்,, சுற்றிலும் நிலமும் நடுவே ஒரு பழைய ஓட்டு வீடும் இருந்தது,,

“ என்ன பார்க்கிற,, இது என் வீடுதான்,, என் அப்பா அம்மா முதன்முதலில் வாழ்ந்த வீடு,, அதை மாற்றக்கூடாதுன்னு என் மனைவியின் உத்தரவு,, அதனால ஒரு வயசான கணவன் மனைவியை பாதுகாப்புக்காக போட்டு வீட்டையும் நிலத்தையும் பார்த்துக்கிறேன்,, நீ கொஞ்சநாளைக்கு இங்கே தங்கியிரு,, அதன்பிறகு என்ன செய்றதுன்னு முடிவு பண்ணலாம் ” என்றவன் வீட்டை நெருங்கி “கந்தா ” என்று கூப்பிட்டு கதவை தட்டினான்

கொஞ்சநேரத்தில் கதவு திறக்கப்பட்டது ,, ஒரு வயதான மனிதர் கதவை திறந்து வெளியே வந்து “ வாங்க சின்னய்யா” என்று காவியேறிய பற்களுடன் புன்னகைத்து வரவேற்றார்

ரஞ்சனாவுடன் உள்ளே போனான் கிருபா,, வீடு மிக சிறியதாக இருந்தது,, சுற்றிலும் தாழ்வாரமும் நடுவே பெரிய முற்றமும்,, தாழ்வாரத்தை கடந்தால் எதிரெதிராக இரண்டு அறைகளும் அதற்க்கு பின்னே சமையலறையும் தோட்டமும் இருந்தது,, இரண்டு அறையில் ஒன்று படுக்கையறையை போல பழைய காலத்து மரக்கட்டிலுடன் இருந்தது,, எதிரே இருந்த அறை பூஜை அறையாகவும் அதிலேயே மூட்டை முடிச்சுகளை அடுக்கி வைக்கவும் பயன்பட்டது

பின்னால் இருந்து வயதான பெண்மணி வந்தார்,, கிருபாவை பார்த்ததும் அருகில் வந்து கன்னத்தை தடவி “ சின்னராசாவா வாங்க வாங்க” என்று சந்தோஷமாக வரவேற்றவர் கிருபாவின் பக்கத்தில் இருந்த ரஞ்சனாவை பார்த்து “ யாருங்க ராசா இந்த புள்ள,, அம்மன் சிலையாட்டம் இம்புட்டு அழகா இருக்கு’’ என்று வியப்புடன் கேட்டார்

அவர் சொன்னதற்கு பிறகுதான் திரும்பி தன்பக்கத்தில் இருந்த ரஞ்சனாவின் அழகை உற்று கவனித்தான், தெய்வீகமான அழகுதான் ஆனால் இந்த அழகு ஒரு சாத்தானுக்கு படைக்கப்பட்டு விட்டதே என்று வருத்ததுடன் நினைத்தான்

அவன் கூர்மையுடன் பார்த்ததும் ரஞ்சனா தலையை குனிந்துகொண்டாள்

திரும்பி அந்த மூதாட்டியை பார்த்து “ அன்னம்மா இவங்க என் நண்பனோட தங்கச்சி,, அம்மா அப்பா ஒரு விபத்துல இறந்து போய்ட்டாங்க,, என் நண்பனும் வெளியூருக்கு போய்ட்டதால் ஒரு பாதுகாப்புக்காக இங்கே கூட்டி வந்தேன்,, இப்போதைக்கு என்னை வேற ஒன்னும் கேட்காதீங்க,, இவங்க கிட்டயும் எதுவுமே கேட்காதீங்க, பெத்தவங்களை இழந்த சோகத்தில் அழுதால் ஆறுதல் சொல்லுங்க,, உங்களை நம்பித்தான் விட்டுட்டு போறேன் கவனமா பார்த்துங்க அன்னம்மா” என்று கூறிவிட்டு ரஞ்சனாவிடம் திரும்பினான்

“ ரஞ்சனா இவங்க அன்னம்மா கிட்டத்தட்ட என் தாத்தா காலத்தில் இருந்து எங்ககூட இருக்காங்க, அவர் கந்தசாமி இவங்க வீட்டுகாரர்,, ரெண்டுபேரும் தான் என்னை வளர்த்தாங்க,, இப்போ இவங்கதான் இந்த வீட்டை பார்த்துக்குறாங்க,, உனக்கு ரொம்ப பாதுகாப்பா இருப்பாங்க” என்றான்



அவன் முடித்ததுமே அன்னம்மா ரஞ்சனாவின் கைகளை பற்றிக்கொண்டு “ கண்ணு என் பேத்தி மாதிரி இருக்க,, இனிமேல் அப்பா அம்மாவை நெனைச்சுக்கிட்டு கண்ணை கசக்காத,, உனக்கு நாங்க இருக்கோம்” என்று ஆறுதல் சொன்னாள்

ரஞ்சனாவுக்கும் அந்த முதியவர்களை பிடித்துப்போனது,, கிருபாவை பார்த்து தன் பார்வையாலேயே நன்றி சொன்னாள்

கண்களை மூடித்திறந்து அவள் நன்றியை ஏற்றுக்கொண்ட கிருபா “ சரி அன்னம்மா நேரமாச்சு நான் கிளம்புறேன்,, ரஞ்சனாவை பத்திரமா பார்த்துக்கங்க,, அவங்ககிட்ட எதையும் கேட்டு வருத்தப்பட வைக்காதீங்க” என்று சொல்லிகொண்ட வாசலை நோக்கிப் போனவன் நின்று “ ரஞ்சனா உன் பெட்டி வண்டியில் இருக்கு, வா எடுத்து தர்றேன்” என்று அழைத்தான்

சரியென்று தலையசைத்து அவன் பின்னால் வந்தவளிடம் பெட்டியை எடுத்து கொடுத்துவிட்டு “ இனிமேல் தற்கொலை எண்ணமே உனக்கு வராதுன்னு எனக்கு சத்தியம் பண்ணிக்கொடு ரஞ்சனா” என்று அவள்முன் கையை நீட்டி நின்றான்
நீள நீளமான அவன் விரல்களை பார்த்தவாறு அமைதியாக நின்றாள் ரஞ்சனா

“ ம் சத்தியம் பண்ணு ரஞ்சனா” என்று கிருபா உரிமையுடன் அதட்ட,, சட்டென்று அவன் கையில் தனது கையை வைத்தாள் ரஞ்சனா

தேக்கைப் போன்ற உறுதியான அவன் கரத்தில், பூவைவிட மென்மையான ரஞ்சனாவின் கரம் பட்டதும், ரஞ்சனாவுக்கு சிலிர்த்தது,, உடனே பட்டென்று கையை விலக்கிக்கொண்டாள்

முகத்தில் திருப்த்தியுடன் “ ஓகே ரஞ்சனா நான் கிளம்புறேன்,, நாளைக்கு எனக்கு தெரிஞ்ச ஒரு பிரைவேட் டிடெக்டிவ் மூலம் குருமூர்த்தியை பத்தி விசாரிச்சு உன் தோழி சொன்ன தகவல்கள் உண்மையான்னு கன்பார்ம் பண்ணிக்கிறேன்” என்றவன் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு கார்டை எடுத்து அதன் பின்னால் தனது புதிய மொபைல் நம்பரை எழுதி அவளிடம் நீட்டி “ இதுல என்னோட புது செல்போன் நம்பர்,, ஏதாவது அவசரம்னா இந்த மண்பாதையை கடந்து ஊருக்குள்ள போனா எஸ்டிடி பூத் இருக்கும் அங்கே இருந்து போன் பண்ணு,, என்னால முடிஞ்ச நேரங்களில் நான் வர்றேன்,, ஜாக்கிரதையா இரு ரஞ்சனா,, அன்னம்மாகிட்ட இதைபத்தி எதுவுமே சொல்லாதே,, யோசிச்சு ஒரு முடிவு பண்ணுவோம்” என்று கூறிவிட்டு காரில் ஏறி அமர்ந்து பார்வையால் அவளிடம் விடைபெற்று கிளம்பினான் கிருபா

கார் கண்ணைவிட்டு மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த ரஞ்சனா,, ஒரு செயலற்ற பெருமூச்சுடன் வீட்டுக்குள் போனாள்

நேரமாகிவிட்டதே என்ற பதட்டத்துடன் காரை விரட்டிய கிருபா வீட்டை அடையும்போது இரவு மணி பத்து ஆகிவிட்டது, அவசரமாக காரை பார்க் செய்துவிட்டு வீட்டுக்குள் ஓடினான் கிருபா...

அவன் நினைத்தது சரியாகிவிட்டது,, வசந்தி தூங்காமல் ஒரு கையை கன்னத்தில் கைவைத்துக்கொண்டு ,, இன்னொரு கையால் மடியில் படுத்து உறங்கிய மகனை தட்டிக்கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தாள்

வேகமாக போய் வச்தியின் மடியில் கிடந்த மகனை வாரியெடுத்து தன் தோளில் போட்டுக்கொண்ட கிருபா “ ஸாரிம்மா சீக்கிரமா வரனும்னு தான் நெனைச்சேன், ஆனா லேட்டாயிருச்சு” என்று வருத்தப்பட்டபடி மகனுடன் தங்கள் அறைக்கு போனான்

அவன் பின்னாலேயே வந்த வசந்தி “ எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைங்க,, சத்யா தான் நீங்க வராம சாப்பிட மாட்டேன்னு ஒரே அடம் பண்ணான்,, எப்படியோ சமாதானம் பண்ணி சாப்பிட வச்சேன்” என்று கூறினாள்

அறைக்குள் போய் மகனை கட்டிலில் கிடத்திய கிருபா,, ஒரு போர்வையை எடுத்து சத்யன் மீது போர்த்தி விட்டு,, ஏசியை ஆன் செய்தான்

பக்கத்தில் இருந்த மனைவியை இழுத்து அணைத்த கிருபா “ சத்யா மட்டும்தான் என்னை தேடினான், நீ தேடலையாக்கும்” என்று குறும்பு பேசி வசந்தியின் மூக்கோடு தன் மூக்கை வைத்து உரசினான் கிருபா

“ ம்க்கும் இதை நான் வேற சொல்லனுமா,ம் ஏன் ஐயாவுக்கு தெரியாதாக்கும்” என்று வெட்கமாக கூறி தன் பங்குக்கு கணவனை இறுக்கி அணைத்த வசந்தி “ மணி பத்தாகுது, வாங்க சாப்பிடலாம்” என்றாள்

தனது உதடுகளால வசந்தியின் கழுத்தில் கோலம் வரைந்துகொண்டே “ ம்ம் எனக்கும் பசிக்குதுதான்,, ஆனா உன் வாசனை வேற பசியை அல்லவா தூண்டுது,, மொதல்ல எந்த பசியை அடக்கலாம்” என்று தாபமாக கிருபா கேட்க

“ ம்ம் மொதல்ல வயித்து பசியை அடக்கலாம்,, இல்லேன்னா சாப்பாடு கெட்டுபோயிடும்” என்று கிருபாவிடம் இருந்து விலகி அவன் முதுகில் கைவைத்து டைனிங் ஹாலுக்கு தள்ளிக்கொண்டு போனாள்

இருவரும் சிரிப்பும் சந்தோஷமுமாக சாப்பிட்டு முடித்தபின், இருவரும் படுக்கையறைக்கு வந்தனர்,, கதவை திறக்கும்வரை கூட பொறுமையில்லாமல் வசந்தியை வாரியணைத்து தூக்கிக்கொண்டு காலால் கதவை உதைத்து திறந்துகொண்டுஉள்ளே போனான் கிருபா

கிருபா தொழில் கொடிகட்டிப் பறந்தாலும்,, செக்ஸ் விஷயத்தில் மிகவும் பலகீனமானவன், ஆனால் தனது வேட்கைக்கு மனைவியை மட்டுமே தேடுவான்,, அவனுக்கு தினமும் வசந்தி வேண்டும்,, அந்த மூன்று நாட்களுக்கு காத்திருப்பதற்குள் தவித்து போய்விடுவான்,, இவர்களுக்கு திருமணம் ஆனதில் இருந்தது வசந்தியும் இவனுக்கு சரியாக ஈடுகொடுத்து இதுபோல் பழக்கி வைத்ததிருந்தாள்,, எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் தனது மனைவியை அணைத்து உறவுகொண்டதும் அத்தனையும் இலகுவாகிவிடும் என்பது கிருபா அனுபவத்தில் கண்டு உண்மை


தினமும் ஒரேமுறை என்றாலும் திகட்ட திகட்ட திருப்த்தியாக அனுபவிப்பார்கள்,, இருவரும் தாம்பத்தியத்தின் நிறைவை முழுமையாக உணர்ந்திருந்தனர்,, கணவனின் தேவை என்னவென்று நிமிடத்தில் யூகிக்கும் திறைமை வசந்தியிடம் இருந்தது,, இருவரும் மனமொத்த தம்பதிகளாய் வாழ்ந்தார்கள்,, கிருபாவின் குறும்புகளும் சீண்டல்களும் எப்போதும் வசந்தியை சந்தோஷமாக வைத்திருக்கும்

அன்றும் அப்படித்தான் சுகமான ஒரு நிறைவை எட்டிய இருவரும் ஒரு போர்வைக்குள் அணைத்து கிடந்தனர்,, கிருபாவின் வெற்று மார்பில் தலைவைத்து படுத்திருந்த வசந்தி “ இப்ப சொல்லுங்க என்னாச்சுங்க ஏன் லேட்” என்று கேட்டாள்*

மனைவியின் கூந்தலை கோதியவாறு “ உன்கிட்ட முன்னமே சொன்னேனே நம்ம ட்ரஸ்ட் மூலமா படிச்ச ஒரு பொண்ணுக்கு நம்ம ஆபிஸில் வேலை குடுத்திருக்கோம்னு” என்று கிருபா ஆரம்பிக்க

“ ஆமா சொன்னீங்க பேருகூட ரஞ்சனா தானே,, ரொம்ப நல்லப் பொண்ணுன்னு சொன்னீங்களே அவளுக்கு என்னாச்சு” என்று வசந்தி கேட்டாள்

“ அவ மூனுநாளா ஆபிஸ் வரலை வசி, ஏதோ உடம்பு சரியில்லைன்னு ஷீலா சொன்னதால் நானும் சரியான பிறகு வரட்டும்னு இருந்துட்டேன்,, இன்னிக்குஈவினிங் ஷீலா அவளோட ஹாஸ்டலில் இருந்து போன் பண்ணா,, அந்த ரஞ்சனாவை காணோம்னு,, எனக்கு ஒன்னுமே புரியலை அப்புறம் ஷீலாவை விசாரிச்சதில் அவளுக்கு ஏதோ பெரிய பிரச்சனைன்னு யூகிக்க முடிஞ்சது, அவ எங்க போயிருப்பான்னு ஆட்டோ ஸ்டாண்டில் விசாரிச்சு, அப்புறம் பஸ்ஸ்டாண்டில் போய் தேடினா.... ஊட்டி போற பஸ்ஸில் இருந்தா” என்ற கிருபா அதன்பிறகு நடந்தவற்றை ஒன்றுவிடாமல் வசந்தியிடம் கூறினான்

இப்படியொரு கதையை எதிர் பார்க்காத வசந்தி “ அய்யய்யோ பாவம்ங்க அந்த பொண்ணு,, அவளை கவனமா பார்த்துக்க சொல்லி அன்னம்மா கிட்ட சொன்னீங்களா? மறுபடியும் ஏதாவது பண்ணிக்க எங்கயாவது போயிரப்போறா” என்று வசந்தி பரிதாபத்துடன் சொல்ல

“ இல்ல எதுவும் ட்ரை பண்ணமாட்டேன்னு நெனைக்கிறேன்,, எனக்குசத்தியம்பண்ணிக் குடுத்திருக்கா” என்று கிருபா நம்பிக்கையுடன் கூறினான்

“ இப்போ அடுத்து என்னப் பண்ணப்போறீங்க” என்று வசந்தி கவலையுடன் கேட்டாள்

“ அந்த குருமூர்த்தி பற்றிய தகவல்கள் உண்மையான்னு விசாரிக்கனும்” என்றான் கிருபா

“ உண்மையாக இருந்தால்?”

“ உண்மையா இருந்தால்,, இந்த பொண்ணை சமாதானம் பண்ணி வேற யாராவது ஒரு நல்லவனுக்கு மேரேஜ் பண்ணி குடுக்கனும்,, அதுதானே சரி” என்று கிருபா உறுதியுடன் கூறினான்

“அப்போ அவ வயத்துல இருக்குற குழந்தை? அதையும் சேர்த்து ஏத்துக்குற நல்லவன் இருக்கானா? ” என்ற வசந்தியின் கேள்விக்கு கிருபா பதில் தெரியாமல் சற்றுநேரம் அமைதியாக இருந்தான்

“ அதுதான் எனக்கும் புரியலை வசி,, அந்த கருவை கலைச்சிட சொல்லலாமா?” என்று மனைவியிடம் யோசனை கேட்டான்

உடனே துடித்து நிமிர்ந்த வசந்தி கிருபாவின் வாயை பொத்தி “ அய்யோ உங்க வாயால அந்த வார்த்தையை சொல்லாதீங்க,, ஏற்கனவே என்ன பாவம் பண்ணோமோ சத்யனுக்கு பிறகு நமக்கு குழந்தையே இல்லாம பண்ணிட்டான் கடவுள்,, இப்போ இந்த பாவமும் நமக்கு வேண்டாம்,, முதலில் குருமூர்த்தி பத்தி விசாரிங்க, பிறகு ரஞ்சனாவுக்கு என்ன செய்யலாம்னு அவளை கேட்டு முடிவு பண்ணுங்க,, நானும் ஒருநாள் வந்து அவளை பார்க்கிறேன்” என்று வசந்தி முடித்துவிட்டாள்

கிருபா தாமதிக்காமல் மறுநாளே குருமூர்த்தியை பற்றி விசாரிக்க டிடெக்டிவ் நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்ய,, இரண்டு நாளில் அவர்களின் பதில் வந்தது,, மங்கை சொன்னது நூறு சதம் உண்மைதான் என்றார்கள்,, அவன் இப்போது மனைவியுடன் மும்பையில் இருப்பதாக தகவல் கூறினார்கள்

கிருபாவிற்கு ஆத்திரமாக வந்தது,, ஒரு பெண்ணை ஏமாற்றி விட்டு இன்னொருத்தியுடன் குடும்பம் நடத்தும் அவனை தவறை உணரும்படி ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று கறுவினான் ,, அந்த டிடெக்டிவ் அதிகாரியிடமே அதைப்பற்றி கிருபா கேட்க

" எங்களுக்கும் இதுபோன்ற நபர்களை நடமாடவிடுவதில் விருப்பம் இல்லை மிஸ்டர் கிருபானந்தன்,, ஆனால் நாம் நேரடியாக இதில் இறங்கினால் நம்மளுக்கும் பாதிக்கும்,, அவன் வேலை செய்யும் நிறுவனம் மூலமாக மறைமுகமாக அவனுக்கு கஷ்டத்தை கொடுக்கலாம்,, அதாவது பெரிய சிக்கல் எதிலாவது அவனை மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கலாம்,, இதை செய்ய எங்களால் முடியும்” என்று அவர் உறுதியுடன் கூற

“ அப்படின்னா உடனே அதை செய்யுங்க,, எவ்வளவு பண்ம் செலவானாலும் சரி” என்று ஆத்திரத்தோடு கூறி கிருபா போனை வைத்தான்


அன்று மாலை வசந்தியிடம் தகவல் சொல்லி அவளை அழைத்துக்கொண்டு தோட்டத்து வீட்டுக்கு ரஞ்சனாவை பார்க்க சென்றான் கிருபா

ரஞ்சனா இவர்களை பார்த்ததும் ஒரு மெலிந்த புன்னகையோடு வரவேற்றாள்,, வசந்தி நட்புடன் அவள் கையை பற்றிக்கொள்ள, ரஞ்சனா சங்கடத்துடன் தலைகுனிந்து நின்றாள்

மூவரும் வீட்டைவிட்டு வெளியே வந்து வரப்பில் நடந்தனர்,, கிருபா தனக்கு கிடைத்த தகவலை ரஞ்சனாவிடம் சொன்னான்,, குருமூர்த்தியின் துரோகத்தை சொல்லும்போது கிருபாவின் முகம் கோபத்தில் சிவந்தது


No comments:

Post a Comment