Saturday, August 29, 2015

வீணை பேசும் ..... அத்தியாயம் 12

சிவாவுக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில் அனிதா வாழ்கையில் சில விரும்பதகாத சம்பவங்கள் நடந்து இருக்கின்றன என்று அவனுக்கு புரிந்தது. 'அதை ஏன் அனிதா சொல்ல மறுக்கிறாள், அவள் அம்மாவையும் சொல்ல விட மாட்டேன்' என்று அவனுக்கு காரணம் தெரியவில்லை.

"சிவா, நாளைல இருந்து நான் உங்க வீட்டுக்கு வந்து சொல்லி தரேன். மாலை நாலு மணி முதல் ஐந்து வரை" என்று சொல்ல,அவனுக்கு அனிதா ஏன் அப்படி சொல்கிறாள் என்று புரிந்தது.

அவளின் அம்மா நடந்த சம்பவங்களை சொல்லி விடுவாளோ என்று பயந்து அனிதா அப்படி செய்வதாக தோன்றியது."சரி அனிதா,நாங்க கிளம்பட்டா" என்று கேட்க, அனிதா தலை அசைத்தாள். 

அவள் அம்மாவிடம் சொல்லி விட்டு சிவா, பிரபாவுடன் வீட்டுக்கு திரும்பி வந்தான். இரவு உணவை முடித்து விட்டு படுத்து விட்ட சிவாவின் அருகில் படுத்துஇருந்த பிரபா கொஞ்ச நேரத்தில் உறங்கி விட சிவாமனதில் குழப்பம். வயது 25 ஆகியும் கல்யாணம் ஆகாமல் இருப்பதுஅவன் மனதில் நெருடலை ஏற்படுத்தியது.

'ஏதோ ஒரு பிரச்சனையால் அனிதா பாதிக்கப்பட்டு இருக்கிறாள், முடிந்தால் உதவி செய்ய வேண்டும். எப்படியும் நாளை டியுசனுக்கு வருவாள் அப்போது விசாரித்து கொள்ளலாம்

' என்று நினைத்தபடி தூங்கி விட்டான்.

அடுத்த சில நாட்கள் அனிதா வீட்டுக்கு வந்து பாடம் நடத்த பிரபாவின் படிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. பிரபா அடிப்படையில் புத்திசாலி குழந்தை ஆதலால், அவளுக்கு புரிய வைப்பதில் அனிதாவுக்கு சிரமம் இல்லாமல் போனது.

தாய் இல்லாத குழந்தை என்று சிவா செல்லம் கொடுத்து இருந்ததால், சில நேரங்களில் முரண்டு பிடித்தாள். ஆனால் அவளை கொஞ்சம் கொஞ்சமாக தனது வழிக்கு கொண்டு வந்தாள் அனிதா. குழந்தை தாய் அன்புக்கு ஏங்குவதை கண்ட அனிதா, பிரபாவிடம் சிறப்பு கவனம் செலுத்தினாள்.

ஒரு மாதம் கடந்த பின் அன்று வழக்கம் போல் டியுசன் முடித்து அனிதா கிளம்ப அவளை காரில் ட்ராப் செய்து விடுவதாக சொல்லி விட்டு சிவா கூட வந்தான்
செல்லும் வழியில் அனிதாவிடம் "அனிதா உங்களுக்கு என்ன பிரச்சனை. ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறீங்க. என்னை உங்களோட ஒரு நல்ல நண்பனா நினைத்து மனசில உள்ளதை கொட்டுங்க. எக்காரணத்தையும் முன்னிட்டு அதை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்" என்று அன்போடு சொல்ல, அனிதா சொல்வதா வேண்டாமா என்று சிந்திக்க ஆரம்பித்தாள்.

வண்டியை வழியில் மரத்தின் அடியில் நிறுத்த அனிதா தன் வாழ்கையில் நடந்த சம்பவங்களை விவரிக்க ஆரம்பித்தாள்


2006 ஜனவரி மாதம் 

சாந்தியிடம் இருந்து போன் வருமா என்று காத்து கொண்டு இருந்தாள் அனிதா
அப்பா இறந்து பத்து வருடங்கள் ஆகி விட்டன. சொந்த வீடு, அதை ஒட்டி இருந்த ஆறு கூட்டு வீட்டில் இருந்து கிடைத்த வாடகை,அம்மாவின் சொந்த ஊரான ஏற்காட்டில் இருந்த ஒரே வீடு மூலம் கிடைத்த வருமானம், மாத செலவு மற்றும் அனிதா படிப்புக்கு சரியாக இருந்தது. போன் அடிக்க அனிதா எடுத்தாள். அடுத்த முனையில் சாந்தி.

"அனிதா, என்னடி ரெடியா இருக்கியா. சிம்பு படத்துக்கு டிக்கெட் கிடைச்சுடுச்சு. பதினோரு டிக்கெட் எடுத்து இருக்கேன். நீ கட்டாயம் வரணும்."

"இல்லை சாந்தி. படம் பார்த்தா என் அம்மாவுக்கு பிடிக்காது. நான் வரலை. என்னை வற்புறுத்தாதே."

"நீ நான் சொன்னா கேட்க மாட்டே. அம்மா கிட்ட கொடு."
அனிதா அவள் அம்மாவிடம் போனைகொடுக்க, சாந்தி பேசினாள்.

"அம்மா நாங்க பிரெண்ட்ஸ் எல்லாம் எப்போவாது ஒரு தடவை தான் வெளியே போறம்எங்க பிரெண்ட் வீணாவுக்கு அடுத்த சில நாட்களில் கல்யாணம். அவளோட ஒரு சினிமாவுக்கு போகலாம்னு பிளான் பண்ணிருக்கோம். நீங்க கொஞ்சம் அனுமதி கொடுத்தா நல்லா இருக்கும்"

அனிதா அம்மா யோசித்து"சரி சாந்தி. நீ சொல்றதால அனுப்பி வைக்கிறேன்".சொல்லி விட்டு போனை அனிதாவிடம் கொடுக்க,அனிதா பேசி விட்டு தலை ஆட்டி 'ஓகே' சொல்லி விட்டு போனை வைத்தாள்.

அனிதாவை அருகில் அழைத்து "என்னம்மா, சினிமாதானே போயிட்டு வா. உன்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் உன்னை வருந்தி கூப்பிடுறாங்க. அவங்களுக்காக பரவாயில்லை ஒரு தடவை போயிட்டு வா."

"சரி அம்மா"அனிதா ஆட்டோவில் தியேட்டருக்குவந்து சேர, வாசலில் சாந்தி காத்து இருந்தாள்.

"என்னடி நீ ரொம்பதான் பிகு பண்ணுற. சரி வா படம் போடுற நேரம் ஆச்சு."

வீணாவின் கையை பிடித்தபடி சாந்தி உள்ளே செல்ல, தொடர்ந்து பின்னாலே அனிதா சென்றாள். இடைவேளை விட்டபோது சாந்தி அழுது கொண்டு ஓடி வந்ததும், சிவா அந்த தியேட்டர் ஊழியனை அடித்து துவைத்ததும் தொடர்ந்து போலிஸ் வந்து விலக்கி விட,அனிதா சாந்தியிடம் கேட்டாள்

"என்னடி அந்த தியேட்டர்காரனை புரட்டி அடிக்கிறாரே அவர் உன் அண்ணாதானே."


"இல்லைடி அவர் என் அண்ணாவோட பிரெண்ட். சிவா. அவர் பக்கத்தில இருக்கிற ஆள்தான் என் அண்ணா தீபக் "

அனிதா வாயடைத்து போனாள், "என்னது உன் அண்ணாவோட பிரெண்டா. உன் அண்ணாவே பேசாம இருக்கிறாரு இவர் எதுக்கு இப்படி கோபப்படுராறு."

"எனக்கு அஞ்சு வயசில இருந்து சிவா அண்ணாவை நல்லா தெரியும். என் அண்ணா தீபக்கை விட, இந்த சிவா அண்ணாவுக்கு என்மேல பாசம் ஜாஸ்திடி. அது மட்டும் இல்லை, நான் என்ன கேட்க நினைச்சாலும் அவர் கிட்ட தான் கேட்பேன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்."

" நீ கொடுத்து வச்சவ. உனக்கு ஒண்னுக்கு ரெண்டு அண்ணா. உன்னை பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு. சிவா மாதிரி இப்படி ஒரு அண்ணா எனக்கு இல்லையே" என்று ஏக்கத்துடன் அனிதா சொல்லி விட்டு சிவாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். 

'பெண்கள் மீது இந்த அளவுக்கு அன்பு வைத்து இருக்கும் சிவா, கல்யாணம் ஆனால் தன் மனைவி மீது எந்த அளவுக்கு அன்பு வைத்து இருப்பார்' அந்த நினைப்பே அனிதா மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

வீட்டுக்கு திரும்பிய அனிதா, சாந்திக்கு போன் அடித்து "என்னடி சாந்தி, உன் வளர்ப்பு அண்ணா என்ன சொல்றார்" என்று கேட்க,"கிண்டல் பண்ணாதேடி பாவம் எங்க சிவா அண்ணா. போலிஸ் ஸ்டேஷன் போய் இருக்காரு.ஆமாம் எதுக்கு இந்த நேரத்தில போன் பண்ணி அவரை பத்தி கேட்குற"

"சும்மாதான்" என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டாள் அனிதா.

இரண்டு நாள் கழித்து காலேஜ் இடைவேளையில் சாந்தியுடன் அனிதா கிளம்பி வீணா கல்யாணத்துக்கு கிப்ட் வாங்கி வரலாம் என்று பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்த கடையில் வாங்கி விட்டு நடந்து வர எதிரே சிவா.

"சாந்தி, இங்க பாருடி உன் வளர்ப்பு அண்ணா வர்றாரு."

"டி என்னை கிண்டல் பண்ணாதே. அப்பறம் நீ எங்க அண்ணனை டாவடிக்க உதவி செய்ய மாட்டேன்."
அனிதாவுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது"அதல்லாம் ஒண்ணும் இல்லை"
"சும்மா பொய்சொல்லாத, எனக்கு உன்னை பத்தி தெரியாதா. சிவா அண்ணா பெயர் சொன்ன உடனே உன் முகம் சிவந்து போச்சு."
அதற்குள் சிவா சாந்தியை அடையாளம் கண்டு கொள்ள,சாந்தி "ஹாய் சிவா அண்ணா என்ன இந்த நேரத்ல உங்க கடைல இருக்காம இங்க வந்து இருக்கீங்க."

"நான் உன்னை கேக்கனும்னு நினைச்ச கேள்வியை நீ கேட்டுட்ட. இது சந்தோஷ் கடை. நான் அவனை பார்த்து ஒரு விஷயம் பேசலாம்னு வந்தேன். உன்னை பார்த்த உடனே அப்படியே நின்னுட்டேன். ஏன் காலேஜ் போகலையா."

"இல்லை அண்ணா, என் பிரெண்ட் ஒருத்தியோட கல்யாணம் நாளைக்கு, அதால கிப்ட் வாங்கலாம்னு நானும் இவளும் வந்தோம்"என்று சொல்லி

"இவர் சிவா அண்ணா."


"அண்ணா இவ என்னோட கிளாஸ்மேட் பெயர் அனிதா" அருகில் வந்த லாரி ஹாரன் சத்தத்தில் 'பெயர் என்ன' என்பது கரைந்து போக சிவா விழித்தான். 

"இவரை தான் நல்லா தெரியுமே. நேத்து சினிமா தியேட்டர்ல புரட்டி எடுத்தாரே" என்று சொல்ல, சிவா அசடு வழிய சிரித்து நின்றான்.

அதற்குள் உள்ளே இருந்து வந்த சந்தோசை பார்த்து விட்டு சாந்தி கை அசைக்க, அவனும் வந்து பேசி விட்டு, "என்ன சாந்தி கார்ல ட்ராப் பண்ணட்டுமா" என்று கேட்க, "இல்லை சந்தோஷ் அண்ணா நாங்க ஆட்டோல போய்க்கிறோம்" என்று சொல்லி விட்டு, சாந்தி அனிதாவுடன் விடை பெற்றாள்.

அடுத்த நாள் காலை ஆறு மணி அளவில் கல்யாண மண்டபத்தில் நுழைந்த அனிதா, சாந்தியை பார்த்து ஹாய் சொல்லி விட்டு திரும்ப அங்கே சிவா. புன்முறுவல் செய்ய அவனும் திருப்பி புன்னகைத்தான்.

"இன்னைக்காவது அவர் கிட்ட பேசி நம்ம மனசில அவர் இருக்காருன்னு சொல்லணும்.அவர் மனசில நான் இருக்கேன்னான்னு தெரியலை" குழம்பி போய் சிவாவை பார்க்க, அவனோ சிரித்த முகத்தோடு சாந்தியுடன் பேசி கொண்டு இருந்தான்.

அடுத்த ஒருமணி நேரத்தில் வீணா திருமணம் நிற்க, சிவா அவளுக்கு வாழ்க்கை கொடுக்க, அனிதாவுக்கு உலகமே ஸ்தம்பித்தது போல் இருந்தது.

சின்ன வயசில் இருந்து இதுவரை எதற்கும் ஆசைபட்டது இல்லை. அப்பா இறந்ததில் இருந்து யாரிடமும் ஏதும் கேட்டு பழக்கம் இல்லை.ஆசை இருந்தாலும் மனதில் புதைத்து வைப்பது வழக்கம்.முதன் முதலில் ஆசைப்பட்டது சிவா மீதுதான். அந்த ஆசை நிராசை ஆனதும் அவள் மனம் கதறி அழுதது.

வீணா சிவா தம்பதியை வாழ்த்தி விட்டு வீடு திரும்பி, வாசல் கதவை வேகமாகதிறந்து ஓடி சென்று பெட்ரூம் கதவை சாத்தி கொள்ள,அனிதா அம்மாவுக்கு புரியவில்லை.

"அனிதா கதவை திறடி" என்று கதவை தட்ட, பதில் இல்லை.பயந்து போனாள். உள்ளே இருந்து விசும்பல் ஒலி கேட்டது.

"அனிதா கதவை திற."
சில நொடிகளில் கதவை திறக்கும் ஒலி கேட்டு, அம்மா உள்ளே பாய்ந்து சென்று "என்ன அனிதா என்ன ஆச்சு" என்று கேட்க

"அம்மா எனக்கு சிவாவை பிடிச்சு இருக்கு. அவர் கிட்ட என்னோட அன்பை சொல்லலாம்னு இருந்தேன்.அதுக்குள வீணாவை கல்யாணம் பண்ணிக்கிட்டார்"

நடந்ததை சொல்லி விட்டு"அம்மா அவளுக்கு கல்யாணம் ஆனது எனக்கு சந்தோஷமா இருக்கு. ஆனால் என் காதல் பயிர் முளை விடும்போதே கருகி போய் விட்டதுகதறி அழுதாள்.

"நமக்கு என்ன நடக்குமோ அதுதான் நடக்கும்கவலைபடாதே அனிதா. எல்லாம் கொஞ்சம் நாளிலே சரியா போய்டும்அவள் அம்மாவும் கண் கலங்கினாள்.

அனிதா தனது சோகத்தை அடக்கி கொண்டு தன் படிப்பை தொடர்ந்தாள்.

அதற்குள் வீணா குழந்தை பிறந்து விட்டு, தொடர்ந்து சில நாட்களில் உயிர் விட்டாள் என்று தெரிய வந்து சிவா வீட்டுக்கு செல்ல,அங்கே இருந்து செல்வா சென்னை சென்று விட்டான் என்று தெரிந்து மனம் உடைந்து விட்டாள்.

சிவாவின் செல் நம்பர் வாங்கி முயற்சி செய்ய சிவா காலை எடுக்கவில்லை. பல முறை முயற்சி செய்து சோர்ந்து விட்டாள்.


படிப்பை முடித்து சேலத்திலே வேலை தேடலாம் என்று நினைத்து முயற்சி செய்ய, அங்கே தனியார் நிறுவனத்தில் அட்மின் டிபார்ட் மென்ட்டில் வேலை கிடைத்தது.

கொஞ்சம் கொஞ்சமாக வேலையில் கவனம் செலுத்த சிவாவின் நினைவு குறைந்து வந்தது.

அனிதா அம்மாவும் அவளுக்கு திருமணம் செய்து வைக்க பல இடங்களில் தேடி, கடைசியில் வெளி நாட்டில் வேலை பார்க்கும் ஒரு மாப்பிளை சேலம் வருவதாகவும் அவருக்கு படித்த பெண் வேண்டும் என்றும் சொல்ல, அனிதா அம்மாவுக்கு அந்த மாப்பிள்ளை பார்க்கலாம் என்று தோண, சரி என்று சொல்லி வைத்தாள்.

அனிதாவுக்கு மனதில் பல நினைவுகள், சிவாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் வருவது வரட்டும் என்று வெளி நாட்டு மாப்பிள்ளைக்காக காத்து இருக்க ஆரம்பித்தாள்.



சங்கரன் யு எஸ் ஸில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை. வயது முப்பது. பார்ப்பவர்களை கவரும் தோற்றம். சிலிகான் வேலியில் புகழ் பெற்ற கணிப்பொறி நிறுவனத்தில் அசிஸ்டன்ட் வைஸ் பிரேசிடென்ட் உத்தியோகம். இந்திய மதிப்பில் ஆறு இலக்க மாத சம்பளம். 

அவனுக்கு அனிதாவை பிடித்து போக, வரதட்சினை வேண்டாம் என்றும்,ஆனால் கல்யாணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்று சொல்லி விட்டான்.

அனிதா அம்மாவிடம் இருந்த சொத்து சேலம் வீடும், எற்காடில் இருக்கும் பரம்பரை சொத்தான வீடும் தான். பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்க சேலம் வீட்டை விற்று விட்டு பின்னர் குடும்ப சொத்தான ஏற்காடு வீட்டுக்கு குடி போகலாம் என்று தீர்மானித்தாள்.

சங்கரனுக்கு அவன் வீட்டில் இருந்து யாரும் திருமணத்துக்கு வராதது அனிதா அம்மா மனதை உறுத்தியது. அதைகேட்க போது அவர்கள் எல்லாம் யு எஸ் ஸில் இருப்பதாகவும், விசா கிடைப்பதில் பிரச்சனை இருப்பதால் வர முடியவில்லை என்று சொன்னான்.

திருமணம் முடிந்த அன்று இரவு நடந்த முதல் இரவு அனிதாவுக்கு மறக்க முடியாத இரவாக அமைந்தது.

பல ஆசைகளுடன், கனவுகளுடன் அந்த முதல் இரவு அறையில் நுழைந்தாள் அனிதா.சங்கரன் அவளுக்காக காத்து இருந்தான். 

கையில் பால் செம்புடன் நுழைந்த அவளிடம் இருந்து அந்த செம்பை வாங்கி அருகில் இருந்த டேபிளில் வைத்து விட்டு அவளை உட்கார சொன்னான்.

"அனிதா, நல்ல பேரு. அனிதா இவ்வளவு அழகா இருக்கியே, உன்னை காலேஜ்ல பசங்க யாரும் சுத்தலையா."அனிதா அவன் முகம் பார்க்க சிரிப்பு தவழ்ந்தது. 

அனிதா மனதுக்குள் நிம்மதி."நிறைய பேரு சுத்தினாங்க. ஆன எனக்கு யாரையும் பிடிக்கலை."

சங்கரன் முகத்தில் நிம்மதி. "அனிதா, யாரையாவது லவ் பண்ணி இருக்கியா?"

இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தாள் அனிதா.


"ஹேய் அனிதா. டோன்ட் வொர்ரி. நான் கூட என் காலேஜ் லைப் ல ஒரு பொண்ணை லவ் பண்ணினேன். அவ இப்போ இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிட்டு நல்லா இருக்கா. பயப்படாம என் கிட்ட உண்மையை சொல்லலாம்."

அவன் முகத்தில் தெரிந்த தெளிவு கண்டு அனிதாவுக்கு நம்பிக்கை பிறந்தது.
"கல்யாணத்துக்கு முன்னால சிவான்னு ஒருத்தரை லவ் பண்ணினேன். அவர் கிட்ட என் லவ்வை சொல்லலாம்னு நினைக்குரதுக்குள்ள அவருக்கு வேற ஒரு இடத்தில கல்யாணம் ஆய்டுச்சு. என்னோட காதலை மனசுக்குள்ள போட்டு பொதைச்சுட்டேன்."

"ஓகே அப்படின்னா. நீ புது பீஸ் இல்லை. யூஸ்டு பீஸ் தான்."

அனிதாவுக்கு புரியவில்லை"என்ன சொல்றிங்க"

"என்னடி நடிக்கிற. கல்யாணத்துக்கு முன்னால ஒருத்தனை லவ் பண்ணிடுவிங்க. அப்புறம் வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்குவிங்க. பொறக்கிற குழந்தைக்கு காதலன் பெயர் வைப்பிங்க, நான் என்ன தியாகியா?"

வாயடைத்து போய் நின்றாள். "அய்யய்யோ நாம தப்பு பண்ணிட்டோம். எதார்த்தமா உண்மை சொல்ல இப்படி ஆய்டுச்சே."

"என்னடி நின்னுகிட்டு இருக்க. இங்கே பாரு நானும் ஒண்ணும் உத்தமன் கிடையாது. ஏற்கனவே எனக்கு ஒரு பாரின் லேடி கூட தொடர்பு இருக்கு. எனக்கு வீட்டில வேலை செய்ய சம்பளம் இல்லாத வேலைக்காரி வேணும், அது மட்டும் இல்லை" குரலை தாழ்த்தி"தினமும் அனுபவிக்க ஒரு அழகான பொண்ணு வேணும். அதனால தான் வரதட்சினை வேணாம்னு சொல்லி உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்."

அனிதாவுக்கு தலை சுற்றாத குறை.தடுமாறி மயங்கி விழ போனவளை, "நடிக்காதடி. நீ என்ன பண்ணினாலும் எனக்கு கவலை இல்லை". 
அவளின் மனநிலை பற்றி கவலைபடாமல் அரை குறை மயக்கத்தில் இருந்த அவளை அணு அணுவாக அனுபவித்தான்.
காலை எழுந்த போது உடல் வலி அதிகமாக இருக்க, அனிதா தள்ளாடி மெதுவாக அந்த முதல் இரவு அறையை விட்டு வெளியேறினாள். வெளியே காத்து இருந்த அனிதா அம்மா "என்ன அனிதா ஒண்ணும் பிரச்சனை இல்லையே. மாப்பிளை உன் கிட்ட சந்தோஷமா நடந்துகிட்டாரா".

முகத்தில் சிரிப்பை வரவழைத்து கொண்டு அனிதா புன்னகைக்க"சரி அனிதா நீ போய் முதல்ல குளி" என்று அனுப்பி வைத்தாள்.

அடுத்த ஒரு வாரத்துக்குள் அனிதாவுக்கு விசா ரெடி செய்து சங்கரன் அவளை கூட அழைத்து சென்றான்.
கல்யாண கடன் அதிகமாகி விட்டதால், சேலம் வீட்டை விற்று விட்டு, ஏற்காடு வீட்டையும் அடமானம் வைத்து கடன் கட்டினாள் அனிதா அம்மா.

மாதம் ஒரு முறை அனிதாவிடம் இருந்து போன் வரும், மெல்லிய குரலில் அனிதா எப்படி அம்மா இருக்க என்று நலம் விசாரித்து போனை வைப்பாள். விசேஷம் உண்டா என்று கேட்டாள் வறண்ட சிரிப்பு ஒன்றே பதிலாக வரும்.


திருமணம் நடந்த ஆறாம் மாதம், அனிதா அம்மாவுக்கு விடியற் காலை போலிஸ் ஸ்டேசனில் இருந்து போன் வந்தது. 

என்ன ஏது என்று பதறி சென்ற அனிதா அம்மாவை அழைத்து இருந்த போலிஸ் இன்ஸ்பெக்டர் "அம்மா எனக்கு அமெரிக்காவில இருந்து போன் வந்துருக்க. உங்க அட்ரஸ் சொல்லி உங்க பொண்ணு அனிதா பெயரை சொல்லி அந்த விஷயமா பேசனும்னு சொன்னாங்க.கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. திரும்ப கூப்பிடுறேன்னு சொல்லி இருக்காங்க."

ஐந்து நிமிடம் கழித்து வந்த போனில் இன்ஸ்பெக்டர்பேசி விட்டு அனிதா அம்மாவிடம் தர போனை வாங்கி கொண்டு "அனிதா" என்று அழைக்க, அடுத்த முனையில் அனிதா பேசினாள்.

"அம்மா, உன்னோட மாப்பிள்ளை, நேத்து என்னை பத்தி கேவலமா பேசி வீட்டைவிட்டு வெளியே துரத்திட்டார். வாசலில் மயங்கி கிடந்த என்னை, அங்கே பார்த்த வட இந்திய குடும்பம் என்னை காப்பாத்தி அங்கே இருந்த இந்தியன் எம்பஸி கிட்ட சேர்த்து விட்டாங்க. நான் தம்மா அவங்களை போன் செய்ய சொன்னேன்.அவனோட கொடுமைகள் தாங்க முடியலைமா" அனிதா கண்ணீர் விட்டு அழ கலங்கி போய் விட்டாள் அவள் அம்மா.

"அம்மா நான் இங்கே தினம் செத்துகிட்டு இருக்கேன்மா" திரும்ப அனிதா அழ அம்மா நொறுங்கி போனாள்."கண்ணே நீ உடனே கிளம்பி இங்கே வந்துடு. உன்னை நான் உயிரோட பார்த்தா போதும். நாம ரெண்டு பேரும் கூழோ கஞ்சியோ குடிச்சுட்டு வாழ்ந்துடலாம்" அம்மா திரும்ப அழ, அனிதாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

அடுத்த ஒரு மாதத்தில் அனிதா விவாகரத்து பெற்று இந்தியா திரும்பி வந்தாள். எலும்பும் தோலுமாக இருந்த மகளை பார்த்து கண்ணீர் விட்டாள் அம்மா. 

எற்காடிலே Montford பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைக்க கடந்த மூன்று வருடங்களாக வேலை பார்த்து வருகிறாள்.

அனிதா சொன்னதை கேட்டு கலங்கி போனான் சிவா. தன்னால் ஒரு பெண் வாழ்க்கை இந்த அளவுக்கு பாதிக்கபட்டு இருக்கிறது என்று அறிந்தபோது அவன் மனம் பரிதவித்தது.

"சாரி அனிதா. என்னால தானே உங்களுக்கு இந்த அளவுக்கு கஷ்டம்" என்று கண் கலங்க,சிரித்து கொண்டே அனிதா, 

"சிவா உங்க மேலே தப்பு இல்லை. அந்த மனுசனோட குணம் அப்படி. அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க".
முகம் மாற, "அந்த முதல் இரவுக்கு அப்புறம் தினமும் எனக்கு சிவராத்திரி தான். ஒவ்வொரு தடவை என்னை அணைக்கும் போதும்'என்னடி சிவா இப்படிதான் செய்வானா' என்று கேட்பார்.இதை கேட்டு கேட்டு தினமும் உங்களை பற்றிய நினைவு அதிகம் ஆகி விட்டது.வெக்கத்தை விட்டு சொல்லணும்னா, அவர் கூட கூடும்போது உங்களை நினைத்து தான் தான் நான் சேர்வேன்."சிவா புரிந்து கொண்டு தலை குனிந்தான். 

பேச்சை மாற்ற, "ஏன் உங்களுக்கு குழந்தை எதுவும் இல்லையா"

"அந்த மனுஷனுக்கு சின்ன வயசில இருந்தே பல பெண்கள் கூட தொடர்பு, இனிமே குழந்தை பெற்று கொள்ள வாய்ப்பு இல்லைன்னு சொல்லிட்டாங்க. ஒரு வேளை குழந்தை உருவாகி இருந்தா நான் ஒரு வேளை அங்கேயோ இருந்து இருப்பேனோ என்னவோ.சிவா ஒண்ணு தெரியுமா. அதுக்கு அப்புறம் நான் அழறதே இல்லை."

"உங்க பொண்ணை பார்த்த பின்னே எனக்கு ஒரு இனம் தெரியாத பாசம்.ஒரு வேளை எனக்கு குழந்தை பிறந்தா இது மாதிரி தான இருந்து இருக்கும்" கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

கண்களை துடைத்து கொண்டே "சாரி சிவா, என்னோட கஷ்டத்தை சொல்லி உங்களை சங்கட படுத்திட்டேன்."


"அனிதா, நீ ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாது."

"நோ சிவா, நான் பண்ணிக்க மாட்டேன். ஏற்கனவே ஒரு தப்பை பண்ணிட்டேன். திரும்ப அதை செய்ய மாட்டேன். அது மட்டும் இல்லை. என் மனசில நான் ஒருத்தர் கூட குடும்பம் நடத்திகிட்டு இருக்கேன்" அவனை பார்த்து குறும்புடன் சிரித்து, "அதை, அந்த இனிமையான கனவை கலைக்க எனக்கு மனசு இல்லை. ஓகே, நான் வீட்டுக்கு கிளம்பட்டுமா. நடக்கிற தூரம்தான்". 

பதிலுக்கு காத்து இருக்காமல் நடந்து சென்றாள் அனிதா.

சிவா அப்படியே அசந்து போய் நின்றான்.

வீட்டுக்கு திரும்பி சாப்பிட்டு விட்டு தூங்க போகலாமா என்று யோசித்தபடி, மொட்டை மாடிக்கு வந்து சிந்தனையில் தோய்ந்து நின்றான்.
அருகில் "டாடி" என்று குரல் கேட்க, பிரபா அருகில் குதித்தபடி, "டாடி எனக்கு தூக்கம் வருது. போகலாமா" என்று கேட்க,"கண்ணம்மா, நீ பாட்டி கூட தூங்கு. நான் கீழே வர நேரம் ஆகும்" என்று சொல்ல, 'சரி' என்று தலை அசைத்தபடி பிரபா பெரிய நாயகி பாட்டியை தேடி சென்றாள்.

வீணாவை நினைத்து பார்த்தான். அவளை கல்யாணம் செய்து விட்டு காதலித்தான். அது பாதுகாப்பான காதல். பிரச்சனை இல்லாத காதலும் கூட.

இந்த பெண் அனிதா என்னை கடந்த ஐந்து வருடமாக காதலித்து வருகிறாள்.அவளின் நினைவில், மூச்சில் நான் கலந்து இருக்கிறேன்.என்னை சந்தித்த பின்னும் இதை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. இவளின் இந்த அன்புக்கு முன்னால் நான் எம்மாத்திரம்.

தொடர்ந்த பல நாட்கள் அனிதாவை பார்த்தாலும் அவள் அவனை பார்த்து புன்னகை செய்வதோடு சரி, பேசுவதில்லை. பிரபாவின் படிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிய சிவா சந்தோசமானான்.
ஒரு நாள் வழக்கம் போல் டியுசன் முடித்து கிளம்ப, வெளியே காரில் காத்து இருந்த சிவா அனிதாவை ட்ராப் செய்வதாக சொல்ல வேண்டாம் என்றாள்.

"என்ன அனிதா என் மேல கோபமா, என் கூட பேச மாட்டிங்களா?"

அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு நடக்க, வண்டியை எடுத்து கொண்டு மெதுவாக அவள் பின்னே சென்றான்.

திரும்பி பார்த்த அனிதா, சிவா திரும்ப போக மாட்டான் என்பதை உணர்ந்து, மெளனமாக வந்து காரின் கதவை திறந்து முன்சீட்டில் உட்கார்ந்தாள்வண்டியை மெதுவாக ஒட்டியபடி சிவா பேச ஆரம்பித்தான்.
"என்ன அனிதா என் கூட பேச பிடிக்கலையா."

அவள் ஒன்றும் பேசவில்லை.





No comments:

Post a Comment