Friday, August 14, 2015

மனசுக்குள் மான்சி - அத்தியாயம் - 3

கார்த்திக் முகத்தில் ஒரு நிறைவான புன்னகையுடன் “ எனக்கு புரியுது பாஸ் நீங்களா சொல்றவரைக்கும் நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன்,, ஆனா மதியம் நீங்க கேன்டீன்ல சொன்ன மேட்டர் இப்படி ஒரே நாளில் பிசுபிசுத்து போகும்னு நான் நினைக்கவே இல்லை பாஸ் ” என்றான் குறும்பு வழியும் குரலில்

திருமணத்தை வேண்டாம் என்று ஒதுக்கியதை தான் கார்த்திக் குறிப்பிடுகிறான் என்று சத்யனுக்கு புரிந்தாலும் அந்த பேச்சை வளர்க்க விரும்பாமல் “ ஏன்டா இது வீடுடா இங்கயும் பாஸ் தானா? சத்யான்னு கூப்பிடுடா ” என்று சலிப்புடன் சத்யன் சொல்ல

“ இல்ல பாஸ் இப்போ பேர் சொல்லி கூப்பிட்டுட்டு, அப்புறம் அதே பழக்கம் மில்லுலயும் வந்தா ரொம்ப சங்கடம்,, அதனால எப்பவுமே நீங்க என் பாஸ்தான்” என்றான் கார்த்திக் தெளிவாக

“சரி எப்படியாவது போ , நான் கிளம்புறேன்” என்று கூறிவிட்டு கிளம்பினான்

வீட்டுக்கு வந்து வேலைக்காரன் கொடுத்த காபியை ருசி அறியாமல் குடித்துவிட்டு,, தனது அறைக்கு போய் உடைகளை மாற்றிக்கொண்டு கட்டிலில் விழுந்தான்



அவன் மனதில் என்றுமில்லாத சந்தோஷ உணர்வு,, ஏன் ரயில்நிலையத்தில் மான்சியையும் அவள் அண்ணனையும் பார்த்து கோபப்பட்டோம் எரிச்சலைடைந்தோம் என்று அவனுக்கு தெளிவாகப் புரிந்தது,, புரிந்த விஷயம் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது,, அதெப்படி முதல் பார்வையிலேயே ஒரு பெண்ணை பிடித்துப்போய்விடும் என்று அவனது அறிவு மனதை கேள்வி கேட்டது

அவள் முகத்தை பார்த்த அந்த வினாடியில் தன் மனதில் ஏற்ப்பட்ட அதிர்வை இப்போது நினைத்துப்பார்த்தான் சத்யன்,, அவள் முகத்தில் இருந்த அந்த சோகத்தை மீறிய வசீகரம்தான் அவள் பக்கம் தன்னை ஈர்த்ததா?,, அல்லது அந்த மெல்லிய மெலிந்த தேகம் பரிதாபத்தை ஏற்படுத்தியதா?,, ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அவளை முதல் பார்வையிலேயே பிடித்துப்போனதால்தான் காரணமின்றி அவ்வளவு எரிச்சலும் பொறாமையும் வந்தது போலிருக்கு,, என்று நினைத்தான் சத்யன்

கட்டிலில் புரண்டு படுத்த சத்யனுக்கு தனது அம்மா வசந்தியின் ஞாபகம் வந்தது,, அம்மாவும் இப்படித்தான் மனதில் இருப்பதை முகத்தில் காட்டிவிடுவார்கள,, அதேபோலத்தான் மான்சியும் என்று நினைத்த சத்யன், கட்டிலில் இருந்து இறங்கி டிரசிங் டேபிளில் இருந்த வசந்தியின் புகைப்படத்தை எடுத்து வந்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு கட்டிலில் படுத்தான், அவன் மனக்கண் முண் தன் தாயின் கடைசி நாட்கள் படமாக ஓடியது

அவனுக்கு தெரிந்ததெல்லாம் அவன் அம்மா ஒரு தேவதை,, வசந்தி இறக்கும் போது சத்யனுக்கு பணிரெண்டு வயது,, அவனுடைய எட்டாவது வயதுவரை அவர்களின் குடும்பத்தை போல ஒரு குடும்பம் உலகிலேயே இல்லை என்பது போல சந்தோஷத்தை குத்தகைக்கு எடுத்திருந்தார்கள்,, சத்யனுக்கு தனது அப்பாவின் நெஞ்சில் படுத்தால்தான் தூக்கமே வரும், இரவில் கிருபானந்தன் நெஞ்சில் உறங்கும் சத்யன் விழிக்கும்போது பக்கத்தில் இருக்கும் கட்டிலில் இருப்பான்

“ஏன்ப்பா என்னை இங்க தூங்க வச்சீங்க” என்று கால்களை உதறி அழும் மகனை சமாதானம் செய்யமுடியாமல் வசந்தி தவிப்பாள்,, ஆனால் கிருபாவோ “ டேய் செல்லம் உனக்கு தங்கச்சி பாப்பா வேனும்னு சொன்னியே,, அதை பத்தி தான்டா அம்மாகிட்ட நைட்டெல்லாம் பேசினேன்” என்று மனைவியைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டியபடி மகனுக்கு விளக்கம் சொல்வார்

“அய்யோ குழந்தை கிட்ட போய் என்ன சொல்றீங்க” என்று நெற்றியில் அடித்துக்கொண்டு வெளியே போய்விடுவாள் வசந்தி ,,

ஆனால் சத்யன் அன்று முழுவதும் “ அம்மா பாப்பா எப்பம்மா வரும்” என்று கேட்கும் மகனை சமாதானம் செய்ய வழியின்றி தவிப்பதை குறும்புடன் பார்த்து சிரிப்பார் கிருபா

யார் கண்பட்டதோ அவர்களின் சந்தோஷம் நாளுக்கு நாள் தேய ஆரம்பித்தது,, அடிக்கடி சோர்ந்து விழும் மனைவியை எண்ணி வருந்தும் கிருபா, ஒருநாள் மயங்கி விழுந்த மனைவியை கதறியபடியே மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றார்

அனைத்து பரிசோதனைகளையும் முடித்த மருத்துவர் ‘வசந்திக்கு ரத்தப் புற்றுநோய் வந்திருப்பதாகவும்,, சிகிச்சை செய்து காப்பாற்ற கூடிய கட்டத்தை கடந்துவிட்டதாகவும்’ கவலையான குரலில் சொல்ல, பெரும் இடி தனது தலையில் விழுந்தது போல கதறி துடித்தார் கிருபா

அதன் பிறகு கிருபாவின் வீடே சோகமயமாகியது,, வேலைக்காரர்கள் கூட தங்களின் சிரிப்பை மறந்தார்கள்,, வசந்தி படுத்த படுக்கையானாள்,, வசந்தியின் தாயார் அமிர்தம்மாள் மகளுக்காக வந்து பேரனுக்காக அங்கேயே தங்கிவிட்டார்கள்

இளம் வயது சத்யனுக்கு தனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பது மட்டும் புரிந்தது,, அதிகம் சத்யனை வசந்தி அருகில் நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டார்கள்,, நாளுக்கு நாள் துரும்பான தன் மனைவியை பார்த்து தினமும் கண்ணீர் விடுவதை வாடிக்கையாக கொண்டார் கிருபா

நோயின் தீவிரம் வசந்தியை முழுதாக ஒருநாள் விழுங்கிவிட அந்த வீடு முழுவதும் கதறல் ஒலி பலநாட்கள் கேட்டுக் கொண்டே இருந்தது,, வசந்தியின் பதினாராம் நாள் காரியம் முடிந்தது,,

இப்போதும் சத்யன் தன் அப்பாவின் நெஞ்சில் தான் படுத்து உறங்கினான்,, ஒருநாள் பாதி தூக்கத்தில் கண்விழித்த சத்யன் கிருபானந்தன் தலையில் கைவைத்தபடி அழுவதை கண்டு அவனும் அம்மாவை நினைத்து அந்த இரவில் அழுதது சத்யனுக்கு இன்றும் பசுமையாக நினைவிருந்தது

வசந்தியின் முப்பதாம் நாள் விசேஷம் முடிந்த மறுநாள் கிருபானந்தன் கர்பினியான ஒரு இளம் பெண்ணையும் ஒருகையில் இரண்டு வயது பெண் குழந்தையையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்தார்,, சத்யனுக்கு சாதம் ஊட்டிக்கொண்டு இருந்த அமிர்தம்மாள் அதிர்ச்சியில் சாதம் இருந்த கிண்ணத்தை கீழே போட.. வந்திருப்பது யார் என்று சத்யனுக்கு புரியவில்லை

கிருபானந்தன் அவர்களை பற்றி கொடுத்த விளக்கத்தில்,, இனிமேல் தனது தாய் இருந்த இடத்தில் அந்த கர்பிணிப் பெண் இருப்பாள் என்று மட்டும் தெளிவாக புரிந்தது,, தனது மகள் உயிருடன் இல்லாத போது என்ன பேசி என்ன பலன் என்று விரக்தியில் அமைதியான அமிர்தம்மாள் தனது பேரனை கவனிப்பதில் முழு கவனத்தையும் செலுத்தினார்

அதன்பிறகு சத்யனுக்கு அப்பாவையும் அந்த பெண்ணையும் சுத்தமாக பிடிக்கவில்லை,, தனது அம்மாவின் அறையை உபயோகிக்கும் அந்த பெண்ணைப் பிடிக்கவில்லை,, தனது அம்மாவின் கட்டிலில் உறங்கும் அந்த பெண்ணைப் பிடிக்கவில்லை,, தனது அப்பாவைத் தொட்டு பேசும் அந்த பெண்ணை பிடிக்கவில்லை,, அந்த இளம் வயதில் மனதில் பதிந்த கசப்பு நாளுக்கு நாள் நெஞ்சு முழுவதும் பரவியது

தனது அம்மாவின் உடைமைகளை எல்லாம் மூட்டிகட்டிய சத்யன் தனது பாட்டியிடம் வந்து “ எனக்கு இங்க இருக்க பிடிக்கலை பாட்டி,, இங்கயே இருந்தா நானும் அம்மா மாதிரி செத்துப் போவேன் அதனால வா பாட்டி நாம இந்த வீட்டைவிட்டு போயிடலாம்” என்று கண்ணீருடன் கேட்டான்

‘ அம்மா மாதிரி நானும் செத்துப்போவேன்' என்ற சத்யனின் வார்த்தை நெஞ்சை கசக்கி பிழிய, மருமகனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு பேரனுடன் உடனே தனிக்குடித்தனம் வந்தார் அமிர்தம்மாள்

சத்யன் வளர வளர அப்பா மீதான கசப்பும் வளர்ந்தது,, மகன் அருகிலேயே இருந்ததும் பார்க்க முடியாதபடி புத்திர சோகத்தை வலிக்கவலிக்க வழங்கினான் தனது அப்பாவுக்கு

அவனுக்கு ஆண் பெண் உறவு பற்றிய அடிப்படை அறிவு வளர்ந்த பிறகு அவனுக்கு புரிந்ததெல்லாம் ,, அனிதாவின் வயதை கணக்கு வைத்தால் தன் அம்மா நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தவுடனேயே அப்பா இன்னொரு பெண்ணுடன் உறவு கொண்டுள்ளார் என்பதும்,, தனது தாயாரின் உயிர் பிரிய போராடிய நாட்களில் அப்பா அந்த பெண்ணுடன் கொண்ட உறவுதான் வரும் வயிற்றில் இருந்த குழந்தை என்றும் புரிந்தது

அது மட்டுமில்லாமல் சத்யன் வீட்டைவிட்டு வெளியேறிய இரண்டாவது வருடம் இன்னொரு மகளை பெற்று சத்யனின் வெறுப்பை மேலும் சம்பாதித்தார் கிருபானந்தன்,,

மனைவி இறக்கும் தருவாயில் கூட இன்னொரு பெண்ணிடம் சுகம் கண்ட கிருபா சத்யனுக்கு ஒரு புழுவைப்போல் தெரிந்தார்,,

மகனை பிரிந்த சோகம் மனதில் இல்லாமல் இன்னொரு மகளைப் பெற்ற கிருபா சத்யனுக்கு பெரும் கொடுமைக்காரனாக தெரிந்தார்

அதன்பிறகு அமிர்தாம்மாள் பேரனுக்கு எவ்வளவோ எடுத்து சொல்லியும் தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை,, பலமுறை கிருபானந்தன் வந்து கெஞ்சியும் சத்யன் போகவில்லை,, கிருபானந்தனின் இரண்டாவது மனைவி ரஞ்சனாவும் பலமுறை வந்த கண்ணீர் விட்டு கதறி கூப்பிட்டும் சத்யன் போகவில்லை

எல்லோரையும் ஒதுக்கிய சத்யனால் அனிதாவை மட்டும் ஒதுக்க வெறுக்க முடியவில்லை,, இரண்டு வயது குழந்தையாக வந்து அவனுடைய முகம் பார்த்து சிரித்த அனிதாவை சத்யனால் வெறுக்கமுடியவில்லை

அதை பயன்படுத்தி தனக்கு தேவையானதை அழுதாவது பெற்றுவிடுவாள் அந்த பாசமுள்ள தங்கை .. 


" ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம்..

" சம்பவித்தே தீர வேண்டும்.

" மரண வேதனை என்பது நிச்சயமான ஒன்றுதான் .........

" ஆனால் தேவையான வயதில் தாயை பறித்து...

" பிள்ளையை அனாதையாக்கும்,,

" இறைவன் இருந்தால் என்ன...

" இல்லாவிட்டால் என்ன!


தனது தாயின் நினைவுகளில் மூழ்கியிருந்த சத்யன் அன்று இரவு தூங்க வெகு நேரமானது,, தன் தாயின் முகத்தில் இருந்த கருணையும் அன்பும் மான்சியின் முகத்திலும் இருப்பது போல் சத்யனுக்கு தோன்றியது,, அதனால்தான் அவளை முதலில் பார்த்தவுடனே பிடித்ததா? என்று தன்னையே கேள்வி கேட்டுக்கொண்டான்

எது எப்படியோ மான்சி தான் காதலிக்கிறோம் என்பது சத்யனுக்கு உறுதியாக தெரிந்தது,, அவளின் சோகத்தை துடைத்து சொர்கத்தை காட்டவேண்டும் என்று தீர்மானித்தான்,, இனிமேல் மான்சி ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தக்கூடாது என்று எண்ணினான்

அவனது தூக்கம் பழைய நினைவுகளால் பாதியும்,, மான்சியின் நினைவுகளால் பாதியுமாக பறிபோனது,, ஆனால் மான்சியை பற்றி நினைத்தாலே அவன் பாராசூட் இல்லாமல் விண்ணில் பறந்தது,, அவள் முகம் சத்யன் மனதில் ஆழப்பதிந்தது,,

இந்த நடு ராத்திரியில் அவளைப்பற்றி நான் நினைத்து தூக்கத்தை தொலைத்தது போல்,, அவளும் என்னை நினைப்பாளா,, என்று எண்ணி ஏங்கிய மனதை ‘ இன்று இல்லாவிட்டாலும் இன்னும் சில நாட்களில் அவளும் உனக்காக ஏங்கி தவிப்பாள், என்று அவன் மனம் ஜோசியம் சொன்னது,

மாலையில் ஆபிஸில் மான்சியை இழுத்து அணைத்தது அவனுக்கு நினைவு வந்தது,, உண்மையில் ஒரு பூச்செண்டை எடுத்து நெஞ்சில் சுமந்த உணர்வுதான் சத்யனுக்கு உண்டானது, அவள் உடல் எவ்வளவு மென்மை,, ஒரு பூவை கையாள்வது இருந்ததை நினைவு கூர்ந்தான் சத்யன்,, வெகுநேரம் வரை அவளின் வாசனை தன்மீது மிச்சமிருந்ததை இப்போதும் சத்யனால் உணரமுடிந்தது

அவள் கூந்தலை வருடிய விரல்களை முத்தமிட்டான்,, தனது நெஞ்சில் அவளுடைய இளமை பந்துகள் மென்மையாக அழுந்திய இடத்தை வருடிக்கொடுத்தான்,, தனது தோளில் அவளது தாடை அமிழ்ந்த இடத்தை தடவி பார்த்தான்,, இந்த ஒரு நாளில் தன்னிடம் ஏற்ப்பட்ட மாற்றங்களை நினைத்து சத்யனுக்கு ஆச்சரியமாக இருந்தது

ஒரே நாளில் மான்சிதான் எல்லாமும் என்று தான் ஆகிவிட்டதை சந்தோஷமாக உணர்ந்தான்,, காயம்பட்ட தனது இதயத்தை வருடும் மயிலிறகாக மான்சியை நினைத்தான்,, வரண்டுபோன தன் வாழ்க்கையில் வசந்தமாய் வந்தவளை எப்போது வாழ்க்கை துணையாக ஆக்கிக்கொள்வது என்று அவன் மனம் இப்போதிலிருந்தே ஏங்க ஆரம்பித்தது,,

ஆனால் அதற்க்கு முன் அவளின் சோகத்தை நிரந்தரமாக துடைக்கவேண்டும்,, இந்த இளம் வயதில் பெற்றோரை ஒரே சமயத்தில் இழந்த அவளிடம் ஏதாவது ஏடாகூடமாக கேட்டு அவள் மனதை புண்படுத்தி விடகூடாது,, ரொம்ப பொறுமையாக என் காதலை அவளிடம் சொல்லவேண்டும் , என்று சத்யன் திட்டம் தீட்டினாலும் தன்னால் பொறுமையாக இருக்கமுடியுமா என்று அவனுக்கு சந்தேகமாக இருந்தது

அதுவும் இவ்வளவு அருகாமையில் அவளை வைத்துக்கொண்டு,, எதுவுமே முகத்தில் காட்டாமல் இருப்பது ரொம்ப கஷ்டம் என்றுணர்ந்தான்,, இன்றே அவளை பார்த்து, அந்த அமைதியான அழகில் திகைத்து அடிக்கடி நின்றதும் ஞாபகம் வந்தது,, எதுஎப்படியோ இனி அவளில்லாமல் எனக்கு எதுவுமில்லை என்று உறுதியெடுத்தான்

அவளின் அருகில் நின்றபோது வந்த அந்த வாசனை, அது என்ன வாசனையாக இருக்கும் என்று ஞாபகத்தில் கொண்டு வரமுயன்றான்,, அந்த அற்புதமான வாசனை நிச்சயம் செயற்கையானது இல்லை,,

ம்ஹும் இன்னோரு முறை அவளை அணைத்தால் மட்டுமே அந்த வாசனையை கண்டுகொள்ள முடியும் என்று நினைத்தவன் தன்னை எண்ணி சிரித்தான்,, இன்னும் அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்று தெரியாமல் இவ்வளவு கற்பனை செய்கிறோமே என்று வெட்கப்பட்டான்

மான்சியை நினைத்து அருகில் இருந்த தலையனையை அணைத்துக்கொண்டு அவளின் இன்பமான நினைவுகளை மனதில் அசைப்போட்ட படி அப்படியே தூங்கிப்போனான் சத்யன்,, ..............................

சத்யனின் அறையிலிருந்து வெளியே வந்த மான்சி,, குழம்பிய மனதுடனே பேருந்து நிறுத்ததிற்கு சென்றாள்,, சத்யன் என்ன சொன்னான்,, ஏன் அப்படி பேசினான்

சத்யனின் அறையிலிருந்து வெளியே வந்த மான்சி,, குழம்பிய மனதுடனே பேருந்து நிறுத்ததிற்கு சென்றாள்,, சத்யன் என்ன சொன்னான்,, ஏன் அப்படி பேசினான் என்ற குழப்பத்தை தவிர வேறு எதுவும் அவள் மனதில் இல்லை,

அவளுக்கு சத்யன் ஒரு முதலாளி என்று ஒரு போதும் நினைக்க முடியவில்லை,, கல்லூரி நாட்களில் அனிதா தன்னை பற்றி பேசியதைவிட தனது அண்ணனை பற்றி பேசியதுதான் அதிகம்,, ஹாஸ்டலில் இருவரும் ஒரே அறையில் தங்கியதாலும் அனிதாவின் நெருங்கிய தோழி என்பதால் குடும்பத்தில் நடப்பது அத்தனையும் மான்சியிடம் சொல்லிவிடுவாள்

அன்றாடம் சத்யனைப் பற்றி அனிதா பேசும் பேச்சை வைத்து சத்யனக்கு தன் மனதில் ஒரு உருவத்தைக் கொடுத்து அந்த உருவம் என்னவெல்லாம் செய்யும் என்று எத்தனையோ முறை மான்சி கற்பனை செய்து பார்த்திருக்கிறாள்

ஒருமுறைஅனிதா தனது அண்ணனின் புகைப்படத்தை காட்டி அவனை பற்றி பெருமையாக பேசியது இன்னும் நினைவிருக்கிறது,, சத்யனின் கோபம், வருத்தம், சந்தோஷம், அவனுக்கு பிடித்தது,, பிடிக்காதது, எல்லாமே மான்சிக்கு எத்துப்படியான விஷயங்கள் தான்,, அந்தளவுக்கு அனிதா அன்றாடம் அண்ணன் புராணம் பாடுவாள்,, மான்சி தூங்கினாள் கூட எழுப்பி அமர வைத்து அன்று அண்ணனுடன் பேசியதை அவளிடம் சொல்வாள்,,

முதலில் மான்சிக்கு எரிச்சலாக இருக்கும், ஆனால் போகப்போக சத்யனைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகமாகியது,, அவனுக்கு ஒரு கஷ்டம் என்று அனிதா புலம்பினால், இவளும் சேர்ந்து கண்ணீர் வடிப்பாள்,, சத்யனுக்கு ஒரு சந்தோஷம் என்று அனிதா சொன்னால், அவனைவிட மான்சி அதிகமாக சந்தோஷப்படுவாள்

தாய் தந்தையின் மரணத்துக்கு பிறகு எங்கேயும் வேலைக்கு போகக்கூடாது என்று முடிவெடுத்தவள்,, சத்யனின் மில்லில் தான் வேலை,, ஒரு மாறுதலுக்காக வேலைக்கு போனால் மனசு நிம்மதியாக இருக்கும் என்று அனிதா தான் மான்சியின் சித்தப்பா, சித்தி, தாத்தா என அனைவரிடமும் அனுமதி வாங்கினாள்,, சத்யனின் மில் என்றதும் மான்சியிம் தயக்கமின்றி வந்தாள்



ஆனால் சத்யன் முதல் நாளே இப்படி நடந்துகொள்வான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை,, அவன் பார்வை ஆயிரம் கதைகள் சொன்னாலும் மான்சிக்கு மனதுக்குள் சத்யனிடம் நெருங்க பயமாகத்தான் இருந்தது,, அவனுடைய அந்தஸ்தும் வசதியும் அவளை பயமுறுத்தியது,, அவனுடைய கோபமும் பிடிவாதமும் பற்றி அனிதா நிறைய சொல்லியிருந்தபடியால் , அதுவும் மான்சியை பயமுறுத்தியது,,

மான்சி பல யோசனையுடன் பேருந்து நிறுத்தத்தில் நிற்க்க,, அவள் செல்லும் பேருந்து வந்தது,, கூட்ட நெரிசலில் தட்டுத்தடுமாறி ஏறி ஒரு ஓரமாக நின்று கொண்டாள்,, அவள் இறங்கும் இடம் வந்தது,, எந்த ஆணின் உடலும் உரசாமல் இறங்குவதற்குள் மான்சிக்கு கண்ணீரே வந்துவிட்டது

இந்த அவஸ்தை தனக்கு தேவை தானா என்று எண்ணியவாறு அவள் தங்கியிருக்கும் வீட்டுக்கு போனாள்,, வீட்டுக்கு பக்கவாட்டில் இருக்கும் மாடிப்படிகளில் ஏறி தனது அறைக்கதவை திறந்து உள்ளே போனாள்,,

அவள் பின்னாலேயே வந்த அந்த வீட்டுக்காரம்மா " என்னம்மா மான்சி வேலை எப்படி இருக்குது" என்று விசாரித்த படி கையில் இருந்த பாத்திரத்தை அங்கிருந்த சிறிய மேசையில் வைத்தாள்

மான்சியின் உணவுக்கும் அந்த வீட்டிலேயே அனிதா ஏற்பாடு செய்திருந்தாள்,, " அய்யோ நீங்க ஏன்மா எடுத்துட்டு வந்தீங்க நானே கீழ வந்திருப்பேனே" என்று மான்நஎன்று சொல்லிவிட்டு அந்த பெண்மணி கீழே இறங்கி போய்விட்டாள்

மான்சி முகம் கழுவிட்டு வந்து, கொண்டு வந்த உணவில் கால் வாசி சாப்பிட்டு விட்டு அங்கிருந்த சிறிய கட்டிலில் அமர்ந்தாள்,, சத்யன் இப்போது என்ன செய்துகொண்டு இருப்பான் என்ற எண்ணம் அவள் மனதில் ஓடியது

என்னை அப்படி அணைத்தானே,, எதை நினைச்சு அணைச்சான்,, என்று முகம் சிவக்க எண்ணினாள்,, விலக நினைச்சா ' அப்படியே இரு மான்சி எல்லாம் சரியாயிடும்னு" டயலாக் வேற,, ம்ம் ரொம்பத்தான் தைரியம் என்று எண்ணிக்கொண்டே தனது பெட்டியை திறந்து அதிலிருந்து தனது பெற்றோரின் படத்தை எடுத்தாள் மான்சி

தன் தாயின் முகத்தை விரல்களால் வருடியவள் தந்தையின் முகத்தை பார்த்ததும் அழுகை வந்தது,, உலகத்துல எவ்வளவு கெட்டவங்க இருக்காங்க,, அவங்கல்லாம் நல்லாருக்கும் போது ஏன் என் அம்மா அப்பாவை மட்டும் எடுத்துட்டு போய்ட்ட கடவுளே,, என்று கண்ணீருடன் கடவுளிடம் கேள்வி கேட்டாள்

நல்ல அழகான குடும்பம் மான்சியினுடையது,, வயலுக்கு நடுவில் மான்சியின் அப்பாவும் சித்தப்பாவும் பக்கம் பக்கமாக வீடு கட்டிக்கொண்டு ஒன்றாக விவசாயம் பார்க்கும் ஒற்றுமையான குடும்பம்,, மான்சியின் அம்மா அருணாவுக்கு பக்கத்து ஊரிலேயே தாய் வீடு,, மூன்று சகோதரர்களுக்கு ஒரே தங்கையாக பிறந்தவள்,, மான்சியின் அப்பா மாணிக்கத்தை திருமணம் செய்துகொண்டு சொர்கத்தை சொந்தமாக்கிக் கொண்டவள்

ஒரே மகள் என்பதால் அருணாவி்ன் அப்பா தனது சொத்துக்களில் அருணாவுக்கும் ஒரு பங்காக ஐந்து ஏக்கர் நிலத்தை கொடுத்தார்,, அருணாவின் சகோதரர்கள் நிலத்துக்கு நடுவே வந்தது அருணாவுக்கான பாகம்,, அவர்களே பயிர் செய்து அருணாவிற்கு கொடுத்து வந்தனர்

மான்சியின் கல்லூரி படிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த போது அவளுடைய பெற்றோர்களுக்கு அவள் மறுபடியும் ஒரு குழந்தையாகிப்போனாள்

நல்ல சந்தோஷமாக இருந்த குடும்பத்தில் இடி விழுந்தது போல,, ஒரு விசேஷத்திற்கு சந்தோஷமாக பைக்கில் சென்ற மாணிக்கமும் அருணாவும் ஒரு விபத்தில் சிக்கி மூட்டையாக வீட்டுக்கு வந்தனர்
பெற்றோரின் பிரிவை தாங்க முடியாத மான்சி ,,சுயநினைவை இழந்து பலநாட்களாக கிடந்தாள்,, அனிதா அடிக்கடி வந்து ஆறுதல் சொன்னாலும் தேறவில்லை மான்சியின் மனம்

ஆண்பிள்ளையான ஜெகன் மட்டும் ஓரளவு சுதாரித்துக் கொண்டு தங்கைக்கு ஆறுதலாக இருந்தான் ,, தங்களின் நிலையை எண்ணி மான்சி வருந்தாதே நிமிடமே இல்லை எனலாம்

மான்சியின் சித்தப்பா அண்ணன் பிள்ளைகளை கவணமாக பார்த்துக்கொண்டாலும்,, ஒரே நாளில் அனாதையாக்கப்பட்டதை மான்சியால் ஜீரணிக்கவே முடியவில்லை

உடலும் மனமும் ஓரளவுக்கு தேறி மான்சி எழுந்து நடமாட ஆரம்பித்ததும் அடுத்ததாக புதிதாக ஒரு இடி வந்தது மான்சியின் மூத்த தாய்மாமன் மூலமாக,,

தனது சகோதரிக்கு கொடுத்த நிலம் எப்படியிருந்தாலும் மான்சிக்குத்தான் போய் சேரும் என்பதால்,, மான்சியை தனது மகனுக்கு திருமணம் செய்துவிட்டால் சொத்து வெளியே போகாது என்ற கணக்குடன் மான்சியை பெண் கேட்டு வந்தார்கள்

முதலில் அதிர்ந்து போன மான்சி பிறகு திருமணம் செய்துகொள்ள தீவிரமாக மறுத்தாள்,, மான்சியின் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு சொத்துக்காக ஏற்படுத்தப்படும் அந்த சம்மந்தம் சுத்தமாக பிடிக்கவில்லை

ஆனால் உரிமையுள்ள தாய்மாமனை எதிர்க்க தைரியம் இல்லாமல் மான்சியை சரிகட்ட முயன்றனர்,, ஆனால் ஜெகன் தங்கையின் பக்கம் இருந்தான்,, அவனுக்கும் தாய்மாமன்பெற்று வைத்திருக்கும் அரைகுறைக்கு தனது அழகு தங்கையை கொடுக்க அறவே விருப்பம் இல்லை

பேச்சுவார்த்தை நாளடைவில் சண்டையில் போய் முடிய,, இறுதியாக மான்சியை கடத்தி வந்தாவது தாலி கட்டுவது என்று அருணாவின் தாய் வீட்டு ஆட்கள் முடிவு செய்ய ..

மான்சிக்கு எப்போதும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலை,, ஜெகன் போலீஸில் புகார் செய்யலாம் என்று குதிக்க,, அவர்களின் தாத்தா இது குடும்ப சண்டை இதை போலீஸார் வந்து விசாரித்தால் ஊரில் மரியாதை இருக்காது என்று கூறி ஜெகனை அடக்கினார்

ஒரு கட்டத்தில் தாய்மாமனின் தொல்லைகள் அதிகரிக்க,, மான்சியை வேறு எங்காவது பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைப்பது என்று முடிவுசெய்தனர்,,

மான்சிக்கு அப்போது ஞாபகம் வந்தது அனிதாதான்,, உடனே அனிதாவுக்கு போன் செய்து கண்ணீருடன் தனது நிலைமையை சொல்லி தனக்கு ஏதாவது வழி சொல்லுமாறு மான்சி கேட்க ,,,

மறுநாளே அனிதா வந்துவிட்டாள்,, தனது அண்ணனின் மில்லில் மான்சிக்கு வேலைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துவிட்டு கோவை வந்தவள் மறாவது நாளே மான்சிக்கு போன் செய்து உடனே கிளம்பி வருமாறு சொன்னாள்

குடும்பத்தினர் கண்ணீருடன் வழியனுப்ப,, அண்ணனும் தங்கையும் நடு இரவில் பயந்து பயந்து வீட்டைவிட்டு ரகசியமாக கிளம்பி ரயிலை பிடித்து கோவை வந்து சேர்ந்தனர்,,

ஜெகன் எம் சி ஏ படிப்பதால் உடனடியாக தங்கையை விட்டுவிட்டு போகவேண்டிய சூழ்நிலை,, ஆயிரம் ஆறுதல் மொழிகளுடன்,, கண்ணீர் வற்றும் வரை அழுதுவிட்டு தங்கையை அனிதாவிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பினான் ஜெகன்

தனது வீட்டில் மான்சியை தங்க வைத்தால் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற காரணத்தால்,, ஜன சந்தடி மிகுந்த இடத்தில் இருக்கும் தனது தோழியின் வீட்டில் மான்சியை தங்க வைத்தாள் அனிதா

இனி மான்சியின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு பக்கத்துணையாக அருணாவும் மாணிக்கமும் இருப்பார்கள் என்று மான்சியின் குடும்பத்தினர் நம்பிதான் அவளை கோவைக்கு அனுப்பி வைத்தார்கள்

ஆனால் மாணிக்கம் அருணா இவர்களின் ஆத்மாவைவிட ,, மான்சியை உயிராய் நேசிக்கும் சத்யனின் துணை அவளிடம் யாரையும் நெருங்கவிடாது என்பதுதான் நிஜம் 







No comments:

Post a Comment