Friday, August 7, 2015

கண்ணனை நினைக்காத நாள் இல்லையே - அத்தியாயம் - 6

"நான் அப்படி உங்களை சொன்னேனா? ஏதோ அன்னைக்கு நான் உங்களை திட்டினேன். வாஸ்தவம் தான். அதை நான் அப்பவே மறந்துட்டேன். என்னமோ தெரியலை உங்க கிட்ட பேசி கிட்டு இருந்தா ஒரு மன நிம்மதி. உங்க கிட்ட பேசாம ஒரு மணி நேரத்துக்கு மேல என்னால இருக்க முடியலை. இது என்ன மாதிரியான உணர்வு எனக்கு புரியலை. நட்பா? யோசிச்சு பார்த்தால் இது நட்பை விட மேலானது அப்படின்னு புரியுது. ஒரு வேளை இதுதான் காதலா அப்பிடின்னு கேட்டா எனக்கு பதில் சொல்ல தெரியலை."

கிருஷ்ணாவுக்கு வானத்தில் பறப்பது போல் உணர்வு.சடக்கென்று அவள் தன் வலது கையை எடுத்து கிருஷ்ணாவின் இடது கையில் பிணைத்து கொண்டு கண் மூடி கொண்டாள். கொஞ்ச நேரத்தில்அவன் தோளில் சாய்ந்தவாறு உறங்கி விட்டாள்


கண்ணை மூடி கொண்டு கிருஷ் யோசித்து கொண்டே வர, சிறிது நேரத்தில் "ஹோசூர் பாக்டரி வந்தாச்சு எல்லோரும் இறங்குங்க"என்று ஹரி குரல் கொடுக்க,தூங்கி கொண்டுறிந்த ஸ்வேதா திடுக்கிட்டு எழுந்தாள்
பஸ்சை விட்டு இறங்கிய ஸ்வேதா மீட்டிங் நடக்க போகும் இடத்தை பார்த்து அசந்து போனாள். ஒரு பெரிய கட்சியின் மாநாட்டு பந்தல் போல் தோற்றமளித்த அந்த இடத்தில காலை டிபன் வழங்கப்பட, அனைவரும் சாப்பிட்டு விட்டு அங்கே போட்டுரிந்த சேரில் காத்துருக்க, சரியாக ஒன்பதரை மணிக்கு சேர்மன் சுப்ரமணியம் வந்து இறங்கினார்
அவரும் காலை டிபன் முடிக்க, அவருடன் ஹரி, கிருஷ், மற்றும் பாக்டரி மேனேஜர் மனோகர் கொஞ்ச நேரம்பேசி விட்டு முதல் வரிசையில் அமர்ந்தனர். ஏற்கனவே இரண்டாவது வரிசையில் ஸ்வேதா, காவிரியுடன் அமர்ந்து விட்டாள். சரியாக பத்து மணிக்கு சுப்ரமணியம் பேச தொடங்கினார்.
"எனதருமை தோழர்களே, தொழிலாளர்களே, நண்பர்களே அனைவருக்கும் என் காலை வணக்கம்
இந்த ஹோசூர் பாக்டரி ஆரம்பிச்சு இப்போ 10 ஆண்டுகள் ஆகுது. நம்ம கம்பெனில இது வரைக்கும் 1100 பணியாளர்கள் இருக்கிறோம்.இதில் 300 பேர் கடந்த மூன்று மாதங்களில் சேர்க்கப்பட்டனர். கடந்த பத்து ஆண்டுகளில் ஒரே சமயத்தில் இந்த அளவுக்கு புதிய ஊழியர்கள் சேர்ப்பது இது தான் முதல் தடவை. எதற்காக இந்த விரிவாக்கம், நமது திட்டங்கள் தான் என்ன என்று புதிய ஊழியர்கள் அறிய நாம் பத்து வருடம் முன்னோக்கி செல்ல வேண்டும்.
2001 ஆண்டு, நான் வேலை பார்த்து வந்த NTPC நிறுவனத்தில் இருந்து வெளி வந்தேன். என் கையில் இருந்த அப்போது என் கையில் இருந்த சேமிப்பு பத்து லட்சம். என் மனைவி வழியில் இருந்த சொத்துகளை விற்றதில் ஒரு இரண்டு கோடி, இவற்றுடன் என் கையில் சூரிய சக்தி மூலம் இயங்க கூடிய வாட்டர் ஹீட்டர் project இருந்தது. SSI இடம் என்னோட project submit செய்துஎட்டு கோடி கடன் வாங்கி இந்த Sun Solar Systems Private Limited ஆரம்பிக்கப்பட்டது. முதலில் வாட்டர் ஹீட்டர் விற்று வந்த, நாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக வீட்டுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்கும் Solar Panel தயாரிக்கும் பணியை ஆரம்பித்தோம்
அந்த வேலையும் ஓரளவுக்கு சூடு பிடிக்க ஆரம்பித்தது. நமது கடந்த ஆண்டு வருமானத்தில், Solar Panel மூலம் கிடைக்க கூடிய வருமானம் 20 சதவிகிதமாக, வாட்டர் ஹீட்டர் மூலம் கிடைக்க கூடிய வருமானம் 80 சதவீதமாக குறைந்தது. கடந்த மூன்று மாதங்களாக நான் சென்றுவந்த சுற்று பயணங்கள் மூலமாக இப்போது ஒரு ஜெர்மன கம்பெனி உடன் Technology Tie up ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர்கள் இன்னும் இரண்டு நாட்களில் இங்கு வந்து நமது Solar Panel பற்றிய சில மாற்றங்களை செய்வார்கள். அதன் மூலம் உற்பத்தியாகும் செலவு 20௦ சதவிகிதம் குறைய கூடும்.அதற்கு ஒரு ஆறு மாதம் ஆகலாம்.அது வரை நாம் இப்போது விற்று வரும் Solar Panel விற்பனையை தொடர்ந்து வருவோம்
How Solar Panel Works? நாம் அமைக்கும் Solar Panel கள் வீட்டின் கூரையில் அல்லது அபார்ட்மென்ட் கூரையில் அமைக்கப்பட்டு அதன் மூலம் சூர்ய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். வீட்டு தேவையை விட அதிக மின்சாரம் கிடைப்பதால், மீதமான மின்சாரம் State Electricity Board நிறுவனத்திற்கு விற்கப்படும். இதற்கான ஒப்பந்தம் Solar Panel அமைக்கும் போதே போடப்படும். 


இந்த Solar Panel அமைக்கும் செலவு, ஒரு 2BHK வீட்டுக்கு 3.5 லட்சம் ஆகும். ஒரு பெரிய வீட்டுக்கு 7 லட்சம் வரை செலவாகும். இது இப்போது ஆகும் செலவு. இப்போ நாம போட்டுருக்க German Tie up இந்த விலையை குறைக்கத்தான். இன்னும் 20%கம்மி ஆகும்னு எதிர் பார்கிறேன்.

தமிழ்நாட்டுல திருநெல்வேலில வர்ற புது வீடுகள் எல்லாம் இந்த சூர்ய சக்தி மின்சாரத்தைதான் Solar Panel மூலம் கொடுத்து இருக்கிறோம். கோவையில் Shoba Developers, சென்னை Arun Excello,பெங்களூர் Purvankara, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் சில அடுக்கு மாடி கட்டிடங்கள் போன்ற எல்லாரும் இப்போது இந்த சூர்ய மின்சாரத்துக்கு மாறிக்கிட்டு இருக்காங்க.

இப்போ மத்திய அரசு Solar Panel அமைக்கும் செலவில 30௦% subsidy தராங்க. இந்த மின்சாரம் நமக்கு வாழ்நாள் முழுக்க கிடைக்கும்.நம்ம நாடு சூர்ய சக்தி அதிகம் உள்ள நாடு.என்னோட லட்சியம் நமது நாடு ஒரு மின்சார தன்னிறைவு நாடாக ஆக வேண்டும்.இன்னும் இரண்டு ஆண்டுகளில் நம்மை போன்ற நிறுவனங்கள் சூர்ய சக்தி மூலம் தயாரிக்கும் மின்சாரம் நமது நாட்டின் மொத்த தேவைகளில் 5-7% தேவைகளை பூர்த்தி செய்யும், அதன் மூலம் நமது Petroluem products இறக்குமதி செலவை 30௦% குறைக்கலாம்".
"இந்த வருசத்ல இருந்து நாம solar panels அதிகம்விற்க வேண்டி வருவதால் அதற்காக விழிப்புணர்வு முகாம் போட வேண்டும். அதனால முதல் கட்டமா நாம நாற்பது பேர் கொண்ட குழு அமைத்து, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் கலை நிகழ்ச்சி மற்றும் முகாம் நடத்த வேண்டும். அந்த குழுவுக்கு கிருஷ்ணகுமார் மற்றும் ஹரிஹரன் இருவரையும் தலைவர்களாக இருப்பார்கள்.
இந்த சுற்று பயணம் ஒவ்வொரு இடத்திலும் ரெண்டு நாள் வீதம் மொத்தம் பத்து நாட்கள் நடக்கும். இதன் மூலம் நமக்கு கிடைக்கும்Enquiries மூலம் ஒரு 20 கோடி புதியபிசினஸ் எதிர் பார்க்கிறோம்.அதற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் விரும்பி, வேண்டி கேட்டு கொள்கிறேன்".

கூட்டம் முடிந்த பின் நடந்த சேர்மன் மீட்டிங்கில் கலந்து கொண்டு மதியம் மூன்று மணி அளவில் பெங்களூர் ஊழியர்கள் பஸ் ஸில் திரும்பினர்
அடுத்த நாள் ஆபீஸில் நடந்த கூட்டத்தில் 'யார் யார் தமிழ் நாடு சுற்று பயணம் வர விருப்பம் இருக்கு' என்று ஹரி கேட்க ஆபீஸில் இருந்தகிட்டதட்ட அனைவரும் வர தயார் என்றுகை உயர்த்தினர். அவர்களில் நடனம் ஆட, பாட, பொம்மலாட்டம் ஆட, ஓவியம வரைய,கதை சொல்ல இது போன்ற திறமை வாய்ந்த நபர்கள் சேர்ந்து கொள்ள, ஸ்வேதா தானும் வருவதாக சொன்னாள்
கிருஷ் அவளை தனியே அழைத்து "எதற்கு இந்த சுற்று பயணத்தில கலந்துக்கிற. கஷ்டமா இருக்கும். அலைச்சல் அதிகமா இருக்கும் வேணாம்" என்று சொல்ல
"இல்லை நீங்க போறதால நானும் கட்டாயம் வருவேன்" என்று பிடிவாதம் பிடித்தாள். ஹரியும் அவளுக்கு பரிந்து பேச, நாற்பது பேர் கொண்ட குழுவில் ஸ்வேதாவும் இடம் பெற்றாள்.
அனைவருக்கும் திருச்சிக்கு ட்ரெயின் டிக்கெட் புக் செய்து கொடுக்க, அடுத்த திங்கள் கிழமை சுற்று பயணம் என்று முடிவு செய்யப்பட்டது.
இடைப்பட்ட நாட்களில் எல்லோரும் பாட்டு, dance practice செய்ய, ஸ்வேதா மதுரை கண் காட்சியில் இரண்டு dance ஆட மற்றும் நான்கு பாடல்கள் பாட ஒத்து கொண்டாள்.கிருஷ் சில பாடல்களை பாட ஒத்து கொண்டான்.இப்படியாக நிறைய நிகழ்ச்சிகள் ஒத்திகை பார்க்கப்பட்டன.சுற்று பயணம் கிளம்பும் நாள் வந்தது.




பெங்களூரில் இருந்து மாலை ஏழு மணிக்கு மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் எல்லோரும் கிளம்ப அந்த Second A/C பெட்டி முழுக்க நாற்பது பேர் ஆக்ரமித்து கொண்டனர். 

சீட் எண் 43, 44 சீட்டில் ஸ்வேதா, கிருஷ்ணாவுக்கு ஒதுக்கப்பட இருவரும் உட்கார்ந்து பேசி கொண்டு வந்தனர். 

"ஸ்வேதா இன்னைக்கு ஒரு A ஜோக் சொல்லுறேன். கேக்குறியா?"

"என்ன இதுவும் சுட்டதா?"

"ஆமா, கேக்குறியா?"

"சரி சொல்லுங்க."

"என்னை மாதிரி ஒரு அப்பாவிஒருத்தன்"

"என்ன ரொம்ப பெரிய பில்ட் அப் மாதிரி தெரியுது."

"அவன் நாய்டு ஹால் கடைக்கு முதல் தடவையாக போனான். அவன் மனைவிக்கு Bra வாங்கணும், அங்க இருந்த சேல்ஸ் பொண்ணுங்க கிட்ட கேக்க அவனுக்கு வெட்கம். அதை புரிஞ்ச கடை முதலாளி ஒரு வயதான அம்மாவிடம் கொண்டு செல்ல அந்த அம்மா கேள்வி கேக்க ஆரம்பிச்சாங்க."

'சார் உங்க மனைவியோட சைஸ் என்ன?"யோசித்தான். 

'இல்லை மேடம் எனக்கு தெரியலை.'

'சரி ஓகே, தேங்காய்.'

'No No'

'சரி, பப்பாளி'

'இல்லை'

"மாங்கா"

'இல்லை'

'ஆரஞ்'

'இல்லை'

அந்த அம்மாவுக்கு கோபம் வந்தது.'என்ன மனுஷன் இவன்' என்று. வெறுப்போடு, "முட்டை?"என்று கேட்க

அவனோ சந்தோசத்தோடு குதிக்க ஆரம்பித்தான், "ஆம்லெட் ஆம்லெட்"

"How do you get these kind of wierd ideas" ஸ்வேதா சிரிக்க ஆரம்பித்தாள்.

"நேத்து ஒரு SMS எனக்கு வந்தது அதை படிக்கிறேன் கேளு."

A school once held a contest for kids - the theme of the contest was THE NICEST THING MY FATHER HAS DID FOR ME.
The winning kid answered 'Not wearing a Condom'
"This is too much" அருகில் இருந்த தலையணை எடுத்து அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

சத்தம் கேட்டு சைடு பெர்த்தில் இருந்த ஹரி, "என்ன ஸ்வேதா" என்று கேட்க, ஸ்வேதா சிரிப்பை அடக்கி கொண்டு "ஒண்ணும் இல்லை சும்மாதான். அவரு சொன்ன ஜோக்கை கேட்டு சிரிச்சுகிட்டு இருந்தேன்" என்று சொல்ல, "டேய் எனக்கு அந்த ஜோக் சொல்லுடா ப்ளீஸ்"என்று ஹரி கெஞ்சினான். "இல்ல மாம்ஸ் இந்த ஜோக் கொஞ்சம் adults only ஜோக்ஸ். உன்னை மாதிரி சின்ன பசங்களுக்கு புரியாது"என்று சொல்ல, ஹரி 'ஞே' என்று விழித்தான். 

சமாளித்து கொண்டு "டேய் மச்சான். வீட்ல போன் பண்ணி நாளை மறு நான் ராத்திரி மதுரை வந்துடுவோம்னு சொன்னியா?"

"கலா கிட்ட சொல்லிட்டேண்டா?"

"ஏன் அம்மா கிட்ட சொல்லலையா?"முறைத்து பார்த்தான் கிருஷ்.

இருவரும் பேசுவதை உற்று கவனித்த ஸ்வேதாவுக்கு 'கலா அவன் தங்கை' என்று புரிந்தது. 'ஏன் அவன் அம்மா கிட்ட பேசுவதில்லை?"என்று யோசித்து கொண்டே, "KK என்ன problem? உங்க அம்மாகிட்ட ஏன் பேச மாட்டேங்கிரிங்க?" என்று கேட்க, ஹரி "அது அம்மா கிட்ட இல்ல, அப்பா கிட்ட தான்" என்று ராகம் பாட, 'டேய் வாயை மூடு' என்று சைகை செய்தான் கிருஷ்.

"அம்மா தாயே நான் என் வேலையை பாக்கிறேன். நீங்க ஏதோ பேசிகிட்டு வாங்க" என்று சொல்லி விட்டு, அவன் berth-க்குள் தலையை சொருகி, கண் மூடி கொண்டான் ஹரி.

தலை குனிந்து உட்கார்ந்திருந்த கிருஷ்ணாவை பார்த்து அவன் தாடையை உயர்த்தி அவன் கண்களை ஊடுருவி பார்த்தாள். அவன் கண்களோ சிவந்து இருந்தன. 'something wrong' என்று நினைத்தபடி, "KK உங்க வீட்ல ஏதோ problem இருக்கு. உங்களுக்கு சொல்லலாம்னு தோணிச்சா சொல்லுங்க., இல்லை வேற்று ஆள் தானே, இவள் கிட்ட என்ன நம்பி சொல்றது அப்பிடின்னு நினைச்சா, என் கிட்ட சொல்லாதிங்க" என்று கெஞ்சி கேட்க, அவள் கோரிக்கையை தடுக்க முடியாமல் நடந்த சம்பவங்களை சொல்ல தொடங்கினான்.

அவன் சொல்லி முடிக்க, குரல் தழுதழுக்க ஸ்வேதா "என்ன KK ஒரு அப்பா பையனை பார்த்து கேக்குற கேள்வியா இது?ஹரிக்கும்,உங்களுக்கும் இடைல உள்ள நட்பை பார்த்து நான் ஆச்சர்ய படுகிறேன். சொல்ல போனா உங்க ரெண்டு பேர் நட்பை நினைச்சு எனக்கு பொறாமையா இருக்கு. எனக்கு இந்த மாதிரி ஒரு பிரெண்ட் கூட இல்லைன்னு. நான் உங்களோட தோழியா இருக்கணும்னு ஆசைபடுகிறேன். என்னை ஏத்துக்குவிங்களா? ப்ளீஸ்" என்று கெஞ்சினாள்.

அந்த இருட்டிலும் அவளின் ஜொலித்த அந்த கண்களை பார்த்து மயங்கினான். 'நீ எனக்கு தோழியா மட்டும் இல்லை வாழ்க்கை துணைவியா வந்தா எனக்கு முழுக்க சம்மதமே' என்று நினைத்து கொண்டு, "ஏய் ஸ்வேதா you are already my friend" என்று சொல்லி அவள் கையை தொட்டு ஆறுதல் படுத்தினான்.

நேரமோ பத்தை நெருங்க, எல்லோருக்கும் இரவு சாப்பாடு ஹரி கொடுக்க, கிருஷ் சாப்பிட தோன்றாமல் உட்கார்ந்து இருந்தான்.
"Hai KK இந்தாங்க சாப்பிடுங்க"

"இல்லை ஸ்வேதா எனக்கு மூட் இல்லை. ப்ளீஸ் கம்பெல் பண்ணாத."

"அப்படின்னா எனக்கும் சாப்பாடு தேவை இல்லை." "ஹரி இந்தாங்க. எங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு வேண்டாம்" என்று சொல்ல, ஹரி எட்டி பார்த்து 

"ஏண்டா நீங்க ரெண்டு பேரும் வேணாம்னு சொல்லி இருந்தா, பார்சல் சொல்லி இருக்க மாட்டேன்ல" என்று கேட்க, கிருஷ்

"டேய் நீ உன் வேலைய பாரு. நாங்க சாப்பிட்டுகிறோம்" என்று சொல்லி விட்டு

"என்ன ஸ்வேதா, என்னை புரிஞ்சுக்க, எனக்கு பசிக்கலை" என்று கெஞ்ச, "ஆமா எனக்கும் தான் பசிக்கலை" என்று அவனை போல் சொல்ல, கிருஷ்ணாவுக்கு அவள் கிண்டல் புரிந்தது. முகத்தில் மெல்லிய புன் முறுவல் படர, அவளை பார்த்து மென்மையாக சிரித்தான். 


"சரி நான் சாப்பிடுறேன்" என்று சொல்லி சாப்பாட்டு பொட்டலத்தை வாங்கி பிரித்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தபடி சாப்பிட்டனர்.

"ஆமா இதை முன்னாலே முரண்டு பிடிக்காம வாங்கி சாப்பிட வேண்டியதுதான" என்று முனகியபடி, கை கழுவ எழுந்தாள்.
இரவு மணி பத்தரை. எல்லோரும் உறங்க செல்ல, ஸ்வேதா கிருஷ்ணாவை பார்த்து "உங்களுக்கு தூக்கம் வந்தா மேல் பெர்தள தூங்குங்க. எனக்கு தூக்கம் வரலை."

"ஏன் தூக்கம் வரலை."

"இல்லை நீங்க சொன்னதை நினைச்சு பார்த்தேன். அதனாலதான். ஆமா உங்க அப்பா கூட சண்டை போட்டது ஓகே. அம்மா என்ன தப்பு பண்ணினாங்க."

"அம்மா கிட்ட நான் பேசுவேன். ஆனா வீட்டுக்கு போகும்போது எல்லாம், 'அப்பா இப்போ மாறிட்டார். பேசுடா' என்று என்னை கட்டாய படுத்துவாங்க. எனக்கு அது பிடிக்கலை. அதுனாலதான் அம்மா கிட்ட பேசுறது கம்மி ஆயிடுச்சு."

"KK, நீங்க உங்க அப்பா கிட்ட சண்டை போட்டு ஆறு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு. அவர் உண்மைலே மாறி இருக்கலாம் இல்லையா. நீங்க ஏன் அவர் கிட்ட ஒரு தடவை பேசி பார்க்கக் கூடாது."

கிருஷ்ணாவுக்கு முகம் சிவந்து போனது"அந்த மனுஷன் கிட்ட நான் பேச முடியாது. நீ என்னை பத்தி என்ன நினைச்சாலும் கவலை இல்லை. எனக்கு என் தன்மானம் முக்கியம். அந்த ஆள் காலடியில விழறதுக்கு பதிலா நான் தற்கொலை பண்ணிக்குவேன்."
பேச்சு திசை மாறி செல்வதை கவனித்த ஸ்வேதா"ஓகே ஓகே, நாம வேற ஏதாவது பேசலாம. ஆமா உங்க கேர்ள் பிரெண்ட்ஸ் பத்தி சொல்லுங்க."

"ஸ்வேதா நீ நினைக்கிறது மாதிரி அது ஒண்ணும் கிளுகுளுப்பா இருக்காது. இருந்தாலும் நீ கேக்குரதால சொல்றேன் கேளு".

"மதுரா காலேஜ்ல படிக்கும் போது ராதான்னு ஒரு பொண்ணு கூட சுத்திகிட்டு திருஞ்சேன். வீட்ல பாட்டிம்மாவுக்கு மட்டும் விஷயம் தெரியும்.ஒரு நாள் ஒரு கேர்ள் பிரெண்டை வீட்டு கூடி போக பாட்டி கிருஷ்ணா இந்த பொண்ணு தான் நீ சொன்ன பொண்ணான்னு கேட்க, இல்லை பாட்டிம்மா அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆய்டுச்சு. இது வேற பொண்ணு என்று சொல்ல, பாட்டிக்கு அதிர்ச்சி.ஏண்டா அந்த பொண்ணை நீ லவ் பண்ணலையா என்று கேட்க, பாட்டி நான் எப்பயாவது அந்த பொண்ண லவ் பண்ணுறேன்னு சொன்னேனா? நீயே எதையாவது நினைச்சிகிட்டு குழம்பிக்காதே என்று சொன்னேன்."

"சரி அந்த ரெண்டாவது பொண்ணு."

"அவ பேரு கீதா. அவ வீட்ல விஷயம் தெரிஞ்ச உடனே கல்யாணம் பண்ணி US அனுப்பிட்டாங்க. இந்த மாதிரி ஒரு எட்டு பொண்ணுங்களை டாவடிசேன். இதுல என்ன கொடுமைனா அந்த பொண்ணுகளை I love you சொல்றதுக்குள்ள அந்த பொண்ணுங்க வீட்ல மோப்பம் புடிச்சு உடனே கல்யாணம் கட்டி வச்சுருவாங்க. ஆனா எனக்கு ஒரு ராசி உண்டு. எல்லா பொண்ணுகளும் பாரீன்ல செட்டில் ஆகிட்டாங்க".

"கடைசி ரெண்டு பொண்ணுங்க நம்ம ஹோசூர் பாக்டரில பார்த்தேன்.அதுல ஒருத்திக்கு பைக்னா ரொம்ப பிடிக்கும். அவளை மடக்கலாம்னு நினச்சு Harley Davison பைக் வாங்கினா, அவள் மாமன் மகன் வந்து அவளை கூட்டி போய் கல்யாணம் பண்ணிட்டான்.பத்தாவதா நான் பார்த்த பொண்ணை நானே வேண்டாம்னு சொல்லிட்டேன்.அன்னிலே இருந்து நான் எந்த பொண்ணையும் பார்த்து ஐ லவ் யூ சொல்றது இல்லைன்னு முடிவு செஞ்சிட்டேன்."

விழுந்து விழுந்து சிரிக்கக் ஆரம்பித்தாள்"ஓஹோ இது தான் சங்கதியா? உங்க காதல் கதைகளுக்கு பின்னால் இப்படி ஒரு காமடி இருக்கும்னு எனக்கு தெரியாம போச்சு."

கிருஷ்ணாவின் பாவப்பட்ட முகத்தை பார்த்து"சாரி கண்ணா சும்மா கிண்டல் பண்ணுனேன். பீல் பண்ணாதிங்க" என்று சொல்ல,கிருஷ் சிரித்து மழுப்பினான்.

கொஞ்ச நேரத்தில் தூக்க கலக்கத்தில் ஸ்வேதா அவன் தோளில் சாய்ந்து தூங்க ஆரம்பிக்க, அவளை படுக்கையில் சாய்த்து உறங்க வைக்கலாம் என்று முயற்சி செய்ய, அவளோ தூக்கத்தில் அவன் இடுப்பை கட்டி கொண்டு விடவில்லை. கடைசியாக ஸ்வேதாஅவன் மடியில் படுத்து உறங்க, வேறு வழி இல்லாமல் உட்கார்ந்த நிலையில் உறங்க தொடங்கினான் கிருஷ்.


காலை மணி நாலு. ஹரி "திருச்சி ஸ்டேஷன் இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்து விடும். எல்லாரும் இறங்க ரெடியாஇருங்க" என்று உரக்க சொல்ல, குரல் கேட்டு ஸ்வேதா, கிருஷ் எழுந்தனர்.

ஸ்வேதா அப்போது தான் கிருஷ் மடியிலே தலை வைத்து உறங்கி விட்டதை கண்டு வெட்கம் அடைந்தாள். "KK நீங்க தூங்கலையா.சாரிப்பா."

"இட்ஸ் ஓகே. நாம இறங்கணும்"

அனைவரும் இறங்கி திருச்சி ஜங்ஷன் முதல் பிளாட் பார்மில் ஒன்று சேர்ந்தனர். ஏற்கனவே சேர்மன் சொல்லி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த Volvo பஸ் வாசலில் ரெடி ஆக இருக்க, அனைவரும் ஏறி ஐந்து நிமிடத்தில் சங்கம் ஹோட்டல் சென்று அடைந்தனர்.

ஹரி ரிசப்ஷனில் இருந்த மேனேஜரிடம் பேசி கொண்டுரிந்தான். முந்தைய நாள் வந்த கல்யாண கோஷ்டி ஒன்று இன்னும் காலி செய்யாததால் இருக்கின்ற ரூம்களை அட்ஜஸ்ட் செய்து கொடுப்பதாகவும்,காலை ஒன்பது மணி அளவில் ரூம் மாற்றி கொடுப்பதாகவும் சொல்ல, வேறு வழி இல்லாததால் ஹரி ஒத்து கொண்டான்.

இரட்டை பெட் ரூம்களில் எல்லாம் ஒரு எக்ஸ்ட்ரா பெட் போட்டு கொடுக்க,ஒரு அறையில் மூன்று பேர் தங்கினர். இருவது பெண்களில் காவேரி, ஸ்வேதாவுக்கு ஒரு அறை ஒடுக்கப்பட, மற்ற பெண்கள் மூன்று மூன்று பேராக ஆறு அறைகளில் தங்கினர். 

ஹரி அவனோடு வந்து HR மேனேஜருடன் தங்க, கிருஷ்ணாவுக்கு suit room ஒதுக்கப்பட்டது.
எல்லோரும் தங்கள் அறையில் சென்று உறங்க ஐந்து மணி ஆனது.

புதிய இடம் ஆதலால் கிருஷ்ணாவுக்கு தூக்கம் வரவில்லை. கொஞ்ச நேரத்தில் கதவை தட்டும் சத்தம் கேட்க, இந்த நேரத்தில் யார் என்று நினைத்து கொண்டே கதவை திறந்தான். 

வெளியே கையில் ட்ராலி bag உடன் ஸ்வேதா.

"என்ன ஸ்வேதா இந்த நேரத்ல தூங்கலையா?"

"என்னோட ரூம்ல காவேரி நான் ரெண்டு பேரும் இருக்கோம். அது ஒரு சிங்கள் ரூம். கீழே எனக்கு பெட் போட்டு கொடுத்தாங்க. படுத்த உடனே யாரோ ஓடுற மாதிரி இருந்தது. பாத்தா பெருச்சாளி. காவேரி நல்லா தூங்கிட்டா எனக்கு பயமா இருந்தனால, நான் கிளம்பி இங்கே வந்துட்டேன். ஏன் உள்ளே கூப்பிட மாட்டிங்களா? "என்று சொல்ல, "sorry உள்ளே வா" என்று அழைத்து சென்றான்.

"ஆனால் நாம் ரெண்டு பேரும் ஒண்ணா தங்கினா பாக்கிரவங்க உன்னை பத்தி தப்பா பேசுவாங்க. என்ன பண்ணலாம்"

 என்று சொல்லி விட்டு கிருஷ்ணா யோசிக்க,

"இங்க பாருங்க. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, நீங்க Gem of personsஉங்க கூட stay பண்றதில்ல எனக்கு ஆட்சேபனை இல்லை.ஒரு வேளை உங்களுக்கு பிடிக்கலைனா நான் ரிசப்ஷன்ல உள்ள சோபால படுத்துக்கிறேன்: என்று சொல்லி விட்டு கோபத்துடன் வெளியே கிளம்ப அவளை தடுத்தான்.

"ஹேய் ஸ்வேதா என்ன உனக்கு இப்படி கோபம் வருது" என்று கேட்க 

"இங்க பாருங்க தப்பு பண்ணனும்னா எங்க வேணாலும் பண்ணலாம். ரூம் போட்டு தான் பண்ணனும்னு இல்லை" என்று சொல்ல,அவளோட தைர்யத்தை நினைத்து வியந்தான்.



No comments:

Post a Comment