Wednesday, August 19, 2015

மனசுக்குள் மான்சி - அத்தியாயம் - 13

இப்போதெல்லாம் கிருபா தோட்டத்து வீட்டுக்கு சென்றால்,, ரஞ்சனாவிடம் அனிதாவின் எதிர்காலம் பற்றி நிறைய பேசினான், நடக்க ஆரம்பித்த குழந்தையை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு மணிக்கணக்காக கொஞ்சினான்,, சின்னச்சின்ன தொடுகைகள் மூலமாக தன் மனதை ரஞ்சனாவுக்கு சொல்ல முற்ப்பட்டான்,, தலை குளித்து வரும் ரஞ்சனாவின் ஈரக்கூந்தலில் கைவிட்டு “ இன்னும் ஈரம் காயலை, நல்லா தொடைக்க வேண்டியதுதானே” என்ற சின்னச்சின்ன வார்த்தைகள் மூலமாக தனது அன்பை வெளிப்படுத்தினான்,,

ஒருநாள் கிருபா வீட்டுக்குள் நுழையும்போதே அப்பா என்று தத்தித்தத்தி ஓடிவந்து அனிதா இவன் காலை கட்டிக்கொள்ள, அவளை வாரியெடுத்து அவளின் குண்டு கன்னத்தில் முத்தமாறி பொழிந்தான் கிருபா., இன்றுதான் முதன்முதலாக அனிதா அப்பா என்று கூப்பிடுகிறாள்,, அந்த அழைப்பில் தனது உள்ளத்து கவலை எல்லாம் மறந்து போய்விட்டதாக உணர்ந்தான்


' குழந்தையின் பின்னாலேயே வந்த ரஞ்சனா அவனருகில் வந்து “ அன்னம்மா பண்ணவேலை, காலையிலேர்ந்து அப்பா சொல்லு அப்பா சொல்லுன்னு கத்துக்குடுத்துட்டாங்க,என்னால எதுவும் மறுத்து பேசமுடியலை மன்னிச்சுடுங்க” என்றபடி அவனிடமிருந்து குழந்தையை வாங்க முயல

அவள் கையை பற்றிக்கொண்ட கிருபா “ அப்படின்னா நான் அனிதாவுக்கு என்ன உறவு ரஞ்சனா?” என்று நேரடியாக கேட்டான்

அவன் கேள்விக்கு பதில் தெரியாதவள் போல அவன் முகத்தையே பார்க்க,,

“ நான் அனிதாவுக்கு நான்தான் அப்பான்னு நெனைச்சுக்கிட்டு இருக்கேன், அதுல உனக்கு ஏதாவது மாற்று கருத்து இருக்கா ரஞ்சனா?” என்று அவள் கண்களைப் பார்த்து கிருபா கேட்க

உடனடியாக இல்லையென்று அவள் தலையசைந்தது

“ சரி அப்படின்னா போய் எனக்கு ஒரு கப் காபி எடுத்துக்கிட்டு வா, நான் என் மககூட கொஞ்சம் பேசனும்” என்று உரிமையுடன் அவளுக்கு உத்தரவிட்டு விட்டு குழந்தையுடன் சோபாவில் அமர்ந்துகொண்டான்

ரஞ்சனா உள்ளே போனதும் அங்கே வந்த அன்னம்மாள் “ சின்னராசா உங்ககிட்ட ஒரு சமாச்சாரம் பேசனும்”என்று அனுமதி கேட்க

“ கேளுங்க அன்னம்மா என்ன விஷயம்” என்று கேட்டான் கிருபா

“ ஏன் ராசா, குழந்தையும் அப்பான்னு கூப்பிடுற அளவுக்கு வளர்ந்து போச்சு, இன்னும் இப்புடியே விட்டு வச்சா என்ன அர்த்தம்,, அம்மனி கழுத்துல ஒரு தாலியை கட்டுனா, இந்த குழந்தையாவது மத்தவங்க ஏச்சுப் பேச்சுல இருந்து தப்பிக்குமே ராசா” என்று கெஞ்சுவது போல அன்னம்மாள் சொல்ல...

கிருபாவின் நெற்றி சுருங்க,, புருவங்கள் முடிச்சிட “ அப்படின்னா இது வரைக்கும் யாருன்னா ரஞ்சனாவை ஏசினாங்களா அன்னம்மா” என்று கேட்டான்

" அதையேன் கேட்கிற ராசா,, கேட்கிறவங்களுக்கு பதில் சொல்ல முடியாம அந்த புள்ள தவிக்கிற தவிப்பு ரொம்ப கொடுமை ராசா,, அம்மனி இதனாலேயே இப்பல்லாம் வீட்டைவிட்டு எதுக்குமே வெளிய வர்றதில்லை" என அன்னம்மா கவலையுடன் கூறினார்

சிந்தனையுடன் " சரி நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்" என்றான் கிருபா

ரஞ்சனா எடுத்து வந்த காபியை ஒரே மடக்கில் குடித்துவிட்டு " நான் கிளம்புறேன் " என்று புறப்பட்டவனை ஏமாற்றத்துடன் பார்த்தாள் ரஞ்சனா

இவ்வளவு நேரம் சந்தோஷமாக குழந்தையை கொஞ்சியவனுக்கு இப்போது என்ன ஆனது என்று புரியாமலேயே அவனை வழியனுப்பி வைத்தாள்

காரை ஓட்டிக்கொண்டிருந்த கிருபாவின் மனதில் ஆயிரம் குழப்பங்கள்,, வசந்தியின் பேச்சு,, அன்னம்மா கூறிய செய்தி,, ரஞ்சனாவின் ஏமாற்றம் நிறைந்த பார்வை,, கள்ளமற்ற குழந்தையின் பொக்கை வாய் சிரிப்பு,, அத்தனையும் மாறிமாறி வந்து அவனை குழப்பியது

இதையெல்லாம் விட பெரிய குழப்பமாக சத்யனின் எதிர் காலமும்,, சமூகத்தில் தனக்கிருக்கும் அந்தஸ்தும் பயமுறுத்தியது,, என்ன முடிவெடுப்பது என்று புரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக தத்தளித்தான் கிருபா

கிருபா வீட்டுக்கு வந்தபோது அவன் முகமே வசந்தியிடம் அவனை காட்டிக்கொடுத்தது,, மவுனமாக உடை மாற்றியவனை பார்த்து “ குழந்தை எப்படியிருக்கா” என்று வசந்தி கேட்டாள்

வசந்தியின் படுக்கையை சரிசெய்துகொண்டே “ ம் நல்லாருக்கா” என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு மகனைத் தேடி வெளியே சென்றான்,

ஏதோ நடந்திருக்கிறது என்று வசந்திக்கு புரிந்தது,, ஆனால் அவனிடம் கேட்கவில்லை,, அவன் மனதில் ரஞ்சனா இருப்பது தெளிவாக தெரிந்தாலும், அவன் ரஞ்சனாவை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கு காரணம் சமூகத்தில் உள்ள அந்தஸ்தும்,, தன் மீது வைத்துள்ள அன்பும் தான் என்று வசந்தி எண்ணினாள்

கிருபாவின் மனதை மாற்றுவது கஷ்டமான காரியமாக இருந்தது,, வசந்திக்கு அவள் குடும்பம் சிதறாமல் பாதுகாக்கப்பட வேண்டும்,, தனக்கு பிறகு கிருபா குடும்பம் குழந்தை என சந்தோஷமாக வாழவேண்டும்,, அதை தன் உயிர் இருக்கும்போதே செய்துவிட நினைத்தாள்

அதற்கு என்ன செய்வது என்று வெகுநேரம் யோசித்தாள்,, அன்று இரவு உணவு முடிந்து கிருபா வந்து படுக்கையில் படுத்து அவளை மெதுவாக அணைத்து தூங்கியபோதும் வசந்திக்கு தூக்கம் வரவில்லை,, ‘ இதோ இந்த நிலை மாறவேண்டும்,, நோயுற்றவள் என்ற அருவருப்பின்றி என் மனைவி இவள் என்று ஒன்றுக்கும் உதவாத என்னை அணைத்துக்கொண்டு தூங்கும் இந்த நிலைதான் மாறவேண்டும்,, என்னை மறந்து முழுமையாக இன்னொருத்தியை நினைக்கவேண்டும்,, என்று பலவாறாக யோசித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தாள் வசந்தி

அடுத்த இரண்டு நாட்கள் அமைதியாக போனது,, ஆனால் கொஞ்சமாக இருந்த நடமாட்டமும் குறைந்து படுக்கையே கதியென்று ஆனாள் வசந்தி,, ஒருநாள் இரவு வசந்தியின் உடல்நிலை மிகவும் மோசமாக,, அப்போதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்,

கொட்டும் மழையில் மனைவிக்காக அலைந்தான் கிருபா,, அவனுக்கு வசந்தியின் நிலைமை முழுவதுமாக தெரிந்ததால், ‘ என் மனைவியை காப்பாற்று என்று கடவுளை அவன் வேண்டவில்லை,, என் மனைவிக்கு வலியில்லா மரணத்தை கொடு கடவுளே என்றுதான் வேண்டினான்

மூன்று நாட்களாக ஏற்பட்ட மனஉளைச்சலும்,, வசந்தியின் மோசமான நிலைமையும் அவனை மேலும் பலகீனமடைய செய்தது,, நடு இரவில் கொட்டும் பனியில் தோட்டத்தில் அமர்ந்திருந்ததும்,, மழையில் நனைந்ததும் சேர்ந்து அவனுடைய உடல் டெம்பரேச்சரை அதிகப்படுத்த,, அதை கண்டுகொள்ளாமல் மனைவிக்காக ஓடினான்

மருந்துகளின் வீரியத்தால் தலை முடி கொட்டி,, ரொம்பவும் மெலிந்துபோய் பார்க்கவே வசந்தி மோசமாக இருந்ததால்,, சத்யனை தாயை பார்த்தால் பயந்துவிடுவான் என்று கருதி சத்யனை வசந்தியின் அண்ணன் வீட்டுக்கு அமிர்தம்மாளுடன் அனுப்பிவிட்டான் கிருபா

தீவிரசிகிச்சைக்குப் பின் சரளமாக பேசும் அளவிற்கு தேறிய வசந்தி கண்விழித்ததும் முதலில் கூறியது ரஞ்சனாவையும் குழந்தையையும் பார்க்கவேண்டும் என்பதுதான்,, பிடிவாதமாக அதையே மறுபடியும் மறுபடியும் சொல்லிகொண்டே இருக்கவும் வேறு வழியின்றி ரஞ்சனாவை அழைத்து வர கிளம்பினான் கிருபா

வினாடிக்கு வினாடி அவனுக்கிருந்த காய்ச்சலின் வேகம் அதிகரிக்க, சமாளித்துக்கொண்டு தோட்டத்து வீட்டுக்கு போய் ரஞ்சனாவையும் குழந்தை அனிதாவையும் அழைத்துக்கொண்டு வந்தான்..

கண்கள் சிவந்து, தலை களைந்து, ரொம்பவும் சோர்ந்து போயிருந்த கிருபாவை பார்த்து ரஞ்சனாவுக்கு தொண்டையை அடைத்தது , ஆனால் அவனிடம் எதுவும் கேட்கவில்லை, வசந்தி மருத்துவமனையில் இருப்பதால் இப்படி இருக்கிறான் என்று நினைத்தாள்

மருத்துவமனைக்கு வந்ததும் குழந்தையை கிருபா தூக்கிக்கொள்ள, ரஞ்சனா அவன் பின்னே வந்தாள், வசந்தியின் அறைக்குள் நுழைந்ததும் அவளின் நிலை கண்டு அதிர்ந்து போனாள் ரஞ்சனா,

இவர்களை பார்த்ததும் வசந்தி தனது கையை நீட்ட, வேகமாக வசந்தியின் அருகில் போன ரஞ்சனா அவள் கையை பற்றிக்கொண்டு “ மேடம் என்ன இப்படி ஆயிட்டீங்க,, பார்க்கவே கொடுமையா இருக்கே” என்று குலுங்கி கண்ணீர் விட்டாள்

வரண்ட தனது உதடுகளை நாவால் ஈரப்படுத்திக் கொண்ட வசந்தி “ என்னப் பண்றது ரஞ்சனா, எல்லாம் முன்னோர்கள் செய்த பாவம்” என்று விரக்த்தியாக கூறியவள் குழந்தைக்காக கையை நீட்டினாள்

ரஞ்சனா உடனே குழந்தையை வசந்தியின் கையில் குடுக்க, அந்த குழந்தையை தூக்கக் கூட சக்தியற்றவளாக கைகள் துவண்டு விழ, குழந்தையை பக்கத்தில் வைக்குமாறு கூறினாள்

அப்போது அறைக்குள் வந்த நர்ஸ் “ ஏம்மா குழந்தையை இங்கே எடுத்து வரக்கூடாது,, இது சாதரணமான நோய் இல்லை, ஏதாவது இன்பெக்ஷன் ஆச்சுன்னா குழந்தை தாங்குமா,, மொதல்ல குழந்தையை வெளியே கொண்டு போங்க” என்று அதட்ட

கட்டிலருகே வந்த கிருபா “ குழந்தையை நான் வெளியே கொண்டு போறேன்,, நீ கொஞ்சநேரம் வசந்தி கூட பேசிட்டு வா” என்று குழந்தையுடன் வெளியேறினான்

கிருபா போனதும் கட்டிலருகே இருந்த சேரில் அமர்ந்து வசந்தியின் கையை பற்றிக்கொண்ட ரஞ்சனாவுக்கு வசந்தியை பார்த்து அழுவதை தவிர வேறெதுவும் தெரியவில்லை,, தோட்டத்து வீட்டுக்கு வசந்தி கிருபாவுடன் வந்த நாளை நினைவுபடுத்தி பார்த்தாள்,, எவ்வளவு அழகாக இருந்த பெண்ணை நோய் இப்படி திண்று தீர்த்துவிட்டதே என்று வெதும்பினாள்


பற்றியிருந்த கையை தட்டிக்கொடுத்த வசந்தி “ அழாதே ரஞ்சனா,, அழவேண்டிய கட்டத்தை நான் தாண்டிவிட்டேன், இனிமேல் எனக்கு தேவை வலியில்லாத மரணம் மட்டும்தான்,, சாவறதை பத்தி எனக்கு எந்த வருத்தமும் இல்லை,, அவர்கூட நூறு வருஷம் வாழவேண்டிய வாழ்க்கையை பனிரெண்டு வருஷத்தில் திருப்தியா வாழ்ந்துட்டேன்” என்ற வசந்தி மூச்சுவாங்க பேசுவதை நிறுத்தினாள்
பிறகு “ இப்போ உன்னால எனக்கு ஒரு உதவி ஆகனும் ரஞ்சனா,, மறுக்காம செய்வியா” என்றாள்

ரஞ்சனா குழப்பம் மேலிட “ நானா? உங்களுக்கு நான் என்ன உதவி மேடம் செய்யமுடியும்,, எதுவானாலும் கேளுங்க என்னால முடிஞ்சதை செய்வேன்” என்றாள் ரஞ்சனா

ரஞ்சனாவின் கையை இறுகப்பற்றிய வசந்தி “ அனிதாவோட பர்த் சர்டிஃபிகேட்ல குழந்தையோட அப்பான்னு இவர் கையெழுத்து போட்டாரே அதுல உனக்கு வருத்தம் எதுவும் இருக்கா?” என்றாள்

கிருபா தன் மனைவியிடம் எதையும் மறைக்கமாட்டான் இதையும் சொல்லியிருப்பான் என்று ரஞ்சனாவுக்கு தெரியும்,, ஆனால் அதை வசந்தியே கேட்கும்போது ரஞ்சனாவால் தெளிவாக பதில் சொல்லமுடியவில்லை ,, தலையை குனிந்தவாறு “ இல்லை” என்றாள்

“ அப்படின்னா உண்மையிலேயே அவர் அனிதாவோட அப்பாவான உனக்கு சந்தோஷம் தானே ரஞ்சனா?” என்று அடுத்த கேள்வியை வீசினாள் வசந்தி

வசந்தி சொன்னதன் அர்த்தம் தாமதமாகத்தான் ரஞ்சனாவுக்கு புரிந்தது இதை எதிர்பாராத ரஞ்சனா திகைத்துப்போய் “ மேடம் என்ன சொல்றீங்க” என்று கூவினாள்

“ ஆமாம் ரஞ்சனா,, அனிதாவுக்கு அவர்தான் இனிமேல் அப்பா, நீ அவரை புருஷனா ஏத்துக்கனும்,, என் வீட்டுக்கு அனிதாவோட அவர் மனைவியா, எனக்கு தங்கையா வரனும்,, இது நான் எடுத்த முடிவு ரஞ்சனா,, நீ மறுக்கக்கூடாது,, அவருக்கும் உன்னை பிடிக்குது,, என் அளவுக்கு உன்னையும் நேசிக்கிறார்,, ஆனா அதை வெளியே சொல்ல பயப்படுறார்,, இப்ப மட்டும் இல்ல நான் இறந்த பிறகுகூட அவர் அதை வெளியே சொல்லமாட்டார்,, ஏன்னா அவருக்கு எனக்கு துரோகம் செய்றதா நெனைப்பு,, இது எப்படி எனக்கு துரோகம் ஆகும் ரஞ்சனா? இனிமேல் என்னால படுக்கையறையில் அவருடன் இணைய முடியாது,, பூஜையறையில் போட்டோவில் இருந்து ஆசிர்வதிக்க மட்டும்தான் முடியும்னு தெளிவா தெரிஞ்சுபோச்சு,, இனிமேலும் அவர் எனக்குத்தான்னு சொல்லுமளவுக்கு நான் சுயநலவாதி இல்ல ரஞ்சனா,, என்னைப்பொருத்தவரை எனக்கு பிறகு நிச்சயமா அவர் வாழ்க்கையில் ஒரு பெண் வேனும், அது நீயாக இருந்தால் எனக்கு ரொம்ப சந்தோஷம்,, இந்த இரண்டு வருஷத்தில் அவரை ஓரளவுக்கு புரிஞ்சுகிட்டு இருப்ப,, அவர் ஒரு குழந்தை மாதிரி ரஞ்சனா,, பிசினஸில் பெரிய அளவில் ஜெயிச்சிருந்தாலும், சொந்த வாழ்க்கையில் தனக்கு என்ன தேவையின்னு அவருக்கே சொல்லத்தெரியாது, எதை எப்படி முடிவு பண்றதுன்னு குழம்பி தவிப்பாரு,, என்னோட யோசனைகள் இல்லாம அவரால எதுவுமே செய்யமுடியாது ரஞ்சனா,, அப்படிப்பட்டவர் இனிமேல் எப்படியிருப்பார்னு கொஞ்சம் யோசிச்சு பார் ரஞ்சனா,, நாங்கள் உனக்களித்த உதவிக்கு நீ செய்யும் கைமாறாக இதை எதிர்பார்க்கலை, நீ அவரை விரும்பி ஏத்துக்கனும் ரஞ்சனா,, எனக்கு உன்னோட பதில் இப்பவே தெரியனும்” என்று வசந்தி திக்கித் திணறி ஆனால் சொல்லவந்ததை தெளிவாக கூறிவிட்டு ரஞ்சனாவின் பதிலுக்காக அவள் முகத்தையே பார்த்தாள்

ரஞ்சனா இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாய் விழிகள் விரிய வசந்தியை பார்த்துக்கொண்டிருந்தாள்,, அவளைப்பொருத்தவரையில் கிருபா கடவுளுக்கு சமமானவன் அந்த கடவுளுக்கு ஊழியம் செய்ய அவள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்,, ஆனால் அந்த தகுதி தனக்கிருக்கிருக்கிறதா என்று அவள் உள்ளம் நொந்தது,, தன்னுடைய கடந்தகாலம் எந்தவகையிலும் கிருபாவை பாதிக்கக்கூடாது என்று எண்ணினாள்


சிறிதுநேரத்திற் பிறகு “ இல்லை மேடம் அந்த தகுதி எனக்கில்லை,, வேற நல்ல குடும்பத்து பெண்ணை மனந்து அவர் சந்தோஷமா இருக்கட்டும் மேடம்,, அந்த நல்லவருக்கு நான் வேண்டாம்” என்று கண்ணீர் ததும்பும் குரலில் ரஞ்சனா சொல்ல

“ இதோபார் ரஞ்சனா,, ஏற்கனவே என்மேல் அளவுக்கதிகமான அன்பு வச்சவர்,, இப்போ கொஞ்சம் கொஞ்சமா உன்னையும் நேசிக்க ஆரம்பிச்சுட்டார்,, இப்படிப்பட்டவர் நாம இரண்டு பேரும் இல்லாத இன்னொரு பெண்ணை ஏத்துக்குவார்னு நீ நினைக்கிறயா?” என்றாள் வசந்தி

ரஞ்சனாவுக்கு கிருபா தன்னையும் நேசிக்கிறான் என்ற விஷயம் ஒரளவுக்கு புரிந்து வைத்திருந்தாலும்,, வசந்தியை மறந்து கிருபா தன்னுடன் இணைவான் என்று அவள் நம்பவில்லை,, அதையே வசந்தியிடமும் சொன்னாள் “இல்லைங்க மேடம் அவர் உங்க மேல ரொம்ப அன்பு வச்சுருக்காங்க உங்களை மறந்து வேற யார்கூடயும் வாழமாட்டார்” என்று உறுதியாக கூறினாள்

“ அது எனக்கும் தெரியும் ரஞ்சனா,, அதைத்தான் நீ மாத்தனும்னு சொல்றேன்,, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ரஞ்சனா,, அவர் இரவில் தூங்கி பலநாட்கள் ஆயிருச்சு,, நல்லா சாப்பிடுறது இல்லை,, நல்ல உடைகள் உடுத்துவது இல்லை,, சேவ் கூட பண்ணாம எப்பவுமே எதையோ பறிகொடுத்தவர் மாதிரியே இருக்கார்,, இதுக்கெல்லாம் என்னோட இந்த நிலைமை மட்டும் காரணம் இல்லை,, உன்னை நேசிக்கிறதை வெளிப்படையா சொல்லமுடியாமல்,, உன்னை பிரிஞ்சு போகவும் முடியாமல் இருதலைக்கொள்ளி அவர் தவிக்கிற தவிப்பு எனக்குத்தான் தெரியும் ரஞ்சனா,, அவரை நான் சித்தரவதை பண்றதே போதும், நீயும் அதையே செய்யாதே,, இப்படியே போனா என் மகனுக்கு தகப்பனும் இல்லாம போயிடும்,, அந்த நிலையை உருவாக்காதே ரஞ்சனா,, எனக்காக நீ அவரோட சேரனும்” என்று கண்ணீருடன் கைகளை நீட்டி ரஞ்சனாவிடம் யாசகம் கேட்டாள் வசந்தி


வசந்தி கூறிய அத்தனை விஷயங்களும் ரஞ்சனாவின் கண்முன்னே வந்து போனது,, தன்னையுமறியாமல் ரஞ்சனாவின் உடல் நடுங்கியது,, பட்டென்று வசந்தியின் கைகளை பற்றிய ரஞ்சனா “ நான் என்ன செய்யனும் மேடம்,, சொல்லுங்க செய்றேன்” என்றாள் உறுதியுடன்

நோயால் வாடிய முகத்தில் சந்தோஷம் வந்து அமர ரஞ்சனாவின் கையை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்ட வசந்தி “ இன்னும் எத்தனை காலம் ஆனாலும் அவர் மனசை வெளிப்படையா சொல்லி உன்னை ஏத்துக்க மாட்டார்,, அதனால நீதான் அந்த முயற்சியை செய்யனும்,, அதாவது அவர் உன்னை கல்யாணம் செய்யுமளக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தனும் ரஞ்சனா,, நான் சொல்றது உனக்கு புரியும்னு நெனைக்கிறேன்,, இதை நீ சூழ்நிலைக்கு ஏத்தமாதிரி நடத்திக்கனும் அவ்வளவுதான் ரஞ்சனா” என்று வசந்தி கூற

அவள் சொன்னது ரஞ்சனாவிற்கு புரிந்தது,, ஆனால் ச்சீ என்று கிருபா ஒதுக்கிட்டா என்னப் பண்றது என்று அவளுக்கு பயம் வந்தது,, ஆனால் அந்த பயத்தை வசந்தியிடம் சொல்லி மேலும் அவளை பேசவைக்காமல் “ சரிங்க மேடம் நான் முயற்சி செய்றேன்” என்று மெல்லிய குரலில் கூறினாள்

“ ம்ஹூம் சொன்னா மட்டும் போதாது ரஞ்சனா,, நீதான் அவர் மனைவின்னு எனக்கு சத்தியம் பண்ணிக்கொடு” என்று ரஞ்சனா முன்பு கையை நீட்டினாள் வசந்தி

ரஞ்சனாவுக்கு கிருபாவின் உண்மை முகம் தெரியாமல் சத்தியம் எப்படி செய்வது என்று தயக்கமாக இருந்தது,, ஆனால் நோயுற்ற வசந்தியின் பரிதாப நிலை அவளை சத்தியம் செய்ய தூண்டியது, அவளின் மெலிந்த கையில் தனது கையை பதித்தவள் “ அவரோட மனசை மாத்த கண்டிப்பா முயற்சி செய்வேன் மேடம்” என்றாள்

“ ரொம்ப சந்தோஷம் ரஞ்சனா, இந்த நிமிஷத்தில் இருந்து என்னை மேடம்னு கூப்பிடாதே, அக்கான்னு கூப்பிடு” என்று புன்னகையுடன் கூறினாள்

அதன்பிறகு வசந்தி தன் கணவனைப் பற்றி நிறைய சொன்னாள், அவனுக்கு பிடித்தது, பிடிக்காதது என பலவற்றையும் பேசிய வசந்தி தன் மகனை மறந்தாள்,, ரஞ்சனா என்ற புதிய உறவை தன கணவனுக்கு ஏற்படுத்தியவள், அந்த உறவை மகன் ஏற்றுக்கொள்வானா என்று சிந்திக்க தவறினாள்,, தன் கணவனின் சந்தோஷத்தை முக்கியமாக கருதியவள் தன் மகனைப் பற்றி நினைக்க மறந்தாள் , மகனை சிறு குழந்தையாக நினைத்தாள் வசந்தி ,, ஆனால் பதினொரு வயது எந்தளவுக்கு விபரம் புரியக்கூடிய வயது என்பதை அவள் யோசிக்கவில்லை,, அது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்த போகிறது என்பதை யாருமே சிந்திக்கவில்லை..

வெளியே குழந்தை பாலுக்கு அழுததும் தூக்கிக்கொண்டு அறைக்குள் வந்த கிருபா குழந்தையை ரஞ்சனாவிடம் கொடுத்துவிட்டு “ நேரமாச்சு போகலாமா,, உன்னை விட்டுட்டு நான் மறுபடியும் வரனும்,, மழை வேற பலமா இருக்கு,, சீக்கிரம் வா போகலாம்” என்றவன் வசந்தியிடம் திரும்பி “ நான் கொண்டுபோய் விட்டுட்டு வந்துர்றேன் வசந்தி” என்றான்

“ சரி போய்ட்டு வாங்க,, கிளம்புறதுக்கு முன்னாடி பீவருக்கு இன்ஜெக்ஷன் போட்டுகிட்டு போங்க இல்லேன்னா பீவர் அதிகமாயிடப் போவுது” என்று வசந்தி அக்கரையுடன் கூற

“ அய்யய்யோ உங்களுக்கு பீவரா,, இதோட ஏன் என்னை கூப்பிட வந்தீங்க,, போன் பண்ணியிருந்தா நானே வந்திருப்பேனே” என்று பதட்டமான ரஞ்சனா சூழ்நிலை மறந்து அக்கரையுடன் அவன் நெற்றியில் கைவைத்து பார்த்தாள்...

அவளின் பூங்கரத்தால் தொட்டவுடன் கிருபா கண்களை மூடிக்கொண்டான்,,

அவன் நெற்றி நெருப்பாக கொதிக்க சட்டென்று பதட்டமான ரஞ்சனா “ அய்யோ கடவுளே இப்படி கொதிக்குதே, வாங்க டாக்டரை பார்க்கலாம்” என்ற ரஞ்சனா குழந்தையை தரையில் இறக்கிவிட்டு அவன் கையை பற்றிக்கொண்டு.. “ மேடம் பாப்பா இப்படியே விளையாடட்டும், நான் சாரை டாக்டர்கிட்டே கூட்டிப்போய்ட்டு வர்றேன்” என்றாள்

வசந்தி ரஞ்சனாவின் முகத்தை பார்த்தாள்,, ரஞ்சனாவின் கண்களில் கண்ணீர் தழும்பியது,, கிருபாவை கவனிக்கும் வேகத்தில் இடுப்பிலிருந்த குழந்தையை அவள் இறக்கிவிட்ட வேகம் வசந்தியின் மனதை தொட்டது,, இதுபோதும் இந்த அக்கரையான கவனிப்பு போதும், இனிமேல் எனக்கு எந்த கவலையும் இல்லை என்று எண்ணினாலும் மனதில் ஒரு வெறுமை சூழ்ந்தது

தன் கையை பற்றியிருந்த ரஞ்சனாவின் கரத்தை விலக்கிய கிருபா திரும்பி வசந்தியின் முகத்தை பார்த்தான்,, அவள் முகத்தில் புன்னகை இருந்தாலும் அந்த புன்னகையில் ஒரு வரட்சி, கிருபாவுக்கு நெஞ்சை சுட்டது,, சட்டென்று குனிந்து குழந்தையை தூக்கிக்கொண்டு “ டாக்டரையும் பார்க்கவேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்,, வா போகலாம்” என்று கடுப்புடன் கூறிவிட்டு விடுவிடுவென வெளியே நடந்தான் கிருபா

திடீரென்று என்ன கோபம் என்று ரஞ்சனா குழப்பமாக வசந்தியை பார்க்க,, அவள் அதே சோகப் புன்னகையோடு “ அவரோட இயலாமையை இப்படி காட்டிட்டு போறார்,, சரி நீயும் கிளம்பு,, நான் சொன்னதை மறந்துடாதே,, அவரை கவனிச்சுக்கோ ரஞ்சனா” என்று கூறிவிட்டு கையெடுத்துக் கும்பிட்டாள் வசந்தி

ஒரே எட்டில் வந்து அவள் கையைப் பற்றி “ வேனாம் மேடம் நீங்க கும்பிடும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை, என்னால் முடிஞ்சதை நான் செய்வேன்” என்று உறுதி கூறி அங்கிருந்து கிளம்பினாள்

காரில் அனிதாவை மடியில் வைத்துக்கொண்டு முகத்தை இறுக்கமாக வைத்தபடி அமர்ந்திருந்த கிருபா,, மழையில் நனைந்தபடி புடவை தலைப்பால் தலையில் முக்காடிட்டுக் கொண்டு ஓடி வந்த ரஞ்சனாவை பார்த்ததும் கையை நீட்டி கார் கதவை திறந்துவிட்டான்,

உள்ளே ஏறியமர்ந்த ரஞ்சனா நனைந்த புடவையால் தனது கைகளை துடைக்க,, காரின் டேஷ்போர்டை திறந்து அதிலிருந்து ஒரு டவலை எடுத்து அவளிடம் கொடுத்து “ நல்லா தொடச்சுக்கிட்டு பாப்பாவை வாங்கிக்க ரஞ்சனா” என்றான் கிருபா

ரஞ்சனா அவன் சொன்னதுபோல் துடைத்துகவிட்டு ,, டவலை மடியில் வைத்துக்கொண்டு மகளை வாங்கிக்கொண்டாள்,, அவளுக்கு கிருபா இருக்கும் நிலையில் அவனுடன் வருவதற்கு இஷ்டமில்லை,, இவ்வளவு காய்ச்சலை வச்சுகிட்டு இவரே வரனுமா? என்னை பஸ் ஏத்திவிட்டா நான் போய்டுவேனே,, என்று மனதில் நினைத்ததை அவனிடம் கேட்டேவிட்டாள்


திரும்பி அவளைப் பார்த்து முறைத்த கிருபா “ எல்லாம் எனக்கு தெரியும்,, நீ பேசாம வா,, இந்த கொட்டுற மழையில் குழந்தையை தூக்கிகிட்டு பஸ்ல போறாளாம்,, பஸ்ஸை விட்டு இறங்கி அவ்வளவு தூரம் எப்படி நடந்து போவ?” என்று கோபமாக கேட்டான்

அதற்குமேல் எதுவும் பேசமால் வாயை மூடிக்கொண்டாள்,, சிறிதுநேரத்தில் மடியில் இருந்த குழந்தை சினுங்கியது,, ரஞ்சனா மார்போடு அணைத்து சமாதானம் செய்தாலும் அடங்கமால் பசியால் குழந்தை அழ ஆரம்பித்தது

திரும்பிப் பார்த்த கிருபா “ அதுவும் எவ்வளவு நேரம்தான் பசி தாங்கும்,, ஏன் இன்னும் பசியாத்தாம வச்சிருக்க?” என்று சற்று கோபமாக கேட்டான்

தர்மசங்கடமாக நெளிந்த ரஞ்சனா “ வீட்டுல போய் குடுக்குறேன்” என்றாள்

உடனே கோபமாய் திரும்பி பார்த்த கிருபா “ நான் வேனா கண்ணை மூடிகிட்டு கார் ஓட்டவா” என்று நக்கலாக கேட்டான்

அதற்கும் மேலே சும்மாயிருந்தால் இன்னும் ஏதாவது கோபமாக பேசுவான் என்று பயந்த ரஞ்சனா முந்தானையை எடுத்து தோளை மூடிக்கொண்டு குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பித்தாள்

திரும்பி ஓரக்கண்ணால் கிருபாவை பார்த்தாள்,, ஜுரத்தினால் முகம் சிவந்து உதடுகள் வரண்டு போயிருந்தது,, முதல்நாள் அலுவலகத்தில் பார்த்த கிருபாவிற்கும் இவனுக்கும் ஆறு அல்ல ஆயிரம் வித்தியாசங்களை சொல்லலாம்,, அவனிடம் உடலிலும் செயலிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் ரொம்பவே களைத்து சோர்ந்து உற்சாகமிழந்து காணப்பட்டான்,, அவன் கைகளில் கார் அதிகமாகவே தடுமாறியது,, அடிக்கடி நெற்றியை துடைத்து உடலை குறுக்கிக்கொண்டான்,, ஒருவேளை குளிருகிறதோ என்று நினைத்தாள் ரஞ்சனா

ஆனால் காரணமேயில்லாமல் கிருபா அவளிடம் வெடுவெடுப்பதை நினைத்து அவளுக்கு அழுகை வரும்போல இருந்தது,, நான் என்ன தப்பு செய்தேன்னு இவரு இப்படி எரிஞ்சு விழுறாரு,, என்று நினைத்தபடி குழந்தைக்கு பாலூட்டினாள்

“ வெளியே வர்றவ பால் பாட்டில் எடுத்துகிட்டு வரவேண்டியது தானே?” என்றான் கிருபா

“ அவசரத்தில் மறந்துட்டேன்” என்றாள் தடுமாறியபடி

அதன்பின் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை,, ரஞ்சனா குழந்தையை தோளில் போட்டு தட்டிக்கொடுத்தாள்,, வீடு வந்துவிட்டது ஆனால் இறங்கமுடியாத அளவுக்கு மழை வெளுத்து வாங்கியது,, காரை விட்டு கிட்டத்தட்ட இருநூறு அடி தூரம் நடந்து வீட்டுக்கு ,, போகவேண்டும் கிருபாவிற்கு குளிர் நடுங்கியது,

“ ரஞ்சனா டவலை போத்திகிட்டு இறங்கி போயிடு,, நான் இப்படியே வீட்டுக்கு கிளம்புறேன்” என்றான் கிருபா

“ நீங்க இப்போ எப்படி போவீங்க,, வரும்போதே கார் ஓட்ட முடியலை, உங்களுக்கு பீவர் அதிகமாயிருச்சுன்னு நெனைக்கிறேன்,, ப்ளீஸ் இறங்கி வீட்டுக்கு வாங்க, என்கிட்ட மாத்திரை இருக்கு அதை போட்டுகிட்டு பீவர் கொஞ்சம் குறைஞ்சதும் வீட்டுக்கு போங்க” என்று ரஞ்சனா கெஞ்சினாள்

“ இல்ல பராவாயில்லை நான் போயிடுவேன்” என்று கிருபா சொல்லும்போதே அவன் மூச்சின் உஷ்ணம் ரஞ்சனா மேல் பட்டது

“ இனிமேல் போய் ஆஸ்பிட்டல்லயும் தங்கமுடியாது,, வீட்டுலயும் சத்யன் இல்லை ஊருக்கு போய்ட்டான்,, இப்போ நீங்க போய் என்னப் பண்ணப்போறீங்க, பேசமா வீட்டுக்கு வாங்க மாத்திரை போட்டுகிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்த பிறகு மழை விட்டதும் கிளம்புங்க” என்று மறுபடியும் கெஞ்சினாள் ரஞ்சனா

“ ம்ஹூம் நான் போறேன்” என்று பிடிவாதமாக கூறினான் கிருபா

அவன் திரும்பவும் போவதில் ரஞ்சனாவுக்கு சம்மதமில்லை,, வரும்போது அவன் கார் ஓட்டிய விதம் அவளை பெரிதும் பயமுறுத்தியிருந்தது,, அவன் முகத்தை பார்த்தாளே ஜுரம் ரொம்ப கடுமையாக இருப்து தெரிந்தது,, மனதில் ஒரு முடிவுடன் “ நீங்க வரலைன்னா நானும் காரை விட்டு இறங்கமாட்டேன்” என்று பிடிவாதமாக கூறிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள் ரஞ்சனா

திரும்பி அவள் முகத்தையே சிறிதுநேரம் உற்று பார்த்தவன் “ சரி டவலை போத்திகிட்டு குழந்தையோட நீ இறங்கி போ, நான் பின்னால வர்றேன்” என்றான் கிருபா

அவன் வருகிறேன் என்றதும் முகம் பட்டென்று மலர,, அவன் பக்கம் திரும்பி அவன் தோளில் குழந்தையை சாய்த்து, மடியிலிருந்த டவலால் கிருபாவையும் குழந்தையையும் தலையோடு சுற்றி போர்த்திவிட்டு “ ம் இப்போ நீங்க இறங்கி போங்க, நான் புடவையை தலையில் போட்டுகிட்டு வர்றேன்” என்றவள் சொன்னதுபோலவே படவை தலைப்பை தலையில் போட்டுக்கொண்டு கதவை திறந்து இறங்கி வீட்டை நோக்கி ஓடினாள்

அவள் போவதையே பார்த்த கிருபா, உதட்டில் தேங்கிய சிறு புன்னகையுடன் கையில் இருந்த அனிதாவின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு இழுத்து போர்த்திக்கொண்டு காரைவிட்டு இறங்கி கதவை மூடிவிட்டு வீட்டை நோக்கி ஓடினான்

வீட்டுக்குள் நுழைந்ததுமே அவனிடமிருந்து குழந்தையை வாங்கி அன்னம்மாவைடம் கொடுத்துவிட்டு “ அன்னம்மா தாத்தாவோட சலவை பண்ண வேட்டி ஏதாவது இருந்தா எடுத்துட்டு வாங்க” என்று உத்தரவிட்டு விட்டு குளிரில் நடுங்கிய கிருபாவின் கையை பிடித்து அழைத்துச்சென்று சோபாவில் அமர்த்தினாள்

கொடியில் இருந்த டவலை எடுத்து அவன் தலையில் மிச்சமிருந்த ஈரத்தை துவட்டினாள்,, கிருபா அவளிடமிருந்து டவலை வாங்கிக்கொண்டு “ நான் தொடச்சுக்கிறேன்” என்றான்.





" ஒரு பூவைப்போல மென்மையானது..

" ஒரு குழந்தை என்று நாம் உவமை கூறினாலும்..

" அதே குழந்தை ஒரு இரும்பு மனதையும்..

" உருகவைக்கும் சக்தி கொண்டது!

" எவ்வளவு பெரிய மனிதனின் இதயத்தையும்..

" தன் கைகளில் ஏந்தி கபடமற்று விளையாடும்!

" நாம் தொடத்தொட குழந்தை சிரித்தாலும்..

" அந்த தொடுகையால் மலர்வது நமது இதயம்தான்!

" நம் கவலைகளை மறக்க வைக்கும் நிகழ்காலம்தான் குழந்தை!

" நமக்கு சொர்க்கத்தின் சுகத்தை காட்டும் எதிர்காலம்தான் குழந்தை!





No comments:

Post a Comment