Tuesday, August 11, 2015

கண்ணனை நினைக்காத நாள் இல்லையே - அத்தியாயம் - 13

படுக்கையில் படுத்து கொண்டு யோசித்தாள் ஸ்வேதா. 

கிருஷ்ணாவுடன் இருந்த அந்த சில நாட்கள், டெல்லியில் அவனுடன் கழித்த இரவுகள் அவள் மனதுக்குள் ஓட ஆரம்பித்தது. பாரிஸ் பற்றி அவனிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. இந்த ஒரு வார தனிமை, மற்றும் பாரிஸ் வாழ்க்கை அவனை நிறைய யோசிக்க வைக்கும் என்று நம்பினாள். 

இரவு நேரம் ஒரு மணியை தொட, அவளுக்கு தூக்கம் வரவில்லை. 'சரி கிருஷ்ணா போன் ட்ரை செய்து பார்க்கலாம்'
போனை அடிக்க, கிருஷ்ணா உடனே போன் எடுத்து "சொல்லு ஸ்வேதா, தூக்கம் வரலையா" என்று கேட்க ஸ்வேதா பதில் எதுவும் சொல்லவில்லை

"என்ன கண்ணம்மா, பேச மாட்டியா?

"

"KK எனக்கு உங்க நினைவாவே இருக்கு. தூக்கம் வர மாட்டேங்குது. நீங்க போன்ல எனக்கு அது தர முடியுமா" என்று கேட்க

கிருஷ் விடாமல் சிரிக்க ஆரம்பித்தான். அவனின் கிண்டல் சிரிப்பு அவளுக்கு புரிய, கோபம் வந்தது. "சரி நீங்க ஒண்ணும் இப்படி சிரிக்க வேணாம் என்று சொல்லி நான் போனை வைக்கிறேன்" என்று சொல்ல

"மேடம் கோபப்படாதிங்க" என்று குறும்பு கொப்பளிக்க சொல்லி விட்டு போனில் முத்தத்தை வழங்க அவளோ சிரிக்க ஆரம்பித்தாள். 

"இதை முதல்லே மரியாதையா கொடுக்க வேண்டியது தானே. Good night and sweet dreams darling" 

அடுத்த நாள் காலை 6.10-க்கு கிளம்பிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கிருஷ் ஏற, 16.30 மணி நேர பயணத்துக்கு பிறகு மாலை 6.10-க்கு பாரிஸ் நகரம் வந்து சேர்ந்தது.தனது வாட்ச்சில் 4.30 மணி நேரம் adjust செய்து விட்டுஏர்போர்ட்டில் இறங்கினான். மாலை நேரத்தில் பாரிஸ் நகரம் விளக்குகள் வெளிச்சத்தில் மின்னியது.

இரண்டு மணி நேரம் பயணம் செய்து ஹோட்டல் அடைந்தான். தொடர்ந்த அந்த 16.30 மணி நேர பயணம் களைப்பாக இருந்ததால் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாம் என்று நினைக்க, இரவு உணவு சாப்பிடும் நேரம் என்பதால் முதலில் fresh up செய்து விட்டு போனில் சேர்மன், ஹரியிடம் பேசினான். 

பிறகு ஸ்வேதா நம்பர் அடிக்க அவள் உடனே எடுத்தாள். "என்ன KK பிரயாணம் எப்படி இருந்தது.சாப்பிட்டாச்சா? டின்னர் முடிச்சுட்டு வந்து என்னை கூப்பிடுங்க" என்று சொல்லி போனை வைத்தாள்.

அடுத்த நாள் பாரிஸ் நகரத்தில் உள்ள Solar Panel சம்மந்தபட்ட மூன்று கம்பெனிகளிடம் appointment வாங்கி இருந்ததால், அவற்றுடன் tie upபேசி கடைசியில் ஒரு கம்பெனியை முடிவு செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டே உறங்கி விட்டான்.

ஒரு வாரம் வேகமாக ஓடியது. பிரிவு காதலை வளர்க்கும் என்பது உண்மைதான் என்று ஸ்வேதா உணர்ந்தாள். 

இதற்கு இடையில் மூன்று நாட்களுக்கு முன் அப்பா சுமன் ஷெட்டி, அம்மா நிவேதிதா பெங்களூர் வந்து சேர்ந்தனர். சேர்மன் இடையே ஹரி மற்றும் ஸ்வேதாவை அழைத்து போர்டு மீட்டிங் ஏற்பாடு செய்ய சொல்ல, கிருஷ் ஐந்தாம் தேதி வந்து சேர்வதால், ஆறாம் தேதிBoard மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது. 

மீட்டிங்க்கு தேவையான details மற்றும் கம்பெனியின் மூன்று மாத வரவு செலவு கணக்கும் ஸ்வேதா தயார் செய்ய, கிருஷ் கலந்து கொள்ளும் முதல் கூட்டம் என்பதால் எல்லா வேலைகளும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று சேர்மன் கண்டிப்பாக சொல்லி விட்டார்.


ஸ்வேதா பம்பரமாக சுழன்று வேலை செய்து வந்தாள். அதற்குள் சுமன் ஷெட்டி தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் மதுரையில் கிருஷ்ணாவை பற்றி விசாரித்து, அவனை பற்றி நல்ல விதமாக சொல்ல கேட்டு நிம்மதி அடைந்தார். 

ஸ்வேதா நல்ல பையனை தான் தேர்வு செய்து இருக்கிறாள் என்று தன் மனைவியிடம் கூற அவளுக்கும் மன நிம்மதி. மங்களூர் செல்ல ஐந்தாம் தேதி புக் செய்தடிக்கெட்டை ஸ்வேதா வேண்டுகோளுக்கு இணங்க ஆறாம் தேதி மாற்றி அமைத்தார்.

பாரிஸில் கிருஷ்ணாவின் தின வாழ்க்கை பரபரப்பாக இருந்தது. மூன்று கம்பெனிகளுடன் பேசி கடைசியில் ஒரு கம்பெனி உடன் tie upஎன்று முடிவு செய்ய, அந்த கம்பெனி மார்கெட்டிங் மேனேஜர் Sheryl உடன் தினசரி டிஸ்கசன் செய்து imported solar panel வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.

பாரிஸின் அழகு முழுவதும் Sheryl மீது கொட்டி கிடக்க, பாரிசை சுற்றி காட்ட அவனோடு வந்தாள். பாரிஸ் ஏன் காதல் நகரம் என்று அழைக்கபடுகிறது என்று கிருஷ் அன்றுதான் உணர்ந்து கொண்டான். 

வயது வித்யாசம் இல்லாமல் அனைவரும் தங்கள் காதலர்களுடன் பொது இடம் என்று கவலைபடாமல் காதலை முத்தத்தின் வழியாக பரிமாறினர். அங்கே நிற்கும் ஒவ்வொரு நிமிஷமும் அவனுக்கு ஸ்வேதா ஞாபகம். இரவு வேளைகள் நீண்டன. 

ஷெரில் ஒரு நாள் அவனிடம் Shall we have date என்று நேரடியாக கேட்க மிரண்டு போனான். அவளிடம் தனது ப்ளாக் பெர்ரியில் இருந்த ஸ்வேதாவின் போட்டோவை காண்பித்து "இது தான் என் காதலி நான் சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன். என் காதலிக்கு நான் உண்மையாக இருக்க ஆசைபடுகிறேன்".
"கிருஷ் நீ ஒரு கோழை. நான் dating கேட்டு வராத ஆண்களே இல்லை. நீ தான் பிடிக்காத மாதிரி நடிக்கிற" என்று அவனை பார்த்து கோபத்தோடு கூறினாள். கிருஷ்ணாவுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை.

அடிக்கடி மீட்டிங் நடந்தாலும் அவளுடன் இடைவெளி அதிகமானது.

ஸ்வேதாவுக்கு கிருஷ்ணா வருகை தாமதம் ஆனதால் வருத்தம் இருந்தாலும் அவன் ஆபீஸ் வேலையை முடிக்காமல் வர முடியாது என்பதை உணர்ந்து தன் தவிப்பை வெளிகாட்டாதிருந்தாள்.

ஐந்தாம் தேதி மாலை நாலு மணிக்கு வர வேண்டிய இந்தியன் ஏர்லைன்ஸ் பிளைட் ஆறு மணி நேரம் தாமதமாக இரவு பத்து மணிக்கு வந்தது. இரவு பதினோரு மணிக்கு வீட்டுக்கு போகும் வழியில் ஸ்வேதா உடன் பேசி கொண்டு வந்தான். 

"ஸ்வேதா நான் உங்க அப்பா அம்மா ரெண்டு பேரையும் இன்னைக்கு சாயந்தரம் பாதுடலாம்னு இருந்தேன்.பிளைட் தாமதம் ஆகி விட்டதாலே வர முடியலை. உங்க அப்பா அம்மாகிட்ட தாமதத்துக்கு மன்னிப்பு கேட்டதா சொல்லு. நாளைக்கு போர்டு மீட்டிங் மதியம் மூன்று மணிக்கு இருக்கு. அஞ்சு மணிக்கு முடிஞ்சுடும்னு நினைக்கிறேன். ஒரு ஏழு மணி போல வீட்டு வரேன்னு சொல்லு. என் பணிவான வணக்கங்களை இருவருக்கும் தெரிவித்ததாக சொல்லு" என்றான்.

அவன் சொல்லிய விஷயங்கள் அனைத்தையும் ஸ்வேதா சுமன் மற்றும் நிவேதிதா விடம் சொல்ல, இருவரும் அவனது வார்த்தைகளால் நெகிழ்ந்து போயினர்.

"மரியாதை தெரிந்த பையன்" என்று சுமன் புகழ, நிவேதிதாவும் 'ஆமாம்' என்று தலை அசைத்தாள். ஸ்வேதாவுக்கு உடனே கிருஷ்ணாவை பார்க்க வேண்டும் என்று மனம் தவியாய் தவித்தது. பத்து நாட்கள் இடைவெளி அவளால் தாங்க முடியாமல் போனது. 

பெற்றோர் இருவரும் உறங்க செல்ல,வேறு வழி இல்லாமல் ஸ்வேதாவும் தன் படுக்கை அறைக்கு சென்றாள். படுத்துக்கொண்டே கிருஷ்ணாவை கூப்பிடலாமா என்று யோசிக்க, கிருஷ் ரொம்ப டயர்ட் ஆக இருப்பதால், கொஞ்சம் உறங்கி ரெஸ்ட் எடுப்பதாக சொல்லியதால் அவனை கூப்பிட மனம் வரவில்லை.

காலை எட்டு மணிக்கு ஆபீஸ் வந்த கிருஷ், ஹரி ஏற்கனவே வந்து இருந்ததை பார்த்து வியந்து போனான். 

ஹரி தன்னைபார்க்க வேண்டும் என்பதற்காக சீக்கிரம் வந்தான் என்பதை உணர்ந்த கிருஷ், ஹரியை கட்டி தழுவி கொண்டான்.நண்பர்கள் இருவரும் பேசி விட்டு, டிபன் ஆர்டர் செய்து சாப்பிட, தனது கேபினுக்கு திரும்பிய கிருஷ் தனது டூர் ரிப்போர்ட் ரெடி செய்தான்.

சரியாக ஒன்பது மணிக்கு கேபினுக்குள் நுழைந்த ஸ்வேதாவை கண்டவுடன் வாயடைத்து போனான். மெரூன் கலர் மைசூர் சில்க் சாரியில் வந்த ஸ்வேதா ஓடி வந்து அவனை கட்டி கொண்டாள். அவள் அன்புக்கு அவன் கட்டுண்டான்.




அவளுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்ற ஆசையை கட்டுபடுத்தி கொண்டான்.இருவரின் ஆசையும் கட்டுக்கு அடங்காமல் போக கூடிய அபாயம் இருந்ததால் அவளை மெதுவாக விலக்கி சேரில் உட்கார வைத்தான். 

ஸ்வேதா உதடு துடிக்க, "KK என்னைய எப்போவாது நினைச்சு பார்ப்பதுண்டா?"

"கண்ணம்மா, உன்னை நான் எப்போ மறந்தேன், நினைத்து பார்ப்பதற்கு.இந்த பத்து நாளும் எனக்கு நரக வேதனை தான்.கண்ணை மூடினால் நீதான் இருக்கிறாய். இந்த மாதிரி நான் எப்போதுமே இருந்ததில்லை. முதலில் உன் வீட்டுக்கு வரணும், நம் காதலுக்கு உன் பெற்றோரிடம் அனுமதி வாங்க வேண்டும். எல்லாமே சீக்கிரம் நடக்கணும்." என்று சொல்ல

ஸ்வேதா முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. "நான் என்ன சொல்லனும்னு நினைச்சேனோ அதையே சொல்லிட்டிங்க".
"ஸ்வேதா முதல்ல நான் tour ரிப்போர்ட் ரெடி பண்ணணும். நீ கொஞ்சம் உதவி செய்தா போர்டு மீட்டிங் சம்பந்தமாக details நாம ஒரு தடவை செக் செய்யலாம்"

இருவரும் வேளையில் மூழ்க, இடையில் வெளியே ஆர்டர் செய்து வந்த சாப்பாடை கொறித்து கொண்டே வேலையை முடித்தனர். 

சூட், கோட்டில வந்துரிந்த கிருஷ் ஸ்வேதாவுடன் போர்டு மீட்டிங் ஹாலுக்கு இரண்டரை மணி அளவில் சென்று விட்டு LCD Projectorகனெக்ட் செய்து தனது presentations செக் செய்தான்.

மூன்று மணிக்கு போர்டு மீட்டிங் ஆரம்பித்தது. சேர்மன் தவிர மற்ற நான்கு டைரக்டர்களும் அட்டென்ட் செய்தனர்.கிருஷ்ணாவை பாராட்டிய அவர்கள் அனைவரும் பிரான்ஸ் டூர் விஷயமாக பல கேள்விகள் கேட்டனர்.

மீட்டிங் முடிந்தபோது மணி ஆறை நெருங்க அவசரமாக கேபினுக்கு திரும்பிவந்த கிருஷ் அவளை கிளம்ப சொன்னான். சில urgentமெயில்களை அனுப்பி விட்டு அரை மணி நேரத்தில் வருவதாக சொல்ல, ஸ்வேதா வீட்டுக்கு கிளம்பினாள். அவள் ஆறரை மணிக்கு வீட்டு வர, ஏழு மணிக்கு ஸ்வேதாவின் பிளாட்டை அடைந்தான். 

தனது Audi காரை அபார்ட்மென்ட் உள்ளே ஸ்வேதா பிளாட் கார்பார்கிங்கில் நிறுத்திவிட்டு வீட்டு காலிங்பெல் அடித்தான். ஷூவை கழட்டி விட்டு கோட் உடன் உள்ளே வந்தவனை ஸ்வேதா புன்னகையுடன் வரவேற்க, சுமன் மற்றும் நிவேதிதாவிற்கு கை கூப்பி வணக்கம் தெரிவித்தான். உட்காரும் முன் அவர்கள் இருவர் கால்களையும் தொட்டு வணங்க, அவனை பார்த்த ஒரு நிமிடத்தில் ஸ்வேதா அப்பா அம்மா இருவருக்கும் பிடித்து போனது. 

கிருஷ்ணாவின் குடும்பத்தை பற்றி விசாரித்த அவைகளுக்கு கிருஷ் மரியாதையுடன் பதில் அளிக்க, பேசி கொண்டே சாப்பிடலாம் என்று சுமன் ஷெட்டிஅழைத்தார்.
'மங்களூர் செல்ல வேண்டிய ட்ரெயினுக்கு எட்டு மணி கால்டாக்ஸியில் செல்ல வேண்டும்' என்று சொல்லி விட்டு, "கல்யாண விஷயமாக உங்க அப்பா அம்மாவிடம் பேசி விட்டு சொன்னால் நாங்க ரெடியா இருப்போம்" என்று சொல்ல ஸ்வேதா இடைமறித்தாள்.

"அப்பா அவருக்கு கலான்னு ஒரு தங்கை இருக்கா, அவளை இவரோட பிரெண்ட் ஹரி லவ் பண்ணுறார். ஹரியோட அப்பாதான் கம்பெனியோட சேர்மன். முதல்ல கலாவோட கல்யாணம் பேசி முடிக்கணும். அது முடிஞ்ச உடனே நம்ம கல்யாணம் பேசலாம்னு நான் நினைக்கிறேன். வீட்டுல பொண்ணை வச்சிட்டு பசங்களுக்கு கல்யாணம் பண்ணுறது தப்பில்லையா?" என்று கேட்கசுமன் பெருமையில் பூரித்து போனார். 'கல்யாணம் ஆவதற்கு முன்னமே இந்த அளவுக்கு பாசமாக இருக்கிறாள். புகுந்த வீடு சென்றால் எல்லாரையும் தன் அன்பு வலைக்குள் சிக்க வைத்து விடுவாள்' என்று நினைத்து சந்தோசமானார்.

"கிருஷ்ணா உங்களை எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் பிடித்து விட்டது. சீக்கிரம் உங்க தங்கை கல்யாணத்தை பேசி முடியுங்க,அடுத்து உங்க கல்யாணம்தான் என்று சொல்ல, Thank you சார்" என்று சொல்ல, "இனிமே சார்ன்னு கூப்பிடகூடாது. அங்கிள் அப்படின்னு தான் கூப்பிடனும்" என்று சொல்ல, கிருஷ் முகத்தில் புன்சிரிப்பு.

கால் டாக்ஸி வந்தவுடன் இருவரும் கிளம்பி செல்ல, ஸ்வேதா உடன்சாப்பாடு சாப்பிட தொடர்ந்தான் கிருஷ்.

கிருஷ்அவளுக்கு முன்னால் சாப்பிட்டு முடிக்க கை கழுவ எழுந்தான். அவன் பாத்ரூம் சென்ற வேளையில் ப்ளாக் பெர்ரி ஒலிக்க தொடங்கியது. யார் அழைப்பது என்று யோசித்தபடி ஸ்வேதா நம்பரை பார்க்க அது ஒரு இன்டர்நேஷனல் கால் என்று புரிந்தது.சேர்மனாக இருக்குமோ என்று எண்ணியபடி போனை எடுக்க, அடுத்த முனையில் ஒரு பெண் குரல். 

அவள் பேசிய விதத்தில் இருந்து அந்த பெண் ஒரு பிரெஞ்சு பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்று யூகித்து ஸ்வேதா பிரெஞ்சு மொழியில் பேச தொடங்கினாள். அடுத்த முனையில் போன் எடுத்த அந்த பெண் 

"நீ ஸ்வேதா தானே. உனக்கு எப்படி பிரெஞ்சு மொழி தெரியும்" என்று கேட்க, 

"நான் ஸ்கூல்ல படிக்கும் போது பிரெஞ்சு ஒரு சப்ஜெக்ட் ஆக இருந்தது. என்னை எப்படி தெரியும்."

"கிருஷ் உன்னை பத்தி அடிக்கடி சொல்லி இருக்கான். அவனை ஒரு நாள் date-டுக்கு கூப்பிட்டேன், வர மாட்டேன்னு சொல்லிட்டான். He is in deep love with you. உன்னைய பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு. அவன் கிட்டநான் ஆபீஸ் விஷயமா அடுத்த மாசம் இந்தியா வரேன்னு சொல்லு, மத்த விஷயங்கள் நான் மெயில்ல அனுப்புறேன். பெஸ்ட் ஒப் லக். I know that you both will make a perfect couple". போனை வைத்தாள் ஷெரில்.

அவள் போனை வைத்த பின்னே யோசித்து கொண்டே இருக்க, fresh up செய்து வந்த கிருஷ் "என்ன ஸ்வேதா ஒரே சிந்தனைல இருக்க".
"ஒண்ணுமில்ல ஒரு பிரெஞ்சு பொண்ணு போன்ல கூப்பிட்டா"

"ஓ ஷெரில் கூப்பிட்டு இருக்கா. என்னவாம்"

"அவள் அடுத்த மாசம் இந்தியா வராலாம்."

"ஓகே, வேற என்ன சொன்னா."

"KK என்னை பார்த்து சொல்லுங்க, அவ உங்க கிட்ட dating வச்சுக்கலாம்னு சொன்னாளா?"

கிருஷ் யோசித்தான். "ஆமா அவ சொன்னா."

"நீங்க ஒத்துக்கலை. சரி தானே"

"ஆமா, எனக்கு நீ இருக்கும்போது எந்த girl friend-டும தேவை இல்லை, எனக்கு டேட்டிங் தேவை இல்லைன்னு சொல்லிட்டேன். என் கிட்ட அவ அதுக்கு அப்புறம் சரியா பேசுறது இல்லை."

ஸ்வேதா ஒன்றும் பதில் பேசவில்லை. சாப்பிட்டு விட்டு அவளும் எழுந்துரிக்க, 

கிருஷ் "சரி ஸ்வேதா நான் கிளம்பட்டுமா, டைம் ஆகுது. வீட்ல வேற யாரும் இல்லை. என்னை இங்கே பார்த்தா உன்னை யாராவது தப்பா நினைக்க போறாங்க."

கை கழுவி விட்டு வந்த ஸ்வேதா "உங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசணும். ஆபீஸ்ல நேரம் கிடைக்கிறதில்ல. வாங்க உள்ளே போகலாம்"என்று கதவை தாளிட்டு, உள்ளே பெட்ரூமுக்கு அழைத்து போனாள்.

"Bedல உட்காருங்க" என்று சொல்லி விட்டு அருகில் இருந்த பீரோ மேல் இருந்த அவளது hand bag-கை எடுக்க முயற்சி செய்ய,அவள் இடுப்பில் இருந்த புடவை விலகி அவள் குழிவான அந்த வயிறு தெரிய கிருஷ் பித்து பிடித்தது போல் ஆனான். 

எழுந்து அவள் இடுப்பை பிடித்து உயர்த்த அவள் bag-கை எடுத்து விட்டு அவனை "கீழே இறக்கி விடுங்க KK" என்று கெஞ்சினாள்.

ஏற்கனவே பல நாட்கள் பாரிஸ் இருந்ததால் அவன் அங்கே கண்ட காதல் காட்சிகளும், தனிமையும் வாட்டி எடுத்து இருக்க அவளை அப்படியே தூக்கி படுக்கையில் சாய்த்தான். முதலில் புடவை விலகிய அவளின் அழகான குழிவான வயிற்றில் முத்தம் இட்டு இடுப்பை இறுக்கி தழுவ திணறி போனாள்.

"KK ப்ளீஸ், உங்களுக்கு என்ன வேணும்."

"நீ தாண்டி வேணும். நீ இல்லாம பத்து நாள் காஞ்சு போயிருக்கேன்.அந்த பிரெஞ்சுகார பொண்ணு வேற என்னை உசுப்பேத்தி விட்டுட்டா. எனக்கு நீ வேணும்."

"வேணாம் KK.இது வரைக்கும் நாம தப்பு பண்ணாம இருந்தோம். இன்னும் கொஞ்ச நாள்ல நமக்கு கல்யாணம் ஆயிடும். அது வரைக்கும் வெயிட் பண்ணுங்க. please. இப்போதைக்கு என்ன வேணும்னு சொல்லுங்க நான் தரேன்."

"ஓ எங்கே நான் உன்னை அனுபவிச்சுட்டு ஏமாத்தி விட்டு போயிருவேன்னு நினைக்கிற. உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை.அப்படிதானே. சரி பரவாயில்லை. உனக்காக என்னை இது வரை கட்டுபடுத்திட்டேன். இப்போ உன் மேல பைத்தியமா இருக்கேன்.என்னை நீ ஒவ்வொரு தடவையும் சீண்டி விட்டு அப்புறம், இது எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்னு சொல்லும்போது நான் உன்னை நம்பி இருந்தேன் பாரு. நான் ஒரு இளிச்சவாயன் தான். அடிக்கடி நான் உங்க பொண்டாட்டி மாதிரின்னு சொல்லுவ, ஆனா நீ நடந்துக்கிரத பார்த்தா எனக்கு சந்தேகமா இருக்கு. நீ ரொம்ப புத்திசாலி. உனக்கு எது சாதகமா இருக்கோ அதை பயன்படுதிக்கிற."ஸ்வேதா வாயடைத்து நின்றாள்.

"KK ஏன் இப்படி பேசுறிங்க. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. நான் என்ன செய்யனும் சொல்லுங்க."

"நீ ஒண்ணும் செய்ய வேண்டாம் தாயே, நான் இப்போ கிளம்புறேன். "

வேகமாக ஓடி அவன் குறுக்கே நின்று கையை கூப்பி கெஞ்சினாள்.

"உங்களுக்கு என்ன வேணும், நான் தானே, இந்த உடம்பு தானே, எடுத்துக்கங்க. ஆனா எனக்கு உங்க மேல நம்பிக்கை இல்லைன்னு மட்டும் சொல்லாதிங்க. என்னால தாங்க முடியாது.

உண்மைய சொல்லணும்னா.எனக்கு என் மேல நம்பிக்கை இல்லை. உங்க கிட்ட என்னை நான் இழந்துடுவேன்னு பயந்துதான் நான் அப்படி மாத்தி மாத்தி பேசினேன்.ப்ளீஸ். உங்களுக்கு நான் தானே வேணும். அப்போதான என் மேல உங்களுக்கு நம்பிக்கை வரும். என்னை எடுத்துக்கங்க." என்று தன் சேலையை அவிழ்த்து நிற்க, அந்த அப்சரஸ் போன்ற அழகில் மயங்கி போய் நின்றான்.

தலையை உலுக்கி கொண்டு"வேணாம் ஸ்வேதா நீ என் மேல பரிதாபபட்டு இப்படி பேசுற, இது உண்மையான காதல் கிடையாது,நான் கிளம்புறேன்", அவளை விலக்க முயற்சி செய்ய, அவளுக்கு கோபம் தலைக்கு ஏறியது.

"டேய் உனக்கு அறிவு இருக்கா, ஒரு பொண்ணு இதுக்கு மேல என்னதான் விளக்கமா சொல்லுவா. புரிஞ்சுக்கோடா. இல்லைனா நீ போய் கிட்டே இருக்கலாம்". என்று சொல்லி விட்டு வேகமாக தன் பெட்ரூம் சென்று குலுங்கி குலுங்கி அழுதாள்.




No comments:

Post a Comment