Friday, August 21, 2015

மனசுக்குள் மான்சி - அத்தியாயம் - 19

சத்யன் மில்லுக்கு கிளம்பி கீழே வந்தபோது அனைவரும் டைனிங் ஹாலில் இருந்தனர், எல்லாருடைய முகத்திலும் சந்தோஷம் முகாமிட்டிருந்தது, அவர்களுடன் கார்த்திக்கும் உட்கார்ந்து கதை அளந்து கொண்டிருந்தான், சத்யனைப் பார்த்ததும் எல்லோரும் கப்சிப்பென்று அடங்கிவிட்டனர்,
ஆனால் வசுமட்டும் எழுந்து வந்து சத்யனின் இடுப்பை கட்டிக்கொண்டு “ அப்பாவை வர சம்மதம் சொன்னதுக்கு தாங்க்ஸ் அண்ணா” என்று உரிமையுடன் அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்

சத்யனுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது, அந்த சிறு பெண்ணின் அன்பு அவனை நெகிழ்த்தியது, அவள் கூந்தலை வருடியவாறு “ சரிம்மா டிபன் சாப்பிட்டு கிளம்புங்க நேரமாச்சு, நீ அனிதா, பாட்டி, அண்ணி, கார்த்திக் எல்லாரும் பெரிய வண்டில இப்படியே கிளம்புங்க, அவரு வேற கார்ல வரட்டும்” என்றவன் அவளையும் அழைத்துக்கொண்டு வந்த சேரில் அமர்ந்தான்



கார்த்திக்கிடம் அங்கே பேசவேண்டிய விபரங்களை சொன்னான், எந்த பிரச்சனையும் இல்லாமல் பேசும்மாறு கூறினான், அவ்வப்போது தனக்கு போன் செய்து விவரங்களை கூறுமாறு சொன்னவன் கார்த்திக்கின் கையைப்பிடித்து “ தயவுசெய்து மான்சியை விட்டு எங்கயும் போயிடாத கார்த்திக், அவளை தனியா விடாத, எதுவானாலும் எனக்கு போன் பண்ணி உடனே தகவல் சொல்லு” என்று உருக்கமாக வேண்டினான்

அவன் கையை தட்டிய கார்த்திக் “ நீங்க கவலைப்படாதீங்க பாஸ் எல்லாம் நல்லபடியா நடக்கும், அனேகமா நாங்க தட்டுகூட மாத்திட்டு கல்யாண தேதியை நிச்சயம் பண்ணிட்டு வந்துருவோம்” என்று கார்த்திக் அவனுக்கு தைரியம் சொல்ல..

“ டேய் இப்பவும் பாஸ் தானா, நீ உன் மச்சானுக்கு சம்மந்தம் பேச போறடா, என் வீட்டு மாப்பிள்ளையா தான் உன்னை அனுப்புறேன் என் மேனேஜரா இல்லை” என்று சத்யன் பொய் கோபத்தோடு முறைத்தான்

“ ஓகேடா மச்சான் என் தங்கச்சியையும் உன் தங்கச்சியையும் பத்திரமா பாத்துக்கிறேன் போதுமா” என்று சிரித்தான் கார்த்திக்

அப்போது சமையலறையில் இருந்து உணவு பாத்திரங்களோடு அனிதாவும் மான்சியையும் வந்து டேபிளில் வைத்தனர், சத்யன் மான்சியை பார்த்தான், அவள் அவனை கண்டுகொள்ளாமல் உணவு பரிமாறுவதில் ஈடுபட,
சத்யனுக்கு ஆத்திரமாக வந்தது, கொஞ்சநேரத்துக்கு முன்னாடி எப்படி கொஞ்சினா, இப்போ எதுவுமே தெரியாதமாதிரி ஆக்ட் பண்றா பாரு என்று ஆத்திரமாய் வந்தது சாப்பிட்டு முடியும்வரை அவள் அப்படியே இருக்க, சத்யன் எரிச்சலுடன் சாப்பிட்டு எழுந்தான்,

அவன் ஆபிஸ்க்கு கிளம்பி வெளியே வந்தபோது அவன் பின்னாலேயே காரின் அருகே வந்து நின்றவள், “ என்னாச்சு என் செல்லக்குட்டிக்கு கோபம் போலருக்கு” என்று கொஞ்சலாக பேசி பின்னாலிருந்து அவன் தோளில் கைவைத்தாள்
அவளை திரும்பி பார்க்காமலேயே தோளில் இருந்த கையை தட்டிவிட்டு கோபமாக காரில் ஏறினான், அவன் காரை ஸ்டார்ட் செய்வதற்குள் மான்சி சட்டென்று ஓடி மறுபுறம் கதவை திறந்து காரில் ஏறினாள்

திரும்பி அவளை பார்த்து முறைத்த சத்யன் “ இப்ப ஏன் காரில் ஏறின ஆபிஸ் போகனும் நேரமாச்சு இறங்கு கீழே” என்று அதட்டினான்

மான்சி காரைவிட்டு இறங்காமல் அவனை தலைசாய்த்து மையலுடன் பார்த்தாள், அவள் விழிகளில் காதல் வழிந்தது, இதழ்கள் தேனில் நனைந்தது போல் பளபளத்தது, தலைகுளித்த ஈரம் சுடிதாரின் கழுத்துப்பகுதியை நனைத்திருந்தது, நெற்றியில் விழுந்த கற்றை கூந்தலை விரலில் சுருட்டி விட்டபடி “ இறங்கட்டுமா?” என்றுதான் கேட்டாள்


ஆனால் சத்யனின் நிலை தடுமாற ஆரம்பித்தது, அவள்மீது இருந்து பார்வையை அகற்றமுடியாமல் தடுமாறினான், கழுத்திலிருந்து வழிந்து சுடிதாருக்குள் இருந்த பிளவில் இறங்கிய வியர்வையின் பின்னாலேயே போனது சத்யனின் பார்வை, வியர்வைதுளி எங்கோ மறைந்து போனது, ஆனால் சத்யன் தன் பார்வையை மட்டும் எடுக்கவில்லை, மான்சி சட்டென்று தனது துப்பட்டாவை இழுத்து கழுத்தை ஒட்டிப்போட, சத்யன் ஏமாற்றத்துடன் அவள் முகத்தை பார்த்தான்

மான்சி தனது நாக்கு நுனியை துருத்தி கண்ணை சிமிட்டி அவனுக்கு அழகு கான்பிக்க, சத்யன் சுத்தமாக தனது கட்டுப்பாட்டை இழந்தான், “ மான்சி” என்று அழைத்து அவளை இழுத்து அணைத்து முகத்தை நிமிர்த்தி வாயோடு வாய் வைத்து, அவள் துருத்தி காட்டிய நாக்கைத் தேடி இழத்து சப்பினான்,

மான்சி அவன் நெஞ்சில் சாய்ந்து அவன் இடுப்பை பற்றிக்கொண்டு, அவன் முகத்தோடு முகத்தை இழைத்து அவன் தரும் முத்தத்தை ரசித்தாள், அவன் வாயில் சிகரெட் நெடியுடன் சுரந்த உமிழ்நீரை ஆர்வத்துடன் உறிஞ்சினாள், இடுப்பில் இருந்த கையை எடுத்து அவன் சட்டை காலரைப் பற்றிக்கொண்டு தன்னுடன் இழுத்தாள்

சற்றுமுன் ஏங்கிய ஏக்கத்தை தனது முத்தத்தில் வெளிப்படுத்தினான் சத்யன், முத்தமிட்டு முடித்ததும் அவளை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு சீட்டில் சாய்ந்துகொண்டான், அவன் விரல்கள் அவள் கூந்தலை வருடியது, மான்சிக்கும் அவனை விட்டு விலக மனமில்லாது சவுகரியமாக முகத்தை வைத்துக்கொண்டு சாய்ந்துகொண்டாள்

“ மான்சி நீ வந்த இந்த கொஞ்ச நாள்ல நான் ரொம்ப பலகீனமாயிட்டேன், உன் விழித் தாமரை மலராமல் எனக்கு எதுவுமே செய்ய பிடிக்கலை, உன் அன்பு, உன் காதல், உன் பரிவு , உன் பார்வை, உன் தொடுகை, உன் முத்தம், உன் வாசனை, இது எல்லாமே எனக்கு மட்டுமே எப்பவுமே கிடைக்கனும்னு ஏங்குது, என்னுடைய உலகமே நீதான்னு ஆயிருச்சு, எனக்கு தேவையான எல்லாத்தையும் உன்கிட்ட இருந்து எடுத்துக்கனும்னு மனசு துடிக்குது, நிறைய சின்னச்சின்ன விஷங்களுக்கு கூட மனசு ஏங்குது, இனிமேல் ஒரு நிமிஷம் கூட உன்னை பிரிய முடியாது போலருக்கு, நீ என் அருகில் இல்லாத ஒவ்வொரு நிமிஷத்தையும் நான் வெறுக்குறேன் மான்சி, ஒருவேளை இவ்வளவு நாளா நான் வாழ்ந்த தனிமை வாழ்க்கையால் கூட இந்தமாதிரி எல்லாம் எனக்கு தோனுதான்னு புரியலை மான்சி, ஆனா இது வெறும் செக்ஸ் பீலிங்க்ஸ் இல்லை மான்சி, அதிகபட்ச காதல்னு வேனா சொல்லலாம், இவ்வளவு நாளா என் மனசுக்குள்ள இருந்ததை சொல்லிட்டேன், எப்பபார்த்தாலும் இப்படி கட்டிப்புடிச்சுக்கிறானேன்னு தவறா நினைக்காதே மான்சி, அது மட்டுமே எனக்கு இப்போதைய பலம்” என்று தனது பலகீனத்தை மறைக்காமல் மெதுவாக கூறிய சத்யன் அவள் முகத்தை நிமிர்த்தி “ என்னை பத்தி தவறா நினைக்காதே மான்சி” என்றான் கெஞ்சுதலாக...

அவன் கையில் இருந்தவாறே எக்கி அவன் கன்னத்தில் சத்தமிட்டு முத்தமிட்ட மான்சி “ உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நீங்க உங்க மனசுல இருக்குறத சொல்லிட்டீங்க, நான் இன்னும் சொல்லலை அவ்வளவுதான் வித்தியாசம்,, ஆனா உங்களைவிட நான்தான் காதலிக்கிறதுல ஒருபடி மேலே போய்ட்டேன்” என்றாள்.

அவளுக்கும் தனக்கும் இருக்கும் சிறு இடைவெளியை மேலும் இறுக்கி அணைத்து குறைத்தபடி “ எப்படி சொல்ற கண்ணம்மா?” என்றான் வார்த்தைகளை காதலில் நனைத்து...

“ ம் நீங்க என்னை தொடனும்னு மட்டும்தான் கற்பனை பண்ணிருக்கீங்க, ஆனா நான் நம்ம பசங்களை ஸ்கூலுக்கே அனுப்பிட்டேன் தெரியுமா?” என்று கூறிவிட்டு வெட்கத்துடன் அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்

சத்யனுக்கு தொண்டையை அடைப்பதுபோல இருந்தது “ மான்சி” என்று கலங்கிய குரலில் அவளை அணைத்தவன் “ என் தனிமை வாழ்க்கையை போக்க வந்த தேவதை நீ, எனக்குன்னு ஒரு மனைவி நிறைய குழந்தைகள் இதுக்கெல்லாம் ரொம்ப ஏங்கியிருக்கிறேன் மான்சி,, இந்த சில நாட்கள் உன்னை எப்படி பிரிஞ்சிருக்கப் போறேன்னு தெரியலை மான்சி, எப்பவுமே மொபைலை கையில வச்சுக்க நான் எப்ப வேனும்னாலும் கால் பண்ணுவேன், ” என்று உணர்ச்சிகரமாக பேசினான் சத்யன


“ சரி ஆபிஸ்க்கு நேரமாச்சுன்னு சொன்னீங்களே” என்று அவனிடமிருந்து விலகி அமர்ந்த மான்சி “ ஆனா உங்களுக்கு ஒரு அழகான குடும்பம் இருந்து தனிமை வாழ்க்கையை தேர்ந்தெடுத்தது நீங்க,, ஒத்துக்கலைனாலும் நீங்க ஒரு குடும்பத்துக்கு தலைவன்தான் சத்யா ” என்றவள் சட்டென்று கார் கதவை திறந்து இறங்கி கதவை மூடிவிட்டு ஜன்னல் வழியாக தலையை உள்ளே நீட்டி....

“ இப்போ உங்களுக்கு ஓரளவுக்கு புரிஞ்சிருக்குமே இயற்கையான உணர்ச்சிகளுக்கு முன்னாடி மனிதன் கைவிலங்கிடப்பட்ட கைதி என்று, அவனால இயற்கை அழைத்துச்செல்லும் வழியில் தான் போகமுடியும், என்னோட புருஷன் தனக்கொரு நீதி எதிராளிக்கு ஒரு நீதி என்று தவறாக சிந்திக்கமாட்டார்னு நெனைக்கிறேன்” என்று முகம் நிறைந்த புன்னகையுடன் கூறினாள்

சத்யனுக்கு திகைப்பாக இருந்தது, இவள் இப்போது என்ன சொல்ல வருகிறாள் என்று குழப்பத்துடன் “ மான்சி என்ன சொல்ற” என்று கேட்டான்

“ மனசுல எந்த குழப்பமும் இல்லாம நல்லா தெளிவா யோசிங்க மச்சான் எல்லாம் புரியும்,, நான் போறேன் உள்ள உங்க தங்கச்சிங்க என்னை தேடுவாங்க” என்று சொல்லிவிட்டு சிட்டாய் பறந்துவிட்டாள் மான்சி

சத்யன் சற்றுநேரம் அப்படியே இருந்தான், அதெப்படி இயற்கையான உணர்ச்சிக்கு முன்னாடி எல்லாரும் ஒன்னாகமுடியும்? மனுசனுக்கு கட்டுப்பாடு வேண்டாமா? என்று அவனே அவனிடம் கேள்வி கேட்டுக்கொண்டான்,

‘ இப்போ நீ கட்டுபாட்டோட இருந்தியா சத்யன், நேற்று இரவு மான்சி சுதாரிக்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும்’ என்று அவன் மனம் அவனை திருப்பி கேள்வி கேட்டது, ‘’ம்ம் அதெப்படி மான்சி என் காதலி, இன்னும் சிலநாட்களில் மனைவியாகப் போகிறவள், என் அப்பாவின் கதை அப்படியில்லையே’ என்று சத்யன் தன் மனதுடன் எதிர்வாதம் செய்தான்

‘ உன் அப்பாவோட கதை அப்படியில்லை என்று உனக்கு தெரியுமா சத்யா’ என்று மனது பதில் வாதம் செய்தது,

சத்யனுக்கு பொட்டில் அடித்தது போல் இருந்தது, மனம் குழம்பியது, “ அப்படின்னா என் அப்பாவும் அனிதாவின் அம்மாவும் காதலர்களா, அப்படின்னா என் அம்மா, அவங்க என் அப்பாவுக்கு யாரு வெறும் மனைவி மட்டுமா? காதலி இல்லையா?” என்று சத்யனின் மனது குழம்பியது

“ ச்சே குளிர்ச்சியா ஒரு முத்தத்தை குடுத்துட்டு நெஞ்சுல நெருப்பை மூட்டிட்டு போயிட்டாளே” என்று நெற்றியில் அறைந்து கொண்டு எரிச்சலுடன் காரை கிளப்பினான் சத்யன் ,

கிருபா தன் மகன் தன்னை அனுமதித்தை நம்பமுடியாமல் மறுபடியும் மறுபடியும் கேட்டார், ரஞ்சனா பூஜையறைக்குப் போய் வசந்தியின் புகைப்படத்துக்கு நேரே அமர்ந்து கண்ணில் நீர்மல்க கைகூப்பி “ இனி எல்லாம் நல்லதே நடக்கவேண்டும் என்று வேண்டினாள், பூஜையறையில் இருந்து வந்த ரஞ்சனாவை அணைத்து தன் தோளில் சாய்த்துக்கொண்டார் கிருபா
அடுத்த அரைமணிநேரத்தில் கிருபாவும் ரஞ்சனாவும் காரில் கிளம்பினர்,, மான்சி அனைவருடனும் ஊரில் போய் இறங்கியதும், காரில் வந்து இறங்கிய அந்த பட்டணத்து கூட்டத்தை அந்த பட்டிக்காட்டு ஊரே கூட்டமாக வேடிக்கை பார்த்தது,

இவர்களை என்னவென்று சொல்லி அறிமுகப் படுத்துவது என்ற குழப்பத்துடனேயே மான்சி தனது வீட்டுக்குள் நுழைந்தாள், ஆனால் அவள் சொல்லாமலேயே அனைவரும் வாசலுக்கு வந்து கிருபா குடும்பத்தினரை வரவேற்றனர், அவர்களுக்கு பின்னால் ஜெகன் நின்றிருந்தான், மான்சிக்கு புரிந்துபோனது, நன்றியுடன் தனது அண்ணணை பார்த்தாள்




அது இரவானதால் எல்லோரும் முதலில் சாப்பாட்டை முடித்துக்கொண்டு மொட்டைமாடியில் நிலவின் வெளிச்சத்தில், விரித்த ஜமுக்காளத்தில் அமர்ந்து கல்யாண பேச்சை ஆரம்பித்தனர், மான்சியின் சித்தப்பா சித்தி பாட்டி அண்ணன் என அனைவருமே கிருபாவின் வார்த்தைக்கு கட்டுப்பாட்டனர்

மான்சியை சத்யனுக்கு கொடுக்க எல்லோருக்கும் சம்மதமாகவே இருந்தது,, ஆனால் மான்சியின் தாய்மாமன் வீட்டு பிரச்சனையால் பயந்தனர், கிருபா நான் அவங்ககிட்ட பேசிக்கிறேன் நீங்க பயப்படாம கல்யாண ஏற்பாட்டை செய்யுங்க” என்று தைரியம் கூறினார்

ஆனால் மறுநாள் காலையே ஒரு வேனில் வந்து மான்சியின் மாமன் வீட்டினர் வந்து இறங்க அனைவரும் கொஞ்சம் கலங்கித்தான் போயினர், கார்த்திக் மட்டும் துணிச்சலாக அவர்களிடம் பேசினான் ,

அவர்களுக்கு மான்சியைவிட சொத்து மட்டுமே குறிக்கோளாக இருந்தது, கூட்டத்தை விலக்கி வந்த கிருபா “ எங்களுக்கு அந்த நிலம் வேண்டாம்பா,, அதுபோல பலநூறு மடங்கு சொத்து என் மருமகளுக்கு என்னால வாங்கித்தர முடியும், அதனால நீங்க நாளைக்கு பத்திரம் ரெடி பண்ணி எடுத்துக்கிட்டு வாங்க எழுதி ரிஜிஸ்டர் பண்ணி கொடுத்துறோம், இல்ல எங்களுக்கு பொண்ணும் வேனும்னா நீங்க கம்பிதான் எண்ணனும், அவ மேஜர் அதனால அவ இஷ்டப்படி தான் அவ வாழ்க்கை அமையனும், நீங்க அவளை வற்புறுத்தினால் நான் போலீஸ்க்கு போகவேண்டியிருக்கும், ” என்று சமயோசிதமாக மிரட்டி பேசியதும் வந்த கூட்டம் தங்களுக்குள் பேசிவிட்டு சரியென்று கூறி கலைந்து சென்றனர்
வீட்டுக்குள் வந்த கிருபா “ உங்க யார்கிட்டயும் கேட்காம நான் நிலம் வேண்டாம்னு சொல்லிட்டேன், அதனால உங்களுக்கு எதுவும் வருத்தமில்லையே? ஏன்னா அந்த சொத்தில் ஜெகனுக்கும் உரிமையிருக்கு, அதனாலதான் கேட்கிறேன்” என்று கிருபா கேட்டார்

“ அய்யோ அப்படியெல்லாம் எதுவுமில்லை சார் , எப்படியோ பிரச்சனை தீர்ந்தால் சரி, அதோட அதை மான்சிக்குத்தான் கொடுக்கனும்னு நான் முடிவு பண்ணிருந்தேன், எனக்கு எதுவும் வேண்டாம் சார்” என்று ஜெகன் சொல்ல அதையே மற்றவர்களும்சொன்னார்கள்

கார்த்திக் நடந்தவற்றை சத்யனுக்கு போன் செய்து கூறினான், கிருபா சாமர்த்தியமாக பேசியதை பெருமையாக கார்த்திக் கூற சத்யன் அமைதியாக கேட்டான், சத்யன் இறுதியாக “ சரி கார்த்திக் நாளைக்கு அவங்க வந்து எதுவும் பிரச்சனை பண்ணிட போறாங்க ஜாக்கிரதையா இருங்க” என்றவன் சிலவினாடிகள் அமைதிக்கு பிறகு “ அவர்கூடயே இரு கார்த்திக், ரொம்ப சத்தம் போட்டு பேசவிடாதே, கொஞ்சம் கவனமா பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டிக்க கார்த்திக் பிரம்மிப்பாக கையில் இருந்த போனையே பார்த்தான்

‘இதைத்தான் தானாடாவிட்டாலும் தன் சதையாடும்னு சொல்வாங்களோ’ என்று எண்ணியபடி வீட்டுக்குள் போய் அனிதாவிடம் சொல்ல அடுத்த நிமிடம் விஷயம் அனைவருக்கும் பரவியது

சத்யனின் இந்த சிறிய மாற்றம் அனைவரையும் இமயம் அளவுக்கு சந்தோஷப்படுத்தியது, ஆனால் மறுநாள் காலை கிருபா மான்சி வீட்டினருடன் பத்திரபதிவு அலுவலகத்திற்கு போனபோது அங்கே மான்சியின் தாய்மாமனும் வேறு ஒரு பெரியவரும் மட்டுமே வந்திருந்தனர்





No comments:

Post a Comment