Thursday, August 6, 2015

கண்ணனை நினைக்காத நாள் இல்லையே - அத்தியாயம் - 3

"ஹரி என்ன நம்ப முடியலையா. அவர் நம்ப கம்பனில இன்னும் பத்து வருஷமா இருக்கிறதா bond போட்டுரிந்தார். இப்போ நம்ம போட்டி கம்பெனி இரண்டு மடங்கு சம்பளம் கொடுக்கிறேன்னு சொன்ன உடனே,பதவியை ராஜினாம பண்ணிட்டார். காரணம் கேட்டபோது உடல் நிலை சரி இல்லைன்னு சொல்லி இருக்கார். "

"எனக்கு கிடைத்த ரகசிய தகவல்கள் படி அவர் ஒரு மாசம் கழிச்சு சேர போறார்னு தெரிஞ்சுது. இப்போ நாம வெளியில தேடி ஆள் கண்டுபிடிச்சா கூட புது ஆள் சேர ரெண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும். ஆனா CEO இல்லாம இந்த கம்பெனி யை நடத்துவது முடியாத கார்யம். "



"நானும் இரண்டு வெளி நாட்டு கம்பனிகள் கூட
 tie up போட இருப்பதால் என்னாலயும் CEO வேலைகளை பார்க்க முடியாது. நீங்க ரெண்டு பெரும் இந்த கம்பெனி யின் முக்கிய நபர்கள் உங்களுக்கு ஏதாவது பிளான் தோணுதா?"

கிருஷ் கொஞ்சம் நேரம் யோசித்து"சார் நம்ம ஆபீஸ்ல இருக்க கூடிய தகுதியான நபர, எந்த டிபார்ட்மெண்டல இருந்தாலும் சரி,நாம கண்டு பிடிச்சு CEO in charge அப்பிடின்னு இந்த மூணு நாலு மாசம் போட்டு உங்களோட மேற்ப்பார்வைல நடத்தினா, அதுக்குள்ள வெளியில இருந்தும் ஆளை செலக்ட் பண்ணி வேலைல சேர வைக்கலாம்".

"நல்ல யோசனை கிருஷ்ணா. உன் மனசில யார் இருக்கா?"

"சார் ஹரி தான் சார் சரியான ஆள்."

சிரித்து கொண்டே சுப்ரமணியம் ஹரியிடம் கேட்க, அதற்கு ஹரி, 

"எனக்கு என்னமோ கிருஷ்ணா சரியாக இருப்பார்னு தோணுது. எல்லா அலுவலகர்களுக்கும் தெரிந்த நபர். நம்மளோட ஹோசூர் பாக்டரி யில பல வருஷம் வேலை பார்த்த அனுபவம். அதோட நம்பக தன்மை. இந்த தகுதிகள் கிருஷ்ணாவுக்கு மட்டும் தான் இருக்கு" என்று சொல்ல, சுப்ரமணியம் எழுந்து நின்று கை தட்டினார்.

"Well said, Hari. I am proud of you my son" "கிருஷ் இப்போ புரிஞ்சதா யார்னு."

"சார் இது குருவி தலைல பனங்காய் வக்கிற மாதிரி. என்னால எப்படி சார் முடியும்."

"கிருஷ், நான் உன் கூட தினமும் வீடியோ கான்பிரன்சிங் மூலம் தினமும் பேசுறேன். ஒரு மாசத்ல இது அத்துபடி ஆகிடும். உதவி செய்றதுக்கு உன்னோட நண்பன் ஹரி இருக்கான். வேற என்ன உதவி வேண்டும் கேளு" என்று கேட்க, கண் கலங்கி நின்றான் கிருஷ்.

"சார் நீங்க என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுக்கிரிங்க எனக்கு தகுதி இருக்கான்னு தெரியலை. ஆனா நீங்க சொன்ன மாதிரி ஹரி கூட இருந்தா எனக்கு ஆயிரம் யானை பலம் சார். நீங்க என் மேல வச்சிருக்க நம்பிக்கைக்காக, கம்பெனி இக்கட்டான இந்த நிலைல, சவாலான இந்த பொறுப்பை நான் ஏத்துக்கிறேன்".

சுப்ரமணியம் இண்டர் காமில் கீதாவை அழைக்க, "கீதா உடனே சர்குலர் ரெடி பண்ணுங்க." 

NOTICE

Dear Staff

I am pleased to inform you that V Krishna Kumar, our CFO is hereby appointed as CEO designate and CFO with immediate effect. All departments including marketing, manufacturing, Admin, HR, Finance will report to him and he will report to me.

By order

K Subramaniam
Chairman


கீதா "congrats கிருஷ்ணா" என்று சொல்லி கை குலுக்கி விட்டு, அந்த சர்குலர் டைப் செய்து சுப்ரமணியத்திடம் கையெழுத்து வாங்கிநோட்டீஸ் போர்டில் ஓட்ட, அதே நேரத்தில் சுப்ரமணியம் ஈமெயில் மூலம் அனுப்ப, எல்லாருக்கும் அந்த செய்தி வந்தது. 

கிருஷ் அவன் அறைக்கு திரும்ப எல்லா ஊழியர்களும் அவன் அறைக்கு வந்து கை குலுக்கி வாழ்த்து சொன்னார்கள். 

ஸ்வேதாவுக்கு என்ன நடக்கிறதென்று புரியவில்லை. இப்போதுதான் அவனை பார்த்து இந்த சின்ன வயசில இந்த அளவுக்கு முன்னேற்றமா என்று ஆச்சர்யபட்டோம். 

அதற்குள் இப்படி ஒரு திருப்பமா? என்று நம்ப முடியாமல் தன் தலையை சிலிர்ப்பி கொண்டாள்.

இப்போது admin டிபார்ட்மென்ட் கிருஷ்ணாவுக்கு ரிப்போர்ட் செய்வதால் எல்லாரும் அவன் அறைக்கு சென்று வாழ்த்தி சொல்லி விட்டு திரும்ப, ஸ்வேதா கடைசியாக சென்றாள். ஒரு வேளை தன்னோடு சரியாக பேசுவானோ என்று தயங்கி கொண்டே நுழைய,கிருஷ்ணாவுக்கு ஸ்வேதாவை கண்டவுடன் மனதுக்குள் சந்தோஷம். "உட்காருங்க ஸ்வேதா" என்று சொல்லி ஸ்வீட் கொடுத்தான்.

"ஸ்வேதா நீங்க வந்த நேரம்தான் எனக்கு பதவி உயர்வு வந்திருக்குன்னு நினைக்கிறேன். நன்றி, மற்றும் வாழ்த்துக்கள்"

குழம்பி போனாள் ஸ்வேதா. "இவனுக்கு பதவி உயர்வு வர நான் எப்படி காரணமாக இருப்பேன். ஒரு வேளை கிண்டல் செய்கிறானோ"என்று அவன் முகத்தை பார்க்க, அவன் குறும்பு சிரிப்பில் கொஞ்சம் மயங்கி போனாள்.

ஸ்வீட் எடுத்து கொண்டு அவள் இருக்கைக்கு திரும்ப, அருகில் இருந்த காவேரியிடம் "கிருஷ்ண குமார் எப்படி?" என்று கேட்க.

"He is GEM of persons. எத்தனையோ தடவை நான் ஆபீஸ்ல இருந்து லேட் ஆக போறதை பார்த்திட்டு நான் கிளம்புற வரைக்கும் வெயிட் பண்ணிட்டு, நான் ஆட்டோ இல்லை பஸ்ல ஏறிய பின்னாடிதான் வீட்டுக்கு போவார்.அவர் டிபார்ட் மெண்டல வேளை பார்க்கிற பொண்ணுங்களை வீட்ல விட்டுட்டு தான் அவர் போவார். ஒருத்தர் கிட்ட கூட அவர் தப்பா நடந்து கிட்டதில்லை. ஆமா நீ எதுக்கு அவர் பத்தி கேக்குற"

"இல்லை ஒண்ணுமில்லை. சும்மா தெரிஞ்சுக்கத்தான்." அவள் திரும்பி தன் வேலையில் மூழ்க, கொஞ்சம் தள்ளி இன்டெர் காமில் காவிரி கிருஷ்ணாவுடன் பேசி கொண்டு இருந்தாள். கேபினில் இருந்த கிருஷ் முகத்தில் ஒரு விஷம புன்னகை.

அடுத்த வாரம் திங்கள் கிழமை உலக கோப்பை இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்பதால்,அலுவலகத்தில் நாலு டிவி ஏற்பாடு செய்ய,மதியம் முதல் ஒரே கொண்டாட்டம் தான். இந்த விஷயத்துக்கு கிருஷ் சேர்மனிடம் முதலிலே அனுமதி வாங்கி விட்டான். ஒவ்வொரு டிபார்ட்மென்ட் சென்று அவன் கைகளை மற்றவர்களின் கைகளை தட்டி உற்சாகபடுத்த எல்லோரும் சந்தோசப்பட, ஒரே கொண்டாட்டம் தான்.

Admin டிபார்ட்மென்ட் வர, எல்லோரிடமும் கைதட்டி உற்சாகபடுத்த, ஸ்வேதா அருகில் வந்தபோது அவளை கண்டு கொள்ளாமல் காவிரியின் கைகளை தட்டி உற்சாக படுத்தினான் கிருஷ். ஸ்வேதாவுக்கு ஒன்றும் புரியவில்லை, ஏன் எப்படி செய்கிறான் என்று.

மேட்ச் முடியும் வேளையில் பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் விழ எல்லோரும் விசில் அடித்து, கை குழுக்க, அருகில் கை குழுக்க வந்த ஸ்வேதாவை கண்டஉடன் ஹரி இதோ வரேன் என்று சொல்லி விட்டு விலகி ஓடினான். ஸ்வேதா முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது.

எல்லோரும் எட்டு மணி அளவில் ஆபீஸ் விட்டு செல்ல, ஸ்வேதா மட்டும் அவள் சீட்டில் உட்கார்ந்து இருந்தாள். எல்லோரும் கிளம்பி விட செக்யூரிட்டி ஸ்வேதா சீட்டில் இருந்த விளக்கை மட்டும் விட்டு விட்டு மற்ற விளக்குகளை அணைத்து விட்டான். 

அங்கே கிருஷ் தன் கேபினில் இருந்து ஸ்வேதா வை கவனித்து கொண்டுரிந்தான். இன்டெர் காமை எடுத்து ஸ்வேதா எண்ணில் கூப்பிட,ஸ்வேதா போனை எடுத்தாள்.




"என்ன ஸ்வேதா நீங்க வீட்டுக்கு கிளம்பலையா?"

"இல்லை சார். கொஞ்சம் வேலை அதிகமா இருந்தது. இப்போ முடிஞ்சுரிச்சு". 

"சார்.... உங்க கிட்ட நான் பேசணும். இப்போ வரட்டுமா?"

"என்ன விஷயம்?.... சரி கான்பெரன்ஸ் ரூம் வாங்க பேசலாம் " என்று சொல்ல, இருவரும் சென்றனர்.

முதலில் உள்ளே நுழைந்த கிருஷ் ஒரு சேரில் அமர, பின்னால் வந்த ஸ்வேதாவை அருகில் இருந்த சேரில் உட்கார சொல்லி விட்டு 
"என்ன சொல்லுங்க ஸ்வேதா ஏதாவது வேலைல பிரச்சனையா?"

"இல்லை சார்,"

"ஓகே கூட வேலைபார்க்கிற யாராவது தொல்லை பன்னுராங்களா"

"இல்லை சார்"

"உங்களுக்கு ஏதாவது பர்சனல் ப்ரோப்லமா?"

"இல்லை சார்" என்று சொல்லி விட்டு நிமிர்ந்த ஸ்வேதா கண்கள் கலங்கி இருக்க, பதறி போனான் கிருஷ்.

"ஒரு வேளை நான் உங்க கிட்ட ஏதாவது தவறா நடந்துகிட்டேனா?"

"இல்லை சார், நீங்க என் கிட்ட சரியாவே பேச மாட்டேன்கிரிங்க. எல்லார் கூடவும் சாப்பாடு கேட்டு வாங்குரிங்க. என் கிட்ட மட்டும் வாங்கிக்க மாட்டேங்கிரிங்க. இன்னைக்கு கிரிக்கெட் மேட்ச் நடக்கிரப்போ எல்லார் கூடயும், கை குலுக்கி, கைதட்டி சந்தோசபட்டிங்க.ஆனா நான் பக்கத்தில வந்தா மட்டும் விலகி விலகி போறீங்க. ஏன் சார் நான் தீண்ட தகாதவளா? சொல்லுங்க." என்று கண் கலங்கி நிற்க, என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஒரு கணம் திகைத்து நின்றான் கிருஷ்.

எழுந்து அவள் அருகில் வந்த கிருஷ்"உங்க மேல எந்த தப்பும் இல்லை ஸ்வேதா. தப்பு எல்லாம் என் மேல தான்.உங்கள நான் பார்த்த முதல் நாள்ல இருந்து என் மனசு அலை பாய ஆரம்பிசுடிச்சு. உங்களோட அழகும், அமைதியும் என்னை கவர்ந்துடுச்சு.கொஞ்ச கொஞ்சமா உங்க கிட்ட என்னை இழக்க ஆரம்பிச்சேன். "

"அப்போதான் உங்களோட மனசு தெரியாம உங்களை விரும்புறது தவறுன்னு தெரிஞ்சுது. நீங்க என் கிட்ட வரும்போதெல்லாம் எனக்கு பயம் வர ஆரம்பிசுடிச்சு.ஒரு வேளை என்னை மீறி நான் தப்பு பண்ணிடுவேன்னு உங்களை விட்டு நான் விலக ஆரம்பிச்சேன்."

ஸ்வேதா முகத்தில் பெருமை தாண்டவமாடியது. இந்த கம்பெனி மதிக்கும் பெரிய நபர், பெண்களின் மனதை கவர்ந்தவன் தன்னை விரும்பிகிறான் என்று தெரிந்தவுடன் அவளுக்கு முகம் நாணத்தில் சிவந்தது.

"ஆமா பயம்னு சொன்னின்களே அது என்ன?" என்ற கேள்வியை அவள் முடிக்கும் முன்னே, அவளின் இடுப்பை ஒரு கையால் அணைத்து, மறு கையால் அவள் தாடையை உயர்த்தி, அவளின் பிங்க் நிற உதட்டை கவ்வினான். 

ஸ்வேதா நிலை குலைந்து போக, தன் நாக்கை நுழைத்து அவளின் தேன் ரசத்தை உறிஞ்ச,மகுடிக்கு அடங்கிய பாம்பாக கிருஷ்ணாவின் லீலைகளில் மயங்கினாள் ஸ்வேதா.

"Sorry நான் பயந்த மாதிரியே தப்பு நடந்துடிச்சு" என்று சொல்லி விட்டு விட்ட இடத்தில இருந்து தன் முத்தத்தை தொடர்ந்தான். முதலில் திமிறிய ஸ்வேதா பிறகு அடங்கி போய் ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்தாள். நொடிகள், நிமிடங்களாக மாறின.கிருஷ்ணனின் ராச லீலை தொடங்கியது.





No comments:

Post a Comment