Monday, August 17, 2015

மனசுக்குள் மான்சி - அத்தியாயம் - 6

சத்யனுக்கு உள்ளுக்குள் யாரோ வீணையை மீட்டி இன்னிசை நாதம் இசைத்தார்கள்,, அதை முகத்தில் காட்டாமல் “ அப்போ நீ சொல்றத பார்த்தா,, எனக்கு எதெல்லாம் பிடிக்காதுன்னு உனக்கு தெரியுமா?” என்று கேட்டுவிட்டுஅவளின் குனிந்த தலையை கூர்ந்து பார்த்தான் ,,

தெரியும் என்பதுபோல் அவள் தலை தயக்கமின்றி உடனே அசைந்தது

“ என்னைப்பற்றி வேறென்ன தெரியும் மான்சி” என்று மறுபடியும் கேள்வியை தொடுத்தான்

இப்போதும் தலை நிமிராமல் “ எல்லாமே தெரியும்” என்றாள் மான்சி
சத்யன் அடுத்து எதுவுமே கேட்கவில்லை,, ஓடிச்சென்று அவளை அள்ளி அணைக்க பரபரத்த கைகளை அடக்க சிரமப்பட்டான்,, அவள் முகத்தை பார்க்க ஆவலாய் இருந்தது

“ உனக்க எப்படி தெரியும்,, என்று கேட்டுவிட்டு “ப்ளீஸ் நிமிர்ந்து பார்த்து பேசு மான்சி” என்றான்

நிமிர்ந்த மான்சி அவன் முகத்தை சிலவினாடிகள் பார்த்தாள்,, அவன் முகத்தில் இருந்த எதிர்பார்ப்பு அவளை வெட்கப்பட வைத்தாலும் மீண்டும் தலைகுனியாமல் பார்வையை வேறுபுறம் திருப்பி “ காலேஜ் ஹாஸ்டலில் இருந்தப்ப அனிதா அடிக்கடி உங்களைப்பத்தி தான் நிறைய பேசுவா,, அது என் மனசுல பதிஞ்சு போச்சு,, உங்களோட விருப்பு வெறுப்புகள் எல்லாமே எனக்கு தெரியும்,, முதன்முதலா உங்களை சந்திக்க வரும்போது உங்களுக்கு பிடிக்காத ஒன்றை செய்ய எனக்கு தைரியம் இல்லை” என்றாள் மெல்லிய குரலில்

அவளின் வார்த்தைகள் மனதை மயிலிறகால் வருடியது “ அப்போ எனக்கு பிடிக்காத எல்லாமே உனக்கும் பிடிக்காதா மான்சி” என்று ஆர்வமாக கேட்டான்


சட்டென்று நிமிர்ந்த மான்சி “ நான் அப்படி சொல்லலை,, உங்களுக்கு பிடிக்காததை செய்து முதல்லயே வெறுப்பை சம்பாதிக்க விருப்பமில்லை அவ்வளவுதான் ,, மத்தபடி உங்களோட நடவடிக்கைகள் சிலது எனக்கு சுத்தமா பிடிக்காது” என பட்டென்று பதில் சொன்னாள் மான்சி

திகைப்பை முகத்தில் காட்டாது மறைத்த சத்யன் “ எந்த நடவடிக்கைகள் பிடிக்கலை” என்றான்

அவன் முகத்தை நேராக பார்த்த மான்சி “ ம் எப்பவோ நடந்த ஒரு விஷயத்துக்காக,, இப்பவும் மனசுல வஞ்சம் வச்சுகிட்டு பெற்ற தகப்பனை போய் பார்க்காம இருக்கீங்களே அது பிடிக்கலை,, உங்களோட இழப்பு பெரிசுன்னாலும் அதுக்காக எதிர் தரப்பில் என்ன நடந்ததுன்னு கூட விசாரிக்காம இத்தனை வருஷமா அவங்களுக்கு தண்டனை குடுக்குறீங்களே அது பிடிக்கலை,, தங்கைகள் மேல் உண்மையான பாசம் வச்சிருந்தும் அதை வெளியே காட்டாமல் அவங்களை அவாய்ட் பண்றது எனக்கு பிடிக்கலை” என்று மான்சி படபடவென்று அவனது குறைகளை சுட்டிக்காட்டி பேசினாள்

இதே வேறு ஒருவராக இருந்தால் சத்யனின் பார்வையால் பொசுங்கி போயிருப்பார்கள்,, ஆனால் மான்சி அஞ்சாமல் அவனை நேருக்குநேர் பார்த்தாள்
முகம் இறுக “ பதினாறு வருஷமா நான் பட்ட அவமானங்கள் தெரியுமா? என்னோட வலிகள் உனக்கு தெரியுமா? தெரிஞ்சா இப்படி பேசமாட்ட மான்சி “ என்று சத்யன் கோபத்தின் உச்சியில் இருந்தாலும் குரலை அடக்கி பேசினான்


மான்சியும் விடாமல் “ ஏன் தெரியாது,, எல்லாம் தெரியும்,, ஆனா அவங்க மட்டும் சந்தோஷமா இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமா,, அவங்களுடைய இழப்பு உங்களுக்கு புரியுமா,, நீங்க பட்டதைவிட அவங்களுடைய அவமானம் பலமடங்கு,, வீட்டுக்கு ஒரே மகனை வீட்டைவிட்டு விரட்டிட்டாங்கன்னு ரஞ்சனா ஆன்ட்டியை எவ்வளவு பேர் இன்னும் கேவலமா பேசுறாங்கன்னு தெரியுமா உங்களுக்கு,, அனிதாவை பார்க்க ஹாஸ்டலுக்கு வரும்போதெல்லாம் அவங்க அழுத அழுகையை நேரில் பார்த்தவ நான்,, எனக்கு தெரியும் அந்த கண்ணீர் பொய்யில்லைன்னு” என்று மான்சி ஆவேசமாக பேசிக்கொண்டு இருக்கும்போதே,, பியூன் கதவை தட்டிவிட்டு காபியுடன் உள்ளே வந்து மேசையில் வைத்துவிட்டு வெளியேறினான்

பியூன் வந்ததும் இருவரும் அமைதியானார்கள்,, சத்யன் காபியை அவளிடம் நகர்த்தி “ எடுத்துக்கோ” என்று சொல்லிவிட்டு தனது காபியை ஸ்பூனால் கலக்கினான்

மான்சி காபியை தொடாமல் “ காலையில அனிதா போன் பண்ணாளா?” என்று சத்யனைப் பார்த்து கேட்க

அவளை ஆச்சர்யமாக பார்த்த சத்யன் “ ம்ம் பண்ணா” என்றான்

“ அதைப்பத்தி என்ன முடிவு பண்ணியிருக்கீங்க” என்று கேட்டாள் மான்சி
அதற்க்கு என்ன பதில் சொல்வது என்று அமைதியாக இருந்த சத்யன் பிறகு “ முடிவுகள் எல்லாம் ஏற்கனவே எடுத்ததுதான்,, நான் அந்த வீட்டுக்குள்ள கால் வைக்கமாட்டேன்” என்றான் உறுதியாக

மான்சி எதுவும் பேசவில்லை பட்டென்று எழுந்துகொண்டாள்,, “ நேரமாகுது நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு கதவை நோக்கி நகர்ந்தாள் 


பட்டென்று அவள் கிளம்புவாள் என்று எதிர்பார்க்காத சத்யன் அவசரமாக “ இரு மான்சி இந்த காபியை குடிச்சுட்டு போ மான்சி” என்றான்

திரும்பி அவனை பார்த்த மான்சி “ எனக்கு வேண்டாம்,, இந்த நேரத்தில் காபி குடிச்சு எனக்கு பழக்கமில்லை” என்று கூறிவிட்டு கதவை அனுகினாள்

“ அதை ஆர்டர் பண்ணும்போதே சொல்ல வேண்டியதுதானே,, ச்சே நேஷனல் வேஸ்ட்” என்றான் குரலில் எரிச்சலுடன்

கதவருகே சென்று நின்று திரும்பிய மான்சி “ எனக்கா காபி சொன்னீங்க,, நான் உங்களுக்கும் பியூனுக்கும்ல நெனைச்சேன்,, சரி ரெண்டயும் மிக்ஸ் பண்ணி நீங்களே குடிங்க,, எதுவும் நேஷனல் வேஸ்ட் ஆகாது ” என்று சொல்லிவிட்டு கதவை திறக்க குமிழில் கைவைத்தாள்

அவள் தன்னை நக்கல் செய்கிறாள் என்று சத்யனுக்கு புரிந்தது,, “ கொஞ்சம் இரு மான்சி” என்று கூறி எழுந்தவன் அவளிடம் சென்றான்

அவளை நெருங்கிய சத்யன் கதவின் குமிழை பற்றியிருந்த அவளின் கையை தனது கையால் பற்றி விலக்கினான், பற்றிய கைகளை விடாமல் தனது நெஞ்சில் வைத்து,,அவள் முகத்தை நேரில் பார்த்து “ நீ இவ்வளவு பேசுவியா,, இங்கே எல்லாரும் என்கிட்ட பேசவே பயப்படுவாங்க,, நீ என்னையே எதிர்த்து பேசுற,, ம்ம் ரொம்பத்தான் தைரியம்” என்று குறும்பான குரலில் கேட்க

அவன் கைகளில் இருந்த தனது கையை விடுவிக்க முயன்றபடி “ அது ஒன்னும் பயம் இல்ல ,, உங்களுக்கு எல்லாரும் குடுக்குற மரியாதை” என்று மான்சி அவனுக்கு பதில் கூறினாள்

“அப்போ உனக்கு என்மேல மரியாதை இல்லையா”என்று சத்யன் அவள் விரல்களை தன் கையால் நெரித்துக்கொண்டே கேட்டான்

அடப்பாவி இப்படி மடக்குறானே,, இதுக்கு என்ன பதில் சொல்றது என்று குழம்பி தவித்து அவன் முகத்தை பார்த்த மான்சி “ இப்படி மடக்கி மடக்கி கேள்வி கேட்டா என்ன பதில் சொல்றது” என்று சினுங்கிய மான்சி “ வெளியே இருக்கிறாவங்க மரியாதையினால எதிர்த்து பேசமாட்டாங்க,, எனக்கு ஓரளவுக்கு நீங்க அறிமுகமானவர் என்ற உரிமையில இப்படி பேசிட்டேன்,, தவறா இருந்தா மன்னிச்சிடுங்க” என்று மான்சி அவனிடம் மன்னிப்பு கோரும் குரலில் பேச

“ அப்படின்னா நான் உனக்கு அறிமுகமானவனா மான்சி?, ஆனா நான் உன்னை நேத்து காலையில தானே பார்த்தேன்” என்று மறுபடியும் அவளை மடக்கினான்

அவன் வார்த்தைகளால் அவளை மடக்கினாலும் ஒவ்வொரு வார்த்தையும் அவளை சிவக்க வைத்தது,, இவன் இன்று தன்னை அதிகமாக பேச வைக்கிறான் என்று மனதில் எண்ணியவாறு “ நீங்க என்னை நேத்துதான் பார்த்தீங்க ஆனா நீங்க எனக்கு கிட்டத்தட்ட மூனு வருஷமா அறிமுகமானவர் தான்,, உங்களோட வளர்ச்சி ஒன்னொன்னா எனக்கும் தெரியும்,, இது போதுமா இல்ல இன்னும் ஏதாவது தெரிஞ்சுக்கனுமா” என்று பார்வையிலும் குரலிலும் கோபத்தை தேக்கி மான்சி கேட்க

“ போதாதே இன்னும் நிறைய தெரியனுமே,, ஆனா அதெல்லாம் போகப்போக தெரிஞ்சுக்கிறேன்,, இப்போ ஒரேயொரு விஷயம் மட்டும் நீ தெரிஞ்சுகிட்டு போ மான்சி,, அனிதா,, அபிநயா, வசு இவங்க யார் மேலயும் எனக்கு எந்த கோபமும் இல்லை,, என் கோபமெல்லாம் என் அம்மா உயிரோட இருக்கும்போதே தனக்கு மற்றொரு துணையை தேடிக்கிட்ட என் அப்பா மேலயும்,, திருமணமானவர் ஒரு பிள்ளைக்கு தகப்பன்னு தெரிஞ்சும் எங்கப்பாவை தன்வசப்படுத்தின அனிதாவோட அம்மா மேலயும் தான் என் கோபமெல்லாம்,, அது நீ மட்டும் இல்ல வேற யார் சொன்னாலும் மாறாது மான்சி,, அதனால வீனாக என் மனதை மாற்றும் முயற்சியை விட்டுடு” என்று சத்யன் தீர்மானமாக சொன்னான்

பட்டென்று அவன் கையை உதறி விலகிய மான்சி,, சற்றுத்தள்ளி நின்று தன் மார்புக்கு குறுக்கே கைகட்டி பக்கவாட்டில் தலைசாய்த்து “ அப்போ உங்களுக்கு என்ன வயசு இருக்கும் சார்” என்று கேட்டாள்

அவள் நின்ற ஸ்டைல் மேலும் அவளிடம் அவனை ஈர்த்தது,, அவள் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியதால் மேல் நோக்கி பிதுங்கிய மார்புகளை அவளின் சுடிதார் துப்பட்டாவால் மறைக்க முடியவில்லை ,, அந்த இளமை கலசங்கள் பொங்கி வழிய,, சத்யன் அங்கிருந்து தனது பார்வையை திருப்ப முடியாமல் திணறினான்

அவன் பார்வை சென்ற இடத்தை கவனித்து சட்டென்று கட்டியிருந்த கைகளை விலக்கி தனது துப்பட்டாவால் முடிந்தவரை மூடினாள்,, அவன் பார்வை அவளை சிவக்க வைக்க தலையை குனிந்துகொண்டாள்


அவள் கவனித்து விட்டாள் என்று தெரிந்ததும் சத்யனுக்கு சங்கடமாக இருந்தது ,, இருந்தாலும் அவள் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என நினைத்து “ அப்போ எனக்கு வயசு பனிரெண்டு இருக்கும்” என்று சத்யன் சொன்னான்

இதை கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்த்தவள் “ அந்த வயசுல மனுஷங்களை புரிஞ்சுக்குற பக்குவம் உங்களுக்கு வந்துருச்சா? ஒரு கணவன் மனைவிக்குள்ள என்னன்ன நடக்கும் , அல்லது நடந்தது,, என்று உங்களுக்கு புரியக்கூடிய வயசா அது,,ஒரு மனிதனின் இளமைத் தேவைகள் என்னன்னு உங்களுக்கு அந்த வயசுல தெரியுமா” என்று மான்சி சரமாரியாக கேள்வி கேட்க

அவள் கேட்ட அத்தனைக்கும் சத்யனின் பதில்,, தெரியாது என்ற தலையசைப்பு தான்

“ அப்படின்னா நீங்க ஒரு சுயநலவாதி சார்,, அந்த பெரிய வீட்டில் உங்களுடைய இடம் பறிபோய் விடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவே நீங்க மற்றவர்களை ஒதுக்கி வச்சுட்டு வந்துருக்கீங்கன்னு நான் சொல்றேன்” என்று மான்சி அவனுக்கு எதிராக வாதம் செய்தாள்

இதை கேட்டதும் சத்யனின் முகம் இறுகிவிட்டது,, “ அப்படின்னா என் அம்மா உயிருடன் இருக்கும் போதே இன்னொரு பொண்ணு கூட வாழ்ந்த என் அப்பா நியாயவாதி,, நான் சுயநலவாதியா? உன்னால எப்படி இதுபோன்ற தவறுகளை நியாயப்படுத்தி பேசமுடியுது மான்சி? ” என்று சத்யன் கேட்டான்

“ நான் நியாயப்படுத்தலை சார்,, எதுவுமே புரியாத வயசுல அவங்க பண்ணது தப்புன்னு முடிவெடுக்கும் உரிமை உங்களூக்கு கிடையாது,, அவங்க பக்கத்தில் என்ன நடந்ததுன்னு உங்களுக்கு இன்னும் தெரியாது,, அப்படியிருக்க எந்த விசாரனையும் இல்லாமல் அவங்களுக்கு ஆயுள் தண்டனை குடுத்திருக்கீங்க சார் நீங்க” என்று மான்சி தீர்க்கமாக கூறினாள்

அவளை எரிச்சலாக பார்த்த சத்யன் “ ஆமாம் இந்த அசிங்கத்தை விசாரணை வேறு பண்ணனுமா,, அந்த லேடி எங்கப்பா கிட்ட ஸ்டெனோவா வேலை செய்தாங்களாம்,, எங்கம்மா படுத்த படுகையா ஆனதும் ஆபிஸ்ல வச்சே எங்கப்பாவை மயக்கி கைக்குள்ள போட்டுக்கிட்டாங்க,, எங்கம்மா போனதும் பணக்காரி ஆகும் ஆசையில வீட்டுக்கு வந்துட்டாங்க, அவ்வளவுதான் விஷயம்” என்றான் சத்யன் அலுப்பாக

அவனுக்கு எப்படி புரியவைப்பது என்று யோசித்த மான்சி “ ஏன் சார் நானும் நீங்களும் இந்த அறைக்குள்ள வந்து கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஆகப்போகுது,, வெளியே இருக்கிறவங்களுக்கு நாம என்ன செய்கிறோம் என்ற கற்பனை எக்கச்சக்கமா வரத்தான் செய்யும்,, ஆனா மூடிய அறைக்குள்ள நாம என்னப் பண்றோம்னு நமக்கு மட்டுமே தெரியும்,, அதனால எதுவும் தெரியாமல் எந்த முடிவும் எடுக்காதீங்க சார்,, ஏதோ எனக்கு தெரிஞ்ச விஷயங்களை பேசினேன், உங்கள் பர்ஸனல் பேசினது தப்புன்னா என்னை மன்னிச்சுடுங்க” என்று கூறி திரும்பினாள்

பின்புறமாக அவள் தோளைத் தொட்டு தன்புறமாக திருப்பிய சத்யன்,, அவள் முகத்தையே உற்று பார்த்தான் “ என்னை எதிர்த்து பேசிய இந்த உதடுகளை அப்படியே கடிச்சு துப்பனும் போல ஆத்திரமா வருது,, ஆனா அதுக்கப்புறம் நான்தானே சிரமப்படனும் அதனால சும்மா விடுறேன்,, இல்லேன்னா அவ்வளவுதான்” என்று போலியாக மிரட்டி காதலாக அவளின் தேன் சிந்தும் இதழ்களை பார்த்தான் சத்யன்

மான்சி வெட்கத்துடன் அவனிடமிருந்து விலக திமிறினாள்,, அவன் முரட்டு கரங்களை விலக்கமுடியாமல் திண்டாடியவளை பார்த்து சிரித்த சத்யன் “ என்னை பேச்சில் மட்டுமே நீ ஜெயிக்க முடியும் மான்சி” என்று கூறி அவளின் ஈர இதழ்களை நெருங்கினான்



அவன் என்ன செய்யப்போகிறான் என்று மான்சிக்கு தெளிவாக புரிந்தது, சுதாரித்து விலகும் முன் அவன் அவள் உடலை தனது முரட்டு கரங்களால் சிறைபிடித்து,, அவளின் இதழ்களை தனது முரட்டு உதடுகளால் சிறைபிடித்திருந்தான்

அவனுக்கு அவளின் மென்மையான இதழ்களின் தேனை அருந்த வேண்டும் என்ற வேகத்தில் அவளை முரட்டுத்தனமாக அணைத்திருந்தான்,, அவளின் கீழுதட்டை கவ்வி, இழுத்து தனது கூறிய நாக்கால் இரண்டு உதடுகளுக்கும் இடைவெளியை ஏற்படுத்தியவன், அவன் நாக்கை உள்ளே விடாமல் தடுத்த பற்களில் பாதுகாப்பை தகர்க்க முடியாமல் மறுபடியும் மறுபடியும் நாக்கால் அவள் பற்களுடன் முட்டி மோதினான்

அவளும் அவனுக்கு உள்ளே வர இடம் விடாமல் தனது பற்களை சேர்த்து வைத்துக்கொண்டு போராடினாள்

ஒரு கட்டத்தில் அலுத்துப்போன சத்யன் சட்டென்று அவளை விலக்கி நிறுத்தி முறைத்துப் பார்த்தான்,, அவனுக்குள் ஏற்கனவே தீயாய் பற்றி பரவியிருந்த காதல், அவளின் பிடிவாதத்தால் கடும் வேட்கையாக மாறியிருந்தது

தனது கடைவாயில் வழிந்த சத்யனின் எச்சிலை தனது புறங்கையால் துடைத்த மான்சி,, அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்து " என்ன இது,, உங்ககிட்ட இந்த மாதிரி நான் எதிர்பார்க்கலை,, என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க மனசுல" என்று குரல் வெளியே கேட்காமல் கோபமாய் மான்சி கேட்க

சத்யன் படபடத்த அவளின் உதடுகளை பார்த்துக்கொண்டே " இது முத்தம்,, வேற எப்படி எதிர் பார்க்கிற,, உன்னைத்தான் மனசுல நெனைச்சுகிட்டு இருக்கேன்" என்று அவளின் கேள்விகளுக்கு பதிலலித்த சத்யன் விலகியிருந்த அவளை எட்டிப்பிடித்து இழுத்து அணைத்தான்

ஒருகையால் இடுப்பை வளைத்து,, மறுகையால் அவள் கழுத்தை வளைத்தவன் , அவளின் மூக்கை தன் மூக்கால் உரசி " முடியலை மான்சி ஒரேயொரு முத்தம் தான் ப்ளீஸ், அதுக்குமேல வேனாம் என்னால் அடக்கி வைக்க முடியலை,, மூனு வருஷமா என்னையே மனசுல நெனைச்சுக்கிட்டு இப்போ என்னை இப்படி அவாய்ட் பண்றியே மான்சி" என்று சத்யன் ஏக்கமும் தாபமுமாக மான்சியிடம் கெஞ்சினான்

அவனுடைய ஏக்கப் பார்வையும்,, தாபம் நிறைந்த பேச்சுக்கும் மான்சி கறைந்து போக ஆரம்பித்தாள்,, " இது ஆபிஸ் அதனால என்னைய விடுங்க" என்று அவனின் காதோரம் மான்சி கிசுகிசுக்க

அவள் மனம் இளகிவிட்டது என்று சத்யனுக்கு புரிந்தது,, " ம்ஹும் இது ஆபிஸ்னாலதான் வெறும் முத்தம்,, இதே என் வீடாயிருந்தால் இன்னேரம் அவ்வளவுதான்" என்று சத்யன் குறும்புடன் பேசினான்

" அய்யோ வீடாயிருந்த என்ன பண்ணியிருப்பீங்களாம் " என்று அவனை தூண்டினாள் மான்சி

அவள் முகத்தை சற்று தள்ளி நிறுத்தி உற்றுப்பார்த்து " ம் பூஜை ரூம் கூட்டிப்போய் தாலியை கட்டிட்டு உடனே பெட்ரூமுக்கு தள்ளிக்கிட்டு போயிருப்பேன்" என்றான் குறும்பு வழியும் குரலில்

" ஏய் ச்சீ" என்று வெட்கத்தில் சினுங்கிய அவள் உதடுகளை மறுபடியும் கவ்விக்கொண்டான்,, இப்போது அவளிடம் எதிர்ப்பு சுத்தமாக இல்லை,, அவன் தேடாமலேயே,, அவனுடைய முத்த ஆராய்ச்சிக்கு தனது இதழ்களை திறந்து வழிவிட்டாள்

சத்யன் அவளின் இடுப்பை பற்றி தனது உயரத்துக்கு தூக்கினான்,, இப்போது குனியாமல் அவளை சமநிலையில் நிறுத்தி,, அவள் இதழ்த் தேனை உறிஞ்சினான்

சிறிதுநேரம் அவர்களின் உறிஞ்சும் சப்தத்தை தவிர வேறு எதுவும் அந்த அறையில் கேட்கவில்லை ,, அப்போது சத்யன் மேசையில் இருந்த தெலைபேசி தனது வேலையை செய்ய,, இருவரும் திடுக்கிட்டு விலகினார்கள்

இருவரும் ஒரே சமயத்தில் தனது வாயை துடைத்துக்கொண்டு அசட்டுத்தனமாக ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொள்ள,, ,எப்படி எனது முத்தம், என்று சத்யன் புருவம் உயர்த்தி ஜாடையில் கேட்டான்

" ச்சீ போங்க" என்று வெட்கத்தை வார்த்தையில் மொழிந்துவிட்டு கதவை திறந்து கொண்டு அங்கிருந்து வெளியேறினாள் மான்சி 


மான்சி அறையிலிருந்து சென்றதும் சத்யன் மனம் கும்மாளமிட்டு கொண்டாட அடித்து ஓய்ந்திருந்த தொலைபேசியை அடைந்து யார் அழைத்தது என்று காலரைடியில் பார்த்தான்,, கார்த்திக்தான் அழைத்திருந்தான்,, அவனுடைய மொபைல் நம்பரில் இருந்து அழைத்திருந்தான்

கார்த்திக்கை அழைத்துவிட்டு சத்யன் காத்திருந்தான்,, எதிர்முனையில் எடுத்ததுமே “ என்னடா மச்சான் எதுக்கு கால் பண்ண” என்று சத்யன் கேட்டான்
கல்லூரியில் படித்த நாட்களைத் தவிர சத்யன் எப்பவுமே இப்படி அழைத்ததில்லை என்பதால் கார்த்திக்குக்கு ஆச்சரியமாக இருந்தது சந்தோஷத்தில் பேச வாய் வராமல் கார்த்திக் அமைதியாக இருக்க........

“ என்னடா கார்த்திக் என்னாச்சு,, என்று சத்யனின் குரல் கேட்டதும்

“ ஒன்னுமில்ல பாஸ்,, மான்சி உங்க ரூமுக்குள்ள வந்து ரொம்ப நேரமாச்சு, சில பேப்பர்ஸ் நீங்க செக்ப் பண்ணா கூரியரில் அனுப்பிரலாம்,, லேட் ஆகுது அதான் கால் பண்ணேன் பாஸ்” என்றவன் சிறிதுநேர தயக்கத்துக்குப்பிறகு “ மான்சி போய்டாங்களா பாஸ்,, நான் பேப்பர்ஸ் எடுத்துகிட்டு வரவா?” என்று கேட்டான் கார்த்திக்

சத்யனுக்கு சங்கடமாக இருந்தது,, காலையிலேயே ஆபிஸ்ல இது தேவையில்லாத வேலை,, கொஞ்சம் கட்டுப்பாட இருந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு,, “ போய்ட்டா,, நீ வா கார்த்திக்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்

ஏதோ தோன்ற அவசரமாக குனிந்து சட்டையை பார்த்தான்,, அவன் நினைத்தது சரியாகப் போய்விட்டது,, மான்சியை முத்தமிடும்போது அவள் இவன் சட்டையை கொத்தாக பற்றிய இடத்தில் கசங்கி போயிருந்தது,, பதட்டமாக சட்டையின் கசங்கலை நீவி சரிப்படுத்தினான் சத்யன்

உள்ளே நுழைந்த கார்திக்கின் முகத்தை பார்க்க கூச்சப்பட்டு அவன் வைத்த பேப்பர்களில் தனது கவனத்தை செலுத்தினான்,, எல்லாவற்றையும் சரி பார்த்து கையெழுத்திட்டு கார்த்திக் முன்பு நகர்த்தினான்
பேப்பர்ஸை கையில் எடுத்துக்கொண்டு திரும்பிய கார்த்திக்கை “ ஸாரி கார்த்திக்” என்ற சத்யனின் குரல் தடுத்தது

ஆச்சரியமாக திரும்பி பார்த்த கார்த்திக் “ எதுக்கு பாஸ் ஸாரி” என்றான்
“ இல்ல கார்த்திக்,, மான்சி தனியா உட்கார்ந்திருந்தா,, சரி வான்னு இங்கே கூட்டி வந்தேன்,, வந்து கொஞ்சநேரம் அனிதா பேமிலியை பத்தி ரொம்ப கோபமா பேசினாள்,, அப்புறமாத்தான் ஏதோ ஒரு வேகத்தில் பேச்சு திசைமாறி போச்சு” என்று கார்த்திக்கின் முகத்தை பார்க்காமல் டேபிளில் இருந்த அத்தனைப் பொருட்களையும் பார்த்துபடி பேசினான்

கார்த்திக்கிடம எந்த பதிலும் இல்லாது போகவே என்னாச்சு என்று நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தான் சத்யன்

கார்த்திக் முகத்தில் குறும்பு வழிந்தது,, சட்டென்று எட்டி சத்யன் கையைப்பிடித்து குலுக்கி “ பாஸ் நீங்க வெட்கப்பட்டா ரொம்ப அழகா இருக்கீங்க பாஸ்” என்றான்
இப்போது சத்யனுக்கு உண்மையிலேயே வெட்கம் வந்தது,, “ டேய் போடா போடா போய்ப் பொழப்ப பாரு,, இங்கே நின்னு என் மூஞ்சிய ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்க” என்று சிரிப்புடன் சத்யன் சொல்ல....

“ எஸ் பாஸ் இதோ கிளம்பிட்டேன்,, ஆனா இப்பவும் அனிதா கிட்டே இதைப்பத்தி எதுவுமே பேசக்கூடாதா பாஸ்,, ஏன்னா என்னால அவளை சமாளிக்க முடியலை,, அவளைப்பார்த்ததும் இதைத்தான் முதலில் சொல்லனும் போல இருக்கு ,, ப்ளீஸ் பாஸ் சொல்லிரட்டுமா?” என்று கார்த்திக் அதிகபட்சமாக அசடு வழிந்தான்

“ ம்ஹூம் நமக்கு அந்த வேலையே வேனாம் கார்த்திக்,, மான்சிக்கு என்னைப்பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சுருக்கு,, அதனால அனிதாவும் மான்சியும் பேசிக்குவாங்க, நீ உன் வேலை பாருடா மச்சான்” என்றான் சத்யன்

சத்யன் மறுபடியும் மச்சான் என்றதும், கார்த்திக்க்கு லேசாக கண் கலங்கியது,, “ என்னை மச்சான்னு கூப்பிட்டதுக்கு தாங்க்ஸ் பாஸ்” என்று உணர்ச்சியில் அடைத்த குரலில் கூறினான்

சத்யனுக்கு கார்த்திக்கின் நிலை புரிந்தது,, இருக்கையைவிட்டு எழுந்து கார்த்திக் அருகில் வந்து அவன் தோளில் கைப்போட்டு “ கார்த்திக் நான் வேனா அனிதாவை என் தங்கச்சின்னு வெளிப்படையா சொல்லாமல் இருந்தாலும்,, அவ என் தங்கச்சின்னு எல்லாருக்கும் தெரியும்,, அப்போ நீ என் மச்சான் தானடா” என்று சத்யன் ஆறுதலாக பேசினான்

கார்த்திக்குக்கு சத்யனின் மாற்றங்கள் ஆச்சர்யமாக இருந்தது,, சத்யன் இதுபோல பேசி பார்த்ததேயில்லை,, அப்படியானால் இது மான்சியால் வந்த மாற்றமா? அப்படியிருந்தால் சத்யன் குடும்பத்துக்கு வரம் கொடுக்கும் தேவதை மான்சிதான்,, இனி சத்யன் ஜோடியாகத்தான் வந்து வாழ்த்தவேண்டும் என்ற அனிதாவின் கனவு நிறைவேறிவிடும்,, என்று கார்த்திக்கின் மனது அடுத்தடுத்து கற்பனையில் மிதக்க, கையில் இருந்த பேப்பர்களை அனுப்ப வேண்டுமே என்ற உந்துதலில் “ ஓகே பாஸ் நான் அப்புறமா வர்றேன்” என்று கூறிவிட்டு அவசரமாக வெளியேறினான்


தனது இருக்கையில் வந்து அமர்ந்த சத்யனுக்கு கார்த்திக்கை நினைத்து பெருமையாக இருந்தது,, மச்சான் என்ற ஒரு வார்த்தைக்கே எவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறான்,, ஒருவேளை நான்தான் எல்லாரையும் விட்டு ரொம்ப ஒதுங்கி வாழ்கிறேனா,, இது போன்ற சின்னச்சின்ன வார்த்தைகள் போதுமா ஒருவரிடம் அன்பை வெளிப்படுத்த,, உணர்ச்சியில் கலங்கிய கார்த்திக்கின் முகம் சத்யன் கண்முன் வந்தது,, ம்ஹும் என்ற பெருமூச்சுடன் தனது அலுவலை கவணிக்க ஆரம்பித்தான்



No comments:

Post a Comment