Saturday, August 8, 2015

கண்ணனை நினைக்காத நாள் இல்லையே - அத்தியாயம் - 7

"அம்மா தாயே நீ சொல்றது உண்மை. உன்னை கையெடுத்து கும்புடுறேன். கொஞ்சம் உள்ளே வந்து சோபால உட்காரு" என்று சொல்ல, அவன் கிண்டலை புரிந்து கொண்டு சோபாவுக்கு அருகில் அவளின் ட்ராலியை வைத்து விட்டு உட்கார, 

"சரி ஸ்வேதா நீ பெட்ல படுத்துக்க, நான் இந்த சோபால படுத்துக்கிறேன்" என்று சொல்ல,

"இல்லை நீங்க என் கூட பெட்ல தான் படுக்கணும். உங்க மேல நம்பிக்கை இருக்கு" என்று ஆரம்பிக்க

தலைக்கு மேல் கை வைத்து 'ஆண்டவா இது என்ன என் கற்புக்கு சோதனை'. "சரி ஸ்வேதா நான் Gem of persons தான். நீ சொல்றதை நான் ஒத்துக்கிறேன்.திரும்ப வெளி நடப்பு செய்யாதே" என்று கெஞ்சி, இருவருக்கும் நடுவில் தலையணையை வைத்து விட்டு இருவரும் படுத்தனர். அவள் நிம்மதியாக உறங்க, கிருஷ்ணாவுக்கு தூக்கம் வரவில்லை. 

ஆறு மணி சூர்ய வெளிச்சம் ஜன்னலில் விழ, போனை எடுத்து ஹரியை அழைத்தான்.



"என்னடா கிருஷ்ணா சொல்லு"

"மாம்ஸ் ஸ்வேதா என் ரூமுக்கே வந்துட்டாடா" என்று ஆரம்பித்து நடந்ததை சொல்ல
"டேய் நீ அதிஷ்டகாரனடா. என்ன ஒரு ரவுண்டு முடிஞ்சுடுச்சா?"

"ஏண்டா கருமம் புடிச்சவனே. உனக்கு வேற ஒண்ணுமே நல்லபடியா தோணாதா?"

"சரி சரி கோபப்படாதே. அவ வேற என்ன சொன்னா"

"என்ன பாத்து ரொம்ப நல்லவன் சொல்லிட்டாட.சொல்லிட்டு அவ நிம்மதியா தூங்குரா. எனக்கு காதல் சித்ரவதைதான்".

"சரி அழாதே, கண்ணை மூடிகிட்டு கொஞ்ச நேரம் தூங்கு. நான் கொஞ்ச நேரத்ல கூப்பிடுறேன்" என்று சொல்லி ஹரி போனை கட் செய்தான். கொஞ்ச நேரத்தில் கண் அயர்ந்தான் கிருஷ்.

யாரோ கூப்பிடுவது போல் இருக்க, கிருஷ்ணா தன் கண்களை திறக்க, அவன் முகத்துக்கு அருகில் ஸ்வேதா, "என்ன சார் இன்னும் எழுந்துரிக்க மனசு வரலையா? நாம ஒன்பது மணிக்கு இங்கே இருந்து கிளம்பனும். இப்போ மணி எட்டு நீங்க கொஞ்சம் சீக்கிரம் குளிச்சா, நாம பிரேக் பாஸ்ட் சாப்பிட போகலாம்" என்று சொல்ல, "ஓ எட்டு மணி ஆச்சா" என்று சொல்லியபடி எழுந்தான் கிருஷ்.

"அப்புறம் ஒரு விஷயம், ஹரி கூப்பிட்டாரு."

"என்ன சொன்னே."

"நீங்க ரொம்ப களைப்பா தூங்கிறதா சொன்னேன். அவர் 'ஆமாமா ராத்திரி முழுக்க தூங்காம வேலை பண்ணுனா களைப்பா தான் இருக்கும்னு' சிரிச்சு கிட்டே சொல்லிட்டு போனை வச்சுட்டார். ஆமா அப்படி என்ன ராத்திரி முழுக்க வேலை பார்த்திங்க' என்று அப்பாவி தனமாக கேட்க, 

"ரொம்ப முக்கியம்" என்று கடுப்போடு பதில் சொல்லி விட்டு, குளித்து விட்டு ரெடி ஆகி வர, அதற்குள் ஸ்வேதா காவிரியை பார்த்து விட்டு திரும்பி வந்தாள்.

காலை பத்து மணிக்கு திருவெரும்பூரை ஒட்டி இருந்த கல்யாண மண்டபத்தில் Solar Panel பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது. தமிழக அரசு மின் சக்தி வாரியமும் கலந்து கொள்ள, பல போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்க பட்டன. ரியல் எஸ்டேட் சம்பத்த பட்டவர்களும் கலந்து கொள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட Enquiries வந்தன. மாலை ஆறு மணி அளவில் அனைவரும் சங்கம் ஹோட்டல் திரும்பினர்.

அதற்குள் அனைவருக்கும் Twin accomodation basis அறைகள் வழங்கப்பட்டன. 

எட்டு மணி அளவில் ஹரி கிருஷ்ணாவின் Suit room வர, அங்கே இரண்டு பீர் பாட்டில் உடன் உட்கார்ந்து அரட்டை அடித்து கொண்டு இருந்தனர்.

கதவு தட்டப்பட, ஹரி கதவை திறந்து நிற்க, ஸ்வேதா உள்ளே வந்தாள். 

"என்ன ஸ்வேதா பீர் குடிக்கிறியா?"என்று கேட்க முறைத்தாள். 

"Hai என்ன முறைக்கிற, சும்மாதான் கேட்டேன். நீ தான் பெங்களூர் பொண்ணாச்சே. அதுனால பீர் குடிப்பேன்னு நினைச்சேன்."

"நான் அப்படி கிடையாது. தண்ணி அடிச்சு, தம் அடிச்சு தான் பெண்களின் பெருமையை உயர்த்த முடியும்னு நான் நினைக்கலை."

"சரி ஓகே, ஆமா என்ன திடீர்னு."

"எனக்கு போர் அடிச்சது. உங்ககூட பேசிட்டு போகலாம்னு வந்தேன். நீங்க வேணா கண்டிநியூ பண்ணுங்க, நான் வேணா அப்புறம் வரேன்"என்று சொல்ல,

"டேய் மாம்ஸ் நீ கிளம்பு, நான் இப்போ பீர் அடிக்கலை. பின்னால பேசிக்கலாம்" என்று கிருஷ்ணா சொல்ல, தலையில் அடித்து கொண்டு ஹரி கிளம்பினான்.

"KK நாம எப்போ மதுரை போறோம்."

"நாளைக்கு சாய்ந்தரம் ஒரு ஆறு மணிக்கு கிளம்பினா, ஒன்பது மணிக்கு போய்டலாம். ஜெர்மனுஸ்ல ரூம் போட்டாச்சு. நான் மட்டும் வீட்டுக்கு போயிட்டு வந்துடுவேன்" என்று சொல்ல,

"ஓகே, நான் உங்க கூட வந்து உங்க அம்மா அப்பா தங்கையை மீட் பண்ணலாமா" என்று கேட்க,

"எதுக்கு நீ மீட் பண்ணனும்?"

"ஏன் நான் மீட் பண்ண கூடாதா? நீங்க கூட்டி போகலைனா நான் ஹரி கூட உங்க வீட்டுக்கு போயிட்டு வந்துடுவேன்"

"சரி சரி. கோவபடாதே, ஹரியும் வரேன்னு சொல்லி இருக்கான். நீயும் கூட வா".

"சரி அப்ப நான் கிளம்பட்டுமா? "

"பேசிட்டு இருக்கலாம்னு சொன்ன, உன்னை நம்பி ஹரியை அனுப்பிட்டேன்."

"Sorry, ஒரு நிமிஷம் இருங்க" என்று டிவியை ஆன் செய்ய, சரவணன் மீனாக்ஷி சீரியல் வந்தது. "பாத்திங்களா, எனக்கு இந்த சீரியல் ரொம்ப பிடிக்கும். அந்த சரவணை பார்க்கும்போது எனக்கு உங்க ஞாபகம் வருது" என்று சொல்ல

"என்னை பார்த்த கொஞ்சம் கேனயன் மாதிரி இருக்குன்னு நேரடியா சொல்ல வேண்டியது தானே."

"சாரிப்பா, கிண்டல் பண்ணுரதுக்காக அப்படி சொன்னேன்."

"வேற மியூசிக் சேனல் வை."

"தோழியா காதலியா யாரடி நீ பெண்ணே" என்று நகுல் பாட, அவளை அர்த்தத்தோடு பார்த்தான். அவளுக்கும் புரிந்தது. 

"இந்த பாட்டை பத்தி நீ என்ன நினைக்கிற" என்று கேட்க,அவள் அவனை குறும்போடு பார்த்து விட்டு, "ஒரு பெண் தோழியா இருந்து தான் காதலியா ஆகுறா, இதை புரிஞ்சுகிட்டா சரி"

"நீ என்னோட தோழி தானே"

"ஏன் சந்தேகமா. இங்க பாருங்க KK, ஒரு தோழியால தான் எல்லா உணர்வுகளையும் புரிஞ்சு கொள்ள முடியும். எனக்கு உங்க மேல மரியாதை இருக்கு, அன்பு இருக்கு, கரிசனம் இருக்கு,"

"காதல் இருக்கா?"

"எனக்கு தெரியலை. சரி காலைல மீட் பண்ணலாம், குட் நைட்" என்று அவசரமாக விடை பெற்றாள்.

ஹரியை ரூமுக்கு அழைத்தான்

கையில் விஸ்கி பாட்டில் உடன் வந்த ஹரி"சொல்லு மச்சான்" என்றான்

"நாளைக்கு ராத்திரி நாம மதுரைக்கு போன உடனே நம்ம மூணு பேரும் வீட்டுக்கு போயிட்டு வந்துடலாம். காலைல கலாவையும் கூட்டிகிட்டு, மீனாக்ஷி அம்மன் கோயில் போயிட்டு வந்துடலாம்" என்று சொல்ல,

"சரிடா, நீ எதுக்கு இப்போஅவசரமா கூப்பிட்ட."

"டேய் அவள் என் கிட்ட பிடி கொடுத்து பேச மாட்டேங்கிறா. இப்படியே போனா இன்னும் கொஞ்ச நாள்ல என்னை கீழ்பாக்கத்ல தான் என்னை பார்க்க வேண்டி இருக்கும். லவ் பண்ணுறியா அப்படின்னு கேட்டா நேரடியா பதில் சொல்ல மாட்டேங்கிறா?"

"சரி விட்டு தள்ளு மச்சான். கொஞ்சம் விஸ்கியை உள்ளே எறக்கு. எல்லாம் சரியா போய்டும். நான் கொஞ்சம் வெளில போக வேண்டிய வேலை இருக்கு. ஒரு மணி நேரம் ஆகும். வர்றேன்" என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

விஸ்கி பாட்டிலை திறக்க, 'டிங்' என்று காலிங் பெல் அழைத்தது.

யாராக இருக்கலாம் என்று யோசனை செய்தபடி கதவை திறக்க, மீண்டும் ஸ்வேதா.

ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தாலும் முகத்தில் அதை காண்பிக்காமல் "உள்ளே வா ஸ்வேதா" என்று அழைக்க,

"தூக்கம் வர மாட்டேங்குது. உங்க கிட்ட ஏதாவது புக் இருக்குமா" என்று கேட்க, "இரு என் bag-கை செக் பண்ணுறேன்" என்று சொல்லி உள்ளே அவன் ட்ராலியை திறந்து உள்ளே தேட, அதே நேரத்தில் அவன் திறந்து வைத்த விஸ்கி பாட்டிலை ஸ்வேதா பார்த்து விட்டாள்.

கையில் புக் உடன் திரும்பி வந்தவன், ஸ்வேதா அவனை முறைத்து பார்ப்பதை கண்டு, ஏன் என்று யோசித்தான்.

"என்ன ஸ்வேதா கொஞ்சம் சீரியஸா இருக்கிற மாதிரி...."

"பேசாதிங்க. இப்போதானே குடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு, இப்போ விஸ்கி பாட்டிலை ஓபன் செஞ்சு வச்சுரிந்தா எப்படி?"

"இது விஸ்கியா எனக்கு சரியா தெரியலை. இந்த ஹரிதான், தொண்டை சளிக்கு நல்ல மருந்துன்னு சொன்னான். பாவி பய புள்ளை.இப்படி ஏமாத்திட்டானே" என்று முகத்தை வருத்த படுவதுபோல் பாவமாக வைத்து கொள்ள

இடுப்பில் கை வைத்து கொண்டு, "இந்த பூனையும் பால் குடிக்குமான்னு முகத்தை வச்சு ஏமாத்த கூடாது. நீங்க விஸ்கி குடிச்சா, நம்ம பிரெண்ட் ஷிப் cut" என்று சொல்ல,

"நோ நோ நோ. இந்த விஸ்கி எனக்கு வேணாம். உன்னோட பிரெண்ட் ஷிப் தான் வேணும். இந்த பாரு Chetan Bhagat புது புக், Revolution 2020௦. படிச்சு பாத்துட்டு சொல்லு" என்று கொடுக்க, 

"சரி, இப்போ நான் கிளம்புறேன்.என்னை ஏமாத்த நினைக்க வேணாம்"என்று விரலை காண்பித்து எச்சரிக்க, 

"Cool. Dont Worry" என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான்.

"அப்பாடி இந்த பொண்ண சமாளிக்கறதுக்குள்ள முழி பிதிங்கிடும்னு நினைக்கிறேன்".

இரவு உணவை முடித்து விட்டு உறங்க, காலை ஏழு மணிக்கு இன்டர்காம் ஒலிக்க எடுத்தான். 

அடுத்த முனையில் ஸ்வேதா, "சொல்லு ஸ்வேதா Good morning".

"Good morningஇப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க"

"படுக்கைல படுத்துகிட்டு ஒரு உன் கிட்ட பேசிகிட்டு இருக்கேன்."

"முதல்ல எந்துரிச்சு ரெடி ஆகுங்க, நான் அரை மணி நேரத்ல வரேன் என்று சொல்ல, ஓகே இப்போவே நான் எழுந்துரிக்கிறேன்" என்று சொல்லி போனை வைத்தான்.பல் விளக்கி கொண்டுறிந்த கிருஷ், போனில் இன்டர்நேஷனல் கால் வர, போனை உடனே எடுத்தான்.பிரான்சில் இருந்து சுப்ரமணியம். 

அவரிடம் எல்லா விஷயங்களையும் பேசி விட்டு அப்டேட் செய்ய, திருப்தி தெரிவித்த சுப்ரமணியன், கோவை மற்றும் சேலம் ஊர்களுக்கு வருவதாக வாக்கு கொடுத்தார். 



சந்தோசத்துடன் கிருஷ்ணா குளிக்க செல்லலாம் என்று நினைக்க, ஸ்வேதா சொன்னது நினைவுக்கு வந்தது. கதவை பூட்டாமல் சாத்தி விட்டு பாத்ரூம் சென்று குளித்து விட்டு டவலை தேட, டவல் காணவில்லை. டவலை தேடி வெளிய வந்து பெட் அருகில் இருந்த சேரில் இருந்து எடுக்க, "அய்யோ" என்று ஒரு பெண்குரல்.டவலை இடுப்பில் கட்டி கொண்டு வேகமாக பாத் ரூமுக்குள் ஓடி சென்றான்.

டவலை எடுத்து துவட்டி விட்டு மெதுவாக வெளியே வர, அங்கே சோபா வில் முகத்தை மூடி கொண்டு ஸ்வேதா உட்கார்ந்து இருந்தாள்.மெதுவாக தனது உடைகளை எடுத்து கொண்டு மீண்டும் பாத்ரூம் சென்று மாட்டி கொண்டு ஸ்வேதா அருகில் வந்து "ஸ்வேதா" என்று அழைக்க

"KK முதல்ல டிரஸ் போட்டு இருக்கிங்களான்னு சொல்லுங்க,"

"பொதுவா நான் ரூம்ல இருக்குறப்ப டிரஸ் போட மாட்டேன். இப்போ கூட ஒண்ணும் போடல"என்று அவளை சீண்ட,

ஸ்வேதா மூடிய கண்களை திறக்காமலே, "ப்ளீஸ் KK.நான் வேணா வெளிய போயிடுறேன். அப்பறமா வரேன்" என்று சொல்லி எழுந்து கண்களை மூடி கொண்டே கதவை நோக்கி நடந்தாள். அதற்குள் அவளை வேகமாக தாண்டி கிருஷ் கதவுக்கு முன் வந்து நிற்க, ஸ்வேதா கதவை எட்டியதாக நினைத்து கண் திறந்தாள். 

அவன் முன்னால் கிருஷ்ணாவின் முகம். "அய்யோ" என்று கத்தி விட்டு மீண்டும் கண்களை மூடினாள். 'ஆகா இப்போ டிரஸ் போட்டிருக்கார் போல இருக்கு' என்று அரை கண்ணால் பார்க்க, ஜிப்பாவில் சிரித்து கொண்டே அவள் முன்னால் நின்றான்.

"KK ஏன் இப்படி என்னை சீண்டுரிங்க?" என்று அவன் நெஞ்சில் தனது இரு கைகளையும் மடக்கி செல்லமாக குத்தினாள்.

அவள் கைகளை எடுத்து தோளுக்கு மேல் வைக்க, அவனை இறுக்கமாக கட்டி கொண்டாள். அவன் இரு கைகளோ அவளின் சந்தன இடுப்பில் இருக்க, அப்படியே அவளை மெல்ல தூக்கி அவள் உதட்டில் முத்தம் கொடுக்க குனிந்தான்.

அவனை பின்னுக்கு தள்ளி விட்டு அவனை பார்த்து நாக்கை துருத்தி விளையாட்டு காண்பித்து விட்டு கதவை திறந்து ஓடி சென்றாள்.

'ஒரு கணம் தடுமாறி போய் விட்டோமே' என்று தன்னை தானே நொந்து கொண்ட கிருஷ், அவளிடம் எதிர்ப்பு இல்லாததை கண்டு மகிழ்ச்சி கடலில் மூழ்கினான்.

Break fast சாப்பிட சென்ற இடத்தில தூரத்தில் காவேரி யுடன் அமர்ந்திருந்த, ஸ்வேதா யாரும் அறியாமல் அவனை பார்த்து குறும்பு தனமான செய்கைகள் செய்ய, அவற்றை ரசித்து கொண்டே ஹரியுடன் சேர்மன் பேசிய விபரங்களை பகிர்ந்து கொண்டான்.

அன்றைய நிகழ்ச்சிகளும் நல்லபடியாக முடிய, மாலை ஆறு மணி அளவில் வோல்வோ பஸ்ஸில் அனைவரும் ஏறி கொள்ள பஸ் மதுரையை நோக்கி கிளம்பியது. 

கிருஷ்ணா, ஹரி அருகில் அமர்ந்து பேசி கொண்டு வர, எட்டரை மணி ஆளவில் ஹோட்டல் Germanus வந்து சேர்ந்தது. ஏற்கனவே சொல்லி இருந்ததால் இரண்டு பேருக்கு ஒரு ரூம் என்ற விகிதத்தில் அனைவருக்கும் ரூம் கிடைக்க,எல்லோரையும் சாப்பிட்டு விட்டு உறங்க சொல்லி விட்டு, காலை ஒன்பது மணி அளவில் கிளம்ப வேண்டும் என்று ஹரி நினைவுபடுத்தினான்.

கிருஷ், ஸ்வேதா, ஹரி மூவரும் அங்கே தயாராக இருந்த Indigo Manza காரில் கிளம்பி அருகில்இருந்த SS காலனி சென்றனர்.

வீட்டு வாசலை அடைந்த கிருஷ்ணாவுக்கு ஆச்சர்யம் காத்து இருந்தது. அவன் அம்மா, அப்பா, தங்கை கலா வாசலில் காத்துருக்க,'இவர்களுக்கு நாம் வரும் நேரம் எப்படி சரியாக தெரிந்தது' என்று நினைத்து கொண்டே அருகில் இருந்த ஹரியை பார்க்க அவன் புன்சிரிப்பில் விஷயத்தை புரிந்து கொண்டான்.

கிருஷ்ணா அம்மா, அப்பா, கலாவுக்கு ஸ்வேதாவை office colleague என்று அறிமுகபடுத்த, கலா ஸ்வேதாவின் கையை பற்றி உள்ளே அழைத்து சென்றாள்.

ஹரியுடன் வாசுதேவன் பேசி கொண்டு நகர, அம்மாவுடன் பேசி கொண்டே கிருஷ் வீட்டுக்கு உள்ளே வந்தான். அங்கே டைனிங் டேபிளில் ஆறு Hot pack அடுக்கி இருக்க "என்ன அம்மா" என்று கேட்டான். "எல்லாம் இப்போ சாப்பிடத்தான்" என்று சொல்லி தேவகி"கலா இங்க வாம்மா. எல்லோருக்கும் ப்ளேட் எடுத்து வா" என்று சொல்ல, 6 ப்ளேட் உடன் கலா வந்தாள்.

ஸ்வேதா "நான் கொஞ்ச நேரம் கழிச்சு உங்களோட சாப்பிடுறேன்" என்று சொல்ல, தேவகி மனம் மகிழ்ந்தாள். 

'நல்ல குடும்ப பாங்கான பெண்ணாக இருக்கிறாளே' என்று மனதுக்குள் நினைத்து கொண்டே, ஹாட் பாக்கில் இருந்த இட்லி, தோசை,பணியாரம், பருப்பு போளி, வெள்ளை பணியாரம் என்று செட்டிநாடு வகைகளை பரிமாற மலைத்து போனான் கிருஷ். 

"என்ன அம்மா இது இவ்வளவு items செஞ்சு இருக்க."தேவகி சிரித்து கொண்டே, "நீ ரொம்ப நாள் கழிச்சு வர்ற, ஹரியும் பார்த்து ரொம்ப நாளாச்சு, புதுசா கெஸ்ட் கூட்டி வந்துருக்க. எனக்கு நீங்க திருச்சில இருந்து கிளம்பும்போதே ஹரி போன் பண்ணி சொல்லிட்டார்.அதுனால இந்த ஐடம் எல்லாம் பண்ண முடிஞ்சுது."

"என் செல்ல அம்மா" என்று கன்னத்தை தொட்டு கொஞ்ச, எல்லாரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

கிருஷ், ஹரி, வாசுதேவன் சாப்பிட்டு முடிக்க தொடர்ந்து மூன்று பெண்களும் பேசி கொண்டே சாப்பிட்டனர்.

மணி பத்தை தொட, கிருஷ் "கிளம்பலாமா" என்று ஹரி, ஸ்வேதாவை கேட்க, ஹரி சரி என்று சொன்னான். ஸ்வேதா யோசிக்க, கிருஷ் அவளை பார்த்து என்ன என்று புருவத்தை உயர்த்தி கேட்க, கலா "அண்ணா, ஸ்வேதா இங்கேயே தங்கட்டும். நாங்க ரெண்டு பேரும் நிறைய பேச வேண்டி இருக்கு, காலைல நீங்க ரெண்டு பேரும் ஒரு அஞ்சரை மணிக்கு வந்தா நாங்க ரெண்டு பேரும் ரெடியா இருப்போம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போயிட்டு வரலாம்" என்று சொல்ல, 

ஸ்வேதாவும் "கலா சொல்றது நல்ல யோசனை. நீங்க என்னோட bag-கை மட்டும் கொண்டு வந்து கொடுத்தா helpful-லா இருக்கும்" என்று சொல்ல, வேறு வழி இல்லாமல் தலை ஆட்டி விட்டு அம்மாவிடம் சொல்லி விட்டு கிருஷ்ணா ஹரியுடன் கிளம்பினான்.

அடுத்த பத்து நிமிடத்தில் ஸ்வேதாவிடம் அவள் ட்ராலி bag வந்து சேர, கலாவுடன் பெட்ரூமுக்கு சென்றாள். அங்கே கலா அண்ணாவின் புக்ஸ், கதை புத்தகங்கள், பழைய ஆல்பம் அனைத்தையும் காண்பிக்க, அதை பார்த்து இருவரும் சிரித்து பேசி கொண்டுருந்தனர்.

கலாவுக்கு ஸ்வேதாவை மிகவும் பிடித்து விட்டது. அண்ணன் கிருஷ்ணா வை பற்றி பேசும் போது ஸ்வேதா கண்ணில் தோன்றும் மின்னல்களை கவனித்தாள். அதுபோல் ஹரியை பற்றி ஸ்வேதா புகழும்போது கலா முகத்தில் நாணம் பந்தலிட்டது.

இரவு இரண்டு மணி ஆகிவிட்டதால் வேறு வழி இல்லாமல் இருவரும் உறங்கினர்.

காலை நாலு மணி அளவில் எழுந்து இருவரும் குளிக்க, தன்னிடம் இருந்த புதிய தாவணியை கலா கொடுக்க ஸ்வேதா அதை போட்டு கொள்ள, தாவணியில் அவளை கண்ட கலா மயங்கி போனாள். 'என்ன அழகு ஸ்வேதா. ஆனால் கொஞ்சம் கூட திமிர் இல்லை,யாரையும் கடிந்து பேசுவதில்லை. இவள் மட்டும் எனக்கு அண்ணியாக வந்தாள் எவ்வளவு நன்றாக இருக்கும்" என்று நினைத்து 'அதற்கு ஸ்வேதாவும், கிருஷ்ணாவும் ஒத்து கொள்ள வேண்டும்'பெரு மூச்சு விட்டபடி ஸ்வேதாவை கட்டி கொண்டு, "நீங்க ரொம்ப அழகு"என்று புகழ, ஸ்வேதா சிரித்து கொண்டே, "ஏன் நீ மட்டும் என்னவாம், நீயும் ரொம்ப அழகா இருக்க." என்று சொன்னாள்.

இரு தோழிகளும் பேசி கொண்டுருக்க வீட்டு வாசலில் கார் வந்து நின்றது. கிருஷ், ஹரி காரில் இருந்து அழைக்க, கலா, ஸ்வேதா சென்று ஏறினர். கோவிலில் அம்மனை தரிசனம் செய்து விட்டு பிரகாரத்தில் சுற்றியபடி நால்வரும் பேசி கொண்டு நகர, கிருஷ்ணா ஸ்வேதாவை கண்ணால் விழுங்குவது போல் பார்க்க, ஸ்வேதா அவனை ஓர கண்ணால் பார்த்து சிரித்தபடி நடந்தாள். அருகில் வந்த ஹரி, கலாவின் நிலைமையோ அதை விட மோசமானது. ஒருவரை ஒருவர் விழிகளால் விழுங்கியபடி பார்த்தவாறே நடக்க ஸ்வேதா,கிருஷ் இருவரும் ஒருவரை பார்த்து ஒருவர் சிரித்து கொண்டு, கண் ஜாடை காட்டியபடி வாசலுக்கு வந்தனர்.

வீட்டுக்கு வந்த கிருஷ்ணா, ஹரி, ஸ்வேதா, கலா அனைவருக்கும் தேவகி காபி கொடுத்தாள். காலை உணவை சாப்பிட்டு விட்டு நால்வரும் கிளம்ப, வாசலுக்கு வழி அனுப்ப வந்த தேவகி, வாசுதேவனிடம் ஸ்வேதா "Aunty. நீங்க கலாவை எங்க கூட அனுப்பி வைக்கலாமே. சாயந்தரம் தமுக்கம் மைதானத்ல கலை நிகழ்ச்சி இருக்கு. என்னோட டான்ஸ், பாட்டு, உங்க பையனோட பாட்டு இப்படின்னு நிறையா இருக்கு. நீங்களும், அங்கிளும் அஞ்சு மணிக்கு வந்தா எட்டு மணிக்கு கலா கூட திரும்பி வரலாமே" என்று சொல்ல, கொஞ்சம் யோசித்த வாசு தேவன் "சரிம்மா அவளுக்கும் லீவ் தான். அழைச்சுட்டு போங்க, சாயந்தரம் நீ சொன்ன மாதிரி நாங்க வந்து கூட்டிக்கிறோம்" என்று சம்மதம் கொடுத்தார்.

கலாவும் சந்தோசத்தோடு ஸ்வேதா கழுத்தை கட்டி கொண்டு "தாங்க்ஸ் அண்ணி" என்று காதுக்குள் சொல்ல, ஸ்வேதா முகம் வெட்கத்தில் சிவந்து போனது.

தமுக்கம் மைதானத்தில் Solar Panel கண்காட்சி மற்றும் பொருட்காட்சி நடக்க, கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வந்தது.மாலை கலை நிகழ்ச்சியில் பாட்டு மற்றும் நடனம் உண்டுஎன்று அறிவிக்கப்பட, இரண்டாயிரம் பேர் உட்கார கூடிய மைதானத்தில் இருக்கைகள் எல்லாம் நாலு மணி அளவில் நிறைந்து போனது. 

முதல் இரண்டு மணி நேரம் பல நடனங்கள், பாடல்கள் அரங்கேற, ஏழு மணி அளவில் ஹரி மேடையில் தோன்றினான். அடுத்த ஒரு மணி நேரம் கிருஷ்ண லீலை. இதில் கிருஷ்ண பகவானை வைத்து திரைபட பாடல்கள் நடனங்களாகமற்றும் பாடல்களாக பாடப்படும்.முதலில் பாடப்படும் பாடலை பாடுபவர் கிருஷ்ண குமார். 

கே கே "ஆயர் பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினை போல் மாய கண்ணன் தூங்குகிறான் தாலேலோ" என்று பாட கூட்டமே மகுடிக்கு அடங்கிய நாகம் போல் கட்டுண்டது. 

தொடர்ந்து "முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா" என்ற பாடலுக்கு ஸ்வேதா நடனம் ஆட கூட்டமும் கூட ஆடியது.தொடர்ந்து "கண்ணா கருமை நிற கண்ணா", "கண்ணன் என்னும் மன்னன பேரை சொல்ல சொல்ல", "ராதா காதல் வராதா"போன்ற பலபாடல்கள் இசைக்க பட்டன.

கடைசியில் ஸ்வேதா "கண்ணனை நினைக்காத நாள் இல்லையே. காதலில் துடிக்காத நாள் இல்லையே" பாட, பாடலுக்கு இடையில் கிருஷ்ண குமார் வந்து "கண்ணன் தானே" என்று பாடலை தொடர, கூட்டம் ஆர்ப்பரித்தது.

திரும்ப ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே"கிருஷ் பாட நிகழ்ச்சி இனிதே முடிந்தது.

ஸ்வேதா சென்ற இடமெல்லாம் கலா பின்னாலே திரிந்து கொண்டுருந்தாள். எட்டு மணிக்கு நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் ஸ்வேதா கிருஷ்ணாவிடம் சொல்லி விட்டு கலாவுடன் வீட்டுக்கு கிளம்பி விட்டாள்.

Germanus ஹோட்டல் திரும்பிய கிருஷ்ணாவுக்கு ஸ்வேதா வை பார்க்காமல் பொழுது போகவில்லை. 

வீட்டுக்கு திரும்பிய கலா ஸ்வேதாவுடன் பேசி கொண்டு இருக்க, ஸ்வேதா "ஆமா என்னை எதுக்கு அண்ணின்னு கூப்பிடுற" என்று குரலில் குறும்பு கொப்பளிக்க கேட்க, "அண்ணன் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணை நாங்க அண்ணின்னு தான்" கூப்பிடுவோம். 

"யாரு உன் அண்ணன் சொன்னாரா?"

"இல்லை. நான் தான் கண்டு பிடிச்சேன்"கலா சொல்லி கொண்டிருக்கும்போதே ஸ்வேதாவின் போன் ரிங் ஒலிக்க போனை எடுத்தாள். 

"சொல்லுங்க KK.அப்படியா? .... சரி நாளைக்கு காலைல பேசலாமா?" .... குரலை தாழ்த்தி "உங்க தங்கை பக்கத்தில இருக்கா. ஏற்கனவே கிண்டல் செஞ்சுகிட்டு இருக்கா? நீங்க வேற என் கிட்ட பேசியே ஆகணும்னு துடிக்கிரிங்க. அப்பறம் பேசலாமே. நான் நைட் லேட்டா கூப்பிடுறேன்" என்று சொல்லி போனை கட் செய்தாள்.






No comments:

Post a Comment