Friday, August 7, 2015

கண்ணனை நினைக்காத நாள் இல்லையே - அத்தியாயம் - 4

கொஞ்சம் கொஞ்சமாக தன் சுய நினைவை ஸ்வேதா இழக்க தொடங்கினாள். நிமிடங்கள் கடந்து சுவர் கெடிகாரம் மணி ஒன்பது என்று மணி அடிக்க, தன் நிலை உணர்ந்த கிருஷ் அவளை மெல்ல விடுவித்தான். இன்னும் அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து ஸ்வேதா விடுபடவில்லை. அவள் மனமும் அந்த இனிய நினைவுகளில் இருந்து வெளி வர மறுத்தது. 

இனியும் நேரமானால் பிரச்சனை ஆகும் என்று உணர்ந்த கிருஷ், ஸ்வேதாவின் கையை இழுத்து கொண்டு ஆபீஸ்சை விட்டு வெளியேறினான். 

கிட்டதட்ட தன் நினைவை இழந்த நிலையில் ஸ்வேதாவும் அவன் இழுத்த இழுப்புக்கு ஏற்றவாறு சென்றாள். கீழே பேஸ் மென்ட் வந்தவுடன் "ஸ்வேதா நீ எப்படி ஆபீஸ் வந்த, ஆட்டோல தான?" பதிலுக்கு வாயை திறந்து பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை. 

கண்கள் கலங்க நின்று கொண்டிருந்தவளின் நிலை அறிந்த அவன், அவளை பிடித்து உலுக்க, சுய நினைவுக்கு வந்தாள்.கை தாங்கலாக அவளை அந்த புதிய Audi காரில் முன் சீட் டில் உட்கார வைத்தான். அவள் அவனை கேள்வி குறியுடன் பார்க்க, புரிந்து கொண்ட அவன்"ஸ்வேதா நம்ம சேர்மன் தான் இந்த புது கார் வாங்கி கொடுத்தார். நான் பைக்ல ஆபீஸ் வரதை பார்த்து என்னை திட்டி உடனே ஆர்டர் பண்ணி இந்த காரை வரவழைத்தார்"

டிரைவர் சீட்டில் ஏறிய உடன் தன் காரை அவன் வேகமா எடுத்து Prestiege Meridian பில்டிங் வெளிய வர பெங்களூர் இரவின் விளக்கில் மினு மினுமினுத்தது

.
"ஸ்வேதா உன்னை எங்க ட்ராப் பண்ணனும்"

ஸ்வேதாவிடம் பதில் இல்லை. காரை ஓரத்தில் நிறுத்தி விட்டு ஸ்வேதா என்று அவளை உலுக்க, நினைவுக்கு வந்து தடுமாறினாள்.உணர்ச்சியற்ற அவளின் பார்வை கிருஷ்ணாவை ஏதோ செய்தது. 

"ஸ்வேதா I am really sorryநான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன். உங்களோட சம்மதம் இல்லாம நான் உங்களை தொட்டது தவறுதான்"

விரக்தியோடு சிரித்தாள். "எல்லாம் முடிந்தபிறகு மன்னிப்பு எதற்கு" என்பது போல் அவனை பார்த்தாள். "K K உங்களுக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லையா?" என்று கேட்க கிருஷ் அயர்ந்து போனான். 

"எனக்கு வீட்ல மாப்ளை பாத்துகிட்டு இருக்காங்க. அவர்என்னோட குடும்ப நண்பர் பிரகாஷ் தான். என்னோட அப்பா அம்மாவுக்கு அவரை பிடிச்சுருக்கு. என்னோட சம்மததுக்கு தான் waiting.நான் சரின்னு சொல்றதை பொறுத்துஇன்னும் ஆறு மாசத்தில என்னோட கல்யாணம் முடிஞ்சுடும். தயவு நீங்க என்னோட வாழ்க்கைல விளயாடாதிங்க.உங்களை கெஞ்சி கேட்டுக்கிறேன். என்னை ஆட்டோ ஸ்டாண்ட்ல ட்ராப் பண்ணுங்க" என்று உடைந்த குரலில் கேட்க, கிருஷ்ணாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

"ஸ்வேதா இனிமே நான் உங்ககிட்ட தப்பா நடந்துக்க மாட்டேன். இப்போ நீங்க என்னை நம்பலாம். நைட் நேரத்ல ஒரு அழகான பொண்ணு தனியா ஆட்டோல போறது பாதுகாப்பு இல்லை"

ஸ்வேதா அவனை பார்த்தாள். அவன் கண்களில் தெரிந்த நிஜமான அக்கறை கொஞ்சம் நெகிழ வைத்தது. "சரி" என்று தலை அசைத்து வீட்டு address சொல்ல,Audi கார் கோரமங்கலாவை நோக்கி விரைந்தது.

வீட்டில் இறங்கிய ஸ்வேதா அவனை பார்த்து மெல்லிய குரலில் "தேங்க்ஸ்" சொல்ல, தலை அசைத்து அதை ஆமோதித்து தன் வண்டியை கிளப்பினான்.

ஸ்வேதா இருக்கும் அந்த வீடு சில நாட்களுக்கு முன் தான் வாடகைக்கு எடுக்கப்பட்டது. அம்மா, அப்பா இருவரும் அடுத்த வாரம் வருவேன் என்று சொல்லி இருப்பதால் வீட்டு வேலைக்கு ஆள் சொல்லவில்லை. 

பிரிட்ஜை திறந்து பார்த்தாள் ஸ்வேதா, காய்ந்து போன பிரட் மற்றும் சில ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு இருந்தன. 

"ஐயோ" என்று தலையில் கை வைத்தாள். 

"இன்னைக்கு சாயந்தரம் வரும்போது சூப்பர் மார்கெட்ல கொஞ்சம் MTR ready to eat வாங்கி வரலாம்லு நினைச்சேன். மறந்து போச்சே. சரி, பால் பாக்கெட எடுத்து காய்ச்சி குடிச்சுட்டு, ஆப்பிள் சாப்பிட்டு படுக்க வேண்டியது தான்".

படுக்கும்போது பதினோரு மணி. தூக்கம் வரவில்லை. 

"என்னதான் கே கே விடம் கடுமையாக பேசினாலும் அவன் மீது கோபம் இல்லை. இருந்தால் அவன் முத்தமிடும்போதே பளார் என்று அறைந்துரிப்பேனே" என்று நினைத்து கொண்டே, 

"அவன் ஒரு lovely rascal.ஆபீஸ்லஉள்ள எல்லோருக்கும் அவனை பிடிக்கிறது, சிறிய வயதில் பெரிய பதவி, கூர்மையான அறிவு, அவனை வெறுக்க போதுமான காரணம் இல்லை. 

ஆனால் பாவம் பிரகாஷ் எனக்காக ரெண்டு வருஷமா காத்து கிட்டு இருக்கான். ரொம்ப நல்லவன். இது வரைக்கும் வரம்பு மீறி நடந்து கொண்டது கிடையாது". இவற்றை நினைத்து குழம்பி கொண்டே உறங்கி விட்டாள்.

ஸ்வேதாவை ட்ராப் செய்து திரும்பிய கிருஷ், ஹரியை செல் போனில் அழைக்க,

"என்ன மச்சான் இந்த நேரத்ல"

"மாம்ஸ் உன்னை அர்ஜென்ட்டா பாக்கணும். வீட்டுக்கு வர முடியுமா?"

"கொஞ்சம் யோசித்த ஹரி, இந்த நேரத்ல கிருஷ்ணா கூப்பிட மாட்டானே. "சரி கிருஷ். நான் இப்பவே வரேன்"

சொன்ன மாதிரி அடுத்த இருவதாவது நிமிடத்தில் வில்சன் கார்டன் வீட்டுக்கு வர, ஹரி வாசலில் காத்திருந்தான். 

முகத்தில் சிந்தனை ரேகைகள் ஓடியபடி இருக்க, ஏதோ யோசனையில் இருந்த கிருஷ் ஹரியை பார்த்த உடன் முகம் மலர்ந்தான்.

"ஹரி வா", என்று உள்ளே கூட்டி கொண்டு போக,ஹரி ஹாலில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

"என்ன மச்சான் சொல்லு என்ன நடந்துச்சு. ஸ்வேதா என்ன சொன்னா?"

ஆச்சர்யமானான் கிருஷ் "எப்படி உனக்கு தெரியும்?"

"சும்மா, ஒரு guess தான். உன்னை பத்தி எனக்கு தெரியாதா? சரி விபரமா சொல்லு"

நடந்ததை சொல்ல, "ஏன்டா உனக்கு அறிவு மழுங்கி போச்சா. அந்த பொண்ணு பெரிய எடம், அவகிட்ட போய் விளையாடி இருக்க".

"நீ கொஞ்சம் டென்சன் ஆகாதே, நான் ஹாண்டில் பண்ணிக்கிறேன். இப்போ அவ என்கிட்டே நடந்துகிட்டதை வச்சு பார்த்தா அவளுக்கு என்னை பிடிக்கலைன்னு சொல்ல முடியாது, பிடிச்சுருக்குன்னு சொல்லவும் முடியாது.அவளோட குழப்பத்துக்கு காரணம் அந்த காதலன் பிரகாஷ்தான். முதல்ல டிடெக்டிவ் யஸ்வந்தை கூப்பிடலாம்."

போனை எடுத்து யஷ்வந்த் நம்பர் அழைக்க, யஷ்வந்த் உடனே போன் எடுத்தான். "சொல்லுங்க சார்"

"யஷ்வந்த் நான் ஒரு பொண்ணை பத்திய details கேட்டேனே என்ன ஆச்சு". 

"சார் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. சாரி, இன்னும் பத்து நிமிஷத்ல மெயில் அனுப்பிறேன் பாருங்க. சுருக்கமா சொன்னா, அந்த பொண்ணு பிரகாஷ் ஒருத்தர் கூட பழகுரா. அது நட்பா இல்லை காதலான்னு தெரியலை. பிரகாஷை பற்றிய விபரங்களையும் தனியாஅனுப்பி வைக்கிறேன்."

போனை வைத்து விட்டு ஹரியிடம் பேச ஆரம்பித்தான். 
"மாம்ஸ் எப்படியாவது அந்த பிரகாஷை அவள் பாதைல இருந்து விலக்கனும். ஏதாவது யோசனை சொல்லு."

"ஏண்டா சினிமா வில்லன் மாதிரி யோசிக்கிற. இப்போ கூட ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் என்னோட பந்தயத்தை வாபஸ் வாங்கிக்கிட்டேன்."

"இல்லைடா. இப்போ இது எனக்கு ஒரு தன்மான பிரச்சனை. எந்த பொண்ணும் என்னை வேணாம்னு இது வரைக்கும் சொன்னதில்லை. இப்போ இவ யோசிக்கிறா. இனிமே அவள் கிட்ட தப்பா நடந்துக்க மாட்டேன்னு சொல்லி இருக்கேன். அதை வேற காப்பாத்தி ஆகணும்."

"ஆமா இவரு பெரிய மகாத்மா, கொடுத்த வாக்குறுதிய காப்பாத்தணும் பாரு.எனக்கு தோணுறத சொன்னேன். அவ்வளவுதான், ஆனா நீ என் உயிர் நண்பனா போய்ட்ட.நீ என்ன செஞ்சாலும் நானும் உனக்கு உதவியா இருப்பேன்."



"சரி, ஹரி இப்போ அவனோட வீக்னெஸ் என்னன்னு கண்டு பிடிச்சு அதை அட்டாக் பண்ணனும்."

"கிருஷ், குடி, பெண், பைசா ஏதாவது ஒரு விக்னேஸ் அவன் கிட்ட இருக்கும். நாம கண்டு பிடிச்சு அதை அட்டாக் பண்ணலாம். இப்போ நீ தூங்கு, நாளைக்கு பேசிக்கலாம்."

காலை ஸ்வேதா ஆபீஸுக்கு லேட் ஆக வந்தாள். கிருஷ் கேபினை தாண்டியபோது அவளை கிருஷ் கை காட்டி அழைக்க, உள்ளே சென்றாள்.
"ஸ்வேதா, நேத்து நடந்தது முழுக்க என்னோட தப்புதான் காரணம். உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். நாம இனிமே நல்ல நண்பர்களா இருக்கலாம். இதுக்கு நீங்க ஓகே சொல்றதா இருந்தா", கைகளை நீட்டியபடி, "கை குலுக்கி உங்க சம்மதத்தை தெரிவிக்கலாம். இல்லைனா நீங்க விருப்பப்பட்ட துறைக்கு மாற்றல் வேண்டும் என்று எழுதி கொடுக்கலாம்".

அவன் முகத்தை பார்த்த ஸ்வேதா அதில் தெரிந்த நட்பான புன்னகையை கண்டு மனம் மகிழ்ந்தாள். "சரி சார், நாம இனிமே நண்பர்கள்.ஆனா எனக்கு அட்மின் டிபார்ட்மென்ட் வேண்டாம்"

கிருஷ் முகம் மாறியதை கண்டு மனதுக்குள் சிரித்து கொண்டே, "பைனான்ஸ் டிபார்ட்மென்ட்டுக்கு மாத்தணும்" என்று சொல்ல, அவன் முகம் மத்தாப்பாய் மலர்ந்தது. 

"தேங்க்ஸ் ஸ்வேதா. ஒரு வேளை நீங்க என்னை இன்னும் தப்பா நினைக்கிரின்களோ அப்படின்னு எனக்கு தோணுச்சு. நீங்க நாளை மறு நாள் புது துறைக்கு வரலாம்". என்று சொல்லி விட்டு திரும்ப கை குழுக்க ஸ்வேதா தனது சீட்டுக்கு சென்று அமர்ந்தாள். 

பைனான்ஸ் டிபார்ட்மென்ட் கிருஷ்ணாவுக்கு அருகில் இருப்பதால் அவனை பார்த்து பேசும் வாய்ப்பு அடிக்கடி கிடைக்கும். அவனிடம் இருந்து நிறைய கற்று கொள்ளலாம், இவற்றை நினைத்து சந்தோசபட்டாள் ஸ்வேதா.
"இனிமே நாம நண்பர்களா இருப்போம்" சிரித்து கொண்டே திரும்ப சொல்லி பார்த்தான் கிருஷ். "ஸ்வேதா நீ இப்போ விரும்பி கேட்டு ட்ரான்ஸ்பர் வாங்கி என் கிட்ட வர போற. நீ என்னை நினைச்சு நினைச்சு ஏங்கணும். என் கிட்ட காதலிக்க சொல்லி கெஞ்சணும். கெஞ்ச வைக்கிறேன்".

தனது Apple laptop-ல் மெயில் செக் செய்ய, இரவு பனிரெண்டு மணி அளவில் யஸ்வந்த் அனுப்பி இருந்த இ மெயிலை படித்தான். ஸ்வேதாவை பற்றிய விபரங்கள் இருக்க, முழுக்க படித்து விட்டு இரண்டாவது attachment சென்று open செய்தான். 

பிரகாஷ் போட்டோ வர கூர்ந்து கவனித்தான். கிருஷ் ஒரு தடவை ஒரு நபரை பார்த்தால் தன் ஆயுள் முழுக்க மறக்க மாட்டான். கண்களை மூடி பிரகாஷ் உருவத்தை மனதுக்குள் பதிவு செய்தான்.

பிரகாஷை பற்றிய குறிப்புகளை படித்து பார்த்தான். 

பிரகாஷ் ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவன். என்று அறிந்தபோது சப் என்றது. ஆனால் பிரகாஷ் கல்லூரியில் படித்தபோது கிளாஸ் பெண்ணிடம் ராகிங் செய்து மாட்டி இரண்டு நாள் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
"இது போதும். பிரகாஷ் நீ மாட்டிகிட்டடா?" மனதுக்குள் குதூகலமானான்.

கம்பெனி விஷயமாக வரும் வெளி நாட்டு விருந்தினர்களுக்கு என்று பெண்கள் சப்ளை செய்யும் ஏஜென்ட் ஹாலப்பாவை போனில் அழைத்தான். 

"ஹாலப்பா, எனக்கு ஒரு உதவி".

"சொல்லுங்க சார்"

"நான் ஒருத்தர் போட்டோவை இப்போ அனுப்புறேன். ஆள் பேரு பிரகாஷ். ஒரு அழகான பொண்ணை ஏற்பாடு பண்ணு. அந்த பொண்ணோட பெயர், போன் நம்பர் மட்டும் எனக்கு அனுப்பி வை. மத்த விஷயங்களை நான் திரும்ப போன் பண்ணும்போது சொல்றேன்."

"சரி சார்" என்று சொல்லி ஹாலப்பா போனை வைத்தான்.

மதியம் வழக்கம் போல் Pantry ரூமுக்கு கிருஷ், ஹரி வர அங்கே சாப்பிட்டு கொண்டிருந்த ஸ்வேதாவை பார்த்த உடன் கிருஷ் "ஹரி நாம கொஞ்ச நேரம் கழிச்சு வரலாம். அவங்க எல்லாம் சாப்பிட்டு முடிக்கட்டும்" என்று சொல்ல, ஸ்வேதா "சார் எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை" என்று சொல்லி "Can you please join us?" என்று கேட்டாள். "சரி" என்று சாப்பிட்டு கொண்டே பேசி கொண்டு இருந்தனர். 

ஸ்வேதா அடிக்கடி கிருஷ்ணாவை பார்ப்பது, கிருஷ் அவளை பார்க்கும்போது சட்டென்று பார்வையை தாழ்த்தி கொள்வதுமாக ஒரு சிறிய கண்ணா மூச்சி ஓடி கொண்டிருந்தது. இதை கவனித்த ஹரி, "கிருஷ் வேணாம் உடம்பு தாங்காது" என்று அவன் காதில் கிசுகிசுக்க, தாங்க முடியாத சிரிப்பில் கிருஷ்ணாவுக்கு புரை ஏறியது. 

அவன் தலையை தட்டிய முதல் கை ஸ்வேதா உடையது.

தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டில் லை அவள் எடுத்து கொடுக்க தண்ணீர் குடித்து விட்டு, நன்றி சொன்னான். 
ஏன் பார்த்து சாப்பிட கூடாதா என்று அவள் கண்ணால் கேட்க, சரி I will take care என்று கண்ணால் பதில் சொன்னான். 

சீக்கிரம் சாப்பிட்டு ஹரி கேபினுக்கு சென்றான் கிருஷ். 

"என்னடா உங்க ரெண்டு பேரோட காதல் காட்சிகள் ரொம்ப நல்லா இருக்கு.மத்தவங்க எல்லாம் இல்லைனா நீங்க ரெண்டு பேரும் அடுத்த கட்டம் போயிருப்பிங்க" என்று கிண்டலுடன் கேட்க

"ச்சே நீ வேற, அவள் பிரியமா செஞ்சதை போய் சந்தேகபடுறியே? நீயெல்லாம் ஒரு நண்பனாடா? முதல்ல உன்னோட நட்பை கட் பண்ணனும் அப்பத்தான் நான் உருப்புடுவேன்."

"எனக்கு தேவை. சரி அடுத்த சதி திட்டம் என்ன?"

"நாம என்ன கொலையா பண்ண போறம். ஏன்டா இப்படி கேக்குற. யாராவது கேட்டா தப்பா நினைச்சுக்க போறாங்க."


அதற்குள் ஸ்வேதா வந்து கதவை தட்ட கிருஷ் கதவை திறந்தான். 

"சார், இன்னைக்கு நான் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பனும். ஒரு அஞ்சு மணிக்கு."

"ஓகே என்ன திடீர்னு, நீங்க பொதுவா பெர்மிஷன் கேக்க மாட்டிங்களே, சாரி பர்சனல் விஷயம்னா சொல்ல வேண்டாம்".

"அதல்லாம் ஒண்ணும் இல்லை. என்னோட பாய் பிரெண்ட் Prakash கூட Inox போய் Raa one பார்க்க போறோம், அது தான்"

"அப்படியா, நானும் ஹரியும் அதுக்கு தான் போறோம்."

ஹரி "என்னடா" என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க, 

"Don't worry. We will meet you in the cinema Hall"
அவள் வெளியே சென்ற உடன் ஹரி "என்ன மச்சான் நாம எங்கடா சினிமா போக போறோம்?. நீ என் கிட்ட சொல்லவே இல்லையே?."

"எனக்கு மட்டும் முன்னாடியேவா தெரியும், இப்போதான் முடிவு பண்ணினேன். முதல்ல நம்ம ஆபீஸ் பாய் விட்டு மூணு டிக்கெட் வாங்கிட்டு வர சொல்லு, ரெண்டு டிக்கெட் ஒரே இடத்தில, ஒரு டிக்கெட் தனியா. Most urgent"

"சரி சொல்றேன்" என்று இன்டெர் காமில் ஆபீஸ் boyயை அழைத்து டிக்கெட் வாங்கி வர சொல்லி ஹரி பைசா கொடுத்து அனுப்பினான்.

"டேய் உண்மைய சொல்லு நாம ரெண்டு பேரு எதுக்கு மூணு டிக்கெட்."

"நீ கொஞ்சம் பொறுமையா இரு" என்று சொல்லி தனது Black berry போனை எடுத்து ஹாலப்பாவை அழைத்தான்.

"இன்னைக்கு சாயந்தரம் அஞ்சு மணி, இடம் Inox சினிமா காம்ப்ளெக்ஸ். அந்த பொண்ணு வந்த உடனே என்னோட செல்ல கூப்பிட சொல்லு".

போனை கட் செய்து விட்டு, "இப்போ கேளு சொல்றேன்.""என்ன நடக்குது. ஒண்ணுமே புரியலை. என்னடா கொஞ்சம் விளக்கமா சொல்றியா.?"

கிருஷ் ஹரி காதில் சொல்ல இருவரும் பேசி முடித்து விட்டு வர, மாலை ஐந்து மணிக்கு ஸ்வேதா கிளம்பி செல்ல,சில நிமிடங்கள் கழித்து கிருஷ், ஹரி இருவரும் ஹரியின் Honda City காரில் செல்ல, கிருஷ் போனில் அழைப்பு வந்தது.


புதிய எண்ணை பார்த்த கிருஷ் எடுத்து பேச அடுத்த முனையில், "சார் நான் பாவனா பேசுறேன். ஹாலப்பா தான் உங்க நம்பர் கொடுத்தார்".

"பாவனா இப்போ எங்க இருக்க."

"சார் Inox வாசல்ல."

"சரி அங்கேயே வெயிட் பண்ணு நான் வரேன்."

போனை வைத்து விட்டு இருவரும் பேசி கொண்டே சினிமா ஹால் வர, போனை எடுத்து பாவனா எண்ணை அழுத்தி பேச ஆரம்பித்தான்,"என் கார் நம்பர் நோட் பண்ணிக்க. வாசலுக்கு கொஞ்சம் முன்னால வண்டி நிற்கும்.முதல்ல ஏறிக்க, நான் அங்கே விபரமா சொல்றேன்."

காரில் ஏறிய பாவனாவை கண்டு வியந்து போனான். அவளை கால் கேர்ள் என்று சொல்ல முடியாது. குறைந்த மேக் அப் உடன் இருந்த அவள் பார்ப்பதற்கு இருவது வயது மதிக்கதக்க காலேஜ் மாணவி போல் இருந்தாள். அவளிடம் ஒரு சினிமா டிக்கெட் கொடுத்து என்ன செய்ய வேண்டும் என்று விளக்கினான்.
காரில் இருந்து அவள் இறங்கி சினிமா தியேட்டர் உள்ளே செல்ல, பத்து நிமிடம் கழித்து ஹரி, கிருஷ் உள்ளே நுழைய ஸ்வேதா இருக்கும் இடம் இரண்டாவது row, முதல் சீட் என்பதை கண்டு பிடித்து, பாவனாவை கூப்பிட்டு சொல்ல, அவள் "சரி சார் நாம் பார்த்துக்கிறேன்" என்றாள். 

"மறக்காம call historyல என் நம்பரை delete பண்ணு" என்று சொல்லி விட்டு போனை silent mode-ல் போட்டு விட்டு உட்கார்ந்தான்.

சினிமா ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அந்த சம்பவம் நடந்தது.

ஒரு பெண் குரல் கன்னடத்தில் உச்ச ஸ்தானியில்கேட்க, தொடர்ந்து லைட் ஆன் செய்யப்பட, பாவனா பிரகாஷ் சட்டையை பிடித்து இழுத்து கொண்டிருந்தாள். 

எட்டாவது row-ல் இருந்து ஹரி எட்டி பார்க்க, கிருஷ் அவனை தடுத்து "உட்கார்ந்து பார். இப்போ நாம போனா பிரச்சனை வரும்" என்று சொல்லி விட்டு நடப்பதை கவனித்தான் கிருஷ்.

பாவனா பிரகாஷை கேவலமாக திட்டி "ஏன்டா நீ அக்கா தங்கச்சியோட பிறக்கல. என் மேல ஏண்டா கால்வச்ச". பக்கத்தில் இருந்த ஸ்வேதாவை பார்த்து "ஏம்மா உன்னை பார்த்தா நல்ல பொண்ணு மாதிரி இருக்கு. இந்த மாதிரி கழிசடை கூட ஏம்மா வந்த" என்று கேட்டு விட்டு, பிரகாஷ் சட்டையை இறுக்கி பிடித்தாள். பிரகாஷ் பேசுவது அறியாமல் திகைத்து நிற்க, சுற்றி இருந்தவர்கள் அதை வேறு மாதிரி புரிந்து கொண்டு அடிக்க ஆரம்பித்தனர்.

கூட இருந்த சிலரோ, "அவனோட வந்த இந்த பொண்ணும் ஒரு மாதிரி தான் இருப்பா" என்று அவளை தப்பான கண்ணோட்டத்தில்நெருங்க ஸ்வேதா ஒரு கணம் வெலவெலத்து போனாள். 

நிலைமை கட்டுக்கு அடங்காமால் போவதை கவனித்த கிருஷ், ஹரியுடன் வந்து, ஸ்வேதாவை நெருங்க, ஸ்வேதா கண்ணீருடன் ஓடி வந்து கிருஷ்ணாவை கட்டி கொண்டாள். 

ஹரி அதற்குள் அங்கே உள்ளவர்களை அதட்டி விலக்கி, பிரகாஷை காப்பாற்றி தியேட்டர் மேனேஜரிடம் ஒப்படைத்தனர்.





No comments:

Post a Comment