Saturday, August 1, 2015

மான்சி எனும் தேவதை - அத்தியாயம் - 14

சட்டென்று அவள் இடுப்பில் ஒரு கையும் தோளில் ஒரு கையுமாக சுற்றிவளைத்து அவளை தாங்கிய சத்யன், அவளை தூக்கி தன்மீது சாய்த்துக்கொண்டு “ ஸாரிம்மா கொஞ்சம் முரட்டுத்தனமா இழுத்துட்டேன் ஸாரி கண்ணம்மா” என்று சத்யன் சமாதானம் செய்தாலும் கீழே விழுந்திருப்போமே என்ற பயத்தில் மான்சியின் உடல் நடுங்கியது

சத்யனுக்கு சங்கடமாகிவிட , மேலும் அவளை இறுக்கி அணைத்து தலையை முதுகை வருடி கொடுத்து “ ஸ்.......... மான்சி அதான் விழாம பிடிச்சுட்டேன்ல அப்புறம என்ன, ரிலாக்ஸ் மான்சி” என்று தனது தாடையை அவள் உச்சியில் வைத்து தேய்த்து ஆறுதல் கூறினான்



இவனின் ஆறுதலான அணைப்பில் மான்சியின் நடுக்கம் குறை, அவன் நெஞ்சில் அழுத்தமாக தனது முகத்தை அழுத்திக்கொண்டாள்,, சத்யனும் அவளை விலக்காமல் மேலும் இறுக்கியபடி “ சும்மா தடுமாறி விழப்போனதுக்கு போய் ஏன் மான்சி இவ்வளவு நடுக்கம்? ” என்று கேட்டான்

சிறிதுநேரம் முகத்தை அவன் மார்பில் உரசிய மான்சி “சாதாரணமா இருக்கிறவங்க கீழே விழுந்தா எல்லாரும் கேலி பண்ணி சிரிச்சுட்டு போய்டுவாங்க,, ஆனா என்னைப்போல ஊனமானவங்க கீழே விழுந்தா பரிதாபம்ங்கற பெயரில் எங்க மனசை மேலும் ரணமாக்கி எங்க ஊனத்தை அழுத்தமாக மனசுல பதிய வைப்பாங்க,, இதுபோல நான் ஸ்கூல் படிக்கும் போது நிறைய நடந்திருக்கு மாமா,, அதனால எனக்கு கீழே விழறமாதிரி இருந்தா உடம்பெல்லாம் பயங்கரமா நடுங்கும்” என்று மான்சி மெல்லிய குரலில் சொன்னாள்

சத்யனுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை,, அவளின் வார்த்தைகள் ஊனமுற்ற சமுதாயத்தின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகவே தோன்றியது,, மான்சியின் மனதிலிருக்கும் வலிகளை சத்யனால் புரிந்துகொள்ள முடிந்தது,, ஊனமுற்றவர்களிடம் இரக்கம் காட்டுவதை விட ,, தோழமையுடன் பேசினாலே அவர்களின் வழி குறையுமென்று சத்யன் புரிந்துகொண்டான்

அவளின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் “ சரி இப்போ என்னமோ இனிமே இந்த வேலையெல்லாம் நான்தான் செய்வேன்னு சொன்னியே அது எப்புடி முடியும், நீதான் இன்னும் ரெண்டு நாள்ல நீ தங்கியிருக்குற வீட்டுக்கு போய்டுவியே” என்று சொன்ன சத்யனின் குரலில் மெல்லிய சோகம்

“ நான் இங்கேருந்து போகப்போறேன்னு உங்களுக்கு யார் சொன்னது” என்ற மான்சி நிதானமாக சத்யனின் மார்பு ரோமங்களை வருடியபடி கேட்டாள்

ஒரேயொரு நிமிடம் தான் சத்யன் யோசித்தான்,, அடுத்தநிமிடம் அவள் சொன்னதின் முழு அர்த்தமும் அவன் முகத்திலறைய “ ஏய் என்னடி சொல்ற?,, நீ அங்கே போகலையா?,, ஏன் போகலை என்னாச்சு?, இதைப்பத்தி ஏன் மொதல்லயே சொல்லலை? ” என்று சரமாரியாக கேள்விகளை அடுக்கிய சத்யன் மான்சியை தன்னிடம் இருந்து பிய்த்து எடுப்பது போல இழுத்து தள்ளி நிறுத்தினான்

அவன் முரட்டுத்தனமாக இழுத்ததில் ஏற்பட்ட வலியால் முகம் சுழித்த மான்சி “ அதுக்கு ஏன் இப்படி பிச்சு எடுக்குறீங்க,, யப்பா சரியான முரடு” என்றவள் எட்டி அவன் இடுப்பை பிடித்து தனது இரண்டு கைகளாலும் வளைத்துப் பிடித்துக்கொண்டாள்

அவளின் செந்தனங்கள் அவன் நெஞ்சில் பஞ்சு பொதிகளாய் அமுங்க, சத்யனுக்கு பெறும் இம்சையாக இருந்தது “ ஏய் விடு மான்சி இதென்ன சின்ன குழந்தை மாதிரி பிடிவாதம்,, விடுன்னு சொல்றேன்ல” என்று சத்யன் ஈனஸ்வரத்தில் முனங்கலாக சொல்ல

“ ம்ஹூம் நான் இப்படியே இருந்துதான் சொல்லுவேன்,, கேட்க இஷ்டம்னா கேளுங்க இல்லேன்னா விடுங்க” என்று மான்சி அவனை அணைத்தபடியே பேசினாள்

இப்போது அவனுக்கும் அவளை விலக்க மனமில்லை,, அவள் தனங்களின் உரசலால் அவன் நெஞ்சு சூடேற,, “ மான்சி வெளிய அக்கா இருக்காங்க,, ஏதாவது நெனைச்சுக்கப் போறாங்க,, விடும்மா” என்று கிறக்கமாக சத்யன் சொல்ல ..........

“ அக்கா தூங்கிட்டாங்க .. இப்போ தான் தலைவலிக்குதுன்னு சொன்னாங்க,, நான்தான் தைலம் தேய்ச்சு பிடிச்சு விட்டுட்டு வந்தேன்,, அதனால நீங்க பயப்படாதீங்க மாமா” என்று கிசுகிசுப்பாக மான்சி கூறியதும்

அதற்க்கு மேல் அவளை விலக்க சத்யன் எதுவும் சாக்குபோக்கு சொல்லாமல் “ சரி நீ காரணத்தை சொல்லு” என்றான்

“ ம் அந்த பொண்ணுங்க எல்லாரும் என்னை எப்பவுமே பரிதாபமா பார்க்குறாங்க,, ஒரு சின்ன வேலை செய்தா கூட ,, அய்யோ நீங்க அதெல்லாம் செய்றீங்கன்னு பிடுங்கி வச்சுர்றாங்க,, அவங்கல்லாம் எங்கயாவது கடைக்கு போனா கூட என்னை கூட்டிட்டு போகமாட்டேங்குறாங்க,, பாவம் உங்களால நடக்க முடியாதுன்னு சொல்லி என்னை அவாய்ட் பண்றாங்க மாமா,, அதனால இனிமேல் நான் இங்க இருந்தே காலேஜுக்கு போறேன்,, ப்ளீஸ் வேண்டாம்னு சொல்லாத மாமா” என்று அவன் நெஞ்சில் முகத்தை வைத்துக்கொண்டு மான்சி கண்ணீர் ததும்பும் குரலில் சொன்னதும் .....

சத்யனால் எதுவுமே பேசமுடியவில்லை,, ஆறுதலாக அணைக்கிறேன் என்று அவளை தன் பங்குக்கு இறுக்கிக்கொண்டவன்,, வெகுநேரம் வரை எதுவும் பேசவில்லை

மான்சி அவனது அணைப்பில் உடல் வலித்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அவன் மேலேயே சுகமாக சாய்ந்து கொண்டாள்

அவள் மனது சத்யனுக்கு புரிந்தாலும் இதெல்லாம் சரியாக வருமா,, இவள் இங்கே தங்கினால் ஊர் என்ன பேசும் என்று கலக்கமாக இருந்தது,, அதைப்பற்றி அவளிடமே கேட்டான் சத்யன்

“ மான்சி நீ சொல்றது எனக்கும் புரியுதுடா,, ஆனா இது வில்லேஜ், நான் தனிக்கட்டை என்கூட ஒரே வீட்டுல நீயும் தங்கினா,, பார்க்கறவங்க என்ன சொல்லுவாங்கன்னு யோசிச்சியா? அத்தோட நாளைக்கு நீ நல்லபடியா இன்னோரு வீட்டுல போய் வாழனும் மான்சி,, அதனால இதெல்லாம் சரியா வராது மான்சி,, நீ அங்கேயே அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு இருடா கண்ணம்மா” என்று சத்யன் சிறு குழந்தைகளுக்கு சொல்வதுபோல மான்சிக்கு எடுத்து சொன்னான்

அடுத்த நிமிடம் ஆவேசத்துடன் மான்சி அவன் நெஞ்சில் கைவைத்து கோபமாக அவனை தள்ள .. சத்யன் தடுமாறி கட்டிலில் விழுந்தான் ,, விழுந்தவன் குழப்பத்தோடும் கோபத்தோடும் மான்சியை பார்த்தான்

“ இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன்,... உங்களுக்கு மறுபடியும் பைத்தியம் பிடிச்சுருச்சா,, எப்பபார்த்தாலும் என்னை வேற எவனுக்காவது கல்யாணம் பண்ணி வைக்கிறதுலயே இருக்கீங்க,, அதுவும் அதை கட்டிப்பிடிச்சுக்கிட்டே வேற சொல்றீங்க,, இது எப்படி இருக்கு தெரியுமா? உங்க பொண்டாட்டிய வேற ஒருத்தனுக்கு மறு கல்யாணம் பண்ணி வைக்கிற மாதிரி இருக்கு,, இன்னொருமுறை இந்த மாதிரி பேசினீங்க அப்புறமா நான் பொல்லாதவளாயிருவேன்,”என்றவள் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு

“ பத்து வருஷத்துக்கு முன்னாடி உங்க தேவி ரொம்ப வீரமான பொண்ணுன்னு நீங்க எங்க வீட்டுக்கு வரும்போது அடிக்கடி சொல்வீங்க,, தேவி மட்டும் வீரமானவ இல்ல நானும்தான்,, அவளாவது நீங்க கிடைக்கமாட்டீங்கன்னு செத்துப்போன ,, ஆனா என்ன பண்ணுவேன் தெரியுமா,, நான் சாகறதுக்கு முன்னாடி உங்களையும் கொன்னுடுவேன்,,ச்சே என்ன மனுஷன்பா நீங்க என்ன சொன்னாலும் மண்டையில ஏறமாட்டேங்குது,” என்று வீரமாக பேசி கண்கள் கலங்க சத்யனின் காலருகே கட்டிலில் தொப்பென்று அமர்ந்தாள்

மல்லாந்து விழுந்த நிலையிலேயே படுத்திருந்த சத்யன் அதிர்ச்சியுடன் “ ஏய் மான்சி என்னடி இப்படியெல்லாம் பேசுற?” என்று திகைப்புடன் கேட்க

“ பின்ன வேற எப்படி பேசுவாங்களாம்,, என்னடா வாயில்லா பூச்சியா இருக்காளே இவளை சுலபமா ஏமாத்தலாம்னு கனவு காணாதே மாமா,, என் காலுக்குத்தான் வலுவில்லை, ஆனா என் கை படு ஸ்ட்ராங்,, பார்க்குறியா ” என்று தனது வலதுகை முஷ்டியை மடக்கி காட்டி மான்சி மிரட்டலாக சொன்னதும்

சத்யனுக்கு சிரிப்பு தாங்கவில்லை,, ம்ம் என்னா வீரமா பேசுறாப்பா என்று மனதில் எண்ணியவாறு “என்னடி நான் சம்மதிக்கலைன்னா என்னை அடிப்பியா” என்று குறும்பாக சத்யன் கேட்க

“ ஆமா பின்னே,, என்னை கட்டிக்க சம்மதிக்கலைன்னா நிச்சயம் அடி உதைதான்,, என்னால முடியலைன்னா கூட ஆளவச்சு உங்களை அடிச்சு தூக்கிட்டு வந்து என் கழுத்துல தாலி கட்ட வைக்கலைன்னா நான் பாண்டியன் பொண்ணு மான்சி இல்ல” என்று மான்சி கோபத்தோடு பேசினாள்

அவளின் பேச்சை கேட்டு சத்யனுக்கு மேலும் மேலும் சிரிப்புதான் வந்தது “ சரி பாண்டியன் பொண்ணு இல்லேன்னா பரவாயில்லை,, பரிமளாவோட பொண்ணுன்னு வச்சுக்கலாம்” என்று சத்யன் நக்கல் செய்ய

“ இதோ பாரு மாமா விளையாடாதே,, இந்த விஷயத்தில் நான் ரொம்ப மன உறுதியோட இருக்கேன்,, நீ என்னை ஒன்னுமே பண்ணமுடியாது,, பேசமா என்னை கல்யாணம் பண்ணிகிட்டு குடும்பம் நடத்துற வழியப்பாருங்க” என்று விழிகளை உருட்டி அவனை மிரட்டலாக பார்த்தாள் மான்சி

ஒருக்களித்து படுத்து கையால் தலையை தாங்கிய சத்யன் “ அடேய்யப்பா எனக்கு ரொம்ப பயமாயிருக்குடி,, என்று பயந்தவன் போல் நடித்து “ ம் இன்னும் எதாவது இருக்கா” என்று நக்கலாக கேட்டான்


கட்டிலை விட்டு எழுந்து இடுப்பில் கைகளை வைத்தபடி நின்ற மான்சி “ இன்னும் இருக்கு கேளுங்க,, நான் இனிமேல் இங்கே இருந்துதான் வேலைக்கு போவேன்,, இங்க யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை,, உங்க அக்காகிட்ட காலையில வந்ததுமே விஷயத்தை சொல்லிட்டேன், நான் தங்கறதுக்கு அவங்களும் சம்மதம் சொல்லிட்டாங்க, அக்கா எனக்கு துணையா சனிக்கிழமை காலையில வந்து திங்கக்கிழமை காலையில போறதா சொன்னாங்க, மத்தபடி தட்சிணா கூட இருக்கிறதால பயமில்லாமல் இருக்க சொன்னாங்க, தெரு தண்ணி தெளிக்கிற ஆயாவை நைட்டுக்கு என் கூட துணைக்கு படுத்துக்க சொன்னாங்க,, ஆனா நான் இப்போ உங்க அக்காகிட்ட போய் சொல்லப்போறேன்” என்று மான்சி மூச்சு வாங்க நிறுத்த ....

குழப்பமாக அவளை ஏறிட்ட சத்யன் “ அக்காகிட்ட என்ன சொல்லப்போற” என்று அவசரமாக கேட்டான்

“ ம் துணை எனக்கு வேண்டாம் அந்த ஆயாவை உங்க தம்பிக்கு துணையா வந்து படுத்துக்க சொல்லுங்கன்னு சொல்லப்போறேன்” என்று மான்சி குறும்பாக சொல்ல

“ ஏய் என்ன நக்கலாடி” என்று சத்யன் படுக்கையிலிருந்து வேகமாக எழுந்து அமர்ந்தான்

இதழ்களில் தேங்கிய சிரிப்புடன் அவனருகில் வந்த மான்சி, அவன் கால்களுக்கு நடுவே நின்று அவன் முகத்தை தன் கைகளில் ஏந்தி நெற்றியில் முத்தமிட்டு “ அப்படி என்கூட ஒரே வீட்டுல தங்க உங்களுக்கு பயமாயிருந்தா எங்கப்பாவுக்கு போன் பண்ணி சீக்கிரமா வரச்சொல்லுங்க, அவரு வந்து நம்ம கல்யாண தேதியை முடிவு பண்ணட்டும்” என்றவள் மறுபடியும் நெற்றியில் முத்தமிட்டு, இரண்டு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட, சத்யன் எல்லாவற்றையும் மறந்து சுகமாக கண்களை மூடிக்கொண்டு அவளின் அடுத்து முத்தத்திற்காக தனது உதடுகளை பிளந்துகொண்டு தயாராக இருந்தான்

ஆனால் மான்சியின் இதழ்கள் அவனது உதடுகளில் பதியவேயில்லை, சத்யன் சட்டென்று கண்களை திறந்து பார்க்க,, அங்கே மான்சி இல்லை, அங்கிருந்து போய்விட்டிருந்தாள்,, “அடிப்பாவி ஏமாத்திட்டாளே” என்று சத்யன் வாய்விட்டு புலம்பியபடி கட்டிலில் விழுந்தான்

மான்சி முத்தமிட்ட கன்னங்களை தடவிப் பார்த்தான்,, இன்னும் அவளின் ஈரம் இருந்தது,, கன்னங்களை தடவிய விரல்களை எடுத்து உதட்டில் வைத்து முத்தமிட்டுக்கொண்டான்

மான்சி பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் சத்யன் காதில் மறுபடியும் மறுபடியும் ஒலித்தது,, அவளது உறுதி அவனை வியக்க வைத்தது,, இனிமேல் தன்னுடைய பேச்சை அவள் கேட்கமாட்டாள் என்று சத்யனுக்கு தெளிவாக புரிந்தது,, அவளுடைய பேச்சு சத்யனுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும் தனது நிலை குறித்த பயம் மனதின் ஓரம் இருந்துகொண்டு அவனை வாட்டி வதைத்தது

அதன்பிறகு சத்யனின் வாழ்க்கை முறையே தலைகீழாக மாறிப்போனது,, காலையில் கையில் காபியுடன் அவனை எழுப்பும் மான்சி அவனுக்கு பிடித்த டிபனனை செய்துவிட்டு, தட்சிணாவின் உதவியுடன் அவசரமாக மதிய உணவையும் தயார் செய்து சத்யன் தட்சிணா இருவருக்கும் கேரியரில் வைத்து தட்சிணாவிடம் கொடுத்து காரில் வைக்க சொல்லிவிட்டு, இவள் அவசரமா குளித்து சாப்பிட்டு மினி பஸ் ஏறி காலேஜுக்கு போய்விடுவாள்

ஒரு டிரைவரை வரச்சொல்லி காரில் போகுமாறு சத்யன் சொன்னதை மறுத்துவிட்டு பஸ்ஸில் போய்விடுவாள்,, மாலை நாலரைக்கெல்லாம் வீட்டுக்கு வரும் மான்சி, அவன் வருவதற்குள் காபி போட்டு ஏதாவது டிபன் செய்து தயாராக இருப்பாள்




சத்யன் வந்து முகம் கழுவி வரும்போது டவல் கொடுப்பதில் இருந்து ,, காபி கொடுத்து இரவு டின்னருக்கு பறிமாறுவது வரை எல்லாமே மான்சியின் பொறுப்பில் நடந்தது

சத்யன் குளித்துவிட்டு வரும்போது தட்சிணா இல்லை என்றால் சத்யனிடம் இருந்து டவலை பிடுங்கி எக்கி அவன் தலையை துவட்டி விடுவது,, பிறகு தட்சிணா கவனிக்காத சமயத்தில் சத்யன் சாப்பிட்ட தட்டில் அவளுக்கும் உணவு வைத்து சாப்பிடுவது என்று அவ்வப்போது தனது காதலை சொல்ல மான்சி மறக்கவில்லை

மான்சி சத்யன் வீட்டில் தங்குவது பற்றி ஜெயந்தி போன் செய்து பாண்டியனிடம் சொல்லிவிட்டபடியால் எந்த பிரச்சனையும் இன்றி அன்றாட வாழ்க்கை சுகமாக போனது


சத்யன் மட்டும் மனதில் ஓர் உறுத்தலுடனேயே எல்லாவற்றையும் சுகமாக அனுபவித்தான்,, ஒருமுறையும் தன்னை கடந்து செல்லும்போது அழுத்தமாக உரசிவிட்டு செல்லும் மான்சியை ஒன்றுமே செய்யமுடியாமல் தவித்தான்,, அவன் தவிப்புக்கு காரணம் இன்னுமும் வாழ்ந்து வரும் தேவியுடனான கனவு வாழ்க்கை தான், சத்யன் பயத்துக்கு காரணம்

சில நேரங்களில் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு எதிர்பாராத தருனங்களில் மான்சி தரும் முத்தங்களுக்காக சத்யன் ஏங்க ஆரம்பித்தான் ,, அந்த முத்தம் நெற்றியில் கிடைக்கும் இல்லையென்றால் கன்னத்தில் கிடைக்கும், சத்யன் அழகாக ட்ரிம்மாக டிரஸ் செய்திருந்தால் இடுப்பில் கைவைத்து அவன் அழகை ரசித்துவிட்டு ,,தனது இதழ்களை சட்டென்று அவன் உதட்டில் வைத்து அழுத்தி முத்தமிட்டு சத்யன் அதை உணரும் முன் பட்டென்று விலகி விடுவாள்

அவளுடன் கழிக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் சத்யன் ஏங்க ஆரம்பித்தான்,, ஆனால் இப்போதெல்லாம் இரவில் சத்யன் படுக்கையை மாற்ற மான்சி வருவதில்லை,, ஒருநாள் சத்யன் அவளை இழுத்துவைத்து கேட்டபோது ...

வெட்கத்தில் தலைகுனிந்த மான்சி,, அவளுக்கு பிடித்த விளையாட்டான சத்யனின் சட்டை பட்டனை பிய்த்து எடுக்கும் வேலையை செய்தபடி தயங்கி தயங்கி " ம் அதுவந்து எனக்கு ரொம்ப இதுவா இருக்கு மாமா,, உங்க ரூமுக்குள்ள வந்தா என் மேலே எனக்கே நம்பிக்கை இல்லை மாமா,, அதான் உங்க ரூமுக்கு வர்றதில்லை" என்றவள் அவனை ஏறெடுத்துப் பார்த்து " மாமா சீக்கிரமா அப்பாவுக்கு போன் பண்ணி வரச்சொல்லு மாமா,, நாம சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று ஏக்கமாக கேட்டாள்

சத்யனுக்கு மனதில் சந்தோஷம் முக்கால்வாசி நிறம்பி வழிந்தாலும்,, அந்த கால்வாசி பயத்தை உதறி எறிய முடியவில்லை,, அன்போடு மான்சி தழுவிய சத்யன் " மான்சி உன் முடிவில் எந்த மாற்றமும் இல்லையா? கல்யாணத்துக்கு அப்புறமா வருத்தப்பட மாட்டியே மான்சி" என்று மெல்லிய குரலில் சத்யன் கேட்டான்

அவன் நெஞ்சில் வரும் அவளுக்கு பிடித்தமான ஆண் வாசனையை நுகர்ந்தபடி " இல்ல மாமா என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை,, கல்யாணத்துக்குப் பிறகு உங்களை இப்படி பயந்து பயந்து தொடாமல் உரிமையோட பக்கத்துல நின்னா அதுவே எனக்கு போதும் மாமா,, உங்களுக்கு எப்ப என்கூட சேரனும்னு தோனுதோ அப்போ சேர்ந்து வாழலாம்" என்று மான்சி தனது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்தாள்

அவளை விலக்கி நிறுத்தி நெற்றியில் அழுத்தி முத்தமிட்ட சத்யன் " எல்லாம் விதிவிட்ட வழிப்படி நடக்கட்டும் மான்சி,, என்னாலயும் இனிமேல் உன்னை விட்டுட்டு இருக்கமுடியாது,, மாமாவுக்கு போன் பண்றேன் இப்போ சந்தோஷமா? என் தேவதைக்கு" என்று சிரிப்புடன் சத்யன் கேட்க

ம்ம் என்று தலையசைத்த மான்சி தனது சந்தோஷத்தை அவன் உதட்டில் முத்தமிட்டு தெரிவித்தாள்

அன்று மாலை பாண்டியனுக்கு போன் செய்து,, காரணகாரியம் எதுவும் சொல்லாமல் உடனடியாக கிளம்பி வருமாறு சொன்னான்


மறுநாள் மேல்மருவத்தூர் ரயில்நிலையம் சென்று பாண்டியனை அழைத்து வந்தான் சத்யன்,, காரில் கூட அவரிடம் எதையுமே சொல்லவில்லை , வீட்டுக்குள் நுழைந்தவரை மான்சி வரவேற்று சோபாவில் அமர்த்திவிட்டு காபி எடுத்துவர உள்ளே போய்விட்டாள்,,

பாண்டியன் வீட்டில் தெரிந்த மாற்றங்களை ஆச்சரியமாக பார்த்தார்,, அவர் அருகே அமர்ந்த சத்யன் ‘’என்ன மாமா அப்படி பார்க்கறீங்க எல்லாம் உங்க பொண்ணோட வேலைதான் ,, வீட்டையே மாத்திட்டா” என்ற சத்யனி குரலில் பெருமை வழிந்தது

காபி எடுத்துவந்த மான்சி அதை பாண்டியனிடம் கொடுத்துவிட்டு சத்யன் அருகிலிருந்த சோபாவின் கைப்பிடியில் உரிமையாக அமர்ந்துகொண்டாள்
பாண்டியன் வியப்புடன் மகளை பார்த்தார்,, மான்சியின் முகத்தில் முன்பிருந்த இறுக்கம் இல்லை, ஒரு நிம்மதி, சந்தோஷம், பலகாலமாக தேடியது கிடைத்த திருப்தி, இவையெல்லாம் சேர்ந்து அவள் முகத்தில் ஒரு பொலிவை ஏற்ப்படுத்தியிருந்தது

சத்யன் அருகில் உரிமையோடு அமர்ந்திருக்கும் மகளை பார்த்துவிட்டு சத்யன் முகத்தை பார்த்தார் பாண்டியன்

அவர் பார்வையை சந்திக்க சத்யனுக்கு சங்கடமாக இருந்தது,, மான்சியின் மேல் மெல்லிய கோபம்கூட வந்தது,, உட்கார இடமாயில்ல இங்கே வந்து உரசிகிட்டு உட்கார்ந்து சங்கடப்படுத்துறாளே, என நினைத்தவன் அவளை அங்கிருந்து கிளப்பும் யோசனையில் “ மான்சி எனக்கு தண்ணி எடுத்துகிட்டு வா” என்றான்
இவனுக்கு மேல் கில்லாடியான மான்சி “ தட்சிணா அண்ணனுக்கு தண்ணி எடுத்துட்டு வா ” என்று உள்ளே பார்த்து குரல் கொடுத்தாள்,,

அடுத்த நிமிடம் தட்சிணா கையில் தண்ணீர் பாட்டிலுடன் வந்து சத்யனிடம் கொடுக்க,, அதை வாங்கி இல்லாத தாகத்துக்கு தண்ணீர் குடித்த சத்யன் “ ஏன்டா நீ இன்னும் கடை சாவியை எடுத்துகிட்டு கடைக்கு போகலையா? நேத்து ஏகப்பட்ட வண்டி சர்வீஸ்க்கு வந்திருந்துச்சேடா? நீ இன்னும் இங்கயே இருக்க ” என்று சத்யன் கேட்க

“ இல்லண்ணே இன்னிக்கு உங்க மாமா வர்றாரு, கொஞ்சம் சாமான்கள் வாங்க கடைக்கெல்லாம் போற வேலை இருக்குன்னு அக்கா சொன்னாங்க அதனால மணிக்கு போன் பண்ணி வரச்சொல்லி கடை சாவியை அக்கா குடுத்தனுப்பிட்டாங்க” என்று தட்சிணா விளக்கம் கொடுத்தான்

மான்சியின் முன் யோசனையும் நிர்வாகத் திறமையும் சத்யனுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும், பெருமை பொங்க அவளை பார்க்காமல் இருக்கமுடியவில்லை

அவன் பார்வை புரிந்து வெட்கமாக புன்னகைத்த மான்சி “ ம்ம் அப்பா வந்து அரை மணிநேரம் ஆச்சு மொதல்ல விஷயத்தை சொல்லுங்க” என்று சத்யனை அதட்டினாள்

“ என்ன சத்யா மேட்டர்” என்று பாண்டியன் கேட்க

“ நீ எழுந்து மொதல்ல குளிச்சுட்டு டிபன் சாப்பிடு மாமா,, என்ன விஷயம்னு அப்புறமா சொல்றேன்” என்று சத்யன் சமாளித்தான்

பட்டென்று அவன் பக்கத்தில் இருந்து எழுந்த மான்சி “ எங்கப்பா பத்து மணிக்குத்தான் சாப்பிடுவாரு உங்களுக்கு தெரியும் தான அப்புறம் ஏன் இப்பவே சாப்பிட சொல்றீங்க,, உங்களுக்கு சொல்ல தைரியம் இல்லேன்னா விடுங்க நானே சொல்லிக்கிறேன்” என்று சத்யனை பார்த்து முறைப்புடன் பொரிந்து தள்ளிய மான்சி பாண்டியன் எதிரில் வந்து நின்றாள்

“ அப்பா என் ஜாதகத்தை எடுத்துட்டு வரச்சொல்லி நேத்து போன் பண்ணேனே எடுத்துட்டு வந்திருக்கீங்களா?” என்றாள்

“ ம் எடுத்துட்டு வந்துருக்கேன் பேக்ல இருக்கு அம்மு” என்றார் பாண்டியன்

வேகமாக சத்யன் அறைக்குள் நுழைந்த மான்சி சிறிதுநேரத்தில் கையில் ஒரு நோட்டுடன் வந்து அதை பாண்டியனிடம் நீட்டினாள் “ அப்பா இது சத்யா மாமாவோட ஜாதகம் இன்னும் கொஞ்சநேரத்தில ஜெயந்தி அக்காவும் அவங்க வீட்டுகாரரும் வருவாங்க நீங்களும் அவங்களும் போய் எங்க ரெண்டு பேருக்கும் பொருத்தம் பார்த்து ரொம்ப சீக்கிரமாகவே ஒரு நல்லநாளா பார்த்து கல்யாணத்துக்கு தேதி வச்சுட்டு வாங்க” என்று மான்சி மூச்சு வாங்க வேகவேகமாக சொல்லி முடித்தாள்

பாண்டியன் முகத்தில் சந்தோஷம் தாண்டவமாடியது,, இருந்தாலும் நம்பமுடியாமல் சத்யனை பார்த்தார், சத்யன் உதட்டை பிதுக்கி தனது தோள்களை குலுக்கினான்

“ இந்த ஒரு மாசமா இதுதான் மாமா என் நிலைமை,, இவ நில்லுன்னா நிக்கனும் உட்காருன்னா உட்காரனும்,, மீறி ஏதாவது செஞ்சேன் காதை பிடிச்சு திருகிடுவா,, இப்போ நீங்க இன்னும் ரெண்டு நாள் லேட்டா வந்திருந்தா,, என்னை கடத்திக்கிட்டு போய் கல்யாணமே பண்ணியிருப்பா மாமா,, அவ்வளவு வேகம்,, நானும் என் நிலைமையை எவ்வளவோ எடுத்துச்சொல்லி புரிய வச்சு பார்த்தேன் இவ் எதையுமே எடுத்துக்கறதா இல்லை,, ஒரே பிடிவாதமா நான்தான் வேனும்னு சொல்றா,, நீங்களாவது சொல்லி புரியவைங்க மாமா” என்று சத்யன் சொன்னான்

அதுவரை அவன் சொல்வதையே கவனித்த பாண்டியன் “ அம்முவுக்கு எல்லாம் தெரியும் சத்யா நாம எதுவும் புத்தி சொல்ல வேண்டியது இல்லை அவள் எடுக்கும் முடிவு எப்பவுமே சரியாத்தான் இருக்கும்,, எனக்கே குடும்ப விஷயத்தில் நிறைய புத்தி சொல்லுவா சத்யா,, என்னைப்பொறுத்தவரை அம்மு எது சொன்னாலும் அது சரிதான்,, என் மக மனசுல என்ன இருக்குன்னு எனக்கு ரொம்ப நாளாகவே தெரியும்,, ஒவ்வொருமுறையும் நீ எனக்கு போன் பண்ணும்போது நான் அவளை கவனிச்சுருக்கேன்,, நானே இதைப்பத்தி உன்கிட்ட பேசனும்னு நெனைச்சேன் ஆனா குறையோட இருக்கிற மகளை உன் தலையில கட்டக்கூடாதுன்னு நெனைச்சு அமைதியாயிருந்தேன்,, ஆனா இப்போ அம்முவோட குறை உனக்கு பெரிசா தெரியலையே சத்யா எதுவாயிருந்தாலும் வெளிப்படையா சொல்லு” என்று பாண்டியன் உருக்கமாக வேண்டி கேட்டார்

அவரின் பேச்சு சத்யனுக்கு வேதனையாக இருந்தது,, திரும்பி மான்சியை பார்த்தான்,, அவள் சுவற்றில் சாய்ந்து நின்று விழிகளில் துளிர்த்த நீரை விரல்களால் சுண்டிவிட்டாள்,






" ஒவ்வொரு முறையும் பற்றாக்குறை....

" பட்ஜெட் போடும் அரசாங்கத்தை போலவே...

" உனது முத்தமும் பற்றாகுறையாகவே இருக்கிறது!

" ஒவ்வொரு முறையும் கனவில் நீயே முத்தமிடுகிறாய்..

" நான் முத்தமிடுவதற்க்குள் விடிந்து விடிகிறது!

" கனவில் மட்டும் அழுத்தமாக ஆழமாக முத்தமிடும் நீ ....

" விடிந்ததும் என்னை பார்க்க வெட்கி ஓடிவிடுகிறாயே!

" ஒவ்வொரு நாளும் என் கனவில் நீ முத்தமிடுவது போல்...

" நான் உன் கனவில் வந்து முத்தமிடுகிறேனா அன்பே?


No comments:

Post a Comment