Monday, August 10, 2015

கண்ணனை நினைக்காத நாள் இல்லையே - அத்தியாயம் - 11

நாளை மறு நாள் (21st) நடக்கிற மீட்டிங்க்கு காலைல பிளைட் பிடிச்சா சரி வராது. அதுனால நாளை மாலை பிளைட்ல டெல்லி போயிட்டு, நாலாம் நாள் (24th) காலை பிளைட் ல திரும்பி வந்தா சரியாக இருக்கும்' என்று Admin Department சொல்ல, சரி என்று கிருஷ் தனக்கும், ஸ்வேதாவுக்கும் டிக்கெட் புக் செய்ய சொன்னான். 

இங்கிருந்து போக இரவு எட்டு மணி ஏர்இந்தியா, திரும்ப காலை ஒன்பதரை மணி இண்டிகோ என்று Admin டிக்கெட் புக் செய்து கொடுத்தனர். 

இருபதாம் தேதி இரவு ப்ளைட்டில் கிருஷ், ஸ்வேதா இருவரும் டெல்லிக்கு கிளம்பினர். கடுமையான மூடு பனி காரணமாக இருவரும் சூட், ஜெர்கின், ஸ்வெட்டர் எடுத்து கொள்ள இந்தியன் ஏர்லைன் விமானத்தின் மூலம் டெல்லி ஏர் போர்ட் இறங்கியபோது இரவு மணி பதினொன்று.

ஏற்கனவே ஏற்பாடு செய்து இருந்ததால் அவர்கள் இருவரையும் pick up செய்ய Leela Palace ஹோட்டல்லில் இருந்து கார் வந்து காத்திருக்க, அதில் ஏறி ஹோட்டல் சேர்ந்த போது மணி நள்ளிரவு பனிரெண்டை நெருங்கியது. 

எப்போதும் பத்து மணிக்குள் உறங்கி விடும் ஸ்வேதா தூக்க கலக்கத்தில் கொட்டாவி விட்டபடி காரில் இருந்து இறங்கி நிற்க, அங்கே ஹோட்டல் ரிசப்ஷனில் கிருஷ் விசாரித்து கொண்டு இருந்தான்.

 


இரண்டு single room புக் செய்யப்பட்டதாக ரிசப்ஷனில் confirm செய்ய, ஸ்வேதா கிருஷ்ணாவிடம் "நமக்கு எதுக்கு இரண்டு ரூம். தனியா நான் இருக்க மாட்டேன்". ரிசப்ஷனில் ஸ்வேதா பேசினாள்

சிங்கிள் ரூம்களை கான்ஸல் செய்து டபுள் பெட்ரூம் புக் செய்ய சொல்ல, ரிசப்ஷனில் இருந்த ஆள் "மேடம் நீங்க ரூமை கான்ஸல் செய்தா, திரும்ப கிடைக்காது" என்று சொல்ல, அருகில் இருந்த கிருஷ் "ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க" என்று சொல்லி விட்டு அவளை தனியே அழைத்தான். 

"என்ன ஸ்வேதா எதுக்கு ஒரே ரூம்" என்று கேட்க, "நான் உங்க கூட தான் தங்குவேன். இல்லைனா இப்பவே கிளம்பி பெங்களூர் போறேன்" என்று பிடிவாதம் பிடிக்க, வேறு வழி இல்லாமல் டபுள் பெட்ரூம் புக் செய்ய சொன்னான் கிருஷ்.

ரூமுக்கு வந்த கிருஷ் தனிதனியாக இருந்த இரண்டு பெட்களை கண்டு "அப்பாடா" என்று சந்தோச பெருமூச்சு விட்டான்.அவன் பின்னாலே வந்த ஸ்வேதா அவன் இரண்டு பெட்களை பார்த்து சந்தோசபட்டதை பார்த்து, 

"ரொம்ப சந்தோசபடுறியா, இரு KK உனக்கு சீக்கிரமே ஆப்பு வைக்கிறேன்' என்று முனகியபடி bagகை வைத்து விட்டு பாத்ரூம் சென்று இரவு உடைக்கு மாறிய பிறகு வந்து படுக்கையில் படுத்து கொண்டாள். அதே நேரத்தில் தனது உடைகளை மாற்றி கொண்டு வந்த கிருஷ், அவள் படுத்து உறங்கி விட்டதை பார்த்து அப்பாடா இன்னைக்கு தப்பியாச்சு என்று நிம்மதியோடு, அடுத்த படுக்கையில் படுத்தான். 

காலை எட்டு மணிக்கு அவனை பிடித்து ஸ்வேதா உலுக்க, சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். அதற்குள் அவள் குளித்து ரெடி ஆகி இடுப்பில் கை வைத்து நிற்க, ஆச்சர்யமாக பார்த்தான். "என்ன ஸ்வேதா சீக்கிரம் எழுந்துட்ட போலிருக்கு."

"KK முதல்ல எழுந்துரிங்க. ஏற்கனவே மணி எட்டு ஆகி போச்சு, நாம மீட்டிங் பத்து மணிக்கு. சீக்கிரம் ரெடி ஆகணும்" கண்களை உருட்டி அவனை மிரட்ட ஆரம்பித்தாள். 

எழுந்து நின்ற கிருஷ் அவளை பார்த்து "கிட்ட வா" என்று அழைத்தான். ஏதோ சொல்ல அழைக்கிறான் என்று பக்கத்தில் செல்ல,அவளை இறுக்கி அணைத்து கொண்டான்.

"ஏய் ஏய்" என்று கத்தி கொண்டே அவள் விடுவிக்க முயல, அவள் கன்னங்களை முத்தத்தால் நிரப்பினான். பிறகு அவளின் உதடுக்கு வர, "வேண்டாம் KK சும்மா இருங்க" என்று எச்சரித்து விட்டு, "முதல்ல போய் குளிச்சிட்டு வாங்க", என்று அவனை விரட்டி விட்டாள்.

குளித்து விட்டு ரெடி ஆகி இருவரும் பிரேக் பாஸ்ட் சாப்பிட ரெஸ்டாரென்ட் செல்ல மணி ஒன்பது.
மீட்டிங் Leela Palace ஹோட்டல் கான்பரன்ஸ் ஹாலில் என்பதால் வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. 

இருவரும் அருகில் இருந்த டேபிளில் இருந்து சாப்பிட்டு கொண்டு இருக்க, தூரத்தில் இருந்த ஒரு பெண் கிருஷ்ணாவையே உற்று பார்த்து கொண்டிருக்க, ஸ்வேதாவுக்கு கோபம் வந்தது. 

"என்ன இந்த பொண்ணு இப்படி வெட்கம் கெட்டவளா இருக்காளே? நம்ம ஆளு smart-டா இருக்கான்கிற ஒரே காரனத்தினால இப்படியா முறைத்து பார்ப்பது" என்று கோபம் கொண்டு கிருஷ்ணாவை மறைத்து கொண்டு நின்றாள்.

கிருஷ்ணாவுக்கு ஒன்றும் புரியவில்லை. "ஏன் ஸ்வேதா ஒரு மாதிரி டென்சனா இருக்க?"


"ஒண்ணும் இல்லை" என்று முனகி கொண்டே சாப்பிட்டு முடிக்க, இருவரும் கை கழுவ பாத்ரூம் செல்ல, பின்னால் அவன் தோளை யாரோ தட்டி அழைக்க திரும்பினான்.

"யே கிருஷ் நீயா, இங்க எப்படிடா?" என்று அந்த பெண் குரல் கொடுக்க


"ஏய் ஸ்வீட் கடை இங்க எப்படி?"

இருவரும் சிரித்து கொண்டே பேச ஆரம்பித்ததை பார்த்து ஸ்வேதா குழம்பி போனாள். 'இந்த பெண் தானே தூரத்தில் இருந்து KKவை கண் கொட்டாமல் பார்த்தது.யாராக இருக்கும்.'

கிருஷ் அதற்குள் சமாளித்து கொண்டு, "கல்பனா, meet மிஸ் ஸ்வேதா மை செக்ரேடரி".


"ஸ்வேதா meet my IIM B கிளாஸ் மேட் and பிரெண்ட் கல்பனா அகர்வால். இவ அப்பா ஸ்வீட் கடை owner. அதனால அவளை ஸ்வீட் கடை அப்படின்னு தான் நாங்க எல்லாரும் கூப்பிடுவோம்".


"கல்பனா ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு. கை கழுவிட்டு வந்துடுறேன்" என்று சொல்லி நகர்ந்தான். 

திரும்பி வந்த இருவரும் சுவாரஸ்யமாக பேசி கொண்டே நகர ஸ்வேதா கோபத்தில் பொறும ஆரம்பித்தாள்.

கொஞ்ச தூரம் கல்பனாவுடன் நடந்து முன்னே சென்றவன் திரும்பி வந்து "ஸ்வேதா நீ ஒண்ணு பண்ணு, மீட்டிங் ஹால்ல போய் வெயிட் பண்ணு.நான் கல்பனாகிட்ட பேசி பல வருஷம் ஆச்சு, கொஞ்சம்பேசிட்டு வந்துடுறேன்" என்று சொல்லிஅவள் பதிலுக்கு காத்திருக்காமல் சென்று விட்டான்.

கல்பனாவின் தோளில் கை போட்டு பேசி கொண்டேஅவன் செல்வதை கண்டு ஸ்வேதாவுக்கு கோபம் தலைக்கு ஏற எரிச்சலுடன் மீட்டிங் ஹால் வந்து முதல் இருக்கையில் அமர்ந்தாள். இன்னும் யாரும் வராததால் பொழுது போகாமல் கையில் இருந்த சேடன் பகத் புத்தகத்தை புரட்டி கொண்டு இருந்தாள்.

கிருஷ் கல்பனாவுடன் பேசி கொண்டு இருந்தான். "டேய் கிருஷ் என்னடா? படிப்பு முடிஞ்சா காணாம போயடுவியா. ஒரு contact-டும் இல்லை. ஆமா உன்னோட Dostana ஹரி எங்க?" என்று சொல்லி சிரிக்க


"ஏய் ஸ்வீட் கடை, நீ முதல்ல எங்களை பத்தி கிண்டல் பண்றது இருக்கட்டும். அது என்ன இப்படி பப்ளிமாஸ் மாதிரி உருண்டையா இருக்க.ஆமா இரும்படிக்கிற இடத்தில ஈக்கு என்ன வேலைங்கிற மாதிரி உனக்கு என்ன இங்கே வேலை."


"ஏன்டா உன்னை மாதிரி ஆட்களை Ministry அழைச்சு இருக்கிறப்போ நான் வர கூடாதா? என்ன குழப்பமா இருக்கா? நானும் Solar Panel பிசினஸ்ல தான் இருக்கேன். எங்க கம்பெனி பேரு Kalpana Power Corporation. எங்க daddy தான் ஓனர். நான்அவருக்கு உதவியா இருக்கேன்.""ஆமா உன்னோட அப்பாவே ஒரு வெட்டி ஆளுன்னு சொல்லுவ, அவருக்கு என்ன உதவி பண்ணுற, ஓ நீயும் வெட்டியா இருக்கியா?"

"டேய் ரொம்ப கிண்டல் பண்ணாதே. அவர் ஸ்வீட் கடை பிசினஸ் மூடிட்டு வேற பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு நினைக்கும்போது, நான் தான் அவருக்கு இந்த ஐடியா கொடுத்தேன். நான் UG எஞ்சுனியரிங் படிச்சதால அப்பாவுக்கு உதவியா டெக்னிகல் சைட்ல வேலை செய்யுறேன். இந்த மீட்டிங் கூட அப்பாதான் வர்றதா இருந்தது. அவருக்கு கொஞ்சம் உடல் நலம் சரி இல்லாததாலே கடைசி நேரத்ல நான் வர வேண்டியது ஆய்டுச்சு."

"ஆமா நீ இப்போ மும்பைலதான இருக்க."

"ஆமா அங்கே அந்தேரி-ல தான் இருக்கேன்.நான் அப்பவே கேக்கனும்னு நினைச்சேன். யாருடா அந்த பொண்ணு. பெங்களூர் தக்காளி மாதிரி தளதளன்னு இருக்கா. அவ என்னை முறைச்சு பார்க்கிறத பார்த்தா உன் கூட நான் பேசுறது அவளுக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன்."

"அவ என்னோட வருங்கால மனைவி. தெளிவான பொண்ணு. என் மேல எக்கச்சக்கமான அன்பு வச்சுருக்கா". 

"அதுதான் பார்த்தா தெரியுதே. இன்னும் பத்து நிமிஷத்ல மீட்டிங் தொடங்கிடும். வா நாம போகலாம்" என்று அழைத்து கொண்டு மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்தாள்.

ஸ்வேதா அருகில் கிருஷ்ணா அமர, அவன் அருகில் கல்பனா. 

"ஹாய்" என்று கல்பனா கை அசைக்க, வேண்டா வெறுப்பாக "ஹாய்" என்றாள் ஸ்வேதா.

பத்து மணி அளவில் மினிஸ்டர் பாரூக் அப்துல்லா தொடங்கி வைக்க conference ஆரம்பித்தது.

இந்திய அளவில் தலை சிறந்த நாற்பது சூர்ய சக்தி நிறுவனங்களின் தலைவர்கள், அவர்களுடன் அறிஞர்களும் பங்கேற்றனர்.

புகழ் பெற்ற விஞ்ஞானிகள் பேச தொடங்க ஸ்வேதா நோட்ஸ் எடுக்க தொடங்கினாள்.

பிறகு brain storming session தொடர்ந்தது. சூர்ய சக்தியை எப்படி மேம்படுத்தலாம் என்று அனைவரும் நான்கு குழுக்களாக பிரிந்து டிஸ்கஸ் செய்தனர். கொடுக்கப்பட்ட தலைப்பு "Future of Solar Enery in India - Challenges Ahead."

நாலு குழுக்களாக பிரிந்து அனைவரும் அடுத்த 3 மணி நேரம் topic டிஸ்கஸ் செய்தனர்.

லஞ்ச் முடிந்த உடன் present செய்ய சொல்ல, முதல் குழு சார்பாக கிருஷ்ணாவும், மூன்றாவது குழு சார்பாக கல்பனாவும், மற்ற இரண்டு குழுக்கள் சார்பாக வேறு இரண்டு பேரும் ப்ரெசென்ட் செய்தனர். 

எல்லாரும் ஒவ்வொரு விதமாக present செய்ய, பாயிண்ட் எல்லாவற்றையும் Ministry செகரட்டரி குறித்து கொண்டார்.


சிறந்த presentation -க்கு சிறப்பு பரிசு உண்டு என்று அறிவிக்கப்பட்டது. மாலை ஆறு மணி அளவில் கூட்டம் முடிய, அடுத்த நாள் பத்து மணிக்கு திரும்ப வர வேண்டும் என்று சொல்ல, அனைவரும் விடைபெறதொடங்கினர்.

கல்பனா கிருஷ்ணாவுடன் சிரித்து சிரித்து பேசி கொண்டுருப்பதை பார்த்த ஸ்வேதாவுக்கு எரிச்சலாக இருந்தது. வாசலுக்கு அருகில் நின்று கொண்டு கிருஷ்ணாவை கை ஆட்டி அசைத்து கூப்பிட, அவன் கண்டு கொள்ளாமல் பேசி கொண்டு இருந்தான்.

கல்பனா, "டேய் ஸ்வேதா உன்னைத்தான் பாத்துகிட்டு இருக்கா, கையை வேறஆட்டி கூப்பிடுறா" என்று சொல்ல

"நீ கண்டுக்காதே. அவளை கொஞ்சம் சீண்டி பார்க்கணும் போல இருக்கு. நாம கொஞ்சம் சிரிச்சு பேசிகிட்டு இருக்கலாம். "

தூரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருந்த ஸ்வேதா பொறுமை இழந்து வேகமாக கிளம்பி அருகில் வந்தாள். 

"KK நேரமாகுது. கிளம்பலாமா?" என்று கேட்க

"இல்லை ஸ்வேதா நீ வேணா கிளம்பு, நான் இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டு வந்துடுறேன்" என்று சொல்ல, ஸ்வேதா முகம் கோபத்தால் மேலும் சிவந்தது.

பேசாமல் அவள் வேகவேகமாக கிளம்பி செல்ல, அடுத்த ஐந்து நிமிடத்தில், "ஓகே கல்பனா நான் கிளம்புறேன். நாளைக்கு மீட் பண்ணலாம்" என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

ரூம் வாசலில் நின்று பெல் அடிக்க, உடனே கதவு திறந்தது. 

உள்ளே நுழைந்த அவனை "வாங்க சார் வாங்க, இப்போவாவது ரூமுக்கு வரணும்னு தோனுச்சே. ஆமா அவ கிட்ட அப்படி என்னதான் பேசுவிங்க."

"நாங்க காலேஜ் பிரெண்ட்ஸ் எங்களுக்கு பேச பல விஷயங்கள் இருக்கும். என்ன இருந்தாலும் அவ அந்த நாள் கனவு கன்னி ஆச்சே.எப்படி மறக்க முடியும்" என்று சொல்ல

"என்ன கனவு கன்னியா. அப்படின்னா அவ பின்னால போக வேண்டியதுதானே. இங்க ஏன் வந்திங்க" என்று கோபத்துடன் கேட்டு,தலையணையை எடுத்து அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

"இதுக்கே கோபப்பட்டா எப்படி. இன்னம் கொஞ்ச நேரத்ல அவளோட ரூம்ல போய் அய்யா மஜாவா பேசிட்டு வர போறேன்" என்று சொல்ல

ஸ்வேதா உடைந்து அழ ஆரம்பித்தாள். கட்டிலில் அமர்ந்து தன் தலை குனிந்து அழுத அவளை காதலோடு பார்த்தான்.அவள் அருகில் சென்று அவள் தலையை வருடி கொடுக்க, அவன் மார்பில் முகம் பதித்து அழ தொடங்க, 

"ஏண்டா கண்ணா உனக்கு தெரியாதா. உன்னை தவிர எந்த பொண்ணையும் நான் ஏறெடுத்து பார்த்ததில்லை. அவள் என்னோட கிளாஸ் மேட். அவளோட சேர்ந்து உன்னை சீண்டி பார்க்கணும்னு எனக்கு ஆசை அதுனால தான் அப்படி செஞ்சேன். இதுக்கு போய் யாராவது சின்ன குழந்தை மாதிரி அழுவாங்களா" என்று கிண்டல் செய்ய,



"KK நீங்க என்னை சீண்டுரீங்கன்னு எனக்கு நல்லாவே புரிஞ்சது. ஆனாலும் நீங்க அவளோட பேசுனது என்னால தாங்க முடியலை."

"என்னை ரொம்ப possessive வா இருக்கேன்னு அடிக்கடி சொல்லுவியே. இப்போ நீ அப்படி தானே behave பண்ணுற."

"உண்மை தான் KK. அப்போ நான் காதல் வயப்படலை. இப்போதான் எனக்கு எல்லாம் புரியுது. நான் உங்கமேல ரொம்ப possessiveவா இருக்கேன். எனக்கே என்னை நினைச்சா வெக்கமா இருக்கு. sorry"

அவள் கன்னம் இரண்டில் கை வைத்து தலை நிமிர்த்தி அவள் கண்களை நோக்கினான்.

அந்த கலங்கிய கண்கள் அவள் அவன் மீது வைத்திருக்கும் ஆழமான காதலை அவனுக்கு பறை சாற்றின.

ஏய் ஸ்வேதா"இதுக்கு யாராவது அழுவாங்களா?" என்று கிண்டல் செய்து, அவளை இருக்க அணைத்து கொண்டான். கட்டிலில் அமர்ந்த கிருஷ்ணாவை இன்னும் நெருங்கி அணைத்து கொண்டாள்.

"KK உங்களை கட்டிக்கிட்டா கதகதப்பா இருக்கு."

அவள் தாடையை உயர்த்தி கன்னங்களில் வழிந்து ஓடி இருந்த இடங்களில் மெல்லிய முத்தம் இட்டான்.நெற்றி, மூடி இருந்த கண்கள் என்று அவன் முத்தத்தை தொடர அவள் உருகி போனாள். திரும்ப அவளை இடைவெளி இல்லாமல் அணைத்து கொள்ள, அறைக்குள் இருந்த காற்று அவர்கள் இடையே போக முடியாமல் கோபம் கொண்டது.

காதலர்களின் அணைப்பு நெடு நேர நீள, முதலில் சுய நினைவுக்கு வந்த கிருஷ் 

"ஸ்வேதா ஏழரை மணி ஆச்சு. நாமா சாப்பிட போகலாமா?"

"வேணாம், கொஞ்ச நேரம் கழிச்சு போகலாம்"

"சரி" என்று சொல்லி திரும்ப அணைத்து கொள்ள, மணி எட்டும் ஆனது.
"ஸ்வேதா ஒரு மணி நேரம் ஆச்சு. இப்போ விட்டா நமக்கு டின்னர் கிடைக்காது" என்று சொல்ல, சிணுங்கி கொண்டே, 

"எனக்கு சாப்பாடு வேண்டாம்" என்று சொல்ல அவளின் மூடி இருந்த கண்களை தன் விரல்களால் வருடி கொடுக்க, மெதுவாக கண் திறந்தாள்.

"கண்ணம்மா சீக்கிரம் போயிட்டு வந்து நாம continue பண்ணலாம்."

வெட்கத்தால் ஸ்வேதா சிவக்க, அவன் கன்னத்தை மெல்லிதாக கடித்து வைத்தாள்.

"ஏய் எதுக்கு இப்போ என்னை கடிக்கிற" என்று கேட்க, 

"சும்மாதான். என் மச்சான்".


அவள் விலகி கொண்டு, முகம் கழுவி துடைத்து, தலை முடி, உடைகளை சரி செய்து கொண்டு வந்தாள்.

KK அவளை பார்த்து அசந்து போனான். ஸ்வேதாவுக்கு எப்போதுமே make up தேவை இல்லாத அழகு.தொடர்ந்து அவளை பார்த்தால் தன்னை கட்டுபடுத்த முடியாது என்று உணர்ந்து பேச்சை திசை திருப்பினான்

"நானும் முகம் துடைத்து வரேன். உடனே கிளம்பலாம்".

இருவரும் டின்னர் ஹாலில் சாப்பிட, அங்கே கல்பனா வந்து நிற்க, "டேய் கிருஷ், என் ரூமுக்கு வரியா பேசி கிட்டு இருக்கலாம்" என்று கண்ணடிக்க,

"நீ வேற. அவளுக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு. இனிமேயும் ஏமாத்த முடியாது."

"சரி, அப்படின்னா உன்கிட்ட பேசி எந்தபிரயோஜனமும் இல்லை. ஸ்வேதா கிட்ட பேசிக்கிறேன்."

"ஹாய் ஸ்வேதா" என்று அவள் பக்கம் திரும்ப, இருவரும் கிருஷ்ணாவை விட்டு விட்டு தனியே சென்று சாப்பிட்டு கொண்டே பேச தொடங்கினர்.

கிருஷ் வேறு வழி இல்லாமல் அங்கிருந்த வேறு கம்பெனி MD/CEO விடம் பேசி கொண்டு இருந்தான்.

அரை மணி நேரம் கடந்த பின், ஸ்வேதா அவனிடம் வந்து "KK உங்க பிரெண்ட் கல்பனா அவங்களோட ரூமுக்கு கூப்பிடுறாங்க, நான் போய் வரட்டா?"

அவன் அவளையே கூர்ந்து பார்க்க, "நீங்க விருப்ப படலைனா. நான் போக மாட்டேன்."

"சரி போயிட்டு வா. சீக்கிரம் வரணும், நான் உனக்காக காத்து இருப்பேன்."

"சரிடா கண்ணா" என்று கன்னத்தில் கிள்ளி விட்டு காற்றாக மறைந்து விட்டாள்.

'இந்த பெண்கள் மட்டும் எப்படிதான் கண் சிமிட்டும் நேரத்தில் நட்பாக முடிகிறதோ' என்று வியந்தான்

கிருஷ் தனது அறைக்கு திரும்பி டிவி பார்க்க ஆரம்பித்த போது மணி இரவு ஒன்பது.

அங்கே கல்பனா அறையில்.

"ஹாய் ஸ்வேதா என்ன கோவமா? உன்னைய நாங்க ரெண்டு பேரும் ரொம்ப ஒட்டிட்டோம். Really sorry" என்று சொல்ல,

"Its ok. No problem. ஆமா உங்களுக்கு KKவை நல்லா தெரியுமா?"

"அதை ஏன் கேக்குற. காலேஜ் படிக்கிற நாட்களில் இவனும் அந்த ஹரியும் சேர்ந்து அடிக்கிற லூட்டி இருக்கே அப்பா... சொல்லு அடங்காது."


"ஒரு தடவை எனக்கு தமிழ் கத்து கொடுக்கிறேன்னு ரெண்டு பேரும் சொன்னதை நம்பி நான் அங்கே இருந்த ஒரு professor கிட்ட பேச போக பெரிய காமெடி ஆய்டுச்சு".

"என்ன ஆச்சு". 

"IIM B ல நாங்க படிக்கிறப்போ ரவிகுமார் அப்பிடின்னு மார்க்கெட்டிங் professor இருந்தார். அவர் தமிழ்நாட்டுக்காரர். அவர்கிட்ட கிருஷ், ஹரி போன்ற தமிழ் தெரிஞ்சவங்கள் எல்லாம் அவர்கிட்ட தமிழ்ல பேசுவாங்க. எனக்கு ஒண்ணும் புரியாது. பொறாமையாவும் இருக்கும். நான் மார்க்கெட்டிங்ல வீக். எனக்கு அவர்கிட்ட பாடத்ல சந்தேகங்கள் கேட்கணும்னு ஆசை."

"அதை தமிழ்ல கேக்குறது எப்படின்னு தெரியலை. நான் போய் கிருஷ், ஹரி கிட்ட கேட்டேன். அவங்க சொல்லி தந்த வார்த்தைகளை போய் professorகிட்ட சொன்னா, அவர் முகம் மாறி போச்சு.திரும்ப வந்து அவங்க கிட்ட கேட்டபோது, நீ பப்ளிக் பிளேஸ்ல கேட்டது தப்பு, கிளாஸ் முடிஞ்சா உடனே தனியா இருக்கும்போது நீ கேட்டா அவர் சொல்லி கொடுப்பார்னு சொன்னாங்க. 

"அவங்க சொன்ன மாதிரியே செஞ்சேன். அந்த professor நடவடிக்கைகள்ல பல மாற்றங்கள். என்னை பார்த்து ஒரு மாதிரியா சிரிக்க ஆரம்பிச்சுட்டார். கிளாஸ்ல கூட என்னை பார்த்தா ஸ்பெஷல் கவனிப்பு தான். "

"நான் ஒரு மடச்சி. எனக்கு புரியவில்லை. கிட்டதட்ட ஒரு மாசம் இது மாதிரியேபோனது. ஒரு நாள் ப்ரோபாசர் என்னை அவரோட ரூமுக்கு கூப்பிட்டார். நானும் ஏதோ சந்தேகம் நிவர்த்தி பண்ணதான் கூப்பிடுரார்னு போனேன். அங்கே போனால் என்னை கையை பிடிச்சு I love you சொல்லி ஏதோதோ உளற ஆரம்புசுட்டார். எனக்கு பயத்தில் கை கால் உதற ஆரம்பிச்சுடுச்சு. கோபமும் வந்தது.அவரை கன்னாபின்னான்னு திட்ட ஆரம்பிச்சுட்டேன். "

"அப்போதான் நான் அவர் கிட்ட சொன்ன தமிழ் வார்த்தைல தப்பு இருந்ததுன்னு தெரிஞ்சுது. அப்புறம் ப்ரோபாச்சர் சொன்னாரு, 'நீ தான் என்னை பார்த்து நான் உங்களை காதலிக்கிறேன்' என்று சொன்னதாக சொல்ல எனக்கு அதோட உண்மையான அர்த்தம் புரிந்தது."

'அது I love you தான' என்று கேட்க, ஸ்வேதா அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தாள்.

"அவர் கிட்ட மன்னிப்பு கேட்டு, அவங்க ரெண்டு பேரையும் தேடி அலைஞ்சு காண்டீன்ல பிடிச்சேன். இரண்டு பேருக்கும் அதற்குள்information தெரிய ஓட ஆரம்பிக்க, நான் அவங்களை என் hand bag கால தொரத்தி அடிக்க, ஒரே காமெடி தான்.

விழுந்து விழுந்து சிரித்து கொண்டு இருந்தாள் ஸ்வேதா.


"அப்புறம் இந்த பசங்களை நம்ப கூடாதுன்னு முடிவு பண்ணி, நானே என் கூட படிச்ச பொண்ணுங்க கிட்ட கொஞ்சம் தமிழ் கத்துகிட்டேன்."


"இப்படி நாங்க ஹாப்பியா இருந்தப்போ, கிருஷ்ணாவுக்கு ஏதோ வீட்ல பிரச்சனை ஏற்பட்டு, அப்புறம் எல்லார் கூடயும் பேசுறத குறைச்சு கிட்டான். ஹரி மட்டும் தான் அவன் கூட பேச முடியும்கிற நிலைமை வந்துருச்சு. கிளாஸ்ல முதல் மார்க் அவன் வாங்கி நிறைய இடங்கள்ல offer வந்தது. எப்படியோ ஹரி கூடயே போய் திரும்ப ஒட்டிகிட்டான். "

"கிருஷ்ணாவுக்கு ஹரி மேல அப்படி ஒரு நம்பிக்கை. அதே மாதிரி ஹரி தன்னோட நட்பை என்னைக்குமே தவறாக பயன்படுத்தியதில்லை. அவங்க நட்பை பார்த்து நான் பல தடவை பொறாமைபட்டு இருக்கேன்.இப்போ ரொம்ப நாளைக்கு அப்புறம் அவனை திரும்ப சந்தித்ததில எனக்கு ரொம்ப சந்தோஷம்."

"அவன் ரொம்ப "possessive டைப் நீ புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன்"என்று சிரித்தபடி சொல்ல, தலைஅசைத்து ஸ்வேதா மெல்ல புன்முறுவல் செய்தாள்.





No comments:

Post a Comment