Friday, August 28, 2015

வீணை பேசும் ..... அத்தியாயம் 8

கலைமகள் கை பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ

ரோஜா மலரே ராஜ குமாரி ஆசை கிளியே அழகிய ராணி

உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ

கண்களை மூடி ரசிக்க தொடங்கிய சிவா அவளின் விரல் அசைவில் வீணை இசைக்கும் பாடல்களில் மயங்கி போயினான்.

கடைசியாக அவள் இசைத்த

மயங்கினேன் சொல்ல தயங்கினேன், உன்னை விரும்பினேன் உயிரே 

பாடலை கேட்டவுடன், கலங்கி ஓடி வந்து அவள் அருகில் அமர்ந்து உருகினான்.

பாடல் முடிந்த உடன்கைகளை தட்டி அவள் கன்னத்தில் முத்தபரிசு கொடுக்க, வீணாவுக்கு சந்தோஷம்.

'தனக்கு கர்னாடக சங்கீதம் தெரியாவிட்டாலும் தன் மனைவிக்காக எல்லாவற்றையும் பொறுமையாக கேட்கும் இவனை போன்ற கணவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்.என் கணவன் குறிஞ்சி மலரை போல அரிதானவன். அவனை சரியான முறையில்பாதுகாக்க வேண்டும்" என்று மனதுக்குள் உறுதி மொழி பூண்டாள். 

அடுத்த நாள் காலை சீக்கிரம் எழுந்து வீணா சமையல் செய்ய உதவி செய்கிறேன் என்று சிவா அவளின் பின்னால் நின்று அணைத்து கொண்டு 'நெற்றியில் வேர்க்கிறது. நான் துடைத்து விடுகிறேன்' என்று அவளை படாத பாடு படுத்த, "ப்ளீஸ் என்னை விட்டுடுங்க. எனக்கு ஒரு உதவியும் வேண்டாம், நானே செஞ்சுக்கிறேன்" என்று கெஞ்சினாள்.

ஒரு வழியாக அவனை சமாளித்து சமைத்து முடித்து பின் குளித்து வந்து அவனுக்கு பரிமாற சாப்பிட்டு விட்டு கிளம்பினான். அதற்குள் அவன் செய்த குறும்புகள் ஆயிரம். அவனை சமாளிப்பதற்க்குள் திணறி போனாள் வீணா.ஒரு குழந்தை போல் அவன் செய்யும் குறும்புகள் அவளுக்கு பிடித்து போயின.

ஒரு வழியாக அவனை சமாளித்து வேலைக்கு அனுப்பிய பின் கீழே வந்து வசந்தியுடன் வீடு வேலை செய்ய உதவி செய்து வந்தாள்.தன் மாமனாருக்கு அவ்வப்போது பணிவிடை செய்து வர, அவருக்கு தன் மருமகளை மிகவும் பிடித்து போனது.

இப்படியாக ஒரு மாதம் செல்ல, ஒரு நாள் ஞாயிற்றுகிழமை சூப்பர் மார்கெட் போய் விட்டு மதியம் சாப்பிட வந்து விடுவதாக சொல்லி சிவா கிளம்ப, வழக்கம் போல் கீழே வந்தாள் வீணா.

போனில் பேசியபடி இருந்த வசந்தி யாருடனோ, "ஆமா அக்கா. அதன் என்னோட தம்பி பொண்டாட்டி ஒரு ஊமை கோட்டான கூட்டி வந்துருக்கானே, அது இன்னம் கொஞ்ச நேரத்ல வந்துடும், நான் அப்புறம்கூப்பிடுறேன்" என்று சொல்லி போனை வைத்தாள்.

அவள் சொன்னது காதில் முழுக்க விழுந்தாலும் விழாத மாதிரி காண்பித்து கொண்டு வீணா சமையல் அறைக்குள் நுழைந்து உதவி செய்தாள். அவளை யாராவது அருகில் சென்று கவனித்தால், அவள் கண்கள் கலங்கி இருப்பதையும் அதை அவள் யாரும் அறியாமல் துடைப்பதையும் கண்டு நாம்பதறி விடுவோம்.

வேலை முடித்து மாடிக்கு சென்ற வீணா கதவை தாளிட்டு படுக்கையில் தன் கண்ணீரால் தலையனையை நனைத்து கொண்டு இருந்தாள். கதவை தட்டும் ஓசை.


சுவர் கெடிகாரத்தை பார்க்க ஒரு மணி. கதவை திறக்க வாசலில் சிவா.

கண்கள் சிவந்து இருந்த வீணாவை பார்த்து "என்ன வீணா கண்ணு சிவந்து இருக்கு அழுதியா?" என்று கேட்க,

"இல்லை, கண்ணில் தூசி விழுந்து விட்டது, இப்போ பரவாயில்லை" என்று சொல்ல, பின்னாளில் இருந்து ஒரு குரல். "மாமா நம்பாதிங்க. அக்கா பொய் சொல்லுறாங்க" என்றது. குரலுக்கு சொந்தக்காரி ப்ரியா.

வீணா 'சொல்ல வேண்டாம்' என்று கண்களால் கெஞ்ச, ப்ரியா "இல்லை அக்கா நான் சொல்லியே தீருவேன்" என்று நடந்ததை சொன்னாள்.

கொதித்து போனான் சிவா. "இப்பவே இந்த அக்காவை என்ன செய்றேன் பாரு" என்று வாசல் கதவை திறக்க, அவன் கைகளை பிடித்து கெஞ்சினாள். 

"வேணாங்க, அவங்க சொன்னது உண்மைதானே. அதுக்காக நீங்க எதுக்கு கோபப்படுரிங்க. கொஞ்ச நாள்ல இது சரியா போய்டும்" என்று கெஞ்ச, ப்ரியா தலையில் அடித்து கொண்டு "இந்த வீணா அக்காவை திருத்த முடியாது" என்று கிளம்பி போய் விட்டாள்.

'திரும்ப கீழே போவேன்' என்று பிடிவாதம் பிடித்த சிவாவை என்ன செய்வது என்று தெரியாமல், கதவை சாத்தி விட்டு உதடுகளை கவ்வ, அப்படியே சிலையாக நின்றான் சிவா. அவனுக்கு கோபம் குறைந்த மாதிரி தெரிந்தவுடன் அவன் முரட்டு உதடுகளை அவள் விடுவிக்க, சேரில் அமர்ந்தான்.

அவன் கலங்கிய கண்ணை பார்த்தபடி, அவன் தலையை கோதி விட்டாள் வீணா. "உங்க அக்கா சொல்லும்போது தான் நான் ஊமை அப்படிங்கிற நினைவு எனக்கு வருது" என்று சொல்லி கண்கலங்கினாள்.

அவளை இறுக்க அணைத்து சிவா சமாதானபடுத்த, 'இவர்களில் யார் யாரை சமாதானபடுத்துகிறார்கள்' என்று குழம்பி போனது ஜன்னலில் அமர்ந்து இருந்த ஒரு பெண் புறா.

வீணாவுக்கு காலை முதல் மாலை வரை ஓய்வு எடுக்க முடியாத அளவுக்கு வேலை. வீட்டு வேலைக்கு வேலைக்காரி வந்தாலும் அவள் வருவதற்குள் எல்லா வேலையையும் வீணாவிடம் கொடுத்து செய்ய சொல்வது வசந்தி வழக்கம். 

இரவினில் சிவாவின் ஆட்டம். பகலில் கடுமையான வேலை இவற்றினால் அடிக்கடி சோர்ந்து போனாள் வீணா. சிவாவிடம் சொல்ல போன ப்ரியாவை மிரட்டி 'எதுவும் சொல்ல கூடாது' என்று சத்யமும் வாங்கி கொண்டாள்.வசந்தி முதலில் ஜாடை மாடையாக திட்ட ஆரம்பித்து இப்போது வீணாவை நேரடியாக திட்ட ஆரம்பித்து விட்டாள்.

அடிக்கடி இரவு நேர கலவிக்கு பிறகு உறங்கும் சிவாவிடம் சொல்லி விடலாமா என்று நினைப்பது, ஆனால் தன்னால் அக்கா தம்பி பிரியக்கூடாது என்பதால் ஒன்றும் சொல்வதில்லை வீணா. அவளால் பேச முடியாதது வசந்திக்கும் சாதகமாக போனது. 

இந்த விபரங்கள் அரசால புரசலாக கந்தசாமிக்கு தெரிய வர, சிவாவிடம் பேசுவதாக சொன்னபோது, சொல்ல வேண்டாம் என்று கை கூப்பி வேண்டி கொண்டாள். 

ஒரு நாள் வேலை அதிகம் காரணமாக, தலை சுற்றி மயங்கி விழ வசந்தி பயம் ஏற்பட்டது. தம்பிக்கு தெரிந்தால் பிரச்சனை வரும் என்று அறிந்து, ப்ரியா உதவியுடன் மாடி படுக்கை அறையில் வீணாவை படுக்க வைத்து விட்டு கீழே வந்து விட்டாள்.

மாலை ஆறு மணிக்கு ஒரு அவசர வேலையாக திரும்பிய சிவா வீட்டில் அனாதை போல படுத்து இருக்கும் வீணாவை பார்த்து அதிர்ந்து போனான்.

அவளை மெல்ல எழுப்ப, அவனை கண்ட வீணா மலர்ந்து போனாள்




"என்ன வீணா என்னம்மா ஆச்சு. வா டாக்டர் கிட்ட போகலாம்" என்று சொல்ல, அவன் கையை எடுத்து வயிற்றில் வைத்து சைகை செய்ய புரிந்து போனது. 

சந்தோசத்தில் வாய் குளற "உண்மையா வீணா?" என்று கேட்டான். 

"ஆமா" என்று தலை அசைக்க, "நான் அப்பா ஆக போறேன்" என்று சந்தோசத்தில் வீடு அதிர கத்தினான்.

வசந்தி, ப்ரியா உடன்ஓடி வந்து "என்னடா?" என்று கேட்க, "அக்கா நான் அப்பா ஆக போறேன். வீணா அம்மா ஆக போறா, நீ அத்தை ஆக போறே" என்று சந்தோசத்தில் குதிக்காத குறை.

வசந்திக்கு மனசுக்குள் பொறாமையாக இருந்தாலும் வெளியே காட்டி கொள்ளவில்லை. 
"உண்மையா சிவா, இதை சொன்ன உன் வாய்க்கு சக்கரை போடணும். ப்ரியா ஓடி போய், நம்ம பிரிட்ஜ்ல இருக்கிற சாக்லட் எடுத்து வா" என்று விரட்டினாள்.

"அம்மாடி வீணா. என் கிட்ட ஏம்மா மறைச்சே?" என்று கேட்க, பக்கத்தில் இருந்த சிவா, "அக்கா இதை முதல்ல எனக்கு தான் சொல்லனும்னு நினைச்சு இருக்கா. அது தான் உன் கிட்ட சொல்லலை" என்று சொல்ல, 'ஆமாம்' என்று வேகமாக தலை ஆட்டினாள் வீணா.

அதற்குள் ப்ரியா சாக்லேட் உடன் திரும்பி வர, அனைவரும் சந்தோசமாக சாக்லேட் தின்று கொண்டாடினர்.

சிவா, வீணாவை அழைத்து கொண்டு டாக்டர் ரிடம் செல்ல, டாக்டர் டேஸ்ட் எடுத்து பார்த்து விட்டு, "உங்க மனைவி சொல்றது உண்மைதான். நீங்க அப்பா ஆக போறீங்க வாழ்த்துக்கள். ஒரு முக்கியமான விஷயம்.உங்க மனைவி கொஞ்சம் வீக்கா இருக்காங்க.இந்த இரண்டு மாதங்கள் கவனமா இருக்கணும்" என்று சொல்ல, "சரி டாக்டர் நான் கவனமா பாத்துக்கிறேன்" என்றான்."அவங்க கடினமான வேலை எதுவும் பார்க்க கூடாது, இந்த மாத்திரைகளை வாங்கி கொடுங்க. ஒரு மாதம் கழிச்சு திரும்ப கூப்பிட்டு வாங்"க என்று சொல்ல, நன்றி சொல்லி விட்டு வீட்டுக்கு கூட்டி வந்தான்.

அவன் கையை பிடித்தபடி அவன் முகத்தை பார்த்தபடியே இருந்த வீணாவை பார்த்து "என்ன கண்ணா" என்று கேட்க, 'ஒண்ணும் இல்லை' என்று தலை திருப்பி வெளியே ரோடை வேடிக்கை பார்த்து கொண்டு வந்தாள்.

வீட்டுக்கு வந்த இருவரையும் பார்த்து அத்தான் கோவர்த்தன், "மாப்ளை, நீ பெரிய ஆள்தான். கல்யாணம் பண்ணின இரண்டாவது மாசம் எப்படியோ அடுத்த வாரிசு ரெடி பண்ணிட்ட. என்னோட மாப்ளை அப்படிங்கிற பேரை காப்பாத்திட்ட" என்று கிண்டல் செய்ய."ஐய்யே, வழியாதிங்க" என்று வசந்தி முறைத்தவாறுபதில் சொன்னாள்.

உள்ளே இருந்த அப்பாவிடம் இந்த சந்தோசமான விஷயத்தை சொல்ல, அவருக்கோ தாங்க முடியாத சந்தோஷம். "உண்மையா சொல்றியா சிவா" என்று திரும்ப திரும்ப கேட்டு உறுதி படுத்தி கொண்டார்.

அந்த வீடே சந்தோசத்தில் மூழ்க, ஒரு உள்ளம மட்டும் பொறாமையில் வெந்து கொண்டு இருந்தது.

இரவில் அருகில் படுத்து இருந்த வீணாவை சந்தோசத்தோடும் ஆச்சர்யத்தோடும் பார்த்து கொண்டு இருந்தான் சிவா. 

அவள் காதில் "வீணா நமக்கு குழந்தை பிறக்க போகுது, எனக்கு சந்தோஷமா இருக்கு, ஆனா இனிமேஎன்னை பட்டினி போட போறியேன்னு நினைச்சா எனக்கு கவலையா இருக்கு" என்று முகத்தை ஒரு மாதிரியாக வைத்து கொள்ள, 'குபீர்' என்று சிரித்தாள் வீணா.



அவன் காதை பிடித்து மெதுவாக திருகியபடி, அவனை அருகில் இழுத்து உதட்டை அவன் வாய்க்குள் இட்டு தனது அமுதத்தை அவன் வாய்க்குள் செலுத்த, மயங்கி போனான்.

அடுத்த இரண்டு மாதமும் டாக்டர் செக்அப் சென்று வர, டாக்டர் இப்போது ஒண்ணும் ப்ரோப்லம் இல்லைஎன்று சொல்ல, அடுத்த வாரம் அவன் ஆத்தூர் மாமா பெண் திருமணத்திற்கு எல்லோரும் சென்றனர்.

திருமண வீட்டில் எல்லோரும் சிவாவை பார்த்து அவன் திருமணம் குறித்து விசாரிக்க, அனைவருக்கும் பதில் சொல்லி களைத்து போனான். வசந்திக்கு பதில் சொல்லி சொல்லி எரிச்சல் அதிகம் ஆனது.

எல்லோரும் வீணாவை பார்த்த உடன் அவள் எளிமை மற்றும் அழகில் பிரமித்து போக, கூட இருந்த வசந்தி அவளுக்கு பேச தெரியாது என்ற உண்மையை உடைத்தாள்.

சிவா மாமாவுக்கும் தன் பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டானே என்று சிவா மீது கோபம் இருந்தாலும், வீணாவை பார்த்த உடன் நிம்மதியானார். நல்ல பெண்ணாக இருக்கிறாளே என்று நினைத்த அவர்அவள் பேச முடியாது என்று தெரிந்தபோது 'பாவம்'என்று மனம் கலங்கினார்.

அவரது மனைவி தம்பி குடும்பத்தினர் இந்த விஷயம் தெரிந்தவுடன், வீணா செல்லும் இடம் எல்லாம் கூடவே என்று அவள் காதுபட அவள் குறையை பற்றி பேச, அவளுக்கு கண் கலங்கியது.

எங்கே இருந்தாலும் தன் மனைவியை சுற்றி கொண்டே இருந்தன சிவாவின் கண்கள். அவன் அருகில் இருந்த யாரோ, "இந்த சிவா ஏன்தான் இப்படி ஒரு ஊமை பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டனோ தெரியலை. ஒரு வேளை அவளை ஏமாத்தி வயித்தில கொடுத்து இருப்பான். வேற வழி இல்லாம தாலி கட்டி இருப்பான்" என்று சொல்லி கொண்டு சிரிக்க கோபம் தலைக்கு ஏற, சிவா வேக வேகமாக கிளம்பி வீணா அருகில் வந்து, "வா வீணா நாம கிளம்பலாம். இவங்களெல்லாம் மனுஷங்களா. தூ"

தர தர வென்று இழுத்து கொண்டு வெளியேற, வாசலில் இருந்த ஆத்தூர் மாமா "என்ன சிவா என்ன பிரச்சனை?" என்று கேட்க, அவரிடம் நடந்ததை சொன்னான். 

என்ன சொல்வதென்று தெரியாமல் அவர் விழிக்க, வீணா சிவாவிடம், "இப்போ எதுக்கு கோபபடுறீங்க. நாம வந்து இருக்கிறது நம்ம மாமா வீட்டு கல்யாணம். அவர் உங்களையோ, என்னையோ பத்தி கேவலமா சொல்லலை. அதனால அடுத்தவங்க சொல்றதை பத்தி கவலைபடாதிங்க" என்று சொல்ல, சிவா யோசனையில் ஆழ்ந்தான்.

மாமா "என்ன சொல்றா வீணா?" என்று கேட்க, அவன் சொன்னதை கேட்டு வாயடைத்து போனார். 

'இந்த பொண்ணுக்கு இருக்கிற அறிவு, இங்கிதம், நல்ல மனசு யாருக்குமே இல்லாம போச்சே' என்று யோசித்தபடி, "சிவா உன் மனைவி சொல்றது சரி. இப்போ நான் போய் ஏதாவது கேள்வி கேட்டா பிரச்சனை ஆய்டும். அதனால் அதை காதில போடாம கல்யாணத்ல கலந்துக்கங்க" என்று வேண்டி கொள்ள, "சரி" என்று வேண்டாவெறுப்பாக தலை அசைத்தான்.

கல்யாணம் முடிந்து, பந்தி முடிந்தவுடன் சிவா, வீணா, வசந்தி, ப்ரியா, கோவர்த்தன் அனைவரும் திரும்பி சென்றனர்.

இப்போது வீணாவுக்கு எட்டாவது மாதம். அவளுக்கு அம்மா இல்லாததால், பிரசவத்தை தன் வீட்டிலே வைத்து கொள்ள வேண்டும் என்று சிவா பிடிவாதமாக சொல்லி விட்டான். அதற்கு வீணா அப்பாவும் சரி என்று சொல்லி விட்டார்



கந்தசாமிக்கு அடிக்கடி உடல் நலம் சரி இல்லாமல் போக, கோவை கிட்னி சென்டரில் விசாரித்து அட்மிட் செய்ததில் அவரின் இரண்டு கிட்னியும் செயல் இழந்து விட்டது என்றும், டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்றும் டாக்டர் சிபாரிசு செய்தனர்.


வசந்திக்கோ தன் சொத்து கை விட்டு போய் விடுமோ என்ற பயம். அப்பா வேறு உடல் நலம் சரி இல்லாமல் இருக்கிறார். என்னை விட தம்பியையும், அவன் பொண்டாட்டியும் அவருக்கு ரொம்ப பிடிக்கும். அவர்கள் பெயரிலே எல்லா சொத்தையும்எழுதி விட்டால் என்ன செய்வது" பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினாள்.

இறுதியில் அவள் மனதில் ஒரு பயங்கர திட்டம் உருவானது.



No comments:

Post a Comment