Thursday, August 6, 2015

கண்ணனை நினைக்காத நாள் இல்லையே - அத்தியாயம் - 1

இந்த கதையில் ஆரம்பத்தில் சில கதாபாத்திரங்களை அறிமுக படுத்தலாம் என்று இருக்கிறேன். அப்போது தான் கதையை நாம் நேரடியாக படித்து ரசிக்கலாம்.

அறிமுகம் 1
கிருஷ்ண குமார் வயது 29

நமது கதையின் கதா நாயகன். ஒரு சாயலில் பார்க்க Boys சித்தார்த் போல இருப்பான்.

ஓரளவு SPB குரலில் பாட தெரியும். ஆனால் சங்கீதம் முறைப்படி கற்று கொண்டதில்லை.

பூர்வீகம் கர்நாடக மாநில சிருங்கேரி. இருநூறு வருடங்களுக்கு முன் மதுரையில் குடியேறியது அவன் மூதாதையர்கள். 

பிறந்தது மதுரைபிறந்த நாள் கோகுலாஷ்டமி அன்று.
வீட்டில் அம்மா, அப்பாவுடன் சண்டை. மாதம் ஒரு முறை மதுரை போனாலும் வீட்டில் தங்குவதில்லை. எப்போதும் அவனை சுற்றி நண்பர் கூட்டம் இருக்கும்.

பிகாம் கல்லுரி படிப்பை முடித்து விட்டு Deloittee கம்பெனி யில் இரண்டு வருடம் வேலை.

 


பிறகு IIM பெங்களூரில் இரண்டு வருட படிப்பு. 

முடித்தவுடன் ஹோசூரில் இருக்கும் சன் சோலார் சிஸ்டம் கம்பெனி யில் பைனான்ஸ் மேனேஜர் ஆக வேலை. 

இந்த ஐந்து வருடங்களில் கடுமையான உழைப்புக்கு பின்பு CFO ஆக உயர்வு. 

Company சேர்மன் சுப்ரமணியம் தன் பிள்ளை போல பாவிப்பது அவனுக்கு கிடைத்த வரப்ரசாதம்.

இது வரை ஹோசூர் பாக்டரியில் வேலை பார்த்து வந்த அவன், ஒரு மாதத்துக்கு முன் பெங்களூர் தலைமை அலுவலகத்துக்கு மாற்றம்.

நெருங்கிய நண்பர்களுக்கு KK, .மற்றவர்களுக்கு கிருஷ்.
அவனுக்கு இருப்பது இரண்டு வீக்னஸ்.

1) அவன் Harley Davidson பைக். 

2) அழகான பெண்கள்.


அறிமுகம் 2

ஹரிஹர சுப்ரமணியம் - வயது 27

கம்பெனி சேர்மன் சுப்ரமணியத்தின் தவ புதல்வன். கிருஷ்ண குமாரின் நெருங்கிய தோழன. இருவரும் IIM படிக்கும்போது அறிமுகம்.

எந்த கெட்ட பழக்கமும் கிடையாது, கிருஷ்ண குமாரின் நட்பை தவிர.

அவன் அப்பாவுக்கு கிருஷ்ண குமாரை பிடித்த அளவுக்கு ஹரியை பிடிக்காது. 

அதை பற்றி ஹரி கண்டு கொள்வதில்லை.

வேலை கம்பெனியின் HR Head

ஆனால் உண்மையில் பார்க்கும் வேலை நண்பன் கிருஷ்ண குமாரின் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க உதவி செய்வது. 

உப வேலை - அதற்காக பல பெண்களிடம் திட்டு வாங்குவது.

அறிமுகம் 3

ஸ்வேதா ஷெட்டி -வயது 22

கதையின் நாயகி.

பிறந்தது மதுரை. அப்பா அம்மா மங்களூர். 

அப்பா சுமன் ஷெட்டி மதுரை கலெக்டர் ஆக பத்து வருடம் இருந்தவர். கடந்த வருடம் retire ஆகி வீட்டில் இருக்கிறார்.அம்மா நிவேதிதா ஷெட்டி. House wife.

பத்து வயது வரை ஸ்வேதா மதுரை வாசம். பிறகு மங்களூர் மாற்றல். 

மங்களூரை சேர்ந்த ஐஸ்வர்யா ராய், ஷில்பா ஷெட்டி, தீபிகா படுகோன், அனுஷ்கா ஷெட்டி சேர்ந்த கலவை. கல்லுரி படிக்கும் நாட்களில் பல பசங்களின் தூக்கத்தை கெடுத்தவள்.

எத்தனையோ பேர் காதல் கடிதம் கொடுத்ததும் எந்த காதலிலும் மாட்டாதவள். 

பெங்களூர் கனகபுரா ரோட்டில் இருக்கும் கல்லூரியில் MBA இந்த வருடம் முடித்து விட்டு Compus Recruitment -ல் அவள் சேர்ந்து இருப்பது சன் சோலார் சிஸ்டம் ஹோசூர் அலுவலகத்தின் IT டிபார்ட் மென்டில் ஒரு மாதத்துக்கு முன்பு. 

ஒரு மாதம் ட்ரைனிங் முடித்து அவள் போக வேண்டிய இடம் பெங்களூரில் இருக்கும் தலைமை அலுவலகத்தில். HR Head ஹரியை நாளைசந்திக்க வேண்டும். 

இப்போது இருப்பது அவள் காலேஜ் நண்பன் பிரகாஷ் உடன்.

இருக்குமிடம் MG Road காபி டே.


அத்தியாயம் - 1

அது ஒரு ஞாயிற்று கிழமை

ட்ரிங் ட்ரிங் என்று அவன் Black Berry ஒலிக்க, தூக்கத்தில் இருந்து கண் விழித்தான் KK என்ற கிருஷ்ண குமார். நாம் இனிமேல் அவனை கிருஷ் என்றே அழைக்கலாம்.

"யார் இது காலங் காத்தால" என்று முனகியபடி போனை எடுத்து பார்த்தான்.
அடுத்த முனையில் ஹரி

"டேய் என்னடா பன்னி. இன்னுமா தூங்கிகிட்டு இருக்க. மணி என்னாச்சு தெரியுமா"

"டேய் காலங் காத்தால எழுப்பி விட்டு, நக்கலா பண்ணுற"

"டேய் லூசு இப்போ மணி பன்னிரண்டு. 

"என்ன அதுக்குள்ள பன்னிரெண்டு மணி ஆச்சா?"

"என்னதான் முந்தின நாள் பார்ட்டியா இருந்தாலும் இப்படியா தூங்குவ"

"டேய் மாம்ஸ் உனக்கு தெரியாதா. நேத்து ராத்திரி தூங்கும்போது மணி ரெண்டுடா"

"டேய் உன்னை பன்னிரண்டு மணிக்கே இறக்கி விட்டேன். ரெண்டு மணி வரைக்கும் என்னடா பண்ணிக்கிட்டு இருந்த"

"FTV பாத்துட்டு படுக்க ரெண்டு மணி ஆய்டுச்சு. சாரி மாப்ஸ் கோபப்படாதே. இப்போ எதுக்கு கூப்பிட்ட. என்ன ப்ரோக்ராம் சொல்லு".
"நீ இப்போ முதல்ல பல்லு விளக்கி ரெடியா இரு. நான் வந்து உன் வீட்டுக்கு இன்னும் அரை மணி நேரத்ல வரேன்"

"சரி மாம்ஸ் வா. Bye"

பல் விளக்கி குளித்து விட்டு தன் வீட்டு கண்ணாடியில் முகம் பார்த்து கொண்டிருந்தான். 

KK இருப்பது வில்சன் கார்டனில். அவன் இப்போது இருப்பதோ 2 BHK அபார்ட்மென்ட் டில். 

இருப்பதிலே நல்ல ஜீன்ஸ், மற்றும் புதிய கிளாசிக் போலோ டி ஷர்ட் போட்டுகொண்டு ரெடி ஆக வாசலில் காலிங் பெல் அடித்தது.

வாசலில் ஹரி.

"உள்ளே வாடா".
"டேய் எனக்கு நல்ல பசிடா. உன்னோட பேசி கிட்டுரிந்தா நேரம் போறது தெரியாது.முதல்ல கிளம்பு".
"மாம்ஸ் உன்னோட காரை இங்கே நிப்பாட்டு. என்னோட பைக்ல போகலாம்" என்று சொல்ல,

"சரிடா இப்போ எங்கே போறது".
"இன்னைக்கு சண்டே. MG Road-ல இருக்கிற காபி டே போகலாம்.சூப்பர் பிகர் எல்லாம் வந்துருக்கும்".
"உன்னை திருத்த முடியாது. சரி வா"

அடுத்த இருபது நிமிடத்தில் இருவரும் இருந்தது MG Road காபி டே வில்


"ஹரி என்னடா இன்னைக்கு காபி டேல கூட்டமா இருக்கு. சரி அந்த கார்னர் சீட்ல இடம் பிடிக்கலாம்."

"கிருஷ், என்ன ஆர்டர் பண்ணட்டும். எனக்கு சிக்கன் பர்கர். உனக்கு?"

"கொஞ்சம் வெயிட் பண்ணு மாம்ஸ். ரெண்டாவது டேபிளை சுத்தி ஒரே கூட்டமா இருக்கு, என்னமோ பிரச்சனைன்னு நினைக்கிறேன்.நான் பாத்திட்டு வர்றேன்."

கிருஷ் பார்த்து விட்டு திரும்பி வர, ஹரி ஆர்வமானான். 

"என்னடா எதாவது பிரச்சனையா?"என்று கேட்க

தலையில் அடித்து கொண்டே"அந்த கருமத்தை ஏண்டா கேக்குற?. ஒரு பொண்ணு பாய் பிரெண்ட் கூட பேசிகிட்டு இருக்கா. அவளை சுத்தி பசங்க ஒரே ஜொள்ளு. நிக்க முடியலை."

"டேய் பிகர் எப்படிடா"

"ரொம்ப ஜொள் ஒழுக்காதே. சகிக்க முடியலை. வேணும்னா நீயே போய் பாரு."

திரும்பி வந்த ஹரி "டேய் உண்மைலே சூப்பர் பிகர்டா. அன்னா கோர்நிகா மாதிரி இருக்கா.. எவனுக்கு கொடுத்து வச்சிருக்கோ? "

"சீ. வாயை மூடிட்டு வேற வேலைய பாரு."

பர்கரை கடித்து சாப்பிட்டு கொண்டிருந்த கிருஷ்ணாவை Black Berry போன் சத்தம் ட்ரிங் ட்ரிங் என்று ஒலிக்க யார் அழைப்பது என்று டிஸ்ப்ளே பார்க்க, அம்மா என்று வந்தது.போனை எடுக்காமல் சைலேன்ட் மோடில் போட,கொஞ்ச நேரத்தில் போன் கட் ஆனது

சாப்பிட்டு கொண்டே ஹரியுடன் பேசி கொண்டிருந்த கிருஷ் திரும்ப போன் அடித்தது.

 ஹரி இப்போது யார் அழைப்பது என்று டிஸ்ப்ளே பார்க்க அம்மா என்று வந்தது.
ஹரியும் எட்டி பார்த்து விட்டு "டேய் கிருஷ் அம்மா கூப்பிடுறாங்க பேசுடா"

"எனக்கு விருப்பம் இல்லை. போனை எடுத்து நான் குளிக்க போய் இருக்கேன்னு சொல்லு"

போனை ஆன் செய்து "அம்மா நாந்தான் ஹரி அவன் இப்போதான் ..."

"என்ன குளிக்க போயிருக்கேன்னு பொய் சொல்ல சொன்னானா?"

வியப்பில் ஹரி வாயடைத்து நிற்க"நான் அவனோட அம்மா எனக்கு அவன் மனசு தெரியாதா?"

"சரி அவன் கிட்ட இந்த மாசம் இருபதாயிரம் கேட்டதா சொல்லு. அவனோட தங்கச்சி செமஸ்டர் பீஸ் கட்டணும அதுக்கு ஒரு பத்தாயிரம் கூடுதலா தேவை. மத்தபடி அவன் ப்ரீ யா இருக்கும்போது கூப்பிட சொல்லு" என்று போன் வைத்துவிட,

ஹரிக்கு தர்ம சங்கடமான நிலை."ஏண்டா நீ பேச கூடாதா? அம்மா எப்படி வருத்தபடுறாங்க பாரு. நீ கல் மனசுக்காரன்டா".

அது வரை தலை குனிந்து உட்கார்ந்து இருந்த கிருஷ் தலை நிமிர அவன் கண்கள் கலங்கி இருந்தன.
"நான் கல் மனசுக்காரனா? உன் மனச கேட்டுப்பாருடா?. 6 வருசத்துக்கு முன்னால நடந்தத நீ மறந்து போய் இருக்கலாம். ஆனா பாதிக்க பட்டது நான் தானே. எனக்கு தானே அந்த வேதனை தெரியும்."

"சரி மச்சான். நான் அந்த அர்த்தத்தில சொல்லலை."

கிருஷ் மனதில் 6 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது காட்சியாக விரிந்தது.

"டேய் கிருஷ்ணா"

"சொல்லுங்க அப்பா"

"உன் கிட்ட நாலு நாளைக்கு முன்னால ஒரு ரெண்டு லட்ச ரூபா காசு கேட்டுரிந்தேனே என்ன ஆச்சு."

"இல்லைப்பா. நாந்தான் என் கைல இருந்த காசை எல்லாம் போட்டு IIM MBA படிக்க கட்டிட்டேனே. கிளாஸ் ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆகுதப்பா. இன்னும் ஒன்னரை வருஷம் பொறுத்தா நல்ல வேலை சம்பளத்தில MNCல வேலை கிடக்கும்பா"

"டேய் நான் கேட்டது பிசினஸ்ல எனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு நான் என் நண்பனுக்கு கொடுக்க வேண்டிய பங்கு".

"நீங்க தப்பான நண்பரை நம்பினீங்க"என்று முனக,அப்பா வாசுதேவனுக்கு தலைக்கு மேல் கோபம ஏறியது. மூக்கு சிவந்து கொள்ள கத்த ஆரம்பித்தார். 

"தேவகி இங்கே பாரு உன் பையன் பேசுறதை. அப்பனுக்கு கஷ்டம்னா உதவி செய்யாத பையன் இருந்து என்ன பிரயோஜனம்?. 

நான் பணம் கேட்ட உடனே அவன் தலையை அடமானம் வைத்து பணம் புரட்டி தர வேண்டாமா?"

"என்னங்க, நீங்க வேற புரியாம பேசிகிட்டு இருக்கீங்க. அவன் Deloitte கம்பெனில ரெண்டு வருஷம்வேலை பார்த்து பணம் சேர்த்துMBA படிக்கிறான். நமக்கு செலவு வைக்க கூடாதுன்னு நினைக்கிற பையனை பார்த்து நாம பெருமை படணுங்க".

"எனக்கு அது பத்தி கவலை இல்லை. இவனை படிக்க, வளர்க்க நாம செலவழிச்ச ரெண்டு லட்ச ரூபாயை நிலத்தில்/எடத்ல போட்டுருந்தா நாம அதை வித்து காசாக்கிருக்கலாம். இப்போ இவனால என்ன பிரயோஜனம்?"

கிருஷ் ஒரு வார்த்தை கூட பதில் பேச முடியாமல் வாயடைத்து நின்றான்.
"அப்பா ரெண்டு லட்சம் கிடைச்சா உங்க பிரச்சனை தீர்ந்திடுமா?" என்று குரல் தழுதழுக்க கேட்க

அவனை நிமிர்ந்து பார்த்த வாசுதேவன் "அது தான் உன்னால முடியலைன்னு சொல்லிட்டியே. அப்புறம் என்ன இந்த வெட்டி பேச்சு". 
தலை குனிந்து ஹாலை விட்டு வெளியேறிய கிருஷ் மனதில் ஹரி ஞாபகம் வந்தது.
"தனது கிளாஸ் மேட்-டும், பெரும் பணக்காரனும் ஆன ஹரியிடம் கேட்டால் ஏதாவது உதவி கிடைக்கும்" என்று நினைத்து ஹரியை செல்போனில் கூப்பிட, இரண்டாவது ரிங்கில் போனை எடுத்தான்.

"சொல்லு மச்சான். எப்போடா இங்க திரும்பி வர போற?"

"இல்லை மாம்ஸ்.எனக்கு ஒரு உதவி தேவைடா. எனக்கு அர்ஜண்டா ஒரு ரெண்டு லட்சம் தேவை. வட்டிக்கு வாங்கி கொடு. நான் ரெண்டு வருசத்ல அடைச்சு தரேன். எனக்கு உன்னை தவிரா யாரையும் தெரியாதுடா. அதுனால தான் உன்னை கூப்பிட்டேன்."

"டேய் மச்சான். என்னடா குழந்தை மாதிரி அழுதுகிட்டு. உனக்கு பணம் தான வேணும். கவலை படாதே.நான் பணத்தோட நைட் ட்ரெயின்ல கிளம்புறேன். காலைல உன் கைல ரெண்டு லட்ச ரூபா இருக்கும்.நீ எப்போ திரும்ப கொடுக்க முடியுமோ அப்ப திருப்பி கொடுத்தா போதும்."

காலை ஆறு மணி அளவில் அவனுக்கு ஹரியின் போனில் இருந்து அழைப்பு. 

"எங்கடா இருக்க? 

"முதல்ல வீட்டு கதவை திற"

வாசலில் உறங்காத விழிகளோடு நிற்க அவன் கையில் சிறிய சூட்கேஸ், "இந்தாடா நீ கேட்ட பணம். கார்ல வந்து இருக்கேன். நான் உடனே கிளம்பனும்".
"என்னடா ட்ரெயின்ல வரேன் சொல்லிட்டு....".
"ஆமாம் ட்ரெயின்ல வர்ற பிளான் தான். ஆனா அவசரத்துக்கு டிக்கெட் கிடைக்கல. நீ போன்ல அழுதது என் காதில கேட்டு கிட்டே இருந்தது. அதுனால ஆபத்துக்கு பாவம் இல்லைன்னு கார்ல ராத்திரி பத்து மணிக்கு கிளம்பினேன். அப்பாக்கு கூட விஷயம் தெரியாது. நான் சீக்கிரம் கிளம்பனும்."

"டேய் நீ எட்டு மணி நேரம் கார் ஒட்டி இருக்க உடனே திரும்பி போகணுமா? வீட்ல கொஞ்ச நேரம் என் ரூம்ல படுத்து தூங்கிட்டு போகலாமே?"

"இல்லை மச்சான். அப்பாவுக்கு நான் கார எடுத்துகிட்டு மதுரை வந்தது தெரிஞ்சா கடுப்பயிருவார். மன்னிச்சுக்கோ. இன்னொரு தடவ தங்குறேன்.நீ வேலையை முடிச்சுட்டு இப்போ நீ ராத்திரி பஸ்ல வந்து சேரு". என்று சொல்லி விட்டு ஹரி கிளம்பினான்.

வீட்டு முதல் தடவையாகவந்தவனுக்கு ஒரு வாய் காபி கூட கொடுக்க முடியவில்லை என்ற வருத்தம் கிருஷ்ணாவுக்கு.

உள்ளே நுழைந்த கிருஷ், ஹரி கொடுத்தஅந்த சின்ன சூட்கேசை தனது ரூமில் வைத்து விட்டு பல் விளக்கி ரெடி ஆனான்.

என்ன சொல்வது என்றே தெரியவில்லை. உடலில் இருந்த சத்து மொத்தமும் உறிஞ்சியது போல் ஒரு உணர்வு. மனதில் வெறுமை வாட்ட படுக்கையில் அமர்ந்தான். எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தான் என்று தெரியவில்லை.

தங்கை கலா அவனை வந்து உலுக்கியபோது மணி எட்டு. 

"டேய் அண்ணா. அம்மா உன்னை முதல்ல குளிச்சிட்டு வர சொன்னா. தோசை ஊத்தி தாறேன்றா. சீக்கிரம் வாடா"

"எனக்கு பரீட்சைக்கு படிக்க வேண்டிய வேலை இருக்கு நான் மொட்டை மாடிக்கு போறேன்" என்று சொல்லி விட்டு சிட்டென்று பறந்து விட்டாள் அவன் பன்னிரெண்டாவது படிக்கும் தங்கை.

குளித்து விட்டு டைனிங் டேபிளில் அமர்ந்த கிருஷ்ணாவை பார்த்து அவன் அம்மா தேவகி 

"டேய் இப்போ எதுக்கு உன் மூஞ்சியை இப்படி தூக்கி வச்சுகிட்டு உக்கார்ந்துருக்க. பாக்க சகிக்கலை. முதல்ல இந்த தோசையை சாப்பிடு அப்புறம் பேசலாம்" என்று சொல்ல,

"அம்மா அப்பா அப்பிடி பேசியிருக்க கூடாது". என்று தொண்டை கரகரக்க சொல்ல, 

தேவகி "டேய் அவரை பத்தி தான் உனக்கு தெரியுமே. ரெண்டு குழந்தைகளை பெத்து இருக்கோம்னு பொறுப்பு கொஞ்சம் கூட இல்லை. இப்படியா பசங்க கிட்ட பேசுறது. சீ" என்று முனகிக்கொண்டே அவனுக்கு பிடித்த முறுகலான தோசையை தட்டில் இட கிருஷ் சாப்பிட ஆரம்பித்தான்.

சாப்பிட்டு முடித்து எழ, வாசு தேவனும் சாப்பிட உட்கார்ந்தார். 

அவரை பார்க்க இஷ்டம் இல்லாமல் தன் படுக்கை அறைக்கு நடந்தான் கிருஷ்

"என்ன தொரைக்கு என் கிட்ட பேச இஷ்டம் இல்லையோ? மொரசுகிட்டு போறான்."

"ஏன் உங்களால கொஞ்சம் நேரம் சும்மா இருக்க முடியாதா?அவன் கூட காலங்காத்தால சண்டைக்கு போறீங்க" என்று தேவகி சமாதானபடுத்த பேசாமல் சாப்பிட ஆரம்பித்தார் வாசு தேவன. 

அவர் பேசாமல் இருக்கும் ஒரே இடம் டைனிங் டேபிள் தான்.


அதற்குள் கிருஷ் தனது அறைக்கு சென்று சூட்கேசை திறந்து பார்க்க அதற்குள் நூறு ரூபாய் நோட்டு கட்டு இருபது இருக்க, எடுத்து மஞ்சள் பைக்கு மாற்றினான்.

தனது உடைகளை எடுத்து தனது ஹோல்ட் ஆல் bag-ல் அடுக்கி எடுத்து கொண்டு ஹாலுக்கு வந்தான்.

ஹாலில் ஓடி கொண்டுறிந்த டிவி யை பாத்து கொண்டே அமர, வாசு தேவன சாப்பிட்டு விட்டு கை துடைத்து கொண்டு ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தார்.

"என்னடா? என்ன முடிவு செஞ்சுருக்க?".

பேசாமல் எழுந்த கிருஷ் தன் கையில் இருந்த மஞ்சள் பையை கொடுக்க, ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டே பையை திறந்து பார்க்க அவருக்கு நம்ப முடியவில்லை.

"ஏய் தேவகி இங்கே வா" என்று கூப்பிட, சமையல் அறையில் இருந்து அடுப்பை அணைத்து விட்டு, தேவகியும் வாசலுக்கு வந்தாள்.

"என்னங்க? என்ன விஷயம்?

"இங்கே பாருடி உன் பையன் ரெண்டு லட்ச ரூபா கொண்டு வந்துருக்கான். என்னடா என்னமோ உன் கிட்ட பணம் இல்லைன்னு சொன்ன."

"அப்பா உங்களுக்கு பணம் கிடைச்சுருக்கு. ஆனா எப்படி கிடைச்சதுன்னு நீங்க கவலை பட வேண்டாம். நான் யார் கிட்டயும் திருடலை. ஏமாத்தல. கடன் வாங்கி இருக்கேன்."

"அப்பா என்னை நீங்க வளர்த்ததுக்கு செலவளிச்சதா சொன்ன பணத்தை உங்க கிட்ட கொடுத்துட்டேன்.நீங்க இந்த பணத்தை உங்க பிசினஸ்ல போடலாம். இடம் வாங்கலாம். இன்னும் என்னென்னெவோ பண்ணலாம். 

ஆனா இந்த பணம், சொத்து எல்லாம் உங்களுக்கு எவ்வளவு நாள் தான் உதவி செய்யும். ஒரு நாள் அந்த பணமும் நம்மளை காப்பாத்த முடியாத வேளை வரும். அப்பா, அப்பதான் உங்களுக்கு குழந்தைகளோட அருமை தெரியும்.எங்களோட பாசம் புரியும்."

"அம்மா நான் இந்த வீட்டை விட்டு நிரந்தரமா கிளம்புறேன். இனிமே உங்களுக்கு பாரமா இருக்க விரும்பல. சீக்கிரம் என்னோட படிப்பு முடியும். புது வேலைக்கு சேர்ந்த பிறகு என்னால முடிஞ்ச அளவுக்கு பணம் அனுப்புறேன். 

நான் பையன் எங்க வேணா போய் பொழச்சுக்குவேன். ஆனால் கலாவுக்கு உலகம் தெரியாது அவளையும் இந்த மாதிரி பேசி மனசை நோகடிக்க வேண்டாம்னு சொல்லுங்க. இப்போதைக்கு நான் கிளம்புறேன். குட் பை".

கண்களில் இருந்து கண்ணீர் வழிய, அப்படியே உக்கார்ந்திருந்த கிருஷ்ணாவை "டேய் என்னடா ஆச்சு?" என்று உலுக்கினான் ஹரி.







No comments:

Post a Comment