Monday, August 10, 2015

கண்ணனை நினைக்காத நாள் இல்லையே - அத்தியாயம் - 12

கடிகாரத்தை பார்க்க மணி பத்தரை. "ஐயோ ரொம்ப நேரம் ஆகிடிச்சு. நான் கிளம்பட்டுமா" என்று கேட்க,

"என்ன கிருஷ்ணா காத்திருப்பான்ன்னு பாக்குறியா. ok. Best of luckÏnvitation அனுப்பு. உங்க கல்யாணத்துக்கு நான் கட்டாயம் வருவேன்"சிரித்து கொண்டே விடை கொடுக்க

அய்யய்யோ நேரம் ஆயடுச்சே. "KK கோவமா இருப்பாரே" என்று கவலையோடு ரூம் வாசலை அடைந்து கதவை தட்டினாள். 

கதவை திரும்ப தட்ட, திறக்கப்படும் சத்தம் கேட்டது. தூக்க கலக்கத்தில் கண்ணை கசக்கி கொண்டு கிருஷ், என்ன ஸ்வேதா லேட் ஆய்டுச்சா. சரி பரவாயில்லை"" என்று சொல்லி விட்டு அவன் படுக்கையில் படுத்து உறங்கி விட்டான்.



கதவை பூட்டி விட்டு வந்த ஸ்வேதா கிருஷ்ணாவை பார்த்து கொண்டு இருந்தாள். கொஞ்சம் அவனோடு விளையாடி பார்க்கலாம் என்று முடிவு செய்து, எல்லா லைட்டையும் அணைத்து விட்டு, நைட் லாம்ப் மட்டும் எரிய, தனது உடையை மாற்றி இரவு உடைக்கு மாறினாள். 

அவன் படுத்து இருந்த படுக்கைக்கு வந்து மெதுவாக பெட் சீட்டுக்குள் தன்னை சொருகி கொண்டாள். இருவரும் ஒரே பெட்டில் இருக்க,அவன் மூச்சு காற்று அவள் கன்னத்தில் பட, தன் இரு கைகளையும் அவன் கன்னங்களுக்கு அருகில் வைத்து அவனை பார்த்து கொண்டே இருந்தாள். கொஞ்ச நேரத்தில் அவளும் தூக்கத்தை தழுவ, அந்த ரூமில் மெதுவாக அமைதி நிலவியது.

இரவு இரண்டு மணிக்கு எழுந்து தூக்க கலக்கத்தில் பாத்ரூம் போய் விட்டு வந்த கிருஷ், திரும்ப வந்து படுக்கையில் படுத்து திரும்ப,அருகில் ஸ்வேதா படுத்து இருப்பதை பார்த்து மிரண்டு வேகமாக எழுந்தான்.

அந்த சத்தத்தில் ஸ்வேதா எழுந்து என்ன KK என்னாச்சு"" என்றாள். 

"சாரி ஸ்வேதா நான் உன்னோட படுக்கைல தவறா படுத்துட்டேன்னு நினைக்கிறேன். Really Sorryஇப்போ நான் மாறி படுத்துடுறேன்என்று சொல்ல, ஸ்வேதா கலகலவென்று சிரித்தாள்.

"ஹலோ KK தப்பா படுத்து நீங்க இல்லை. நான்தான்" என்று சொல்லி அவனை பிடிவாதமாக இழுக்க, தடுமாறி படுக்கையில் விழுந்தான். 

"ஏய் ஏய் என்ன பண்ணுறே" என்று திரும்ப எழ முயற்சிக்கஅவனை எழ விடாமல் ஸ்வேதா அவன் மேல் படுத்து கொள்ள, அந்த பஞ்சு போன்ற உடல் அழுந்தியதால் ஒரு கணம் தடுமாறி போனான்.

"என்ன ஸ்வேதா, இப்படி பண்ணுற"

"எதுக்கு இப்போ நீங்க எழுந்து இருக்கணும். என் கூட படுத்துக்க பயமா இருக்கா?"
"இல்லை, ஆமாம்" என்று தடுமாறியபடி உளறிய கிருஷ்ணாவை பார்த்து வாய் பொத்தி சிரித்த ஸ்வேதா அவனை இழுத்து அவன் முகத்தை தன் மார்புக்கு இடையில் அணைத்து கொள்ள, அந்த பஞ்சு போன்ற மென்மையான மார்பகங்களுக்கு மத்தியில் மயங்கி போனான். 

கண்கள் சொருகியது மயக்கதாலா? இல்லை தூக்கத்தாலா என்று அவனுக்கு தெரியவில்லை. அவனின் தடுமாற்றத்தை அவள் ரசித்து கொண்டு இருந்தாள்.

அவன் நெற்றியில் முத்தம் கொடுத்து, "என் சின்ன கண்ணு குட்டிக்கு என்ன வேணும், நான் வேணா ஜோஜோ லாலி பாடட்டுமா?" என்று குறும்போடு கேட்க, அவளின் அந்த கரிசனத்தில் ஒரு கணம் இளகி போனான்.

அவன் கைகள் இரண்டும் அவள் இடுப்பை வளைத்து கொள்ள, அவளை இழுத்து உடலோடு உடலாக அணைத்து கொள்ள இருவர் உடலிலும் சூடு ஏறியது.

மெதுவாக நகர்ந்து அவளின் உதட்டை அடைந்து கவ்வி கொள்ள, அவளும் தன் இதழ்களை அவனிடம் விருந்துக்கு கொடுத்து விட்டு அவனின் பசி ஆற்றினாள்.

"KK என்ன வேணாம் பண்ணிக்கங்க, ஆனா ``அது`` மட்டும் வேண்டாம், ப்ளீஸ் என்று கெஞ்ச, அவளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து,"கவலைபடாதே ஸ்வேதா உன் அனுமதி இல்லாமல் உன்னிடம் வரம்பு மீற மாட்டேன். உன்னை கட்டி அணைத்து கொண்டே தூங்குறேன்.அந்த சுகம் எனக்கு போதும்" என்று சொல்ல, அவனை பெருமையோடு பார்த்து, மீண்டும் கட்டி கொண்டாள்.

காலை ஏழு மணிக்கு கண் விழித்த ஸ்வேதா தன் நெஞ்சில் தலைவைத்து, அவள் முதுகை சுற்றி கைகளால் வளைத்து கொண்டு குழந்தை போல் தூங்குவதை பார்த்து மனதுக்குள் சிரித்து, புன்முறுவல் செய்தாள். நன்றாக தூங்கும் கிருஷ்ணாவை எழுப்ப மனமில்லாமல் கண்கொட்டாமல் அவனை பார்த்து இருந்தாள். 


எட்டு மணி அளவில் KK திடீர் என்று விழித்து தலை திருப்பி பார்க்க அவள் விழித்து இருப்பதை கண்டு, "கண்ணம்மா எப்போட முழிச்ச"என்று கரிசனதோடு கேட்க, அவன் தலை முடியை கோதி கொண்டே "ஏழு மணிக்கு" என்று சொன்னாள்.

அவன் கண்கள் வியப்பால் விரிந்தன. "ஒரு மணி நேரமா" என்று ஆச்சர்யத்தோடு கேட்டு, "கண்ணம்மா என்னை எழுப்ப வேண்டியது தானே" என்று கேட்க "நீங்க நல்லா தூங்கிட்டு இருந்திங்க. எனக்கு உங்களை தொந்தரவு செய்ய விருப்பம் இல்லை"

"ஒரு வேளை நான் எழுந்துரிக்கலைனா"

"உங்களை முத்தம் கொடுத்து எழுப்பி இருப்பேன்"
சிரித்து கொண்டே, "ஆகா வடை போச்சே, சீக்கிரம் எழுந்து சான்ஸ் மிஸ் பண்ணிட்டேனே" என்று அவளை கிண்டல் செய்ய, அவள் அவனிடம் செல்ல சண்டை போட்டாள். 

"நான் குளிச்சுட்டு வரேன் அதுவரை நீங்க சும்மா படுத்துக்கங்க" என்று சொல்ல, அவளையே கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டு இருக்க அவனை பார்த்து "ஹலோ என்ன பார்வையால முழுங்குற மாதிரி பாக்குரிங்க" என்று கண்களுக்கு முன்னே கை அசைத்து விட்டு சென்றாள்.

தன் கழுத்துக்கு கீழே இரண்டு கைகளையும் கொடுத்து அண்ணாந்து பார்த்து படுத்து கொண்டேஸ்வேதாவை பற்றி யோசித்து கொண்டு இருந்தான்.

"என்ன பெண் இவள். சில நேரம் புயலாய் இருக்கிறாள். பல நேரம் தென்றலாய் வருடுகிறாள். இவள் அருகில் இருந்தால் ஒவ்வொருநாட்களும், சில துளி போல் கரைந்து விடுகிறது."

கொஞ்ச நேரத்தில் அவள் குளித்து, உடை மாற்றி வர, அவனை "KK நீங்க போய் குளிச்சுட்டு வாங்க, மீட்டிங்க்கு பத்து மணிக்கு போகணுமே" என்று சொல்லி அவனை கையை பிடித்து இழுத்து சென்றாள்.

வழக்கம் போல் காலை உணவை முடித்து கொண்டு இருவரும் செல்ல, சிறப்பு விருந்தினராக பிரதமர் வந்து இருந்தார். யாரும் அவரை எதிர் பார்க்காததால், அனைவர் முகத்திலும் ஒரு வியப்பு. பிரதமர் ஒரு அறிவாளி மட்டுமல்ல, அனைவராலும் மதிக்கபடுபவர் ஆதலால் அவரின் பேச்சுக்காக அனைவரும் காத்து இருந்தனர்.

'சூர்ய சக்தி மூலம் நம் நாடு அடைய இருக்கும் பலன்'களை பற்றி பேசிய பிரதமர், "இப்போது நமக்கு ஒரு யூனிட் ஆகும் செலவுRs.15.80 என்றும் அதே மற்ற மின்சக்தி ஆகும் செலவு Rs.4.50௦ என்றும் சொல்ல, நாம் இப்போது இருக்கும் திட்டப்படி இன்னும் நாலு ஆண்டுகளுக்குள் நாம் அந்த Rs.4.50 அளவை சூர்ய சக்தி மூலம் அடைய முடியும்" என்று தெரிவித்தார். 

இதற்கு பாடுபடும் அனைத்து சூர்ய சக்தி தயாரிப்பு நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவித்து பேச்சை தொடர்ந்தார். 

"இந்த விழாவில் நேற்று நடந்த seminar-ல நான்கு குழுக்கள் கொடுத்த suggestions எல்லாவற்றையும் பார்த்தேன். எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு. ஆனா அந்த நாலு ரிப்போர்ட்ல இங்கே உள்ள அறிஞர்கள் சிறந்ததாக தேர்வு செய்த ரிப்போர்ட்டுக்கு இப்போது பரிசு வழங்கப்படும்" என்று தெரிவித்து, "மூன்றாவது குழுவுக்கு (கல்பனா) முதல் பரிசு, முதல் குழுவுக்கு (கிருஷ்ணா) இரண்டாவது பரிசு"என்று கொடுக்க, அரங்கமே கரகோசமிட்டது.

அடுத்து Growth , Best Enterprenuer, Highest Sales, Highest profit போன்ற நான்கு category யிலும் விருது வழங்கப்பட நான்கு நிறுவனங்கள் அந்த விருதை பெற்றன.

கடைசியில் பிரதமர் சிறப்பு பரிசு overall category யில் வழங்கப்பட அதற்க்கு பிரதமர் தங்க கேடயம் அளிப்பார் என்று அறிவிக்கபட்டது.

கடைசியில் அந்த விருது Solar Sun Systems நிறுவனத்துக்கு வழங்க படுகிறது என்று சொல்ல அரங்கமே எழுந்து கரகோசம் செய்தது. 

கம்பெனி சார்பாக விருது பெற்ற கிருஷ், "இந்த விருது கம்பெனி சேர்மன் சுப்ரமணியம், உழைதத்த தொழிலாளர்கள் அனைவருக்கும் உரியது, சேர்மன் வர முடியாத காரணத்தால் தான் வாங்கி கொள்வதாக" சொல்ல, பிரதமர் அவனுக்கு அந்த கேடயத்தையும்,விருதையும் வழங்க, வாங்கி கொண்டு தன் இருக்கைக்கு திரும்பியவனை கன்னத்தில் முத்தம் கொடுத்து ஸ்வேதா வரவேற்க,அங்கே இருந்த காமெராக்கள் கண் சிமிட்டின.

ஸ்வேதாவை காதோரம் கடிந்து கொண்டான்"என்ன ஸ்வேதா, பப்ளிக் பிளேஸ்ல இப்படியா நடந்துகிறது". அவன் சொன்ன எதையும் அவள் கண்டுகொள்ளவில்லை.

மற்றபடி எல்லோரும் பிரதமர் கூட கூடி பேச வாய்ப்புகள் வழங்கப்பட்டன. பலரும் அவரிடம் கேள்விகளை கேட்க, கிருஷ்ணா தனது சந்தேகத்தை பற்றி கேட்டான்

"சார் இப்போது இருக்கும் subsidy Refund process அதிக நேரம் எடுக்கிறது" என்றும், "வீடுகளுக்கு நாம் கொடுக்கும் 30% subsidyகுறைவு" என்றும் சொல்லபிரதமர் அமைச்சர் பாரூக் அப்துல்லாவை அழைத்து பேசி விட்டு, இதை பற்றிய முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியிடபடும்" என்று தெரிவித்தார்.

நாலு மணிக்கு மீட்டிங் முடியும் நேரத்தில் பாரூக் அப்துல்லா''subsudy refund process சுலபமாக்கப்படுகிறது'' என்றும், இங்கே வந்துருக்கும் நாற்பது நிறுவனங்களுக்கும் நேரடியாக மத்திய அரசாங்கத்தின் மான்யம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 

ஆனால் மத்திய அரசு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை sales tax depatment ஆடிட்நடத்தும் என்றும் முறைகேடு கண்டு பிடிக்கபட்டால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

சிறந்த யோசனை தெரிவித்த கிருஷ்ண குமாருக்கு பிரதமர் தன் தனிப்பட்ட வாழ்த்து தெரிவித்ததாக அறிவித்தார்.

நடந்த விபரங்களை ஸ்வேதா சேர்மனுக்கு தெரிவிக்க, சேர்மன் கிருஷ்ணாவை அழைத்து வாழ்த்து தெரிவித்தார்



"கிருஷ்ணா என்னோட கணிப்பு வீண் போகலை. நம்ம கம்பெனியோட பெருமைகள் இப்போ எல்லாருக்கும் தெரிந்து விட்டது. இது நம்மோட பிசினஸ் நல்லா நடக்க உறுதுணையாக இருக்கும். அந்த பெண் ஸ்வேதா ரொம்ப புத்திசாலியா இருக்கா.நான் ஜெர்மனில இருந்து திரும்பி வந்த உடன் அவளை மீட் பண்ணுறேன்" என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டார்.

"ஸ்வேதா சேர்மன் உன்னை பார்க்கணும்னு சொல்லி இருக்கார். உன்னை ரொம்ப பிடிச்சு போச்சாம். அவர் வெளி நாடு டூர் முடிச்சு வந்த உடனே உன்னை மீட் பண்ண சொன்னார்" என்று தகவல் தெரிவித்தான்.

நாலு மணிக்கு மீட்டிங் முடிந்தவுடன் கல்பனா, ஸ்வேதா உடன் கிருஷ்ணா டெல்லி சுற்றி பார்க்க சென்றான். 

வெளியிலே சாப்பிட்டு விட்டு வந்ததால் ஹோட்டல் வந்ததுடன் கல்பனாவுக்கு Bye சொல்லி விட்டு கிருஷ், ஸ்வேதா இருவரும் ரூமுக்கு திரும்பினர்.

அவளை அருகில் இழுத்து தன் மடியில் உட்கார வைத்து கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டு கொண்டே"என்ன கண்ணம்மா எல்லாரும் என்னை கிண்டல் பண்ணுறாங்க. நீ பாட்டுக்கு பப்ளிக் பிளேஸ்ல முத்தம் கொடுத்துட்ட, பேப்பர்ல நாளைக்கு செய்தி வந்து உன் வீட்ல ஏதாவது சொல்ல போறாங்க. ஏற்கனவே உங்க அம்மா ஒரு மாதிரி பேசுராங்க. இது தேவையா?"

அவன் கழுத்தை தன் இரு கைகளால் வளைத்து"KK முதல்ல நெஞ்சை தொட்டு சொல்லுங்க, உங்களுக்கு நான் கொடுத்தது பிடிச்சு இருக்கா"

அவள் நெஞ்சை தொட"நான் சொன்னது உங்களோடதை", என்று அவன் கையை தட்டி விட்டு, "இங்க பாருங்க எனக்கு மத்தவங்களை பற்றி கவலை இல்லை. உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கணும்னு எனக்கு தோணுச்சு. என் கிட்ட கொடுக்க எதுவும் இல்லை அதனாலதான் நான் முத்தம் கொடுத்தேன். அது மட்டும் இல்லை முத்தம் ஒரு அன்போட வெளிப்பாடு. வட இந்திய மக்களுக்கு இது நல்லா புரியும்" என்று கண் சிமிட்டியபடி சொல்ல,

"உன்னை பேசி ஜெயிக்க முடியுமா? ஒவ்வொண்ணுக்கும் ஒரு காரணம் வச்சு இருக்க" என்று சொல்லி விட்டு 

"இப்போ நம்ம வேலையை ஆரம்பிக்கலாமா?"என்று கேட்க,"என்ன வேலை" என்று அப்பாவித்தனமாக திருப்பி கேட்டாள்.
"இந்த வேலைதான்" என்று சொல்லி அவளை கட்டி அணைத்து அந்த பிங்க் நிற இதழ்களை தனக்கு சொந்தமாக்கினான். 

தங்க சிமிழ் போல் இதழோ
அந்த சங்க தமிழ் போல் மொழியோ
தந்த சிலை போல் உடலோ 
அவள் தலைவனின் இன்ப தமிழோ




No comments:

Post a Comment